Discover and read the best of Twitter Threads about #எம்பார்

Most recents (2)

#ஸ்ரீவைஷ்ணவம் #எம்பார் வைணவ பெரியோர்களில் மிக்கப்புகழுடைய எம்பார் ஸ்ரீபெரும்பூதூர் அருகிலுள்ள மழலை மங்கலத்தில் (மதுரமங்கலம்) 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலநயன பட்டர், ஸ்ரீதேவி அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார். ஸ்ரீதேவி அம்மாள் இராமானுஜருக்கு சிற்றன்னை
தாய் மாமனான திருமலை நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தபட்டர். திருப்புட்குழியில் தன் அண்ணன் இராமானுஜருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். பின்னாளில் எம்பார் என வைணவர்களால் புகழ்பெற்றவர் இவரே. அருளிச்செயலுக்கு பொருள் கூறுவதில் மட்டுமல்லாது, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களுக்கும் பொருள்
கூறுவதில் வல்லவர். ஸர்வேஸ்வரனான எம்பெருமானுக்கும் ஓர் அறியாமை, மறதி, மற்றும் செய்ய முடியாத ஒன்று உண்டு என்று எம்பார் அருளிச் செய்வாராம். எம்பெருமானை ஒருவன் சரணடைந்து விட்டால், அவன் செய்த குற்றங்களை எம்பெருமான் மறந்து விடுகிறான். அறியாமல் அவன் செய்யும் குற்றங்களை அறியாமல் இருந்து
Read 6 tweets
#எம்பார் #அறிவோம்_ஆச்சார்யர்கள்
மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு கிபி 1026ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர். ஸ்ரீதேவி அம்மாள் எம்பெருமானார் இராமானுசருக்கு சிற்றன்னையாவார். தாய் மாமனான பெரிய திருமலை
நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தப் பெருமாள். திருப்புட்குழியில் தன் அண்ணன் இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி கற்றார். யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றபோது குருவின் கருத்துக்களோடு இராமானுசருக்கு பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக அவரை குருவுக்குப் பிடிக்காமல் போயிற்று.
அதன் தொடர்ச்சியாக யாதவப்ரகாசரின் காசி யாத்திரையில் இராமானுசரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தார் கோவிந்தபட்டர். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு இவர் தம் குருவான யாதவப்ரகாசருடன் காசி யாத்திரையைத் தொடர்ந்தார். கங்கை கரையில் நீராடுகையில்
Read 24 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!