Discover and read the best of Twitter Threads about #ஒளவையார்

Most recents (6)

அரசரும், தூதுவரும்...!

ஒற்றரைப் போலவே அரசர்க்கு இன்றியமையாத உதவியாளர் #தூதுவர் எனப்பட்டனர். தூதுவரைப் பற்றியும் #திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்.

நற்குடிப் பிறப்பும், அரச பக்தியும், ஆவன அறியும் அறிவுடமையையும், ஆராய்ந்த சொல்வன்மையும், நீதி நூல் அறிவும் தூதர்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் #ஒளவையார் என்ற பெண்பாற்புலவர் அதியமானிடமிருந்து காஞ்சி அரசனான தொண்டைமானிடம் அரசியல் தூதராகச் சென்றார்.

தமது பேச்சுத் திறமையால் அதியமானது போர்த்திறனை விளக்கினார். நடக்க இருந்த போரைத் தடுத்தார் என்பன புறநானூற்றுப் பாடல் ஒன்றால் தெரிகின்றன.

சேரன் செங்குட்டுவன்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் #பாண்டியன், உரோமப் பேரரசனான #அகஸ்டஸ் என்பவரிடம் தூதுக்குழுவை அனுப்பினான்.

#பல்லவர் காலத்தில் 'இராசசிம்ம பல்லவன்' ஒரு தூதுவனை சீனத்திற்கு அனுப்பினான். சீனப் பேரரசன் அவனை அன்போடு வரவேற்றான். அவனை மிகுந்த கவனத்துடன் உபசரிக்கும்படித் தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.… twitter.com/i/web/status/1…
Read 4 tweets
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).

பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.

#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
Read 13 tweets
#சிவராத்திரிஸ்பெஷல் #சிவானந்தலஹரி ஸ்லோகம்26ல்
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
பரமேஸ்வரனின்
திருவடியை சேவிப்பதின் பேரின்பத்தை வர்ணிக்கிறார்.
“ஹே கி³ரிஶ”– மலையில் வசிப்பவரே!
‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தரிசனம் செய்து
‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்
‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு
‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலும், கண்களிலும், மார்பிலும் வைத்துக்கொண்டு
‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிக் கொண்டு,
‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களின் நறுமணத்தை முகர்ந்து,
‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும்
Read 13 tweets
#ஒளவையார் #வள்ளலார் இவர்களுக்குள் அதிசயமாக பல ஒற்றுமைகளும் ஒரே ஒரு வேற்றுமையும் உள்ளது. அது என்ன?
ஔவையார் இயற்றிய #உலகநீதிசெய்யுள்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந் திருந்தார் வாசல்
வழிச் சேரல் வேண்டாம்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்
முற்கோபக்காரரோடிணங்க வேண்டாம்.

பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார்
Read 10 tweets
பருவமழையும், நிறைந்த விளைவும் ஒன்று கூடி நல்ல பயனைத் தரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பண்டைய நம் அரசர்கள் செங்கோல் கோணாது ஆட்சி செய்தனர்.நயன்மை, நேர்மை, தொண்டு மனப்பான்மை, குடியோம்பல், நல்லாட்சி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.நேர்மையாக ஆட்சி புரிந்து குடிமக்களைக் - 2/11
காப்பதே நல்ல அரசனின் தலையாய கடமையாக இருந்தது. நயன்மை தவறாது செங்கோலாட்சி செய்கின்ற அரசன் ஆளும் நாட்டினில் பருவமழை பொழிந்து, நிறைந்து விளையும்.

#இக்குறளுக்கு_ஏற்புடைய_சில_இலக்கியப்_பதிவுகள் : -

கொற்றவ னறிதல் உற்றிடத் துதவி.
#கொன்றை_வேந்தன் - #ஒளவையார்.

அரசனானவன் அறிதல் - 3/11
Read 12 tweets
அன்புடையீர் வணக்கம்!

சங்ககாலத்தில், மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள், இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப் பற்றி சங்க இலக்கியங்கள் மற்றும் மேனாட்டார்க் குறிப்புகள் மூலம் ஆய்கிறது இந்த நீள் பதிவு!
க) நோயில் இறந்தால்:

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர்!

போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயின் பக்கத்தான் இறந்தால் வாளாற் படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்க வேண்டி அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுடைய பிராமணர்கள்... 1/2
.... தருப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது பிணத்தைக் கிடத்தி வாளால் வெட்டிப் புதைத்தனர் (புறம்: 93).

இன்று இந்த வழக்கத்திற்குப் பதிலாகப் பிணத்தை வைக்கோலில் கிடத்தி, கைகால்களை ஒடித்துப் புதைக்கிறார்கள்!

இந்தப் பணியைத் தற்போது வெட்டியானே செய்கிறார்!... 2/2
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!