Discover and read the best of Twitter Threads about #ஓம்குமாராயநமஹா

Most recents (22)

#சஸ்திர_பந்தம்

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம், எப்படி செய்ய வேண்டும்?

ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பற்றி பாப்போம்.

தினமும் சஸ்திர பந்த ஸ்லோகத்தை சொல்லி வர வியாபாரம், தொழில், பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது சஸ்திர பந்தமாம்.
சஸ்திர பந்தம் :

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
Read 9 tweets
#மயில்_வாகனம்

மயில் வாகனத்தைப் பற்றிய ஒரு அபூர்வ விஷயத்தினை பார்ப்போம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரம் ஒன்று உண்டு.

திருவாதிரை சிவபெருமானுக்கும்,

திருவோணம் மகாவிஷ்ணுவிற்கும் உரியவை.

முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம்.
முருக அஷ்டோத்திரத்தில், "ஓம் விசாகாய நமஹ' என்று அவரது நட்சத்திரம் குறித்து வருகிறது.

ஆதிரையான் என்று சிவபெருமானையும்,

ஓணத்தான் என்று மகாவிஷ்ணுவையும் குறிப்பிடுவதைப் போல,

மயிலேறும் விசாகன் என்று முருகனை நட்சத்திரத்தின்
பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
"விசாகன்' என்ற திருநாமத்திற்கு, "பறவை மீது சஞ்சரிப்பவன்' என்று பொருள்.
"மயிலேறிய வடிவேலன்' என்கிறார் அருணகிரிநாதர்.

அருணகிரி வாக்குப்படி, முருகப்பெருமான் மயில் மீது ஏறி சஞ்சரிப்பவர் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், மயில் வாகனத்திலேயே, பல மயில் வகை உண்டு.
Read 11 tweets
#தைப்பூசம்

முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!

தைப்பூச விரத முறையும் பலன்களும்...!!

தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.

பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!
Read 11 tweets
முருகனின் 16 வகை திரு கோலங்கள் :*

1. ஞானசக்திதரர்:

இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
2.கந்தசாமி:

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.

பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி:

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர்:

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர்.

நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
Read 14 tweets
#சிவன்மலை

*சித்தர் எழுப்பிய சிவன் மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்*

சிவன்மலை சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.
காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் சிவன்மலை மீது அமைந்துள்ளது.

சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது.
கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.

சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார்.
Read 17 tweets
#திருத்தணி_படி_பூஜை_திருவிழா

இன்று திருத்தணி படி பூஜை திருவிழா :

ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலம், அப்போது ஒவ்வோர் ஆண்டின் தொடக்க நாளிலும் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது  ஊழியர்களின் வழக்கமாக இருந்தது.
புத்தாண்டில் ஒரு வெள்ளைக்கார துரையைப் பார்த்து வணங்குவதா என்று மனம் வருந்திய  வள்ளிமலை ஸ்வாமிகளால்  தொடங்கப்பட்ட வழிபாடுதான் திருத்தணிகை திருப்படி உற்சவ விழா.

ஆங்கிலப்புத்தாண்டில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வேண்டி
அங்கு அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து புது விழாவினை 1917-ம் ஆண்டு முதல் தொடங்கினார்கள்.

இதனால் திருத்தணி முருகப்பெருமானுக்கு 'தணிகை துரை' என்ற பெயரும் உருவானது.
Read 11 tweets
#மயூர_வாகன_சேவன_திருவிழா

இன்று மயூர வாகன சேவன விழா.

பாம்பன் சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்த காலத்தில்,

1923, டிசம்பர் 27ஆம் நாள், தம்புச் செட்டித் தெருவில், குதிரை வண்டி ஒன்றினால் கீழே தள்ளப்பட்டார். Image
இடது கணுக்காலில் கடுமையான காயம்.

வண்டிச் சக்கரம் காலில் ஏறிவிட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரணம் சரியாக ஆறாத நிலையில், எலும்புகளிலும் உடைப்பு ஏற்பட்டிருந்ததால்,

73 வயதான இந்த நோயாளிக்கு எலும்புகள் கூடுவதற்கு வாய்ப்பில்லை,
ஆகவே இடது கணுக்கால் அளவில் வெட்டி எடுத்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இவருடைய சீடராகவும் நண்பராகவும் விளங்கிய சின்னசுவாமி என்பவர்,

பிறருக்கு உதவிய சண்முகக் கவசம் இவருக்கே உதவலாகாதா என்னும் ஆதங்கத்துடன் அதனை ஓதத் தொடங்கினார்.
Read 10 tweets
#வேல்_பந்தனம்

முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு.

இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க என்று சொன்னால் மனம் லேசாகி விடும்.
வேலை வணங்குவதால் காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.

இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.

“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’

இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி,
Read 5 tweets
#சிம்ம_வாகன_முருகன்

சென்னை அருகே உள்ள பொன்னேரி அடுத்துள்ளது ஆண்டார்குப்பம்.

இங்கு அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, அதிகாரத் தோரணையுடன் இருப்பது போல் காட்சி தருகிறார்.
இடுப்பில் கை வைத்திருப்பது போல் அருளும் இந்த முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றங்களில் ஒருவராக திகழ்கிறார்.

பொதுவாக முருகப்பெருமானுக்கு மயில்தான் வாகனமாக இருக்கும்.

ஆனால் இந்த ஆலயத்தில் சிம்ம வாகனம் மயிலைத் தாங்கியபடி இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும்.

ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.
Read 5 tweets
*#வேலாக_மாறிய_பூக்கள்...*_

ஒரு நகர்ப்பகுதியை நல்லியக்கோடன் என்னும் மன்னன் நல்லாட்சி செய்து வந்தான்.

தனது ஆட்சியில் சிறு பிசகு ஏற்பட்டால் கூட, மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற கவலை அவனுக்கு இருந்தது.
எனவே, அவன் அதிகாரிகளை அனுசரித்து வேலை வாங்கினான்.

மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை!

நல்லியக்கோடன் மீது எதிரிகள் படையெடுத்தனர். எதிரிப்படைகள் இணைந்து வரும் தகவல் நல்லியக்கோடனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது.
பலநாட்டு படைகளின் முன், தன் படையின் எண்ணிக்கை குறைவு என்பதால், நல்லியக்கோடன் முருகப்பெருமானை சரணடைந்தான்.

அப்போது அசரீரி ஒலித்தது.

நல்லியக்கோடா!

ஒரு குளத்தில் தாமரைப் பூக்களை பறி.

அவற்றை எதிரிப்படைகளின் மீது ஏவு.

மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது.
Read 6 tweets
#கந்த_சஷ்டி_திருவிழா

#முருகன்_சிறப்பு_தகவல்கள்

முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மஹாகவி காளிதாசர்.
முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.

இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

பிரம்மசரிய - கிருகஸ்த - சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
Read 11 tweets
சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகன் தலம்.

கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம்.
ஆனால் முருகனின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

அப்படிப்பட்ட முருகனின் படைவீடு தான் திருத்தணி. முருகனின் 5 ஆம் படைவீடு.
முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோவில் ஆகும்.

தணிகை என்பது சினம் தணிதல்.

திருத்தணி முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.
Read 5 tweets
#சூரசம்ஹாரம்_உணர்த்தும்_தத்துவம்

🌟முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம்.

🌟சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர் புரிந்தான்.

தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான்.

ஆனால்,ஆதி முதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன.
🌟முருகனின் கை வேலுக்கு #சக்திவேல் என்று பெயர்.

அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார்.

அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

🌟வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன்,இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான்.
🌟வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது.மாயையை இருகூராகக் கிழித்தது.

🌟ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது.

🌟சூரசம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப் போக பகைவனான சூரபத்மன்
Read 11 tweets
#பாவாடை_தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று பாவாடை தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரமும் நடந்தது.
இன்று காலையில் சட்ட தேரோட்டம்  நடைபெறும் . 

இந்த நிலையில் வழக்கம் போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு மாலையில் நடைபெறும்.
இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும் .
Read 6 tweets
#பன்னீர்_இலை_விபூதி

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பன்னீர் இலை விபூதி பிரசாத மகிமை :
ஸ்ரீ செந்திற்பிரான், ஆணவம் கன்மம் மாயையாகப் பிரதிபலித்த சூரபன்மன், அவன் தம்பிமார் சிங்கமுகன்,யானைமுகன் ஆகிய அசுரர்களை வதைத்தருளி ஜயந்திபுரம் என்ற திருசெந்தூரில் நவரத்ன மயமான அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு
தர்பாரில் செங்கோல் பிடித்து, சர்வ லோகங்களுக்கும் ராஜாதிராஜனாக விளங்கிவரும் சந்தர்ப்பத்தில் அவருடைய பெருமையைப் போதிக்கின்ற சகல வேதங்களும் ஒன்று சேர்ந்து அந்தக் குமரக்கடவுளினுடைய மகிமையை விளக்க பன்னீர் மரங்களாக இத்தலத்தில் தோற்றங்கொண்டுள்ளன.
Read 14 tweets
#ஸ்ரீசுப்பிரமண்ய_அஷ்டோத்திரம்.

{தமிழ் விளக்கத்துடன்}

1.ஓம் ஸ்கந்தாய நம:

{மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
2. ஓம் குஹாய நம: - பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

3. ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.

4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: - சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5.ஓம் பிரபவே நம: - அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.

6.ஓம் பிங்களாய நம: - பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.

7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: - கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
Read 37 tweets
#சூரசம்ஹார_சிறப்பு

முருகப்பெருமான் பற்றிய 60 தகவல்கள் :

1. முருகனின் திருவுருவங்கள்:

1. சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி.

இங்கு முருகனுக்கு பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
Read 36 tweets
#ஆறுபடை_வீடு_பொருள்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடு என்பதன் பொருள்

அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது?
புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள்.

அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள்.

இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.
ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள்.

அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.
Read 13 tweets
#கந்தனுக்குக்_கடிதம்

கஷ்டங்கள் தீர கந்தனுக்குக் கடிதம்!

இந்தக் கோயிலில் தனிச் சிறப்பான வழிபாடு ஒன்று நடக்கிறது. திருமணத் தடை, குழந்தைபாக்கியம் இல்லாத குறை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்க என்று பிரச்னைகளால் துன்பப்படும் பக்தர்கள், Image
அதை விண்ணப்பக் கடிதமாக எழுதி, ஸ்ரீகொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பிறகு அந்தக் கடிதத்தை முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டிவிடுகிறார்கள்.
இப்படிச் செய்த 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களுக்குள் தங்கள் வேண்டுதலை ஸ்ரீ கொளஞ்சியப்பர் நிறைவேற்றி அருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Read 17 tweets
#கந்த_சஷ்டி_கவசம்_உருவான_வரலாறு.

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.

எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
Read 17 tweets
#கந்த_சஷ்டி_திருவிழா

#கந்த_சஷ்டி_விரதம்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப் பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது
அசைக்கமுடியாத நம்பிக்கை.

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் சாப்பிடலாம்.

ஆனால், வயோதிகர்கள்,
நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
Read 18 tweets
#நவ_பாஷாண_முருகன்

*பழனிக்கு அடுத்ததாக நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அதிசய பூம்பாறை வேலப்பர் ஆலயம்.*

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கும் பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் ஆலயம்.
10 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் போகர் அவர்கள் சீனாவிலிருந்து திரும்பினார்.

அதாவது பழனி ஆண்டவர் சிலையை செய்து முடித்த பின் அவர் சீனா சென்றார்,

அங்கிருந்து திரும்பிய பிறகு அவர் மற்றொருநவபாசன சிலையை செய்தார்.
அந்த திருச்சிலை பழனிக்கும் பூம்பாறைக்கும் ( இன்று அது மேற்கத்திய மலைகள் என அழைக்கப்படுகிறது) நடுவே அமைந்தது.

இந்த இடத்தை யானை கஜம் ( போகர் காடு) என்றும் அழைக்கின்றனர்.

கோவிலில் உள்ள கல்வெட்டுக்களின் படி இந்த கோவில் சேர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!