Discover and read the best of Twitter Threads about #ஓம்நமோநாராயணாய

Most recents (24)

#ஸ்ரீ_ரங்கநாதர்

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீ ரங்கம்.

திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீ ரங்கநாதர். Image
த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர்.

அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி - தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர்.

அவற்றில் ஒரு பாட்டு தான் இன்றைய பதிவில் பார்க்கப் போவது.
புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார்.

வாழ்ந்த ஆண்டு 1420 - 1486.

ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.
Read 11 tweets
#மோகினி_ஏகாதசி :

வைசாக மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "மோகினி ஏகாதசி" என்று பெயர்.

இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர். Image
விஷ்ணு பகவான் வைசாக மாத வளர்பிறை ஏகாதசியின் போது தான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அதனால் தான் இதற்கு "மோகினி ஏகாதசி" என்ற பெயர் வந்தது.

பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது போல்,
இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பதும் இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பதும் ஐதிகம்.
Read 20 tweets
#நாராயண_நாமம்

*"4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா..."*

காஞ்சி பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். Image
ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன்.

4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா...

அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார்.
கலகலவென சிரித்த சுவாமிகள்,

''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள்.

'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
Read 8 tweets
🌀🐚

#முக்தி_அருளும்_முக்திநாத்

🐚🌀

🌿முக்திநாத்-முக்தி நல்கும் வைணவ திருத்தலம்.

அம்மனின் சக்தி பீட வரிசையில் நேபாள நாட்டில் முஸ்தாங் மாவட்டத்தில் இமயமலை,
முக்திநாத் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீ தேவி நாச்சியார் சமேத முக்திநாதர் கோவில்,
பிரதான கோவிலாகப் போற்றப்படுகிறது. Image
3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்து, பௌத்தர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இத்தலம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார்,
பெரியாழ்வார் ஆகியோர் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும், திருமங்கையாழ்வார் ராமபிரானைக் காண்கின்றனர்.

ராமானுஜரும் இத்தலத்தில் எழுந்தருளி வழிபாடு செய்துள்ளார்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவர்கள் திருமாலின் அம்சமாகக் கருதி
Read 32 tweets
#பஞ்ச_சம்ஸ்காரம்

பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.

1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல்
#புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.

3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல்
#நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.
Read 13 tweets
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.

அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.
Read 52 tweets
#பச்சைவண்ணப்_பெருமாள் திருக்கோயில்.

மூன்று தாயார்களின் அம்சமாக அம்பாள்.

மரகதமேனியனாக மூலவர்.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. Image
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இக்கோயிலின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும்,

மூலவரின் மண்டப வாயில் தெற்கு நோக்கியும் அமைந்திருக்க,

மூலவரான பச்சைவண்ணப் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
இக்கோயிலின் மூலவரான பச்சைவண்ணப் பெருமாள், மரகதமேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

மகாவிஷ்ணு இத்தலத்தில் ராமராக காட்சியளித்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை.

இவர் ஜோதிவடிவில் காட்சி தந்திருக்கிறார் என்பது இக்கோயிலின் நம்பிக்கை ஆகும்.
Read 9 tweets
#ஹஸ்தம்

பல திருக்கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொருவிதமாக தம் திருக்கரங்களை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர்.

பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில அவை 👇👇👇

1. அபய ஹஸ்தம்

2. வரத ஹஸ்தம்

3. ஆஹ்வான ஹஸ்தம் Image
1. அபய ஹஸ்தம்

பெருமாள் தன வலது திருக்கரத்தின் விரல்களை மேல் நோக்கி வைத்து இருப்பார்.

இதற்கு பொருள் "அஞ்சேல்! பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன்" என்பதாகும்.

இது பல கோயில்களில் காணப்படும் ஹஸ்தம்.

திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் அபய ஹஸ்தம் வைத்துள்ளார்.
2. வரத ஹஸ்தம்

பெருமாள் தன வலது திருக்கரத்தின் விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார்.

இதன் பொருள், "தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்" என்பதாகும்.

திருப்பதி மூலவர், வேங்கடநாதன் வரத ஹஸ்தம் வைத்துள்ளார்.
Read 5 tweets
#கோவிந்த_நாமம்

பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லி
பெருமாளைத் தரிசிப்பார்.

ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு
குறையில்லை.

இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து

தம்பி ! உன் குடும்பம் நலமா?

ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா என்று கேட்டார்.

அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை என்றார்.

உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன்,
எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே!
அதைச் சொல்லேன்! என்றார்.

வந்தவர், கோவிந்தா! கோவிந்தா என்றார்.

பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன் இது தானா!

நான் தினமும் விஷ்ணு
சகஸ்ரநாமமமே சொல்கிறேன்.

அதை விடவா இது பெரிது என்றார்.
Read 6 tweets
ஸ்ரீ விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம் :

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.
ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
Read 9 tweets
#திருவோண_விரதம்

*திருப்பங்கள் தரும் திருவோணம் :*_

*இன்று திருவோண விரதம்*

திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.

வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.

ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.

அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
Read 12 tweets
கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீ சார நாதப் பெருமாள்.

கும்பகோணத்திலிருந்து குடவாசல் அருகே உள்ளது திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோயில்.

பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். Image
அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம்.

அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.

ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான்.

சில நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான்.

அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர்.

அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்து விட்டு அவன் சென்று விட்டான்.
Read 13 tweets
*திருவெள்ளரை புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆலயம்*

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன்,

“இங்கிருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பாக்கியத்தைத் தந்த உனக்கு வரம் தர விரும்புகிறேன். வேண்டும் வரத்தைக் கேள்” எனக் கூறவே, Image
மகாலட்சுமி,

“எங்கு நான் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் நீங்குமோ அந்த இடத்தை காண்பிக்க வேண்டும்” என வேண்டினாள்.

கேட்ட வரத்தை மகாவிஷ்ணுவும் அளித்தார். 

பூலோகத்தில் மாரீசன் மற்றும் இராவணன் போன்ற அரக்கர்கள் அழித்து,

மக்களைக் காப்பாற்றி பிறப்பற்ற நிலையை அடைய,
நீலி வனம் என்னும் காட்டில் சிபிச் சக்கரவர்த்தி தங்கிருந்தபோது,

வெள்ளைப் பன்றி ஒன்று தோன்றி, யார் கையிலும் பிடிபடாமல் சுவேத்கிரி என்ற மலையின் மீது ஏறி, ஒரு புற்றில் நுழைந்து மறைந்து விட்டது.

அங்கிருந்த மார்க்கண்டேய முனிவரிடம் மன்னன் இது பற்றிக் கேட்க,
Read 9 tweets
#உயிரைக்_காத்த_துளசி

ஏழை ஒருவன், தினமும் அதிகாலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று,

கீரை வகைகளைப் பறித்து,

அதைச் சந்தையில் விற்று,

அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். Image
அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில்,

ஒரு குடிலில் முனிவர் ஒருவர்,

சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து, துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான்.

ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப்
பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான்.

கீரைகளைப் பறிக்கும் போது,

அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான்.

அப்போது அவனுக்கு,

அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது.
Read 18 tweets
#ஏகாதசி_வழிபாடு

ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!

தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும்.

இது பாவநிவர்த்தி கொடுக்கும்.

இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும்.
இல்லறம் இனிக்கும்.

தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்.

மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும்.
அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல்,

துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல்,
Read 13 tweets
#சொர்க்கவாசல்

*சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?*

அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி

பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும்,

தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்,
அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.

அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
Read 4 tweets
#வைகுண்ட_ஏகாதசி

*#சொர்க்கவாசல்* இல்லாத திவ்ய தேச கோவில்கள் :

108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம
பத வாசல் இருக்கும்.

ஆனால்,  கும்பகோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில்  சொர்க்கவாசல்
எனப்படும் பரம பத வாசல் கிடையாது.
இதற்கு காரணம் இருக்கிறது. 
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.

மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால்  தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.
எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும்
என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. 

மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
Read 13 tweets
#வைகுண்ட_ஏகாதசி

சகல சௌபாக்கியங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி...

விரதம் இருப்பது எப்படி?

வைகுண்ட ஏகாதசி
விரத முறை...!!

மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி.

மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசிக்கு முக்தி ஏகாதசி,
முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி (திங்கட்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
Read 10 tweets
#திருநாம_விளக்கம்

*பகவான் திருநாமங்களின் பொருள்*

வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.

*அத்திவ்ய நாமங்களும்* *அவற்றின்* *விளக்கங்களும்* :
1. *கேசவ* – துன்பத்தைத் தீர்ப்பவன்

2. *நாராயண*– உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்

3. *மாதவ* – திருமகள் மணாளனாக இருப்பவன்

4. *கோவிந்த* – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்

5. *விஷ்ணு*– அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6. *மதுசூதனன்* – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) *மது* என்னும் *அரக்கனை* *வென்றவன்*

7. *த்ரிவிக்ரம்*– மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்

8. *வாமன* – குள்ளமான உருவம் உடையவன்

9. *ஸ்ரீதர* – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்

10. *ஹ்ருஷிகேச* – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
Read 4 tweets
" *நாம் அதிகாலையில் கண் விழித்துக் கொண்டு ஸ்ரீமந் நாராயான ஸ்தோத்திரங்களை சொல்லி அவரை தினமும் தியானம் செய்தால்*,

தேவர்களின்
அருளும், மஹாலக்ஷ்மியின்
அருளும், நமக்கு கிட்டும்.
அவ்வாறின்றி அப்போது நாம் தூங்கிக் கொண்டிருந்தால்,
அவர்கள் கோபித்துக் கொண்டு
போய் விடுவார்கள்.

*ஸூரியோதயே சாஸ்தமயே ச சாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ர பாணிநம்*

என்கிறபடி சூரியோதயத்தில்
சூரியன் மறையும் நேரத்திலும்
தூங்குபவர் இந்திரனாயிருந்தாலும் அவர்களை விட்டு
விலகுவாள்.
பணத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவியார் அனைவருக்கும் பொதுவானவள்.

இவருக்கு தான் அருள் புரிவேன், இவர்களுக்கு அருள் புரியேன்! என்று ஒரு போதும் சொல்வதில்லை.

அவளை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும், மனமுவந்து உண்மையிலேயே அருள் புரிவாள்.
Read 4 tweets
*ஆதித்ய ஹிருதய மந்திரம் உபதேசிக்கப்பட்ட தலம்,

ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் பதிந்த தலம் இது*

திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷங்கள் தீரவும் ஸ்ரீ ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்கிறார்கள். Image
திருவாரூர் மாவட்டம், உதயமார்த்தாண்டபுரத்தில் உள்ளது இக்கோயில்.

கோயிலின் கிழக்கு பக்கம் ஆதித்ய ஹிருதய பெருமாள், இடபக்கம் ஸ்ரீதேவி, வலப்பக்கம் பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் இடப்பக்கம் நேர்த்திக்கடன் செய்யும் வகையில் அகல் விளக்கு ஏற்ற வசதியாக கட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் முன் பக்கம் பாஸ்கர தீர்த குளம் எப்போதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.

பெருமாள் : வலப்பக்கம் ஸ்ரீதேவியுடனும், இடபக்கம் பூதேவியுடன் 9 அடி உயரத்தில் ஆதித்ய பெருமாள் சிரிப்புடன் காட்சித்தருகிறார்.

பீடம் நான்கு அடியில் வட்ட வடிவில், இடது கையில் சங்கு, வலக்கையில் வரம் அருளியும்,
Read 16 tweets
#மோஷம்_தரும்_நாராயண_நாமம்

பகவானின் லீலைகளையும் அவனது நாமத்தின் மகிமைகளை பற்றியும் சொல்வதற்கு ஒரு ஜென்மம் போதாது !!

நாராயண நாமம் இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது.

இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார்.

இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார்.
அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும்.

அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது.

அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர்.
Read 14 tweets
#திருமண்

வைணவ சமயத்தில் நாமம் இட்டுக்கொள்வது வழக்கம்.

இதனை வைணவர்கள் ‘திருமண் காப்பு தரித்தல்’ என்கின்றனர்.

வைணவத்தின் முதல் கடவுளாக நாராயணன் (விஷ்ணு) வணங்கப்பட்டு வருகிறார்.

திருமண் எனும் திருநாமம் திருமாலின் பாதங்களைக் குறிக்கிறது.
திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கின்றனர். இது மஹாலட்சுமியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

உவர் மண் நம் உடையில் உள்ள அழுக்கை எப்படிப் போக்குகிறதோ, அதே போன்று, நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை இந்தத் திருமண் தூய்மையாக்குகிறது.
இறைவன் நாராயணனின் பாதத்தைக் குறிக்கும் இந்தத் திருமண், நம் உடல் ஒரு நாள் இந்த மண்ணோடு மண்ணாகிப்போகும் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அணியப்படுகிறது.

அதனால் நாராயணின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்பதை அறிவுறுத்துவதுதான் திருமண் காப்பாகும்.
Read 6 tweets
#நலம்_தரும்_நாமம்

யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ,

அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு Image
பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.
தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

முடிந்தால் அன்னம், பழங்கள் ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!