Discover and read the best of Twitter Threads about #ஓம்_நமசிவாய

Most recents (20)

#திருமுறை_வழிபாடு

மிக மிக முக்கியமான பதிவு :

ஓம் நமசிவாய.

அனைவருக்கும் அடியேனின் வணக்கங்கள்.

திருமுறைகளை படிக்க வேண்டும்.

திருமுறைகளை ஓத வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

திருமுறைகள் மொத்தம் பதினெட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. Image
இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு பாடல்களையும் ஓத முடியாத நிலையில் பல நபர்கள் உள்ளனர்.

ஆகையால் அனைவரும் திருமுறைகளில் அவசியம் ஓத வேண்டிய முக்கியமான திருப்பதிகங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்கிறேன்.
அத்துடன் சைவம் என்னும் இணைய தளத்தில் உள்ள அந்த பதிகத்தின் விவரம் சேர்த்து பதிவு செய்கிறேன்.

சைவம் என்னும் இணைய தளத்தில் பன்னிரு திருமுறைகளும் உள்ளது.

இங்கு அடியேன் பதிவு செய்வது தேவார பதிகங்கள் அகராதி வரிசையில் இருக்கும்.
Read 13 tweets
#பதஞ்சலீஸ்வரர்

முக்தி அளிக்கும் முள்ளூர் பதஞ்சலீஸ்வரர் கோவில் :

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம். Image
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும்,

தேவார திருத்தலங்களான திருநாரையூரில் இருந்து தெற்கில் 5 கிலோமீட்டர் தூரத்திலும்,

ஓமாம்புலியூரில் இருந்து கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமம்.
இந்த ஊரின் புராண காலத்து பெயர் கானாட்டுமுள்ளூர் என்பதாகும்.

இங்கு பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான இது, காவிரி வடகரை தலங்களில் 32–வது திருத்தலமாகும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற ஒரு பதிகம் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
Read 19 tweets
#ஸ்ரீ_ஔர்வ_தட்சிணாமூர்த்தி

பெண்களின் கர்ப்ப கால பிரச்னைகளை நீக்கும்

ஆண்களின் காம எண்ணங்களை மாற்றும் தக்கோலம் தட்சிணா மூர்த்தி

கற்பனைக் கெட்டாத கர்ப்ப வேதனைக்கு செவி சாய்த்து அவ்வேதனைகளை ஏற்றுக் கொள்பவரே தக்கோலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ஔர்வ தட்சிணா மூர்த்தி ஆவார். Image
தட்சிணா மூர்த்தியின் தலை சற்றே இடது பக்கம் சாய்ந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் பல துன்பங்களை அடைவார்கள் என்று யார் பயமுறுத்தினாலும் அதைக் கேட்டு சற்றும் கலங்காது
தக்கோலத்தில் அருள்புரியும் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தியை அடிப் பிரதட்சணம் செய்து வணங்கி வந்தால் சுகப் பிரசவத்தைப் பெறுவார்கள் என்பது இத்தல  கடாட்சமாகும்.
Read 5 tweets
*சிவாலய ஓட்டம் என்றால் என்ன?

1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம். கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம்.
மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது.
இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!
Read 20 tweets
மகா சிவராத்திரியில்
இதை எல்லாம் செய்யாதீர்கள்! 

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு பதிவு..
கடந்த முறை சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.
Read 21 tweets
தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்.

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்
சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்
Read 22 tweets
#ஓம்_நமசிவாய

சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியத்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் :

அது என்ன எட்டு நாமக்கள்????

மந்திரம் :

ஷிவோ மகேஷ்வரச்சைவ

ருத்ரோ விஷ்ணு பிதாமஹா :|

ஸம்ஸாரவைத்ய ஸர்வேஷ

பரமாத்மா ஸதாசிவ ll
பொருள்:

(1)சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.

(2)மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.

(3)ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).

(4)விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
(5)பிதாமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.

(6)ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.

(7)ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரமாத்மா.

(8)ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.
Read 4 tweets
#ஆரத்தி_மந்திரம்

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம் :

நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம்.

அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.
அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும்.

அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ.
கற்பூர ஆரத்தி மந்திரம்:

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே

நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே

ஸமேகமான் காம காமாய மஹ்யம் !

காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !

குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:
Read 5 tweets
#பஞ்சாட்சர_உபதேச_திருவிழா

💥 *பஞ்சாட்சர உபதேச விழா - 28.12.2022* 💥

மார்கழி - 13 புதன்கிழமை.

ஸ்ரீ அமுதவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ பாரிஜாதவனேஸ்வர சுவாமி திருக்கோவில் - திருக்களர்.

மாலை : ஸ்ரீ ஷண்முகப் பெருமானுக்கு அபிஷேகம்.

*உபதேச காட்சி* தொடர்ந்து திருவீதியுலா.
ஆண்டுக்கொருமுறை மார்கழி வளர்பிறைசஷ்டி சதயநட்சத்திரம் கூடிய நன்னாளில் நடைபெறும் உபதேச விழாவில் அன்பர்கள் கலந்துகொண்டு #பஞ்சாட்சரம் ஜெபித்து திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏
இத்தலத்தில் தான் ஷண்முகப் பெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி

துருவாசர், வியாஸர், காலவர் மற்றும் கந்தமாதன பருவதவாசிகளாகிய அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் திருஐந்தெழுத்து (பஞ்சாட்சர)உபதேசம் செய்தருளினார்.
Read 5 tweets
#தம்பதியர்_ஒற்றுமை

கணவன் மனைவி உறவு மேம்பட வழிபாடு

பலருக்கும் தங்கள் கணவன்மார்கள் தங்களை மதிப்பதில்லை,

தங்களிடம் உரிய அன்பைச் செலுத்துவதில்லை என்று நினைப்பதுண்டு.

சொல்லப்போனால் இந்த குறைபாடு தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தோன்றாத தம்பதிகளே இல்லை எனலாம்.
நேத்ராபதி என்றால் தன் மனைவியை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற கணவனையும் குறிப்பதால் இத்தகையோர் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம்.

செம்பியன்களரி திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய படி காட்சி அளிக்கிறாள்.
இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து ஒன்றுக்கொன்று இணையாய் மலர வேண்டியவர்களே என்ற ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாகும்.

காமாக்ஷி என்றால் கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதினாலும் தீண்டாத நேத்ரங்களை உடையவள் என்ற பொருளையும் குறிப்பவளே காமாட்சி அம்மன்.
Read 5 tweets
#சிவ_தீட்சை

சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா. சென்னையில்.*

சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது.
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*

சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.

*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*
Read 4 tweets
#காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.

இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
Read 17 tweets
#வில்வாஷ்டகம்

வில்வாஷ்டகம் தமிழில் :

ஈடு இணை இல்லாத பயனை தரகூடியது இந்த வில்வாஷ்க பாராயணம்.

முன்ஜென்ம கர்ம வினை நீங்கி முக்திக்கு வழிவகுக்க கூடிய வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்வோர்க்கு எந்த துன்பமும் வாழ்வில் இல்லை.
ஓம் நமசிவாய

மூன்று தளம் மூன்று குணம் முக்கண் மூவாயுதம் வடிவான வில்வதளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிஜென்ம துயர் நீக்கும் முப்பிரிவாய் விரிந்திருக்கும் வில்ப மரம் துளிர்கின்ற ஏக வில்வம் சிவார்ப்பணம்.
பூச்சிகளால் அழியாத சிவபூஜைக்கு என்ற தளம் மங்களமாய் மாறும் தளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

கோடி கன்யா மகா தானம் வாஜபேயம் சோம யாகம் பலன் தருமே வில்பதளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

வடகாசி புண்ணியவாசம் காலபைரவ தரிசனம் பலன் தருமே வில்பதளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.
Read 9 tweets
#நமசிவாய

🌹"நமசிவாய' என்பதன் பொருள் என்ன..!!

'நமசிவாய' என்பதற்கு, சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். 

நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அகம் மற்றும் புறச்சாதனங்கள் :

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள்.

திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். 

திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம்.
இம்மந்திரமானது, உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால், நம்முள் இருந்தே நமக்குப் பயன் தருவதாக இருக்கும். 

மந்திரங்கள் பல இருந்தாலும், அவற்றில் தலையாயது பஞ்சாக்கர மந்திரம் என்பர்.
Read 8 tweets
#பாலைவனேஸ்வரர்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திலிருந்து சுமார் 1.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருபாலைவனநாதர் திருக்கோயில்.

அப்பரால் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் ஒன்று இந்த பாலைவனேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
இத்திருத்தலத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம்.

அதாவது, ஸ்வாமி சந்நிதியின் வலப் புறம் அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது.

இப்படி, அம்பாள் ஸ்வாமியின் வலப்பாகத்தில் சந்நிதி கொண்டிருப்பதை, கல்யாண கோல அமைப்பு என்று சிறப்பிப்பார்கள்.
ஆகவே, இந்த ஆலயத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருகி வழிபட்டுச் செல்ல, தடைகள் யாவும் நீங்கி, விரைவில் கல்யாணம் கைகூடும் என்கிறார்கள், பக்தர்கள்.

இக்கோயிலின் சிறப்பம்சம் இது மட்டும்தானா?

இல்லை.

வேறு சிறப்புகளும் இவ்வாலயத்துக்கு உண்டு.
Read 22 tweets
#ஓம்_நமசிவாய
#பக்தி
தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும்.
தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி உதவினேன்.
தீபாவளி விரதம் முறையாக இருந்து வழிபாடு செய்பவர்கள் முத்தி நலம் அடைவார்கள்.
இதனைப் படிக்கும் சிவநேயச் செல்வர்கள் தீபாவளி விரதமிருந்து சிவசாயுஜ்தம் அடைவார்களாக.

அன்பன்

- கிருபானந்த வாரி
Read 20 tweets
#சர்க்கரை_நோய்_நிவர்த்தி

*சர்க்கரை நோய் தீர்க்கும் தென்னகர் சிவன்!*

நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும்.

சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான்.
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன.

இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.

நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.
Read 21 tweets
#ஓம்_நமசிவாய

#பஞ்சாட்சர_மந்திரம்

#பஞ்சாட்சர_மகிமை

🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய்
ஓங்கார ஓசை தினம் கேட்கும் என்பது உண்மையே

🌹 🌿 ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய்
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று மூன்று முறை சொல்லுவாய்
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே

🌹 🌿 ஓம் நமசிவாய என்று நான்கு முறை சொல்லுவாய்
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஐந்து முறை சொல்லுவாய்
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார்

🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஆறு முறை சொல்லுவாய்
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார்
Read 6 tweets
#ஓம்_நமசிவாய #சைவ_சமயம்
#கோலாகலமாக_தொடங்கிய_மாங்கனி_திருவிழா!

காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்
Read 8 tweets
#ஓம்_நமசிவாய

#அதிசய_சிவன்_ஸ்தலம்.

வீட்டின் தரையில் நெய் சிறிதளவு கொட்டினால் என்னாகும்?

சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும்.

🇮🇳🙏1
ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நெய்யை ஈ, எறும்பு மொய்ப்பதில்லை.....!

🇮🇳🙏2
🐜 புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது. இங்கு சொக்கலிங்கேஸ்வரரும், மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.

🇮🇳🙏3
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!