Discover and read the best of Twitter Threads about #ஓம்_நமோ_நாராயணாய

Most recents (24)

#திருக்கோஷ்டியூர்

108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று.

நாராயண மந்திரம் என்பது எட்டெழுத்து மந்திரம்.

#ஓம்_நமோ_நாராயணாய ;’
என்பது தான் எட்டெழுத்து மந்திரம்.

இந்த மந்திரத்தை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசமாகப் பெற வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் எண்ணம் கொண்டார். Image
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு ஆச்சார்யரைக் காண நடந்தே வந்தார்.

கோயிலுக்கு வந்தார்.

கோயிலுக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டு வாசலுக்கு வந்தார்.

‘ஆச்சார்யருக்கு நமஸ்காரம்’ என்று அழைத்தார். ’ என்ன விஷயம்’ என்று கதவு திறந்து நம்பி கேட்டார்.
‘தங்களிடம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசமாகப் பெறவேண்டும்’ என்றார் ராமானுஜர்.

‘யார் நீங்கள்?’ என்று கேட்டார் அவர்.

’நான் ராமானுஜன்’ என்று பதிலளித்தார்.

உடனே முகத்தைத் திருப்பிக் கொண்ட நம்பி, வாசல் கதவை தடக்கென்று சார்த்திக் கொண்டார்.

விறுவிறுவென வீட்டுக்குள் சென்றார்.
Read 17 tweets
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950 - களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீ மஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார். Image
திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,

”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”
யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,
Read 14 tweets
#நென்மேலி

#பிண்டம்_வைத்த_பெருமாள்
#ஸ்ராத்த_ஸம்ரட்சண_பெருமாள்

எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள். Image
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்து கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி சிறு குறிப்பு.

நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.
Read 15 tweets
#கான்பூர்_ஜெகன்நாதர்_ஆலயம்

அமானுஷ்ய கோவில் - கான்பூர் பகவான் ஜெகன்நாதர் ஆலயம்.

வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை கூறும்... அமானுஷ்ய கோவில் !!

மழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில் !!

அதிசயங்கள் நிறைந்த உலகம் இது.
இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவதுதான் வழக்கம்.

ஆனால், ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள்.

மாறாக அங்குள்ள கோவிலிற்கு சென்று அறிவார்கள்.
Read 10 tweets
கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்:

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
Read 25 tweets
*#ஓம்_நமோ_நாராயணாய*

ஹரி பக்தர்களை காக்கும் ஸுதர்சன சக்கரம்

ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தார்.

இவர் ஏகாதசி விரதத்தை ஒரு முறை கூட தவர விட்டதில்லை.

ஸ்ரீமந் நாராயணனிடம் சுயநலமற்ற அபரிமிதமான பக்தி வைத்து இருந்தார். Image
ஸ்ரீமந் நாராயணன் அம்பரீச ராஜாவிற்கு காட்சி தருகிறார்.

என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு அம்பரீஷ ராஜாவோ தனக்கு தங்கள் தரிசனம் கிடைத்ததே போதும் பிரபு தன்யனானேன் என்றார்.

இவரின் பக்தியை மெச்சி பரந்தாமனே தன்னுடைய சுதர்சன சக்கரத்தை கொடுத்து விட்டார்.
அதை அனுதினமும் பக்தியுடன் பூஜை செய்து வந்தார் அம்பரீஷ மஹாராஜா.

இவர் ஒவ்வொரு முறையும் ஏகாதசியில் விரதமிருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பார்.

இவரது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
Read 17 tweets
#இறைவனின்_கருணை

எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்....

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி.

அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார்.

கோவில், விட்டால் வீடு என்று தான் வாழ்ந்து வந்தார். Image
இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…
அவனுக்கு சோர்வாக இருக்காதா?’...

என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம்
“எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்.

நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.

இறைவன், எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை.

எனக்குப் பதிலாக நாளை ஒரு நாள் நீ நில்.
Read 25 tweets
#ராம_நாமம்

ஏழெழு ஜென்ம சாபல்யம் தீர்த்து ஏற்றம் தரும் ஸ்லோகம்...

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சொல்வதற்கு இணையான

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது,
11 முறை சொல்லுங்கள்,
உங்கள் வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.

சகஸ்ரநாமம் என்றால்,
அது விஷ்ணு சகஸ்ரநாமம் தான்.

அதன் பின் மற்ற தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என
நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை
தினமும் சொல்வதென்றால், குறைந்தது, அரை மணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்)
எனக்கு நேரமில்லை
என, சாக்கு போக்கு சொல்வோம்.

இதை நன்கு உணர்ந்த
பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.

’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி தேவி,
Read 10 tweets
#வரம்

*கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்று தான்.*

நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து,

சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி வரும் Image
அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம்.

இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம்.
திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும்.

நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில்,
Read 17 tweets
#பூபதி_திருத்தேர்

இன்று ஸ்ரீரங்கம் பூபதித்தேர்.

ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட் டுவந்த பிரசித்திப் பெற்ற திருவிழா தைத்தேர் விழா.

ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பூபதித்திருநாள் என்ற பெயரில் நடைபெறும்.
இது தனி விழா.

கொடியேற்றத்துடன் தொடங்கும்.

அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கொடியேற்ற மண்டபம் வந்தடைவார்.

பின்னர் கொடிப்பட்டம் புறப்பட்டு காலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழா  11 நாட்கள் நடைபெறும்.
நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைவார்.

பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை திருச்சிவிகையில் புறப்பட்டு கோயில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைவார்.
Read 6 tweets
*#கட்டைவிரல்_இதயத்தில்_கடவுள்!*

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான்.

பெருமாள் சயனத்தில் இருந்தார்.

அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான்.

பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள்,

பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.

பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை.
ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.

அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே,

சொல்...சொல்.

உடனே தீர்த்து விடுகிறேன், என்றார்.
Read 12 tweets
#கருட_சேவை

தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை

தைமாதம் 8ஆம் தேதி (22-01-2023) ஞாயிற்றுக்கிழமை தை‌ அமாவாசை திருநாங்கூர் 11 திவ்யதேச எம்பெருமான்களின் பிரம்மாண்ட மங்களாசாசன கருட சேவை உத்ஸவம் நடைபெறுகிறது.
இத்தனை திவ்ய தேச எம்பெருமான்கள் ஒருசேர கருட சேவை உலகத்தில் இங்கு மட்டுமே.

இந்த மங்களாசாசன கருட சேவை உற்சவத்திற்கு மிக முக்கியமானவர் ஸ்ரீ திருமங்கையாழ்வார்.
இவர் தை அமாவாசை (தை 07, 21-01-2023) அதிகாலை திருநகரி ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கல்யாண ரெங்கநாதன் திருக்கோயிலிருந்து ஸ்ரீ குமுதவல்லி நாச்சியாருடன் ஸ்ரீ திருமங்கையாழ்வார் கோலாகலத்துடன் புறப்பட்டு, நடுவில் உள்ள
Read 13 tweets
*இன்று நம்மாழ்வார் மோட்ச உற்சவம்*

வைணவத்தில் ஆழ்வார் என்று சொன்னால் நம்மாழ்வாரைக் குறிக்கும்.

மற்ற ஆழ்வார்கள் இவருக்கு அங்கங்கள்.

ஆழ்வாரின் தலைவர் நம்மாழ்வார்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 1,269 பாசுரங்களை இனிக்க இனிக்கப்பாடி பரம்பொருளைப் போற்றியுள்ளார் நம்மாழ்வார்.
39 திவ்விய தேசங்களின் அருள் சிறப்படையும் போற்றி பாடியுள்ளார்

அவர் அவதரிப்பதற்கு முன்பு வரை, ஆளில்லாமல் பரமபதவாசல் மூடியிருந்தது. ஆழ்வார் தமிழில் பாடிய பிறகு மக்கள் ஞானம் பெற்று அவரோடு அவருடைய பாடல்களைப் பாடி நற்கதி அடைந்தார்கள்.
இதைக் காட்டுவதற்காக இந்த நாளில் அவர் பாடிய திருவாய்மொழி கேட்டுக்கொண்டே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார் பெருமாள்.

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் அடிப்படையில் ஆழ்வார் மோட்ச உற்சவம் எல்லாக் கோயில்களிலும் நடைபெறும்.
Read 6 tweets
#ஸ்ரீ_விஷ்ணு_சதநாம_ஸ்தோத்திரம்

ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்
தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம்
Read 7 tweets
#திருவோண_விரதம்

இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் !

இன்று திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.

வீட்டின் தரித்திரம் விலகும்.

ஐஸ்வர்யம் பெருகும் !

இன்று டிசம்பர் 26-12-2022, சுபகிருது வருடம், மார்கழி 11, திங்கட்கிழமை.
இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் மாலை 04.41 வரை.

இன்றைய சிறப்பு : திருவோண விரதம்.

இன்றைய வழிபாடு :

பெருமாளுக்கு துளசிமாலை சாத்துதல்.

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.

இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
பெருமாளுக்கு உகந்த திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று.

திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.

திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத் தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.
Read 13 tweets
#வைகுண்ட_ஏகாதசி

ஸ்ரீ ரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது.

இவ்வருட வைகுண்ட ஏகாதசி திருநாள் முன்னிட்டு இன்று (22-12-2022) வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் எனப்படும் அரையர் சேவையோடு திருஅத்யாயன திருநாள் தொடக்கம்.
இராமானுசரின் விருப்பப்படி ஸ்ரீ பராசர பட்டர் மேல்கோட்டையில் வாழ்ந்து வந்த மாதவாச்சாரியை இந்த திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தை கொண்டு வாதப் போரில் வென்று தன்னுடைய சீடராகி ஆக்கினார்.
இந்த மாதவாச்சாரியாரே பின்னர் நஞ்சீயர் என்று அழைக்கப்பட்ட பராசரபட்டரின் சீடர்.

பராசரபட்டர் பெரிய பெருமாளின் வளர்ப்பு மகன். இந்த நிகழ்ச்சியைக் கேட்ட பெரிய பெருமாள், பராசரபட்டர் இந்த வியாக்கியானம் சொல்லி கேட்க ஆசைப்பட்டார்.
Read 6 tweets
*ஏழுமலையானுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?*

தினமும் நாம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் ‘சாந்தாகாரம் புஜக சயனம்...’ பாடலைச் சொல்லி வழிபட்டு வருகிறோம் எனினும் அதற்கான பொருள் தெரியாது.

அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?
‘சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் சுரேசம்
விஸ்வாகாரம் ககன சத்ருசம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்’

இதுதான் நீங்கள் குறிப்பிடும் வரிகள்.
பகவான் விஷ்ணுவினது சாந்தமான உருவம்.

அவர் புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம்.

தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக் கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம்.

அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம்.
Read 10 tweets
#லட்சுமி_நாராயணர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.

இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.

குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
Read 8 tweets
*#பீஷ்ம_பஞ்சகம்*

தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும்.

பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார்.

பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது.
இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களடைவார்கள்.

அது மட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும்.
Read 14 tweets
#தூய_பக்தி

*ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும்.*

ஆகையால்,

பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்.

இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
சரி என திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது.

பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்.

மறுபடியும் உண்டியல் உதவியது.

பிறகு ஒரு பிள்ளை.

அதற்கும் அதே உண்டியல்.
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் பேரன் பேத்தி இப்படியே காலம் கழிந்தது.

தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்.

ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார்.
Read 12 tweets
#நரசிம்மர்_சக்கரத்தாழ்வார்

*சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்*

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.

சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து
Read 6 tweets
#விஷ்ணு_பதி_புண்ணிய_காலம்

இன்று நவம்பர் 17-11-2022, சுபகிருது வருடம்,

கார்த்திகை 01,

வியாழக்கிழமை,

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

மஹாவிஷ்ணுவை வழிபடுங்கள் விஷ்ணுபதி புண்ய காலத்தில்.
விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டியது அவசியம்.
இந்தப் புண்ணிய காலத்தில் பெருமாள் சந்நிதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம்.

ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய மனம் அமைதி பெறும்.
Read 16 tweets
#ஸ்ரீ_ஹரி_நாம_மகிமை

துக்காராம் மஹராஜ் போதனை

#ஸ்ரீ_ஹரி_நாம_சிறப்பு

1. ஹரியின் நாமத்தை தவிர கலியில் எளிதாக முக்தி அடைய சாதனம் எதுவும் இல்லை

2. ஹரி நாமத்தை விடுத்து தீர்த்த யாத்திரை தேசாந்திரம் போவது எல்லாம் கால விரயம் உடலுக்கு அலைச்சல் அன்றி வேறு இல்லை Image
3. ஹரியை தேடி எங்கும் அலையாமல் ஒரு இடத்தில் அமர்ந்து ஹரி நாமத்தை ஸ்மரி நீ இருக்கும் இடம் தேடி ஹரி ஓடோடி வருவான்

3. பரம பொக்கிஷமான ஹரி நாமத்தை விடுத்து உலகில் வாழ்விதில் அர்த்தமில்லை அவன் விலங்குக்கு சமமாவான்

4. ஹரி நாமத்திற்கு‌ முன்னாள் வைகுண்டத்தை வைத்தாலும் சமமாகது
5. ஹரி நாமத்தை சொல்பவர் பாதரா விந்தங்களில் விழுந்து புரண்டாளே உன் பாவம் அனைத்தும் சர்வ நாசம் என்பது நிச்சயம்

6. சகல சாத்திரமும் வேதமும் ஆகமும் ஒரே ஒரு கோவிந்த நாமத்திற்கு ஈடாகாது

7. ஹரியின் பாதார விந்தத்தில் சயனிக்கும் ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேசனால் கூட
Read 7 tweets
வைணவத்தில் நவக்கிரகங்கள் உண்டா? இல்லையா?

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது!

சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது!
ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா?

*தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்*

ஸ்லோகம் :-

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி
தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!
நவக்கிரகங்கள் = ஒன்பது

சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது
Read 28 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!