Discover and read the best of Twitter Threads about #ஓம்_பைரவாய_நமஹா

Most recents (12)

#ஆனந்த_கால_பைரவர்

*ஆனந்த வாழ்வு அருளும் ஷேத்ரபாலபுரம் பைரவர் கோவில்*

ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

இதனால் இவரை ‘ஆனந்த கால பைரவர்’ என்று அழைக்கிறார்கள். Image
ஷேத்ரபாலபுரம் இந்த ஊர் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் இருக்கிறது.

இங்கு பைரவர் தனித்து அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்திற்கு தனி வரலாறு உள்ளது.
சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம்.

அது மட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை.

ஆனால் ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.
Read 14 tweets
*ஸ்ரீ மஹா சொர்ண பைரவி சமேத ஸ்ரீ மஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவர் சுவாமி :

உலகில் வேறு எங்கும் காணவியலாத அதிசய அதியற்புத திருவுரு அமைப்பு கொண்ட தெய்வம் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர். Image
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் விலகும்.

ஆயிரம் கோயில் சென்று வணங்கிய பலன் உடனே கிட்டும்.

நினைத்தது நடக்கும்.

கேட்டது கிடைக்கும்.

ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் இருக்கும் இடத்தில் சொர்ணம் செழித்துக் கொண்டே இருக்கும்.
*திருவாலய சிறப்பு:*

கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹாமஹா சொர்ணாகர்ஷன பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் முப்பெரும் தேவ தேவியர் சொரூபம்.
Read 8 tweets
#பஞ்ச_பைரவர்_ஆலயம்

*பிதுர் தோஷத்தை நீக்கும் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச பைரவர்*!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம்.

இங்கு பசுபதீஸ்வரர் எனும் சிவாலயம் இருக்கிறது.
இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆவூர் பெயர் காரணம்:

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும்.
எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது.

‘ஆ’ என்பது பசுவை குறிக்கும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்ச பைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
Read 6 tweets
#சம்பக_சஷ்டி

இன்று முதல் பைரவருக்கான சம்பக சஷ்டி :

தோன்றிய வரலாறு

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான்.
தாருகாவன அழிவிற்குப் பிறகு சிவபெருமான் யோக நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடி விடுகிறாள். 

ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார்.

ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.
அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும், இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கப் பட்டனர்.  

இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருந்தனர்.  

அவர்களும் பெரிய சிவபக்தர்கள்.  

தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
Read 12 tweets
#பைரவர்_அஷ்டோத்ர_சதநாமாவளி

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 11 tweets
#காசி_ஸ்ரீ_கால_பைரவர்

#பைரவாஷ்டமி_சிறப்பு

#அஷ்ட_பைரவர்_யாத்திரை

பலருக்கும் தெரியாத தகவல் :

காசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.
இவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.

காசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்’ படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது நம்பிக்கை.
காசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது.

இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.

காசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
Read 7 tweets
#பைரவர்_வழிபாடு

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம்.

பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள்.

அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. Image
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார்.

எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர்.

இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார்.
அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
Read 17 tweets
#வைரவேச்சுரம்

காஞ்சீபுரம் வைரவேச்சுரம் :

கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது.
இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.

இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார்.
காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்தான்.
Read 4 tweets
#நட்சத்திர_பைரவர்_மந்திரம்

அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் பம் பீஷன பைரவாய நமஹா"
பரணி, பூரம், பூராடம் நட்சததிரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமஹா"

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமஹா"
ரோகிணி,அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் கபால பைரவாய நமஹா"

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமஹா"
Read 7 tweets
*64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!*

இந்தியாவில் அமைந்துள்ள 2 கால பைரவர் கோவிலில் இரண்டாவதாக உள்ள கோவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் சிறப்பு பற்றி காண்போம்..
இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ளது கால பைரவர் கோவில்.

காசியில் அமைந்துள்ள தட்சண கால பைரவர் கோவில் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்ததாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஆதியும் அந்தமும் இவரே என்று மக்களால் போற்றப்படுகிறது.

மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

இந்த  64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்  ஆவார்.
Read 10 tweets
#பைரவர்_வழிபாடு

#27_நட்சத்திர_பைரவர்_வழிபாடு

27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள்.

மனதார பைரவரை வழிபாடு செய்தால் நமது அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர்களும், தலங்களும் :-
1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.

5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
Read 10 tweets
ஸ்ரீ பைரவர் அஷ்டோத்ர சதநாமாவளி :

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!