Discover and read the best of Twitter Threads about #கந்த_சஷ்டி_திருவிழா

Most recents (9)

#கந்த_சஷ்டி_திருவிழா

#முருகன்_சிறப்பு_தகவல்கள்

முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மஹாகவி காளிதாசர்.
முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.

இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

பிரம்மசரிய - கிருகஸ்த - சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
Read 11 tweets
சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகன் தலம்.

கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம்.
ஆனால் முருகனின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

அப்படிப்பட்ட முருகனின் படைவீடு தான் திருத்தணி. முருகனின் 5 ஆம் படைவீடு.
முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோவில் ஆகும்.

தணிகை என்பது சினம் தணிதல்.

திருத்தணி முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.
Read 5 tweets
#சூரசம்ஹாரம்_உணர்த்தும்_தத்துவம்

🌟முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம்.

🌟சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர் புரிந்தான்.

தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான்.

ஆனால்,ஆதி முதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன.
🌟முருகனின் கை வேலுக்கு #சக்திவேல் என்று பெயர்.

அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார்.

அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

🌟வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன்,இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான்.
🌟வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது.மாயையை இருகூராகக் கிழித்தது.

🌟ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது.

🌟சூரசம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப் போக பகைவனான சூரபத்மன்
Read 11 tweets
#பன்னீர்_இலை_விபூதி

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பன்னீர் இலை விபூதி பிரசாத மகிமை :
ஸ்ரீ செந்திற்பிரான், ஆணவம் கன்மம் மாயையாகப் பிரதிபலித்த சூரபன்மன், அவன் தம்பிமார் சிங்கமுகன்,யானைமுகன் ஆகிய அசுரர்களை வதைத்தருளி ஜயந்திபுரம் என்ற திருசெந்தூரில் நவரத்ன மயமான அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு
தர்பாரில் செங்கோல் பிடித்து, சர்வ லோகங்களுக்கும் ராஜாதிராஜனாக விளங்கிவரும் சந்தர்ப்பத்தில் அவருடைய பெருமையைப் போதிக்கின்ற சகல வேதங்களும் ஒன்று சேர்ந்து அந்தக் குமரக்கடவுளினுடைய மகிமையை விளக்க பன்னீர் மரங்களாக இத்தலத்தில் தோற்றங்கொண்டுள்ளன.
Read 14 tweets
#ஸ்ரீசுப்பிரமண்ய_அஷ்டோத்திரம்.

{தமிழ் விளக்கத்துடன்}

1.ஓம் ஸ்கந்தாய நம:

{மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
2. ஓம் குஹாய நம: - பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

3. ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.

4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: - சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5.ஓம் பிரபவே நம: - அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.

6.ஓம் பிங்களாய நம: - பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.

7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: - கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
Read 37 tweets
#ஆறுபடை_வீடு_பொருள்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடு என்பதன் பொருள்

அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது?
புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள்.

அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள்.

இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.
ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள்.

அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.
Read 13 tweets
#கந்தனுக்குக்_கடிதம்

கஷ்டங்கள் தீர கந்தனுக்குக் கடிதம்!

இந்தக் கோயிலில் தனிச் சிறப்பான வழிபாடு ஒன்று நடக்கிறது. திருமணத் தடை, குழந்தைபாக்கியம் இல்லாத குறை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்க என்று பிரச்னைகளால் துன்பப்படும் பக்தர்கள், Image
அதை விண்ணப்பக் கடிதமாக எழுதி, ஸ்ரீகொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பிறகு அந்தக் கடிதத்தை முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டிவிடுகிறார்கள்.
இப்படிச் செய்த 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களுக்குள் தங்கள் வேண்டுதலை ஸ்ரீ கொளஞ்சியப்பர் நிறைவேற்றி அருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Read 17 tweets
#கந்த_சஷ்டி_கவசம்_உருவான_வரலாறு.

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.

எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
Read 17 tweets
#கந்த_சஷ்டி_திருவிழா

#கந்த_சஷ்டி_விரதம்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப் பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது
அசைக்கமுடியாத நம்பிக்கை.

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் சாப்பிடலாம்.

ஆனால், வயோதிகர்கள்,
நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!