Discover and read the best of Twitter Threads about #கமல்ஹாசன்

Most recents (18)

#உலகநாயகன் அவர்களின் #விக்ரம் இசை & முன்னோட்டம் வெளியிட்டு விழா - ஒரு பார்வை.
ஒரு மனிதன். ஒரு நாயகன். ஒரே உலகநாயகன். அவரின் விழா. இது #நம்மவர் களின் விழா! நேரு உள் விளையாட்டு அரங்கம் இது போல் ஒரு கூட்டத்தை திரும்ப பார்க்குமா எனும் அளவிற்கு வந்த ரசிகர்கள். பாஸ் இல்லாமல் வெளியே 1/
இருந்த கூட்டமே அதற்கு சாட்சி. நிகழ்ச்சி 6:30 க்குத் தான் ஆரம்பம். அதற்கு முன் பாடகர் சீனிவாஸ் & ஹரிச்சரன் குழுவினரால் #உலகநாயகன் பாடல்கள் சில அருமையாக பாடப்பட்டது. திரைபிரபலங்கள் & படத்தில் சம்மந்தப்பட்ட குழுவினர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். 2/
பாடல்கள் பாடி முடித்ததும், சரியாக 6:30 க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. திவ்யதர்சினி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து போல். இசைஞானி வாழ்த்தோடு ஆரம்பம் ஆனது. திரையில் தோன்றி ராஜ்கமல் & உலகநாயகன் அவர்களை வாழ்த்தினார்.3/
Read 25 tweets
தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்)

#KamalHaasan
1) #மகாநதி - "Avid Editing"

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவிட் எடிட்டிங் டெக்னாலஜி பயன்படுத்திய படம் அதாவது சீனை பார்த்து உடனுக்குடன் எடிட்டிங் செய்வது👏
2) #குணா - "Steadi Camera"

கமல்ஹாசன் பேசி கொண்டே ரூமை சுற்றி நடிக்கப்பட்ட காட்சியை எடுக்க இந்த கேமரா உபயோகிக்கபட்டது அதாவது கேமராமேன் கையில் வைத்துக்கோண்டு சுற்றி சுற்றி காட்சியை பதிவு செய்வார்👏
Read 19 tweets
#கமல்ஹாசன் சில தயாரிப்பாளர்களை அழித்தார் என கூறும் கருத்துக்கு அவர் தயாரிப்பாளர்களை "வாழ வைத்தார்" என்பது தான் உண்மை அதற்கான த்ரட்👇

#KamalHaasan
1) #அவ்வைசண்முகி தயாரிப்பாளர் முரளி "1996 லயே கமல் சார்க்கு 4.7 கோடிக்கு மேல லாபம், சென்னைல மட்டுமே அவருக்கு 1 கோடி ஷேர், எங்களுக்கும் மத்தவங்களுக்கும் டபுள் மடங்கு லாபம்"👏

2) #காதலாகாதலா தயாரிப்பாளர் தேனப்பன் "கமல் சார் நானே நடிக்கிறேன் எனக்கு சம்பளம் வேணாம், ராஜ்கமல்'னு போட்டு வியாபாரம் பண்ணிக்கோன்னு சொன்னாரு, அதுனால தான் என்னோட பொண்ணு பேரு & என்னோட கம்பெனி பேரு ராஜலட்சுமி‌ (அவரோட அம்மா பெயர்)👏
Read 17 tweets
@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
Read 10 tweets
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக #அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்:
1. கூட்டம் இல்லை.
2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு
3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி
2. 3000 பேர் வந்ததை மறைத்தது
3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது
4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது
5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள்.
1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம்
2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது
3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக
4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது
5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
Read 6 tweets
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17 Image
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
Read 17 tweets
#Thread

ஒருவர் நேர்மையானவர் சமரசமற்றவர் பொது நலனை பாதுகாப்பவர் என்றால், அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை !

’’நேர்மையானவர், கறாரானவர், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் ஆகவே, தான் துணைவேந்தர் சூரப்பாவை அண்ணா பல்கலையில் இருந்து தூக்கியடிக்க துடிக்கிறார்கள்’’
கமலஹாசன் உள்ளிட்ட மேட்டுக்குடி மேதாவிகள் அனைவரும் இப்படித்தான் சொல்கிறார்கள்!

அவர் நேர்மையானவர் என்பது உண்மையா? என்று பார்த்துவிடுவோம்!

கொரனா வந்தது! பல்கலைக் கழகம் மூடப்பட்டது.படிப்பு தடைபட்டுள்ளது, என்ஞினியரிங் கல்வியை ஆன்லைன் மூலம் முழுமையாகவோ,முறையாகவோ கற்றுத் தரமுடியாது.
ஆனால், ’’நீ வராவிட்டால் என்ன? படிக்காவிட்டால் என்ன? முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டும்’’ என்று கட்டளையிடுகிறார் சூரப்பா!

பேரிடர் காலத்தில் கட்டணம் வசூலிப்பது மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்பதை விளக்கி துணைவேந்தர் அவர்களுக்கு சி.இ.ஜி மாணவர்கள் பலர்
Read 20 tweets
1. #சூரரைப்போற்று
"பெரும் தொழிலதிபர்கள் நமது பொருளாதாரத்திற்கு தேவை தான் என்றாலும் 5 இலட்சம் சிறு தொழில் முனைவோர், நம் பொருளாதாரத்தை இன்னும் வேகமாக வலுப்படுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் சுய தொழிலை ஆரம்பிக்கும் போது தான் இந்த சமூகம் சமநிலையையும்,...👇👇👇
2. ... மேம்பாட்டையும் நோக்கி நகர ஆரம்பிக்கும்."

இதை சொல்றது நான் இல்லை, #கமல்ஹாசன். படத்துக்கு சில்லறைய சிதற விட்டவங்க இதை பத்தி என்ன நினைக்குறீங்க.
சூரரை போற்று,ஜெயிச்ச ஒரே ஒருத்தன் கதை. ஆனா பலரோட இதே போல புரட்சிகரமான கனவு எல்லாம் காணாம தான் போகுது. 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
3. அதுவும் படத்துல காட்டுற அதே பணபலம், லஞ்சம் மாதிரி காரணங்களுக்காக தான்.

இப்படி பட்ட கனவை எல்லாம் தேடி எடுத்து வளர்த்து நனவாக்கிட்டா நாட்டுல பொருளாதாரம் பெருகும், அதை தனிமனித முயற்சியா இல்லாம அரசாங்கமே செய்யணும். 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
Read 5 tweets
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
Read 15 tweets
@redpixnews @irajashekaran
கதை விடுவதில் சீமான் அவர்களை மிஞ்சிட்டீங்க. அண்ணா இறந்த பின்னர்தான் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வைகோ & திருமா அவர்களை முதல்வர் ஆக வேண்டும் என சொன்னேன்னு மக்கள் நலக் கூட்டணியில் கதை பிரமாதம். 1/7
#பொய்கூலிகள்
கட்சி ஆரம்பிப்பதற்கு முன் கேரவேனில் அமர்ந்து எப்படி கட்சி ஆரம்பிப்பதுன்னு இன்னொரு கதை. அதற்கு ஆமாம் போட ஒரு நெறியாளர். கதை விடுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை. கட்சி ஆரம்பித்த போது தேர்தல் கமிசனுக்கு முன் மொழியும் பத்திரத்தில் கையெழுத்து போட்டீங்களா நீங்க. உங்களை கட்சியின் 2/7
வழக்கறிஞராக ஆக்குவாங்கன்னு பார்த்தீர்கள். அதுவும் முடியவில்லை. ஊடகத் தலைவராக போடுவாங்கன்னு போடுவாங்கன்னு பார்த்தீங்க. அதுவும் முடியாததால், கட்சியை விட்டு தானா, வெளியே போனவர் நீங்க. போகும் போது மாதிரி கிராமசபை கூட்டத்தில் நீங்க பேசியதை மறந்துட்டீங்களா? 3/7
Read 7 tweets
#கமல்ஹாசன் #நீட் பற்றி எதுவுமே சொல்லவில்லையா?

thenewsminute.com/article/no-sup…

இது #அனிதா வின் சகோதரர் மணிரத்னம் #கமல்ஹாசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்.

newindianexpress.com/states/tamil-n…

உச்சநீதிமன்றம் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

financialexpress.com/india-news/nee…

1/4
மத்திய மாநில அரசுகள் மீது #கமல்ஹாசன் கோவம்.

india.timesofnews.com/breaking-news/…

இந்த வருடம் #நீட் தேர்வு என அறிவிப்பு வந்ததும் எதிர்ப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

dinakaran.com/News_Detail.as…

#நீட் மூலம் தமிழகத்தை பின்னுக்கு இழுக்காதீர்கள்

nakkheeran.in/24-by-7-news/h…
2/4
இது போல் பல வகைகளில், பல நேரங்களில் 2017 முதல் #நீட் தேர்வை எதிர்த்து வருபவர் #கமல்ஹாசன் . மத்திய மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தமிழக மாணவர்களுக்காக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையாக #நீட் வேண்டாம் என்கிற கொள்கையுடன் எதிர்த்து வருவது #மக்கள்நீதிமய்யம் கட்சி. 3/4
Read 4 tweets
"எனக்கு மதம், ஜாதியில நம்பிக்கை இல்ல.. ஆனால், என் மக்களோ மகளோ follow பண்ணா அவங்க சுதந்திரத்துல தலையிட மாட்டேன்"னு ஜாதிக்கு முட்டு குடுக்குற மாதிரி #கமல்ஹாசன் அவர்கள் பேசுற ஒரு வீடியோ வைரலா போய்ட்டு இருந்தது..🚶🚶

"இல்ல, இல்ல.. அது edited வீடியோ... 'தின மலர்' சேனல்காரன்

1/N 👇👇 Image
வீடியோவை edit பண்ணி போட்டிருக்கான்"னு சொல்லி, 'மக்கள் நீதி மய்யம்' சேனல்லருந்து வேறொரு வீடியோவை காட்டுனாங்க 'மய்ய' ஆதரவாளர்கள்...

என்னன்னு பார்த்தா, அதுவே ஒரு edited வீடியோ தான்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

'தினமலர்' போட்ட வீடியோல எதையுமே edit பண்ணல, முழு வீடியோவும் சரியாதான்

2/N
இருக்கு... 'மக்கள் நீதி மய்யம்' சேனல்ல தான் அவர் பேசுனதை 20 செகண்ட் கட் பண்ணிட்டு போட்டிருக்காங்க.... இதெல்லாம் எவ்ளோ கேவலம் 😑😑

தினமலர் வீடியோ லிங்க் --> m.facebook.com/story.php?stor…

மக்கள் நீதி மய்யம் வீடியோ லிங்க் -->

இதுக்கு ஏதும் பதில்
3/N
Read 7 tweets
#குமுதம்ரிப்போர்டர் இதழ் நிருபர் #உமர்முக்தார் தொடர்ந்து இல்லாததை இருப்பது போலவும், @maiamofficial கட்சியின் மீதும், அதன் தலைவர் @ikamalhaasan அவர்களைப்பற்றி கிண்டலடித்து எழுதி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. #ரஜினிகாந்த் க்கு எப்படி வேண்டுமானாலும் ஜால்ரா அடிங்க. 1/5
அதற்கு @maiamofficial கட்சி பற்றி தவறாக எழுதுவீர்களா? கட்சியில் கட்டமைப்பு இல்லாததை நீங்க பார்த்தீங்களா? யாரோ பெயர் கூற விரும்பாத #ரஜினிமன்றம் நிர்வாகியின் கருத்தை எழுதி, அதை சரிதான் என முடிக்கத் தெரிந்த உங்களுக்கு, #மக்கள்நீதிமய்யம் கட்சி நிர்வாகிகளிடம்கருத்து கேட்கதெரியாதா? 2/5
@maiamofficial நிர்வாகியிடம் ரஜினியுடன் கூட்டணி பற்றி கேள்வி கேட்க வேண்டியது, அங்கே வேறுமாதிரி கேட்க வேண்டியது? என்ன மாதிரி பத்திரிக்கை பிழைப்பு இது. இதற்கு பிச்சை எடுக்கலாம் நீங்க. ரஜினிகாந்ததின் தோளில் ஏறி சவாரி செய்ய இங்கே யாரும் விரும்பவில்லை.அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. 3/5
Read 5 tweets
@maiamofficial
@MaiamITOfficial @MNMZnSalem
கமல் ஹாசன் எப்படி கலைத்துறையில் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவாரோ அதே பணியை இன்று முன்னெடுத்த மய்யம் ஐடி விங் மற்றும் மய்யம் சேலம் நிர்வாகத்தினருக்கு நன்றி.
ஒலி(audio) குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால் இது நிச்சயம்
நல்ல முன்னெடுப்பு. இந்த பணியை சேலம் மாவட்ட மய்யம் தோழர்களுடன் இணைந்து பிற மாவட்ட தோழர்களும் முன்னெடுக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக நம்மவரை இந்த ஆக்யுமெண்டட் ரியாலிட்டி வாயிலாக கொண்டு சேர்க்க வேண்டும். ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாத இந்த நிலையில் தேர்தல்
பிராச்சாரங்களுக்கு நல்ல ஒரு மாற்றாக இருக்கும் தொழில்நுட்பம் இது. இந்த பணியை சாமானியர்கள் வரை கொண்டு சேர்க்கும் பணியை மய்யம் தோழர்கள் செய்தால் நலம்.இந்த இணைய வழி கருத்தரங்கு குறித்த பதிவிட்ட அண்ணன் டீக்கடையார் @teakkadai1 (எ) முரளி அண்ணனுக்கு நன்றிகள்.
Read 4 tweets
@maiamofficial கட்சியின் தலைவர் @ikamalhaasan அவர்கள். காவலர்களின் பணிச்சுமையை அறிந்து தான், கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் #திருச்சி யில் நடைபெற்ற மாநாட்டில் காவலர்களுக்கான அறிவிப்பை செய்தார். அன்று அது காவலர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1/3
#JusticeforJayarajAndFenix
காவலர்களுக்கு பனிச்சிமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு கவுண்சிலிங் முறை அமைக்கப்படும். பெரிய அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும்ஆர்டர்லிஎன்ற முறைநீக்கப்படும். பந்தோபஸ்துஎன்று கால்கடுக்கவெயிலில் நிற்பதுஒழிக்கப்படும் போன்றவைகளையும் அன்று அறிவித்தார் @ikamalhaasan 2/3
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்ல, பாதுகாக்கும் காவலர்களுக்கும் அன்றே திட்டங்கள் அறிவித்தவர் @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்கள். நல்லத்திட்டங்கள், தீர்வுகளை,தொலைநோக்குப் பார்வையோடுகூறுபவனே நல்லத்தலைவன். #கமல்ஹாசன் மக்களுக்கான நல்லத்தலைவர். #JusticeforJayarajAndFenix
Read 3 tweets
#கமல்ஹாசன் கடிதத்தை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான் உள்ளதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. சென்னை உள்ளிட்ட 75 இடங்களுக்கு மட்டும் ஊரடங்கு என அறிவித்து, அதற்கு மக்கள் தயாராவதற்குள், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை திட்டமிடாமல் பிறப்பித்ததால் நேர்ந்த அவலத்தைத் தான் 1/1
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றதை ஏன் பாண்டே நீங்க குறிப்பிடவில்லை. பால்கனி என்பது பணக்காரர்களை குறித்த சொல் என்பது தெரிந்தும் தெரியாதது போல், பால்கனி என சொன்னதை விமர்சனம் செய்யலாமா? டெல்லி நடந்த கூட்டத்திற்கு அனுமதி கொடுத்தது 2/2
யார் என்ற விவரத்தையும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதனை செய்யாமல் விட்டதை ஏன் சொல்லவில்லை பாண்டே! வட மாநிலங்களில் நடந்த திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டதை ஏன் சொல்லவில்லை பாண்டே? டெல்லியை பற்றி மட்டுமே குறிப்பிட்டு, 2 நிமிடத்திற்கு பேச 3/3
Read 9 tweets
#கமல்ஹாசன் #மோடி & #பாஜக விற்கு எதிராக பேசவில்லை என்பது எதிர் அரசியல் கட்சிகளின் குற்றசாட்டு. ஒரு வேளை உண்மை தானோ? அப்படியும் இருக்குமோ? எதிர்த்து பேசவே இல்லையா? எதிர்கட்சிகள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப பேசி அதை உண்மையாக்க பார்க்கிறார்கள். ஊழலே செய்யவில்லை என்பது போல். Cont
ஆனால் உண்மை அதுவல்ல. #கமல்ஹாசன் பல நேரங்களில் #பாஜக வை கடுமையாக சாடியுள்ளார். ஆனால், அதை மரியாதையோடு,அரசியல்மாண்போடு செய்துவிட்டார். அவர்களைப்போல், ஒருமையில்பேசவில்லை.
சரி அவைஎன்ன:
1. பாபர் மசூதி இடிப்பின் போது நரசிம்மராவிடம் கேள்வி கேட்டது.
2. கரசேவை பற்றி எதிர்த்து பேசியது cont
3. மாட்டுகறி சாப்பிடும் விவகாரத்தில், அது எனது உரிமை என முதல் குரல் கொடுத்தது.
4. பணமதிப்பிழக்கத்தின் தனது நிலையை மாற்றி, உண்மையுணர்ந்து எதிர்த்தது.
5. ஸ்டெர்லைட் விவாகாரத்தில் மத்திய அரசின் அராஜகப் போக்கை கண்டித்து.
6. நீட் விவகாரத்தில், கல்வி மாநில உரிமை என குரல் கொடுத்தது cont
Read 9 tweets
#மக்கள்நீதிமய்யம்
மகத்தான சாதனை.
@ikamalhaasan அரசியலுக்கு வருவார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் அரசியலில் அதிரடியாக வந்தார். கட்சியை ஆரம்பித்தார். மக்களை சந்தித்தார். பொதுகூட்டங்கள் நடத்தினார். கிராமசபை, மகளிர்தினம், மய்யம் விசில், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு (தொடர்)
காவிரி நீர், கிராமங்கள் தத்தெடுப்பு, விவசாயிகள் போராட்டம் ஆதரவு, விவசாயிகளுக்காக அனைத்துகட்சி கூட்டம், மாணவிக்கு கல்வி உதவி, கஜா புயல் நிவாரணம், கட்சி தேர்தல் ஆனையத்தில் பதிவு என்று பல்வேறு வகைகளில் கட்சியை மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்த்துள்ளார். (தொடர்)
இவைகளுக்கிடையில் தேசிய ஊடகங்களில் தமிழக பிரச்சனைகளை கொண்டு சென்று, அதை இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது, அமிதாப், அமீர்கான் ஆகியோரிடம் கஜா புயல் நிவாரணம் உதவி கேட்டது, மூன்றாம்அணியை உருவாக்க தலைவர்களை சந்தித்தது, இந்தியன்படம் என 15மாதங்களில் மக்களோடு தொடர்பில் இருந்தார். (தொடர்)
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!