Discover and read the best of Twitter Threads about #கர்ணன்

Most recents (7)

சினிமா சொல்வது தான் தமிழர்களுக்கு வேத வாக்கு. அது மெய்யா பொய்யா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள், ஆழ்ந்து ஆராய மாட்டார்கள், இதற்கான மூலம் என்ன என்று தேடி சரி பார்க்க மாட்டார்கள். நமக்கு சிவாஜி கணேசன் நடித்த #கர்ணன் தான் நிஜ கர்ணன். ச்சே எப்படி வஞ்சிக்கப் பட்டான், எவ்வளவு நல்லவன்
அவன் என்பது தான் அதிலிருந்து நம் கணிப்பு! கர்ணன் நல்லவன் என்ற எண்ணத்தையும் கர்ணனை சதியால் வீழ்த்திய காரணத்தினால் அர்ஜுனனும் கிருஷ்ணரும் வஞ்சகர்கள் என்ற எண்ணத்தையும் பதித்துவிட்டன. மகாபாரதத்தில் அவன் யார் என்று பார்ப்போம்.
ஒரு புறம் தனது கவச குண்டலத்தையும் தானமளித்தப் பெரும்
வள்ளல், மறுபுறம் குலப் பெண்ணை சபையில் அவமானப்படுத்திய கவயன். ஒரு பக்கம் நண்பனுக்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கிறது. மொத்தத்தில், கர்ணன்
Read 12 tweets
Thread, Must Read!

இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்பு சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன என இந்தியா டுடேவில் ஒரு கட்டுரை எழுதினார்

கட்டுரையை படித்த கலைஞர் உடனடியாக வாஸந்தியை அழைத்து, "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர்.. (1/5)

#Karnan #கர்ணன்
"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார்

கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ...
(3/5)
Read 5 tweets
#கர்ணன் திரைப்படத்தின் களம் 1990களில் அமைந்துள்ளது.. படம் பார்க்கும் போது புரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் இந்த இணையத்தில் தான் தமிழகம் பெரியார் மண், கருணாநிதி மண், திராவிட மண்ணாக இருந்துள்ளது.. நிஜத்தில் வேறாக இருந்துள்ளது;
தலீத் மக்களின் குரலை லாவகமாக ஒடுக்க இவர்கள் பயன்படுத்தும் வார்த்தை தான் சமூகநீதி மண், திராவிட மண்.. ஆனால் உண்மைலயே பிராமணர்களின் ஆதிக்கத்தை தான் ஒழித்தார்களே ஒழிய சாதிய ஆதிக்கத்தை அல்ல! இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் ஓங்கியது தான் இவர்களது சாதனை.
இந்த படத்தில் அழகம் பெருமாள் கதாப்பாத்திரம் கழக தலைவர்களின் இயல்பை பிரதிபலிப்பதாகவே உள்ளது.. வெளியில் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என வேஷம் போட்டுக்கொண்டு மனதிற்குள் கீழ் சாதி துவேஷத்தை ரசிப்பது என அசலாக கதாப்பாத்திர வார்ப்பு உள்ளது
Read 6 tweets
#கர்ணன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மகேந்திரா சிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது சத்தியா நகர். ஊர் சுடுகாட்டின் பக்கத்து தெருவில் சுமார் 200+ குடும்பங்கள் உள்ளது. பெரும்பாலும் தினக்கூலிகள். இன்றும் இங்கே பேருந்து நிறுத்தம் கிடையாது. 1/4
தலித் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க என் அப்பா பல மனுக்களை எழுதி நடவடிக்கை எடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. T60, M500 பேருந்துகள் சத்தியா நகரை கண்டு கொள்வதே கிடையாது. நடந்தோ, ஷேர் ஆட்டோவோ, சைக்கிள், பைக் தான் அவர்களுக்கு உள்ள போக்குவரத்து வழி! -2
நெடுஞ்சாலைக்கு அருகே வசித்தாலும் இப்பகுதி மக்கள் கால்நடையாகவே வேலைக்கும் பள்ளிக்கும் செல்வதை பார்த்திருக்கிறேன். சத்தியா நகர் - திருத்தேரி 1கிமீ
சத்தியா நகர் - சிங்கபெருமாள்கோயில் -2 கிமீ
சத்தியா நகர் - மகேந்திரா சிட்டி - 1.5 கிமீ. அவசரத்திற்கு வெளியூர் செல்லணும்னா கஷ்டம்! 3/4
Read 6 tweets
#கர்ணன் திரைக் காவியம் சொல்ல வருவதென்ன??

இயற்கைப் பண்பாட்டு வாழ்வியலுக்கு எதிராகப் #பிராமணியம் தலையெடுத்தபோது அதை வீழ்த்துவதற்கான வரலாறு #புத்தர் தோற்றுவித்தார் புத்தரியம் இருக்கும்வரை பிராமணியம் வெற்றிபெறாது என உணர்ந்தவர்கள் அதன் அடையாளமாக புத்தர் சிலைகளில் இருந்த (1/10)
தலைகளை அகற்றி இந்துத்துவா சிலைகளாக மாற்றினார்கள் என்பதற்கு #பெருமாளையும் #பிள்ளையாரையும் உதாரணப்படுத்தலாம்.

தலையற்ற புத்தர் சிலையின் அடையாளம் என்பது பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கை வாழ்வியலைத் திணித்ததற்கான அடையாளக் கூறாகும். இந்த அடையாளத்தில் இந்து மதக் (2/10)
கண்டுபிடிப்பில் முதன்மையானது ஜாதிக் கட்டமைப்பு. தன்னை விட ஒரு தாழ்ந்த ஜாதி இருக்கிறது என்கிற ஆனவத்தை உருவாக்கித் தந்ததில் அது வெற்றி பெற்றிருக்கிறது.

நேர்மை, ஒழுக்கம், அன்பு வாழ்வியலுக்குப் பேர் போன காட்டூர் மக்களுக்கு எதிர்த்துருவமாக இடைஜாதி இந்துக்கள் வாழ்கிறார்கள்.

(3/10)
Read 10 tweets
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும்.

1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது.
இத்தனைக்கும் வீரசிகாமணி இருப்பது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே. கொடியன்குளம் இருப்பதோ தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே. ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஊராக புகைந்து பரவிக் கொண்டு வந்த சாதித் தீயை அணைக்கத் தவறியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.
நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம், தூத்துக்குடி மாவட்டத்திலோ பட்டியலினத்தவர்கள் அதிகம்.

இந்தக் கலவரத்தில் இருபக்கமும் சேதாரம் அதிகமென்றாலும், தேவர் சமுதாயத்தில் உயிர்ச் சேதம் அதிகமாகவும், பள்ளர் சமுதாயத்தில் பொருட்சேதம் அதிகமாகவும் இருந்தது.
Read 13 tweets
மகாபாரத #கர்ணன் என்பவன் எப்படிப்பட்டவன்? ஹீரோ சிவாஜிக்காக எழுதிய திரைக்கதை தானே நமக்கெல்லாம் ரெபரன்ஸ்? அதில் அவன் உத்தமன். ஏமாற்றப்பட்டவன். ஆனால் இதிகாசப்படி கர்ணன் மிகுந்த அசூயை உடையவன். வள்ளலா இருக்கலாம் ஆனால் நல்லவனா? துஸ்ஸாசனால் சபைக்கு இழுத்து வரப்பட்ட துரௌபதிக்கு மாதவிடாய்
நேரம் அது. அவள் ஒரே ஒரு துணி அணிந்திருந்தாள். ரத்தப்போக்கு தரையை நனைத்தது. அங்கு கூடியிருந்த சபையோரை கேட்கிறாள், தருமர் தன்னைப் பணையம் வைத்தப் பின் என்னை பணையம் வைத்தாரா அல்லது அதற்கு பின்பா என்று, ஏனென்றால் அதற்குப் பின் என்றால் அவரே அடிமையாகிவிட்ட பிறகு என்னை பணையம் வைக்க என்ன
உரிமை என்று. அப்பொழுது அனைவரும் வாய் மூடி இருக்கையில் துரியோதனின் ஒரு சகோதரன் விகரணன் மட்டும் சபையில் எழுந்து நின்று அண்ணனிடம், உனக்கும் பாண்டவர்களுக்கும் ஆயிரம் இருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணை அவமானம் செய்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறான். அங்கிருந்த கர்ணன் என்ன சொல்கிறான்
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!