Discover and read the best of Twitter Threads about #கலைஞரிடம்_50கேள்விகள்

Most recents (2)

#கலைஞரிடம்_50கேள்விகள் 2

1957 ல் குளித்தலை MLA ஆக தேர்வாகி சட்டமன்றம் நுழைந்ததிலிருந்து,

சட்டமன்ற பொன்விழா வரை நிகழ்ந்ததை 50 கேள்விகளாக கேட்க,

பிடித்த முதல்வர், சபாநாயகர், தலைவர் என குழந்தை போல உற்சாகமாக நினைவு கூர்ந்தவர்

1989ல் உடைந்து போகிறார்.
உறைந்து போகிறது வரலாறு
நாமும்
கேள்விகள் தொடருது..

#15_மகிழ்ச்சிக்குரிய_சம்பவம்

கலைஞர் :

நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.

என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று,

சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக்
கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன்.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும்போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?
Read 18 tweets
#கலைஞரிடம்_50கேள்விகள் 1

கொடுத்துள்ள
@news7tamil செய்தி பற்றி
கட்டுரை எழுத பழைய வரலாறு தேடிய போது.

ராணி இதழில் கலைஞரின் 50 ஆண்டு சட்டமன்ற அனுபவம் பற்றிய கேள்வி பதில் கண்டேன்

பொக்கிஷத்தை
அப்படியே தந்து இருக்கிறேன்
படித்து பகிருங்கள்

என் கட்டுரை?

அத எப்ப வேணாலும் விடலாம்
1. சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?

கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.

2.பேசிய முதல் பேச்சு?

கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம் மாட்டேரு வாரம்”
என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.

3. அதிக நேரம் பேசிய நாள்?

கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.
Read 20 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!