Discover and read the best of Twitter Threads about #கலைஞர்

Most recents (24)

#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.

இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
Read 25 tweets
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
Read 31 tweets
உடன்பிறப்பு!

எந்த கட்சியிலும் யாரும் கூப்பிடாத உறவுமுறை!

நீ எந்த ஜாதி மதம் சேர்ந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டனா நீயும் என் உடன்பிறப்பு என்று கொண்டுவந்து இன்றும் அதை கட்டிக் காக்கும் இயக்கம் இந்த இயக்கம்!

Miss u alot தலைவா

#கலைஞர்
Read 5 tweets
சிறு வயதில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சித்தலூரில் உள்ள எங்கள் குல தெய்வம் கோவிலுக்கு மாட்டுவண்டியில் செல்வோம். இத்தனைக்கும் இது கட்டை வண்டி, டயர் வண்டி கூட கிடையாது.

அடுத்து டயர் வண்டியில் செல்ல ஆரம்பித்தோம்.அதுவும் மாட்டு வண்டிதான் ஆனால் சக்கரம் மட்டும் டயர், டுயூப் இருக்கும்
அடுத்து டிராக்டரில் செல்ல ஆரம்பித்தோம். அந்த டிராக்டருக்கு வாங்கிய கடன் கலைஞர் கொடுத்த விவசாயக் கடன் தள்ளுபடியில் தள்ளுபடியானது.

பிறகு சொந்த காரில் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. கலைஞர் உருவாக்கி வைத்திருந்த இட ஒதுக்கீடு, ஒற்றைச்சாளர முறை போன்ற கல்வி வாய்ப்புகளும்,
கலைஞர் உருவாக்கிய IT கொள்கை(நாட்டிலேயே முதன்முறையாக) மற்றும் டைடல் பார்க் போன்றவற்றால் IT துறையில. வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தத் காரில் செல்லும் நிலைமை அமைந்தது.
Read 11 tweets
36 ஆண்டு கால ஆட்சி அதிமுகனு சொல்லுவானுங்க
தொடர்ந்து 3 முறை ஆட்சி
தொடர்ந்து 2 முறை ஆட்சினு சொல்லுவானுங்க சரிடா உங்க தலைவர்கள் #எம்ஜிஆர்,#ஜெயலலிதா என்னதான் மக்கள் நல திட்டங்கள், சட்டங்கள், சாதனைகள் செஞ்சாங்கனு கேட்டா பதிலே சொல்ல மாட்டானுங்க🤐😂@mkstalin @Udhaystalin @pudugaiabdulla
இத்தனை திட்டங்கள் வேற கட்சி செய்ததை காட்டினாள் LIFE TIME SETTLEMENT டா
#தலைவர்😎 #கலைஞர் மட்டும் தான்டா..#நவீன_தமிழகத்தின்_தந்தை🖤❤️
🖤❤️🖤❤️
1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் @TRBRajaa @Tr_Gayathri @Chella38641 @isai_
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் @raghur1906 @iam_Cinderela @Varsha49095271
Read 40 tweets
அடித்தட்டு மக்களும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்

அது 1972-ம் வருடம்
கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்

அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்

அரசு வேலைக்கு,
TNPSC என ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது
#கலைஞர்
#திமுக
பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,

அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்
டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன்,
ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன்

இப்படிப்போகும் லிஸ்ட்
கடை நிலை ஊழியர் என்னும் பியூன்
#கலைஞர்
#திமுக
ஒரு தங்கராசு,சுப்ரமணி
இப்படி ஒரு பெயரில் இருப்பதுவே பெரிய விஷயம்

பொ.ப.து -லேயே இந்த நிலை என்றால்
மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு,கல்வித்துறை வாகனப்போக்குவரத்து, வணிகவரித்துறை

இவைகளைப்பற்றி சொல்லத்தேவையில்லை..
#கலைஞர்
#திமுக
Read 11 tweets
**(நீண்ட பதிவு)**

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு .

டாக்டர்.ராமதாஸ் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கான மாநாட்டை அறிவித்தார். அதில் பால்தாக்ரேயும கலந்துக் கொள்வார் என்றதும், பாபா கொந்தளித்தார்.

ராமதாசுடனான அவரது உறவு முற்றுப்புள்ளிக்கு வந்தது.
மதவெறி சக்திகள் அவரது உயிருக்கு குறி வைத்து சுற்றிக் கொண்டிருந்ததை ஏனோ அலட்சியப்படுத்திவிட்டார்.

1997 ஜனவரில் 28 ஆம் தேதி அப்போது ரமலான் மாதம். இஃப்தார் முடிந்த நேரம். பொள்ளாசியில் தனது கவுண்டர் சமுதாய நண்பரின் வீட்டிலில் தொலைக்காட்சி செய்திகளை
பார்த்துவிட்டு வெளியே வந்து தனது ஜீப்பில் ஏறிய போது 6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசி சரமாரியாக வெட்டித் தள்ளியது.

எதிரியின் கையால் நான் வெட்டப்பட்டு சாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பல மேடைகளில் அவர் முழங்கியவாரே அவர் ஷஹீதானார்.
Read 205 tweets
சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் தலித் நீதிபதி கலைஞர் ஆட்சியில் பணி அமர்வு செய்யப்பட்டார்.சமுக நீதி இட ஒதிக்கீடு திமுகவைத்தவிர வேறு யாரும் பேச தகுதி இல்லை- அ.வரதராசன்(15/02/1972)

இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
"தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்"இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
Read 14 tweets
இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம்.
காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை.
ராஜா சேதுபதி.

அவர் அந்த சமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.

காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள் ?
அண்ணா அன்றைய மாவட்ட செயலாளர் தென்னரசுவிடம் ராமநாதபுரம் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

தென்னரசு அண்ணாவிடம் ராஜா காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்பதாகவும் திமுகவினர் ஒருவர் கூட தேர்தலில் நிற்க முன்வரவில்லை என்ற செய்தியை சொல்ல,
Read 19 tweets
#பாசிசகோமாளிஎம்ஜிஆர்
#Part2
1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, #புதியஜனநாயகம் ஏட்டில் வெளியான #ஒருபாசிஸ்டின்மரணம் கட்டுரையை சுருக்கித் தருகிறேன்.

புர்ரட்சித் தலைவர்!
வெங்கட்ராமன் - எம்.ஜி.ஆர்
அணைப்பு :
திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு! Image
காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., திமுககாரராகப் பிரபலமானார்.
ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார்
அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார்
அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர
Read 15 tweets
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..

எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள்.
அன்று 50 ஆண்டிற்கு முன்
திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
சொன்னால் அது நிஜம்.

காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது.ராஜ வம்சத்து வேட்பாளரை, ராஜா
சேதுபதி. அவர் அந்தசமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால்
அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.

காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள்.

அண்ணா, அன்றைய மாவட்ட
செயலாளர் தென்னரசுவிடம்
ராமநாதபுரம் நிலவரம் குறித்து
பேசிக்கொண்டிருந்தார்.
Read 20 tweets
#பகுததறிவு_தினம்

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகத்து 30, 1957)

திருட்டு ரயில்ல வந்த போற திருட்டு தேவடியா பயல்களுக்கு இந்த வரலாறுகள் தெரிய வாய்ப்பில்லை .. தலைவர் கலைஞர் இரு பெரும் இமயமலைகளை அறிமுகபடுத்தி
அவர்களை தன் ஈட்டிமுனை வசனத்தால் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றார் .. 1. ராஜகுமாரி ( 1947 .. MGR ) , பராசக்தி 1952 ... நடிகர்திலகம் . ) அப்போது தலைவர் பெற்ற சம்பளம் இரண்டு படங்களுக்கும் சேர்த்து 10 + 18 = 28 ஆயிரம் .... இன்றைய மதிப்பு 28 லட்சம்
#கலைஞர் திருட்டு ரயிலேறி வந்தாரா?
உண்மையை தேடி அலைவதில் அயர்வு இருந்தாலும் என்ன ஒரு திருப்தி!!

மாயாவதி படம் 1949 ல் ரிலீஸ் அகிறது. அந்த காலத்து பாகுபலி ரேஞ்சுக்கு செலவு செய்கிறது தயாரிப்பு நிறுவனம் (மாடர்ன் தியேட்டர் சுந்தரம்)
Read 16 tweets
கலைஞர் மேல் பலரும் பலவித குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதன் உண்மையை அறிந்து கொள்ள நானும் முயற்சிப்பேன். அப்படி சொல்லப்பட்ட அனேக குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன். Image
அவற்றில் சில👇

1. ஒருமுறை கனிமொழி அவர்கள் இந்திமொழி திணிப்புக்கு எதிராக மேலவையில் பேசும்போது கலைஞர் அவர்கள் தனது 14 வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு வரலாறு அறியாத பலரும்
"இந்தி எதிர்ப்பு என்பதே 1967 ல் தான் நடந்தது அப்போது கலைஞருக்கு வயது 43" என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அந்த முட்டாள்களுக்கு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ல் நடந்தது அதில் மாணவராக இருந்த கலைஞர் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார் என்று தெரிய வாய்ப்பில்லை.
Read 17 tweets
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
Read 20 tweets
கலைஞருக்கு முன்பு தமிழ்நாட்டின் பெரும்பாலான சிற்றூர்களுக்கு பேருந்து வசதியே கிடையாது.

ஆண்டைகளும், பண்ணையார்களும் சாரட் வண்டிகளில் ஒய்யாரமாய் நகரங்களுக்குப் போய் வர, ஒடுக்கப்பட்ட மக்களோ அவர்களின் வயக்காடுகளில் பண்ணையடிமைகளாய்க் கிடந்து உழன்றனர்.
கல்விக்காகவும், இதர தேவைகளுக்காகவும் ஏழைகள் நகரங்களை நோக்கிச் செல்வது அரிது.

கால்நடையாய்ப் போக வேண்டும் அல்லது வாடகை சைக்கிள்களில் போவார்கள்.

கலைஞரின் காலத்தில் பேருந்துகள் பொதுவுடைமை ஆக்கப்பட்ட பின்பு பல கிராமங்களுக்குப் பேருந்துகள் வந்தன.
முன்பு தனியாரிடம் மட்டுமே போக்குவரத்துகள் இருந்தபோது தலித்துகள் அவற்றில் பயணிக்க அனுமதிக்கப்படவே இல்லை.

கலைஞருக்குப் பின்பு பண்ணையடிமையாக இருந்தவர்கள் கட்டிட வேலைகளுக்கு சித்தாளாகவும், நிமிர்ந்தாளாகவும், கூடைகளில் காய்கறி விற்பவர்களாகவும் நகரங்களை நோக்கி சென்று வந்தார்கள்.
Read 7 tweets
தி.மு.கழகத்தையும், அதன் தன்னிகரில்லா #தலைவர்கலைஞர் அவர்களையும், தொடர்ந்து இந்துக்களின் விரோதியாகவும், பாஜக.தான் இந்துக்களின் அத்தாரிட்டி என்பது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்துமுயற்சித்து தோற்றுப்போய்க்கொண்டே ஏமாந்து கொண்டிருக்கிறது.
1/n
#கலைஞர் முதல்வராக இருந்தசமயம் தேரைப் புதுப்பித்து ஊர்வலமாகக் கொண்டுவர ஏற்பாடு நடந்தது.

சட்டமன்றத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து, "முன்பு திருவாரூர் தேர் இழுப்பதற்கு எதிராகப் பாட்டே பாடியவர் தாங்கள்!"
2/n
ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே, தேரோட்டம் உனக்கேன் தியாகராஜரே!" என்று பாட்டுப் பாடினீர்கள். அப்படியிருக்க, இப்போது நீங்களே திருவாரூர் தேர் இழுக்கப்பட உதவிகள் செய்வதேன்?" என்று பொருள்படக் கேள்விகேட்டார்.

அதற்கு #முதல்வர்கலைஞர் எழுந்து,
3/n
Read 5 tweets
#கலைஞர் ஐ ஊழல்வாதி , #திமுக வை ஊழல்கட்சி என கூறுபவர்களுக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன் ..

பதிவு : நண்பர் S.முகம்மது ரபீக் DECE,DRTE,BBA .

இந்த தொடரிழையை படியுங்கள் & பரப்புங்கள் 🙏🏻

1/8
#திமுக & அதிமுகவை ஒரேதட்டில் வைத்துபேசுவது அரசியல் மனநோயாளிகளின் தனிநோய்.

#கலைஞர் & பாசிச ஜெயாவை இவர்கள் ஊழலின் பெயரால் இணைக்கப் பார்ப்பார்கள்.

பலர் கலைஞரை ஊழல்வாதி என சொல்லக் கேட்டிருக்கிறேன்,குறிப்பாகப் பார்ப்பனர்கள் வாய்ப்புக் கிடைக்கிறதெல்லாம் கலைஞரை ஊழல்வாதி என்பார்கள் 2/8
இதனை பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வியல் நோக்கமாக,பரம்பரை பரப்புரையாக செய்கிறார்கள்.

அவா சொன்னா சரியாக இருக்கும் என இன்னமும் நம்புகிற மக்கள் சிலரும், #கலைஞர் ஒர் ஊழல்வாதி என்று சாமிகளை ஆமோதித்தபடி,

இன்றளவும் கலைஞர் என்கிற அற்புதமான மனிதருக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
3/8
Read 8 tweets
#Thread

ஒரு சமயம் #பெரியாரின் கார் பழுதுபட்டு, சொல்லி வைத்தாற்போல ஒரு கோவிலின் முன்பு நின்றுவிட்டது.

ஐயா, ஒரு பத்து நிமிடங்களில் சரி செய்துவிடலாம். கொஞ்சம் இறங்கிக் காற்றாட நில்லுங்கள் என்றாராம் சாரதி.

பெரியார் இறங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.

1/n
பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்போது ஒரு பக்தர்,
ஐயா, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் எப்படிக் கல் என்று சொல்லலாம் என்று கேட்டாராம்.

அப்படியா? சரி வாருங்கள் கோவிலுக்குள் போவோம் என்று அந்தப் பக்தரை அழைத்தாராம் பெரியார்.

பக்தருக்கோ பரம சந்தோசம்.

2/n
மூலஸ்தானத்தின் முன்பு போய் நின்றுகொண்டு, பெரியார் பட்டரைப் பார்த்து அருகே வருமாறு
கை அசைத்து அழைத்தார்.

பட்டர் திகைப்பும் பணிவுமாக வந்து நின்றார்.

அப்போது பெரியார் சிலையைக் காண்பித்து,
இந்தச் சிலை ஐம்பொன்னா? பித்தளையா? என்று கேட்டாராம்.

3/n
Read 5 tweets
இந்த டாய்லீஸ், பொழப்பே இதுதான். #MGR செஞ்ச தப்பை மறைக்க, அதுபோன்ற பழியை #கலைஞர் மீது சுமத்துவது. actually கணபதி பட் , VN ஜானகி இருவரும் கணவன், மனைவி. ஒரு நாடக கம்பெனியில் பணியாற்றி வந்தனர். அங்கே எமூஞ்சியாரும் சேர்ந்து, ஜானகியுடன் பழகி பிறர்மனைவி மீது #கள்ளக்காதல் வயப்பட்டு,1/3
இழுத்துட்டு ஓடிட்டான். அப்போ,அந்தாளு 2வது பொண்டாடியோட வாழ்ந்துட்டும் இருந்தான். ஆனா அது கொஞ்சம் நோயில் விழுந்த கேஸ். முறைப்படி ஜானகியை திருமணம் செய்யாமலே, வப்பட்டியா வெச்சு இருந்தான். பிறகு 1962 வாக்கில் தான் 2/3
#MGRWives #VNJanaki #Thangamani #Sathananthavathi #Jayalalithaa
3வதாக திருமணமே செஞ்சுகிட்டான். இது வெளிய தெரியகூடாது பேசுபொருள் ஆகிட கூடாதுன்னு இவனுங்க கட்டிவிட்ட கதைதான் செந்தாமரை மனைவி. செந்தாமரை மனைவி பெயர் கவுசல்யா. அந்தம்மா போட்டோ இதுதான்👇🏼.

அது இன்னும் #zeeTamil தமிழ் சீரியல்ல கூட நடிச்சிட்டு இருக்கு. 3/3
Read 3 tweets
#வங்கிகளில்_இனிபணம்எடுத்தாலும்_போட்டாலும்_கட்டணம்

இதற்க்காதான் கலைஞரும் இந்திராவும் வங்கியை தேசியமயமாக்கினார்கள்.

கலைஞர் முதல்வரானதும் டெல்லி சென்றார் இந்திராவை சந்தித்தார். பின்னர் 5 கோடி நிதிகேட்டு நிதியமைச்சர் மொராஜிதேசாயை சந்தித்தார்.
1/n Image
மொராஜிதேசாய் பணம் காய்க்கும் மரம் என் வீட்டிலேயே இருக்கு? என்றார்

அப்படி பணம்காய்க்கும் மரமே இல்லையே? இல்லாதமரம் உங்கள் வீட்டில் எப்படி இருக்கும் என்று காட்டமாகவே சாடினார்

பின்னர் டெல்லியில் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தார்.

2/n
அவரே மாநில சுயாட்சி பற்றி அறிய ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார்.

டெல்லியில் முதல்வர் மாநாட்டில் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று பேசினார்.

வங்கியை தேசிய மயமாக்கினால் சொர்க்கலோகமே இங்கே வந்திடும்மா சிலர் நினைக்கிறாங்க என்று நக்கலாக பேசினார் மொராஜிதேசாய்

3/n
Read 4 tweets
கலைஞரால் பெற்ற பயன் என்ன என்ற விதமாக பல பதிவுகள் பார்த்துள்ளேன் இங்கு... யோசித்து பார்க்கையில் FC வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலும், குடும்பத்தின் இரண்டாவது (நான்கில்) பட்டதாரி என்பதாலும் கலைஞரின் பல திட்டங்கள் எனக்கு நேரிடையாக பயன் தரவில்லை. ஆனாலும் கலைஞர் தந்த ஒரு சிறப்பு 1/n
சலுகை எங்களைப் போன்ற பல குடும்பத்தை காப்பாற்றியது என பதிவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன். 1980 வரை கிராம கர்ணங்களும், மணியகாரர்களும் தான் கிராம நிர்வாகத்தை நடத்துவர். பொதுவாகவே FC வகுப்பினர் தான் இதனை நிர்வகித்து வந்தனர். MGR அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த SDசோமசுந்தரம் 2/n
தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக கர்ணம்,மணியகாரர் பதவிகளையே ரத்து செய்து அனைவரின் வேலை பறிபோக வழி செய்து விட்டார். என் தந்தை அப்போது கர்ணம், மாதம் ரூ.175 சம்பளம். அந்த வேலை போகும் போது நான் 9ம் வகுப்பு மாணவன். குடும்பம் ஏறக்குறைய வீதிக்கு வரும் சூழல்... கிராம கர்ணங்கள் அனைவரும் 3/n
Read 10 tweets
Mr.#பொதுஜனம்....

$ நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர் TV ஓடுகிறது.

$ ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
$ இரண்டு மகன்கள் #அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் முதியோர் பணம் 1000 பெறுகிறார்கள்.

$காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண்.
IT கம்பனில் #லட்சத்தில் சம்பளம், ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி #தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
$ 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி ரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து.
Read 7 tweets
கொங்கு வேளாள கவுண்டர் என்பதற்காகவே #எடப்பாடி_பழனிசாமியை ஆதரிப்பவர்களே!

1.கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 30% இட ஒதுக்கீடு அளித்து கல்வி , வேலைவாய்ப்பில் முன்னேற அடித்தளமிட்டவர் #கலைஞர்,

1/1
2.பெரும்பாலும் வேளாண் தொழிலில் ஈடுபடும் இந்த மக்கள் பயன் பெறும் வகையில் 1989ல் இலவச மின்சாரம் அளித்தவர் #கலைஞர்

3.வேளாண் பொருட்களை நேரடியாக விற்க உழவர் சந்தை தொடங்கியவர் #கலைஞர்

4.2006 ல் விவசாயிகள் மிகவும் துன்பபட்டு வந்த நிலையில் 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தவர் #கலைஞர்
1/2
5. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த மருத்துவர் திருப்பூர் சரவணன் அவர்களுக்கு குரல் கொடுத்து CBI விசாரணை செய்ய வைத்தவர் #ஸ்டாலின்

6.பொள்ளாச்சியில் இதே சமூகத்தை சேர்ந்த பெண்களை அதிமுக முக்கிய புள்ளிகள் சீரழித்ததற்கு குரல் கொடுத்தவர் #ஸ்டாலின்
1/3
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!