Discover and read the best of Twitter Threads about #கலைவாணர்

Most recents (2)

ஒருமுறை கலைஞர் இல்லத்திற்கு கலைவாணர் வந்திருந்தார். கலையுலகம், அரசியல் என பலவற்றையும் பேசி அகமகிழ்ந்தபடி இருந்தனர். திடீரென்று கலைவாணர் "நடிப்புத் தொழில் எனக்குக் கொஞ்சம் சலிப்பாகிவிட்டது. உங்களைப் போல, அண்ணாவைப் போல நானும் ஒரு எழுத்தாளராக ஆசை.
1/n
இதுபற்றி #கல்கி அவர்களிடம் கேட்டபோது, மூன்று மை தேவை என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

"குறைந்தபட்சம் ஆறு மையாவது தேவைப்படும்" என்றார் #கலைஞர்.

"எது எது"

"கலைவாணருக்கு முதலில்
'#தனிமை'

பின்பு
'#பொறுமை'

நம்மிடம் இருக்க வேண்டியது
'#வாய்மை'
2/n
துவக்கும்போது
'#எளிமை'

எழுத்தில் காட்ட வேண்டியது
'#வளமை' அல்லது '#புலமை'

அதற்குமேலாக,
'#பேனாமை'

என்றார் கலைஞர்.

" எனக்குச் சினிமாதான் சரி வரும்" 😅எனச் சிரித்துக்கொண்டே விடைபெற்றார் #கலைவாணர்.
Read 3 tweets
காலங்களை உணர்ந்த #கலைவாணர் அவர்களின் 65-ஆவது நினைவு தினம் இன்று..

'தமிழ் சினிமாவின் சிறந்த நூறு ஆளுமைகள்' என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல் வரிசையில் இடம் பிடிக்கும் தகுதி கலைவாணருக்கு உண்டு.

எம்.ஆர்.ராதாவின் விமர்சனம் அதிரடியானது என்றால் கலைவாணரின் நகைச்சுவை மென்மையானது.
'யாரை நோக்கி விமர்சனம் வைக்கிறோமோ, அவர்களைப் புண்படுத்திவிடக்கூடாது, அவர்களும் இந்த சீர்திருத்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்' என்பதாக என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவைக் காட்சிகள் அமைந்தன.

'கரகரவென சக்கரம் சுழல..

கரும்புகையோடு வருகிற ரயிலே..
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே..

ரயிலே.. ரயிலே.. ரயிலே.. ரயிலே.. ரயிலே.. ரயிலே..

மறவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே..'

-என்று நவீன கண்டுபிடிப்பு, பழமைவாத சாதியத்தின் பிடியைச் சற்றே தளரவைத்ததைச் சுட்டிக்காட்டினார்.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!