Discover and read the best of Twitter Threads about #கீழடி

Most recents (5)

#கீழடி
#thread
மதுரையிலிருந்து சுமார் 13 கிமீ தொலைவில் உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடி எனும் குக்கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சங்க காலம் கிமு 800க்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

(1)
கீழடியைக் கண்டுபிடித்து, 2014 முதல் 2016 வரையிலான முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் வி. வித்யாவதியிடம் தனது 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கை 12 அத்தியாயங்களில்

(2)
வரலாற்று பின்னணி மற்றும் அகழ்வாராய்ச்சியின் நோக்கங்களை விளக்குகிறது. முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பண்பாட்டு எச்சங்களின் அடிப்படையில், சங்க கால தொல்பொருள் தளத்தின் காலம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(3)
Read 14 tweets
கீழடியில் ஏறத்தாழ 7000 ஆண்டுகள் (கிமு 5359) பழமையான படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகரத்தில் கீழடிக்கும் முந்தைய (கிமு 5627) காலத்தைச் சேர்ந்த ”எரிந்த” எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன.

#கீழடி

1/4
சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும், சீனா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர்.

2/4
Geosystems and Geoenvironment என்னும் ஒரு சர்வதேச பல்துறை இதழில் இந்த ஆய்வு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

sciencedirect.com/science/articl…

3/4
Read 4 tweets
கீழடியில் நடந்த முதற்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் ஆய்வு நடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 7000 தொல்பொருட்களின் ஆய்வறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அவற்றின் நிலைமை என்ன?பாதுகாப்பாக மீண்டும் கீழடி திரும்புமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் 2014 - 2015ல் #வைகை நதிக்கரை கீழடியில் நடத்திய ஆய்வில் கிமு.2ம் நூற்றாண்டிலேயே இங்கு நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டு 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்  எடுக்கப்பட்டன! இந்த அகழாய்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது!
உடனடியாக அந்த அகழாய்வை தொடர அனுமதிக்காமல் மத்திய அரசு நிறுத்தியது!

தொன்மையின் நிஜத்தை ஆய்வின் மூலம் நிரூபிக்க தயாரான அகழாய்வு அதிகாரி அசாம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமானதும், ராமன் என்ற அதிகாரியை மத்திய தொல்லியல் துறை நியமித்து ஆய்வு நடத்தியது!
Read 6 tweets
தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று,

"கீழடி - தமிழர் வாழ்வும் வரலாறும்" என்ற தலைப்பில்,

திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்!

அவரின் உரை பின்வருமாறு...
கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன!

கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை!
இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும்!

அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். #கீழடி இன்னும் பல பொக்கிசங்களை கொண்டுள்ளது!

இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன..
Read 19 tweets
தமிழரின் தொன்மை வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை! பாதுகாத்திட குரல் கொடுப்போம்!

மதுரை அருகே #கீழடி'யில், வைகை ஆற்றங்கரையில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரம் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.👇
1/14 Image
👆இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பலவற்றை வெளிக்கொண்டு வந்தார். மேலும் அங்கு வேதங்கள் தொடர்பான குறியீடுகளோ, புராண உருவ வழிபாட்டு சிலைகளோ இல்லை என்றும், தமிழர்களின் மதச்சார்பின்மையை...👇
2/14
👆வெளிப்படுத்தும் பல்வேறு வரலாற்று உண்மைகளை சொன்னார். இதன் காரணமாக ஆய்வாளர் அமர்நாத் திடீரென கீழடியிலிருந்து அசாமிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீராமன் என்பவரை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நியமித்தது.

கீழடி ஆய்வினை மூடிமறைக்கும் இச்செயலை எதிர்த்து...👇
3/14
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!