Discover and read the best of Twitter Threads about #கைவல்லிய_நவநீதம்

Most recents (6)

#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 136

மாகர்த்தன், மாபோகி, மாதியாகி

24.
மா கர்த்தன் இலக்கணம்:
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்குங் காந்தச் சிலைமலைமுன் னிரும்புகள்சேட் டிக்குமாபோல்
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்கு மென்முன் சடமான வுலகெல்லாஞ் சேட்டை செய்யும்
1/13
மெய்கலந்த விந்திரிய விகாரரூப விவகார விருத்திக்கும் விருத்திதானா
மெய்கலந்த சமாதிக்குஞ் சாட்சியேநான் வெயில் போலென் றுறைத்தவனே விபுமாகர்த்தன்.

செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் காந்தச் சிலை(கல்) மலை முன் இரும்புகள் சேட்டிக்குமா (நகருதல்) போல், செய்கையும் செய்விக்கையும்
2/13
அற்றிருக்கும் என் முன் சடமான உலகெல்லாம் சேட்டை செய்யும் (தானே இயங்கும்). மெய் கலந்த இந்திரிய விகார ரூப விவகார விருத்திக்கும், விருத்தி தானாம். (சத்துவ விருத்திக்கும்) மெய்கலந்த (லயமான) சமாதிக்கும் சாட்சியே நான். வெயில் போல் (சூரியன் உலக விவகாரத்துக்கும் விவகாரம் இன்மைக்கும்
3/13
Read 13 tweets
#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 107
ஜீவன் முத்தரை பாவ புண்ணியங்கள் தொடராத அதிசய வழி....

சரி, ஜீவன் முத்தரா இருக்காரு. அடுத்த பிறவி இல்லே. ஆனா இந்த பிறவி கர்மாவ தீர்க்க உலகத்திலே வாழணும். பற்றில்லாம கர்மம் செய்யறாரு. அதனால இந்த நிலை வந்த பிறகு கர்மம் பிடிச்சுக்காது1/
சரிதான். ஆனா பிறக்கறப்பவே ஞானியா பிறக்கலையே! பிறந்ததுலேந்து இந்த பிறவில செஞ்சது? அதோட கர்ம பலன் என்ன ஆகும்? அதெப்படி அது ஒட்டாம போகும்? அது எங்கேயாவது போய் சேரணுமே?

எப்படின்னா ...
பிராரத்த கர்மா சில "நல்ல" விஷயங்களையும் செய்யத்தூண்டும். அதே சமயம் சில "கெட்ட" விஷயங்களையும்
2/
செய்யத்தூண்டும்.அட! இவனெல்லாம் சாமியாரு வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான். இவனை எனக்குத்தெரியாதா? (இப்படி பண்ணான், அப்படி பண்ணான்) சுத்த பிராடு சார்!.... இந்த ரீதியிலே சிலர் அவரை திட்டிகிட்டு இருப்பாங்க. அவங்க புதுசா கர்மாவால வரக்கூடிய பாவத்தை எல்லாம் சேர்த்து வாங்கிக்கிறங்களாம்!3+
Read 8 tweets
#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 90
சீடன் என்னத்தை அனுபவிக்கிறானாம்?

ஆனந்தம். ஆனந்த வெள்ளம். தன்னைத்தவிர இரண்டாவதா ஒண்ணுமே இல்லை. இந்த உடம்பு கரணங்கள் ன்னு ஆரம்பிச்சு பட்டியல் போடுகிற 35 தத்துவங்களும் அவனைப்பொறுத்த வரை இல்லை.

இதை நனவில் சுழுத்தி என்கிறாங்க.
1/8
பிரம்ம நிலையே அப்படின்னு இல்லை. சுழுத்தியிலே எல்லா கரணங்களும் போயிடும். இங்கே அப்படி இல்லை. இது ஒரு டிடாச்மெண்ட். தற்காலிகமா பற்று போயிடுது. கரணங்கள் செயலிலே இருந்தாலும் அவற்றோட விஷய அனுபவம் உள்ளே வரலை. கண் திறந்து இருந்தாலும் எதையும் பார்க்கலை. கிட்டே போய் பட்டாசு
2/8
வெடிச்சாலும் காது கேட்கலை. வாயிலே கற்கண்டு போட்டாலும் உமிழ்நீர் கூட சுரக்கலை!

இந்த அனுபவத்தை அவனுக்கு தருவது சற்குருவே! அவர் வேற யாருமில்லை பிரம்மமே. நாம சட்டை போடுவது போல அவர் ஒரு காரணத்துக்காக உடம்பை போட்டுகிட்டு இருக்கார்.
நம்ம ஆன்மீக பாதையிலே பலரும் நமக்கு உதவ வருவாங்க.
3/8
Read 8 tweets
#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 81
கடலோரத்திலே ஒரு அலை...

கடலோரத்திலே நிக்கிற போது ஒரு அலை வருது ... சுவாரசியமா பாக்கிறோம். அது மெதுவா ஒரு சின்ன அலைப்பா ஆரம்பிச்சு, பெரிசாகி, சீறிப்பாஞ்சு விழுந்து எழுந்து ஆர்பரிச்சு கரையை தொட்டு அடங்கிடும். பின் இன்னொரு அலை
1/13
ஏற்கெனவே உண்டாகி வந்துகிட்டு இருக்கும். அது மேலே நம் கவனம். அதுவும் கடைசியிலே அடங்கும். ஆனா கடல் அலைகள் வந்துகிட்டேதான் இருக்கும்!
அது போல நாமும் பிறந்து ஆரவாரத்தோட வாழ்ந்து சர்வ நிச்சயமா அடங்கிப்போறோம்! இப்படி போகிற ஜன்மங்கள் எத்தனை எத்தனை!
அது போல ஸ்தூலம். சூக்ஷ்மம், காரணம்2/13
என்று மூன்று உடல்களும், சாக்கிரத், சொப்னம், சுசுப்தி ன்னு மூன்று அவஸ்தைகளும், இறந்த/நிகழ்/எதிர் ன்னு மூன்று காலங்களும் கடல் அலை போல வந்து வந்து போய்கொண்டே இருக்கும் அதுக்கு முடிவே கிடையாது.
அனுபவம் பெற்ற சீடனே, இத்தனையும் சாட்சியா இருந்து பாருப்பா!
3/13
Read 13 tweets
#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் -50
மீள் பதிவு -ஈசன்
இந்த சூக்ஷ்ம உடம்பு நாம் விழிச்சுகிட்டு இருக்கிறப்ப இருக்கும். செத்து போன பிறகு இருக்காது.
நடுவிலே தூங்கி கனவு காணும்போதும் இருக்கும். கனவு காணும்போது நம்ம எங்கோ போகிறோம், வரோம், ஆனா உடம்பு இங்கேயேதான் இருக்கு. 1/11
அப்ப அன்ன மய உறை- தூல உடம்பு சும்மாதான் கட்டை மாதிரி கிடக்கு. ஆனா உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் எல்லாம் சேத்து- என்ன பேர் சொல்லுங்க? ஆங்! சூக்ஷ்ம சரீரம், அது இருக்கும். கனவிலே எங்கோ போகிறோம். கை கால்கள் வேலை செய்வதா உணர்கிறோம். நான் என்கிற 2/11
நினைப்பும் இருக்கு. மூச்சு விட்டுகிட்டுதான் இருக்கோம்.
இந்த கனவு நிலையிலே - அவஸ்தையிலே- சூக்ஷ்ம - சூக்கும சரீரம் இருக்கும்.
தூங்கி கனவு கூட இல்லாத நிலையிலே நாம ஆனந்தமா இருப்போம். கனவிலே அப்படி சொல்லமுடியாது. பயங்கர கனவு வந்து கஷ்டப்பட்டாலும் படுவோம். சுகமான கனவுகளும் வரலாம். 3/11
Read 11 tweets
கைவல்லிய நவநீதம் என்கிற எளிமையான நடையிலே எழுதப்பட்ட நூலை ஒட்டி ஞான வழியை பார்க்கலாம்.
எழுதியவர் ஸ்ரீ தாண்டவராய ஸ்வாமிகள். காலம் சுமார் 700 வருஷங்களுக்கு முன். இவரது குரு ஸ்ரீ நாராயணன். நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர். இப்பவும் பேருந்து நிலையத்துக்கு அருகே #கைவல்லிய_நவநீதம்
ஒரு 200 மீ தூரத்தில் இவர்களது அதிஷ்டானம் இருக்கிறது.
தத்துவ விளக்கப்படலம்.
1.
நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம்
மத்திய விகபரங்கள் வருபோகங் களினிராசை
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றாறுகூட்டம்
முத்தியை விரும்புமிச்சை மொழிவர்சா தனமிந்நான்கே
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!