Discover and read the best of Twitter Threads about #கொரோனா

Most recents (17)

அட்டை போடாத அஞ்சாவது புக்கு என்னைக்கோ கிழிஞ்சுருச்சு ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு அறிவிப்பு மட்டும் வந்திருச்சி.

பள்ளிக்கூடம் பூட்டு போட்டு
மாசம் இன்னைக்கு நாலாச்சு..
பிரைவேட்ல படிக்கிறவனுக்கு ஸ்கூல் வீட்டுக்கே வந்தாச்சு.

ஆன்லைன்ல படிக்கிறேன் டா ஆணவமா ஆதி சொன்னான்.
எதிர்வீட்டு கோபி சொன்னான்
ரெண்டு ஜிபி தேவைப்படுமாம்.

சட்டையில மட்டுமில்ல அப்பா போன்லயும் ரெண்டு பட்டன் இல்லை.
ஸ்மார்ட் போன் வாங்க காசு இருந்தா ஸ்கூல் பீஸ் கட்டி சேர்த்திருப்பார்.

கூலிக்கு மாரடிக்கும் குருவம்மா எங்கம்மா.
கூறுகெட்ட #கொரோனா வால வீட்டுக்குள்ளே முடங்கிருக்கா.
#அப்துல்_கலாம் ஆவன்னா அரசு பள்ளியில சேர்த்துவிட்டா?
ஒரு வேல சுடுசோறு தின்பான்னு ஆசைப்பட்டா.

இப்ப சொல்லித் தரவும் ஆளில்லை.
சோத்துக்கும் வழியில்ல.

கத்து தந்த வாத்தியாரும் அரிசி போட போய்ட்டாராம்.

வறுமை ஒன்னும் புதுசில்ல
வாழ்ந்து பார்த்து பழகிடுச்சு.
Read 4 tweets
இன்னைக்கு வார்டுல நடந்த ஒரு விஷயம்

அம்மா, அப்பா அவங்க பையன் 3 பேருமே covid positive. முதல்ல அந்த அம்மா கு வந்துருக்கு அவங்க கிட்ட இருந்து அப்பா பையனுக்கு வந்துருக்கு. 3 பேரும் ஒரே வார்டுல பக்கத்து பக்கத்து bed ல இருந்தாங்க. 2 நாள் நல்லா தான் போச்சு. 3 பேரும் 😰🙏 #MustRead
oxygen ல தான் இருந்தாங்க. 3 பேருக்கும் ஒரே மாதிரி ஆனா treatment தான் கெடச்சிட்டு இருந்துச்சு. 2 நாள் எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு.. இன்னைக்கு தான் அந்த 3வது நாள் . காலை ல ward rounds ல 3 பேரும் நல்லா தான் இருந்தாங்க. அந்த பையனுக்கு திடீர்னு மதியம் SpO2 drop ஆக started
ஆரம்பிச்சுது. வெண்டிலேட்டர் ல போட்டோம். Improvement இல்ல. அந்த பையன் இன்னைக்கு சாயங்காலம் இறந்துட்டாரு. நெனச்சு பாக்க முடியாது அளவுக்கு எல்லாம் ஒரே நாள் ல நடந்துருச்சு. அந்த பையனுக்கு வயசு 33 தான். எந்த கெட்ட பழக்கமும் co-morbidities உம் இல்ல #coronawarriors
Read 5 tweets
#கொரோனா_அலட்சியம்_ஆபத்து
#எச்சரிக்கை
#Caution

சில மரணங்கள் நமக்கு நேரடியாக சில செய்திகளை விட்டு செல்கின்றன.?!

1) திரு. அன்பழகன் MLA (62). இவருக்கு எந்தவிதத்திலும் பணத்திற்கு குறைவில்லை. எந்தவித உயர்தர வைத்தியமும் பார்க்க முடியும். ஆனால் #கொரோனா விடம் ஜெயிக்க முடியவில்லை.
2) திரு. சரத் ரெட்டி (43). இவர் இந்தியாவின் டாப் 25 மற்றும் சென்னையின் டாப் 10 மருத்துவமனைகளில் ஒன்றான விஜயா மருத்துவமனையின் இயக்குநர்.

ஒரு பெரிய மருத்துவமனையின் இயக்குநர் என்றால் அங்கு அவருக்கு எந்த மாதிரியான வைத்தியம் பார்த்திருப்பார்கள் என நம்மால் யூகிக்க முடியும். ஆனாலும்.?!
#கொரோனா விடம் திரு. சரத் ரெட்டியால் ஜெயிக்க முடியவில்லை.

3) திரு. பாலகிருஷ்ணன் (55). இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் தலைவர்.

இவருக்கு உலகின் எவ்வளவு பெரிய மருத்துவமனையின் வைத்தியத்தையும் பெற வசதியிருக்கிறது. ஆனாலும் #கொரோனா விடம் ஜெயிக்க முடியவில்லை.
Read 12 tweets
முட்டாள் அரசாங்கம் @CMOTamilNadu👇

நாளுக்கு நாள் #கொரோனா பாதிப்பு நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்கும் அறிகுறிகளே அரசின் நடவடிக்கை காட்டுகிறது.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் #10thPublicExam அறிவிப்பை முட்டாள் அரசு அறிவித்திருக்கிறது (1/4) Image
9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு தேர்வெழுத உள்ளனர்.

இதில், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருபவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

இவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
எத்தனை பேரிடம் இதுகுறித்து கலந்தாலோசித்தார்கள்? மாணவர்கள் கருத்து கேட்கப்பட்டதா? (2/4)
ஆசிரியர்கள் கருத்து கேட்கப்பட்டதா?

முதலில் பள்ளிக் கல்விக்கு என ஒரு அமைச்சர் @KASengottaiyan இருந்தாரே, நல்லா இருக்காரா? உடம்புக்கு ஏதும் பிரச்னை இல்லையே?

வெட்கப்பட வேண்டும். 10 லட்சம் மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை. தெளிவான அறிக்கை, தெளிவான திட்டத்தை சொல்லியிருக்கிறாரா? (3/4)
Read 5 tweets
"சட்டப்படி" கடனா.?!
அது எப்படி.?!"

ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும்.

சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் 1 லட்சம் என வாங்கி விடுவார்கள்.
100 ஏக்கரும் சேர்த்து 1 கோடிதான்.
பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்து விடுவார்கள்.

இனி அந்த பகுதியில் ஏக்கர் 50லட்சம் என்பதுதான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.
பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது.

அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை.

100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருகிறதா.?!
Read 17 tweets
#கார்ட்டூனிஸ்ட் திரு.மதி அவர்களின் பதிவு..!

#கருத்துச் சு’தந்திரம்’!

தூங்குபவர்களை தட்டி எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.

இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் மிகப் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதில் முதல் கார்ட்டூனுக்கு வருவோம்!

‘பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையின் தலையை மறைத்து வைரஸ் சித்திரத்தை வரைந்து கொச்சைப்படுத்தி இருக்கிறேன் நான்’..

என்று திமுக தலைவர் #ஸ்டாலின் தினத்தந்தி
நாளிதழ் அதிபருக்கு கடிதம் எழுதி தனது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார்!

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதில் சிறிது நகைச்சுவை உணர்வைக் கலந்து கொடுப்பதற்கும் எனக்கு ஒரு #சிலை தேவைப்பட்டது. அவ்வளவுதான்! அதைத்தான் அந்த கார்ட்டூனில் நான் வரைந்து இருந்தேன்.
Read 26 tweets
"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.?!"

"கொஞ்சம்ம்ம்ம்ம்ம் பெரிய பதிவு"

#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது?

சத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.?!
என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.

அதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.
#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.

அவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்

#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.
Read 33 tweets
இது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். #கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.

இது நீண்ட நாட்களாக நடப்பது தானே.?!
இதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு #பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட் தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.

#தேஜஸ்வி_சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமைக்குரியவர்.

ஆனால் தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார் இந்தத் தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர்.

தன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர் இவர்.
Read 23 tweets
அன்புள்ள ஊடகங்களுக்கு, #கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, ஊரடங்கு அறிவிப்பு வந்த நாள் முதல் நீங்கள் நடத்தும் விவாதங்களில் பங்கேற்று பேசுவது, #அதிமுக & அதன் தோழமைகட்சிகள் (தமாகா,பாமக), #திமுக & அதன் தோழமைகட்சிகள் (காங்கிரஸ், கம்யுனிஸ்ட், விசிக), நடுநிலையாளர்கள் என்று தேர்ந்தெடுத்த 1/1
சிலர், வலதுசாரி சிந்தனையாளர்கள், சில சமயங்களில் பொருளாதார நிபுணர்கள் என வழக்கமாக பங்கேற்கின்றனர். ஆட்சி என்பதனால் #அதிமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர், எதிர்கட்சி என்பதனால் #திமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர் என நான்கு பேர் 2/2
கட்டாயமாக அனைத்து விவாதங்களிலும் இடம் பெறுகின்றனர். ஏன் மற்ற கட்சிகள் இல்லையா? தேர்தல் கூட்டணி என வைத்துக் கொண்டால், அவர்களைத் தவிர, அவர்களுடன் கூட்டணி வைக்காமல், அரசுகள் செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்கும் @maiamofficial கட்சியோ, அல்லது #நாம்தமிழர்கட்சி யோ 3/3
Read 11 tweets
ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது.

அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். அது மனித இயல்புதானே.?!

எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான மிருகத்தைப் பிடித்து வளர்த்தால் என்ன என்று விபரீதமாகச் சிந்தித்தான் அவன்.
அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் மக்களிடம் உயரும் என்று தீவிரமாக நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது.

ஆவலுடன் அதைக் கையில் பிடித்து பெருமையாக தன் வீட்டுக்கு எடுத்து வந்தான் அந்தப் பிரகஸ்பதி.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும், குழந்தைகளும், சக நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள்.

அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள்.

அவனோ அவர்கள் சொல்வதை எல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு அந்த முதலைக் குட்டியை தன் செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.
Read 11 tweets
ஒரு சீரான கதியில் அந்த இரயில் சென்று கொண்டிருந்தது.

குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும் இதமாக இருந்தது.

நன்கு காலை நீட்டி ஜன்னல் பக்கம் தலை திருப்பி வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன் நான்.

சென்னையின் நெரிசல்களை வேகமாகப் பின் தள்ளி வண்டி வேகம் எடுத்தது.
எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்ததால் சென்னையின் அந்த "பேவரேட் வாசம்" என் நாசிக்கு நாசிக்கு எட்ட வில்லை.

பை த வே, நான் சென்னையில் வேலை பார்ப்பவன். அலுவலக வேலையாக மதுரைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

நாளை இரவே சென்னை திரும்ப வேண்டும். திருமணம் இன்னும் ஆகவில்லை.
வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை "யாரிடமும்" சிக்கிக்கொள்ளாமல்.

என் பார்வையை உள்ளே திருப்பினேன்.
என் எதிரே அமர்ந்திருந்தவர் நடுத்தர வயதில் இருந்தார்.

அவர் சாப்பிடுவதற்கும், வேலை செய்வதற்கும் நிச்சயம் சம்பந்தம் இல்லை. நல்ல தொந்தியும், தொப்பியுமாக இருந்தார்.
Read 15 tweets
இந்நேரத்தில் பேசக்கூடாது என்றில்லை பேசனும், அந்த அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்!

வரி வருவாய் இன்றி கடுமையான பாதிப்பில் தமிழகம் தள்ளாடி வருகிறது. பிரதமரிடம் முதலமைச்சர் @CMOTamilNadu 12 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்டார். ஆனால், முதற்கட்டமாக கொடுத்தது வெறும் 500 கோடி (1/4)
டாஸ்மாக், பெட்ரோலியம், முத்திரைத்தாள் & பதிவுக்கட்டணம் மூலம் ஆண்டுக்கு 1.2லட்சம் கோடிக்கு வருவாய் கிடைக்கிறது.

டாஸ்மாக் மூலம் மாதத்துக்கு 3000 கோடி, முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் மூலம் 1200 கோடி என வருவாய் வருகிறது!

ஆனால், இவையெல்லாம் #கொரோனா -வால் முடங்கிக் கிடக்கிறது (2/4)
இந்நிலையில் கடந்த நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரம் கோடி அளவிலும், திருத்திய மதிப்பீட்டில் 25 ஆயிரம் கோடி அளவிலும் உயர்ந்துள்ளது.

தற்போதே வருவாய் தரக்கூடும் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் நிலையில் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வருவாய் வறட்சியை சந்திக்கபோகிறது (3/4)
Read 5 tweets
#கருணாநிதி என்றாலே அவர் இறந்து பல மாதங்களுக்கு பின்னும் பலருக்கு அவரைப் பற்றி பேசினாலே இப்போதும் காண்டாகிறது.
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.?!
நாம் என்ன செய்ய முடியும்.?!

#கலைஞர் செய்த "சில" சாதனைகளை சொன்னாலே போதுமே.?!

"எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் சிறு முயற்சியே இது!"
உலகத் தரத்தில் 350 படுக்கைகளோடு #கொரோனா சிறப்பு வார்டை ஓமாந்தூரார் கட்டிடத்தில் சுகாதாரதுறை அமைச்சரும், (அவர் "மீம்களில்" பெயர் வாங்காத சில தினங்களுக்கு முன்) முதல்வர் #EPS ம் போய் பார்வையிட்டு, அதை பெருமையாக ஊடகங்களில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருமையான விஷயம்தான்.
அந்தக் கட்டிடத்தை அவ்வளவு அற்புதமாக உலகத் தரத்தோடு கட்டியது #கலைஞர் தான்.

அந்தக் கட்டிடம் மட்டும் அல்ல. மேலும் தன் புகழுக்காக பல காரியங்களை செய்தவரும் இல்லை #கலைஞர்
ஆனாலும் அரசியலைக் கடந்து சில வரலாற்று உண்மைகளை,புதிதாக இணையத்திற்கு வரும் இள ரத்தங்களிடம் சேர்க்கும் சிறு முயற்சி:
Read 19 tweets
#கொரோனா வைரஸ் பற்றிய எல்லா 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன #டாக்டர் #பவித்ரா_வேங்கடகோபாலன். Ph.D அவர்கள் #சன்டிவி நேர்காணல்..😍

#திரட்டாக 👇
முதலில் நல்ல செய்திகள்..😍

COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.

1950லேயே கண்டு பிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ். அவ்வளவே...👇
இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்..👇
Read 35 tweets
ஜெர்மனியில் #கொரோனா..!

உலகத்தையே உலுக்கும் இந்த நோய் இன்று நாங்கள் வாழும் நாட்டை கிட்டத்தட்ட முழுவதுமாக முடங்கியுள்ளது.

அருகில் வராதவரை இதன் வீரியம் புரியாது.

என அனுபவங்கள் கோர்வையாக..!
முதல் கட்டம் - பிப்பிரவரி 2020

சீனா இத்தாலி ஈரான் பாதிப்பு இன்னும் இங்கு பெரிதாக பாதிக்கவில்லை.

வழக்கம் போல நாங்கள் வேலைக்கு சென்றோம்.பள்ளிகள் இயங்கின கல்லூரிகள் மற்றும் அனைத்து மிக இயல்பாகவே நடந்தது.

பொதுவாக ஜெர்மானிய மக்கள் தைரியம் மிகுந்தவர்கள்.
இரண்டாம் கட்டம் - பிப்பிரவரி

ஜெர்மனியில் கார்னிவல் எனும் திருவிழா பல நகரங்களில் பிரபலமாக நடைபெறும்.பலர் எச்சரித்தும் இவை தடுக்கப்படவில்லை.

பல நாடுகளில் இருந்து இங்கு மக்கள் வந்தனர்.வந்தவர்களில் இத்தாலிய மக்கள் அதிகம்.

இத்தாலியர்களும் ஜெர்மனாயிர்களும் அங்காளி பங்காளிகள்.
Read 16 tweets
#கொரோனா கொடுத்த படிப்பினை...

எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுதான் இந்து தர்மம்.

இந்து சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி.

1
இந்து சமயத்தின் வழிபாட்டு முறைகளை மூட நம்பிக்கை எனக் கூறுகிறார்கள் பகுத்தறிவு வாதிகள்.

எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுதான் இந்து தர்மம்.

2
அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா.

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியா வும் உள்ளன.

3
Read 23 tweets
கொரோனா தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சலும் வறட்டு இருமலும்(சளி அற்ற) ஏற்படும். நாளடைவில் வறட்டு இருமல் சளியுடன் கூடிய இருமலாக வரும். முதலில் வருவது காய்ச்சலா அல்லது வறட்டு இருமலா என்பது பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. - P1
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா வைரசு காற்றின் மூலம் பரவாது. தொடுதலின் மூலமே அதிகமாக பரவும். உடலினுள் வைரஸ் சென்றதுமே அது பெருக ஆரம்பிக்கும். சளி மூலம் ஒருவரிடம் இருந்து வெளியே வந்த வைரஸ் சூழலில் பல்கிப் பெருகாது- P2
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக பயணிக்க வேண்டும்.

தூரமாக நின்று கதைப்பதன் மூலமே தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
- P3 #Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
Read 38 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!