Discover and read the best of Twitter Threads about #சபரிமலை

Most recents (6)

கிரேஸி மோகன் சகோதரர் மாது பாலாஜி அவரின் குழுவினர் பலரும் #சபரிமலை சென்ற அனுபவத்தை பதிவிட்டுள்ளார் மாது பாலாஜி.

“சபரிமலைக்கு 88ம் ஆண்டு சென்றேன். அதுதான் நான் முதன் முதலாகச் சென்றது. ஐயப்பனின் அருள் இல்லாமல் மலையேற முடியாது. எங்களுக்கு குரு சாமியாக இருந்தவர் என்னை விட இளம் வயது.
அவருக்கு அப்போது 25 வயது. எனக்கு 30 வயது. சபரிமலையில் படிபூஜை செய்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கட்டினோம். 89ம் ஆண்டு, படிபூஜை செய்வதற்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. எங்கள் சித்தப்பாவுடன் கிரேஸி மோகன் சபரிமலைக்குச் சென்று கொண்டு இருந்தான். அந்த வருடம் எங்களுடன் வந்தான். படி பூஜை
என்பதும் அதற்கு பணம் கட்டியதும் பக்தியாகப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக அதனால் ஒரு மமதை வந்தது எங்களுக்கு. படி பூஜையோ நெய் அபிஷேகமோ தரிசனமோ எதுவாக இருந்தாலும் ஐயப்பன் நினைத்தால் தான் எதுவுமே நடக்கும். நாங்கள் விபூதி, சூடம் எல்லாம் எடுத்துச் செல்வோம். கோயிலில் சேர்ப்பித்து
Read 13 tweets
#சபரிமலை... #ஆர்எஸ்எஸ்...

"சபரிமலை கோவிலின் உள்ளே மனித ரத்தம் தெளித்து, சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி ஐயப்பன் கோயிலை மூட திட்டமிட்டோம்.."

இப்படி திட்டமிட்டது "கடவுள் இல்லை" என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் இல்லை... சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுத்து, ஐயப்ப சேவா
சங்கம் என்ற பெயரில் அமைப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ராகுல் ஈஸ்வர் என்ற சபரிமலை தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன் தான் இப்படி செய்ய திட்ட மிட்டவன்...

"கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்பை நடைமுறைபடுத்தும் விதமாக பெண்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முயன்றால் அரசு இயந்திரம் போன்றே
நாங்களும் திட்டமிட்டிருந்ததோம். பிளான் A யின் படி வழி மறித்து போராட்டம். அடுத்து பிளான் B & C யின் படி 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், அவர்களது உடலை அறுத்து சன்னிதானத்தில் இரத்தம் தெளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். இரத்தம் அல்லது மூத்திரம் பெய்து அசிங்கம்
Read 6 tweets
#ஐயப்பன் #சபரிமலை மணிகண்டன் மகிஷியை வதம் செய்ததும் மலை போல் சரிந்த அவளது உடல் வளரத் தொடங்கியது. இது இப்படி வளர்ந்து கொண்டே இருந்தால் உலகத்திற்கு கேடு என நினைத்த தேவர்கள், அங்கு கிடந்த பாறைகள் பலவற்றை தூக்கிவந்து அவள் உடல் மேல் வைத்தனர். அத்துடன் அதன் வளர்ச்சி நின்று விட்டது.
இப்பகுதி #கல்லிடுங்குன்று எனப் பெயர் பெற்றது. (அரனால் #சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் கல்வீசி எறிந்து செல்வது வழக்கமாயிற்று.) தேவர்கள் மகிஷியை வதம் செய்த மணிகண்டனை போற்றி வணங்கினர். இந்திரன், "தாங்கள் வந்த பணி முடிவுற்றது. இனி இந்த இடம் #காந்தமலை என அழைக்கப்படும்.
இங்கே தேவலோக சிற்பி #விஸ்வகர்மா மூலம் ஒரு மாளிகை எழுப்பி #பொன்னம்பலம் என அதற்கு பெயரிடுகிறேன். தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகிறேன்" என கோரிக்கை வைத்தான். அதனை ஏற்ற மணிகண்டன் அவர்களுக்கு #விஸ்வரூபதரிசனம் தந்து விஸ்வகர்மா அமைத்த
Read 5 tweets
#சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம்!*

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை, வண்டிப் பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.
பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர்.
இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரி யாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
Read 52 tweets
#சபரிமலை செல்லும் #ஐயப்ப_பக்தர்கள் கவனத்திற்கு:
மறைந்த பிரபல திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் 1942 முதல் சபரிமலை யாத்திரை சென்றவர். அவர் வாவர் சமாதி பற்றி கூறியது. “வாவர் சமாதியில் ஐயப்ப பகதர்கள் வழிபட வேண்டும் எனபது அபத்தமானது. இது தீட்டானது. வாவர்ங்கிற இஸ்லாமியர் எப்படி
ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்? மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா? இதையெல்லாம் யோசிச்சு பார்க்கணும். அது மட்டுமல்ல, 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப்போற நேரத்துல வாவர் சமாதியை
பார்க்கறது நல்லது தானா? இதையாவது யோசிக்க வேண்டாமா? நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம். அது சமாதிதான். நல்ல விஷயத்துக்கு புனித விஷயத்துக்கு போகும்போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்று தான் நான் சொல்லுவேன்".
பந்தள ராஜா குடும்பத்தின் வாரீசுகளில் ஒரு முதியவர்
Read 10 tweets
அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை!
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - கேரள முற்போக்கு (சி.பி.எம்) அரசு இதனை செயல்படுத்தட்டும்!

#Sabarimala #சபரிமலையில்_பெண்கள்
உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமையில் கூடிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்டப் பிரிவு ஆய்வு அமர்வு (Constitution Bench) நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க மிகுந்த - குறிப்பிட்டு போற்றத்தகுந்த ( Landmark Judgement ) தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது.

#Sabarimala
சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் வழிபடுவதற்காக, 10 முதல் 50 வயது பெண்களுக்கு உரிமை இல்லை; அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியதோடு, தேவசம் போர்டும், கோவில் நிர்வாகக் குழுவினரும், அர்ச்சகர் கூட்டமான நம்பூதிரிகளும் வாதாடினார்கள்!

#Sabarimala #சபரிமலை
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!