Discover and read the best of Twitter Threads about #சுவாமியே_சரணம்_ஐயப்பா

Most recents (7)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜை முறைகள்...!!

பூஜை நடைமுறைகள், தரிசன முறைகள் மற்றும் அபிஷேக ஆராதனை முறைகள் ஆகியவை ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமாக பின்பற்றப்படும்.
அதன்படி ஐயப்பன் சுவாமிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பலவிதமான பூஜை முறைகள் காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன. அவை உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாத பூஜையாக படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை ஆகியவை ஆகும்.
1. உஷத் கால பூஜை :

அதிகாலையில் ஐயப்பன் சன்னதி நடை திறந்த உடனே அபிஷேகம் நடைபெறும். காலையில் கணபதி ஹோமத்துடன் உஷத் கால பூஜை நடைபெறும்.
Read 11 tweets
#கார்த்திகை_ஸ்பெஷல் #சபரிமலை_கோவில்_சிறப்புகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் #தத்வமசி என்று எழுதப் பட்டிருக்கும். இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும். சபரி மலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல்
கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள், அந்த மாலை தன் நெஞ்சில் படும்போது எல்லாம், ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாகக் கூறப்படுகிறது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அந்த அரக்கியின் உடல் வளர்ந்து
பூமியின் மேல் பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக, அவள் உடல் மீது கனமான கல்லை வைத்ததாக தல புராணம் சொல்கிறது. இதை நினைவுகூரும் வகையில் தான் அழுதா நதியில் எடுக்கப்படும் கற்களை, பக்தர்கள் கல்லிடும் குன்று என்ற பகுதியில் போடுகிறார்கள். மனிதனின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று
Read 8 tweets
*சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம்!*

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை, வண்டிப் பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.

பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள்.
பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர்.
இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரி யாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
Read 54 tweets
சபரிமலை கோவிலில் உள்ள மற்ற சன்னதிகள்.. பற்றி தெரிந்து கொள்வோம்..!!

சுவாமி ஐயப்பன் இருக்கும் சபரிமலை 
கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.

1
மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது. அதில் நாம் இன்று இங்கே உள்ள பிற சன்னதிகள் பற்றி பார்ப்போம்..!!

2
மஞ்சமாதா :

மஞ்சள் மாதா சன்னதி ஐயப்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. இந்த தேவியை மாளிகாபுரத்தம்மன் என்றும் அழைப்பது உண்டு.

3
Read 15 tweets
அறுபடை வீடு
முருகனுக்கு                             
மட்டுமல்ல ஐயப்பனுக்கும்  உண்டு....

ஐயப்பனின் அறுபடை வீடுகள்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

1
பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! என்று இருக்கும். அவ்வாறெல்லாம் போற்றப்படும் ஐயப்பனின் அறுபடைவீடுகள் பற்றி பார்ப்போம்...

2
தர்ம சாஸ்தாவான                                      ஐயப்பனின் அறுபடை வீடுகள் :

1. ஆரியங்காவு
2. அச்சன்கோவில்
3. குளத்துப்புழா
4. எரிமேலி
5. பந்தளம்
6. சபரிமலை

3
Read 14 tweets
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!

காடாம்புழா பகவதி கோயில்
காலை : 5am ➖ 11am
மாலை : 3:30Pm ➖ 7pm

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 3 மணி ➖ இரவு 9 மணி
திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

காலை : 4.30AM ➖ 12pm
மாலை : 4.30Pm ➖ 8:30pm

கொடுங்களூர் பகவதி கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை : 4.30Pm ➖ 8pm

சோட்டானிக்கரை பகவதி கோயில்
காலை : 3:30AM ➖ 12pm
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

கீழ்க்காவு குருதி
இரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கட்டுருத்தி மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

மல்லியூர் கணபதிகோயில்
காலை : 4.30AM ➖ 12:30pm
மாலை : 4.30Pm ➖ 8pm
Read 8 tweets
#சுவாமியே_சரணம்_ஐயப்பா

இவர் தான் சபரிமலை ஐயப்பசாமிக்கு 'உறங்கும்பாட்டு ஹரிவராசனம் பாடலை இயற்றியவர்.

சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்குப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். Image
இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 - ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம்.

இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார்.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!