Discover and read the best of Twitter Threads about #சென்னை

Most recents (8)

ஒரு முஸ்லிம் தோழரின் மனதை பிழிந்த பதிவு...👇👇

நீங்கள் செய்யாததை நாங்கள் செய்தோமே தோழா அதைப்பற்றி திரைப்படம் எடு தோழா
#தி_இஸ்லாம்_ஸ்டோரி என்ற பெயரில் படம் எடு...

#சுனாமியில் உயிர் இழந்த சகோதர்களுக்கு நாங்கள் ஆற்றிய மனிதநேய பணியை பற்றி படம் எடு...

(1)... Image
#கஜா புயலால் ஏற்பட்ட இழப்பின்போது நம் மக்களுக்கு மதம் பாராமல் நாங்கள் ஓடி ஓடி ஆற்றிய பணிகளை படம் எடு...

#கடலூர்
#சென்னை ஆகிய நகரங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை காப்பாற்றினோமே
தாகத்திற்கு தண்ணீரும், உணவும் கொடுத்தோமே அதை பற்றியும் ஒரு படம் எடு...

(2)... Image
பேரிடர் காலங்களிலும், விபத்து நேரங்களிலும் #மசூதிகளை தங்கும் இடங்களாக மாற்றிக்கொடுத்தோமே அதைப்பற்றியும் படம் எடு..

#செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீடுகள் மூழ்கினவே அப்போது நாங்கள் நீந்திச்சென்று செய்த நன்மைகளை விளக்கி பெரிதாக படம் எடு...

(3)... Image
Read 8 tweets
*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்...!

#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர் அருகில் #தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது #காயல்பட்டினம் என்னும் பேரூர்.

இவ்வூரின் பழைய பெயர் #காயல் என்பதாகும். #பழையகாயல், #புன்னைக்காயல், #காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக..
இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.

இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை.

ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் #கொற்கை துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது.

#கொற்கை துறைமுகமிருந்த இடத்தில் கடல் பின்வாங்கி நிலம் உருவான பின்னர்...
#காயல் ஒரு துறைமுகமாக
வளர்ந்தது. கொற்கைக்குத் தெற்கில் #காயல்பட்டினம் அமைந்துள்ளது.

காயலுக்கு தெற்கில் #வீரபாண்டியபட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (பொ.பி 946-966) அமைந்ததாகும்.

ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால்...
Read 29 tweets
#பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் #சென்னை க்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார் தேவர்.
உதவியாளருக்கு குழப்பம்.
தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.
குழப்பத்தோடு புடவை வாங்கி வர கூடவே
கொஞ்சம் பழங்கள்.
தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை #மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.
அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் #காலில் தேவர் நெஞ்சாண்
கிடையாக விழுந்து வணங்குகிறார்.
உதவியாளரிடமிருந்து புடவை/ பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து
- எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம் என தேவர் சொல்ல
Read 5 tweets
கரோனா காலகட்டத்தில் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்பட்டதில் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றதில் பெரிய மருத்துவமனைப் பிரிவில் முதலிடத்திற்கான விருதை #சென்னை #ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பெற்றுள்ளது! மிகப்பெரிய மருத்துவமனைப் பிரிவில் வேலுர் #சிஎம்சி முதலிடம்! 💐💐
Congratulations @CMOTamilNadu @Vijayabaskarofl and to all the hard working doctors and health care officials who have made this happen. Special gratitude to those who have given their lives in serving the #covid infected.
. @spinesurgeon 💐💐
Read 3 tweets
"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.
ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..
Read 13 tweets
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!