Discover and read the best of Twitter Threads about #சேலம்

Most recents (5)

Dec 23rd 2022
*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
Apr 12th 2022
பண்டைய பெருவழிகளும், வைகைப் பெருவழியும்...!

வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.

அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.

முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.

தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Read 28 tweets
Nov 22nd 2020
அடேய்... குஜராத்தி #அமித்ஷா!

Thread!

9 ஆண்டுகள் #UPAமத்தியஅரசில்_அங்கம்வகித்த_திமுக ஆட்சியில்

தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்தியஅரசின் திட்டங்கள் & நிறுவனங்களின் பட்டியல்: 2004 - 14

சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம் #NationalMarnieUniversity
திருவாரூரில்..,
மத்தியப் பல்கலைக் கழகம். (#CentralUniversity)

கோவையில்..,
உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக்கழகம்.

திருச்சியில்..
இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். ( #IIM )

#ஆசியாவிலேயே முதலாவதாக,
சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.
சென்னையில்..,
மத்திய அதிரடிப்படை மையம் ( #NSG )

திருச்சியில்..,
தேசிய சட்ட கல்லூரி ( #NationalLawSchool )

தாம்பரத்தில்.., #தேசியசித்தமருத்துவ ஆய்வு மையம்.

ஒரகடத்தில்..,
470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
Read 14 tweets
Nov 14th 2020
#கொங்கு_சமுதாயம் முன்னேற காரணம் இட ஒதுக்கீடு - #கார்த்திகேய_சிவசேனாபதி.. 😲😲

#கொங்கு_சமுதாயம் முன்னேறியது சுய தொழிலால் என்பது உலகம் தெரியாத #அடி_முட்டாளுக்கு கூடத்தெரியும்..😍😍

#கோவை பல் தொழில்நகரம்..
#திருப்பூர் பின்னலாடை..
#ஈரோடு டெக்டைல்ஸ்..
1/n
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி..
#நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை..
#சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்..
#கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல்.
#சென்னிமலை போர்வை..
#பல்லடம் பகுதி தறி..
#பழனி பகுதி ஜேசிபி, டோசர்..

2/n
#கரூரிலிருந்து தாராபுரம் வரை,
#ஒட்டன்சத்திரத்திலிருந்து முத்தூர் வரை நிதி நிறுவனம்..
ஒவ்வொரு 10-15 கிலோ மீட்டருக்கும் ஒரு #ஸ்பின்னிங் மில் என பல வகையான தொழில்களால் சுய முன்னேற்றமடைந்த சமுதாயம் கொங்கு சமுதாயம் ...💪💪
எத்தனை பேர் ஊர் #உறவுகளை பிரிந்து, சுக துக்கம் மறந்து பல
3/n
Read 4 tweets
Mar 4th 2020
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!