Discover and read the best of Twitter Threads about #சைவசமயம்

Most recents (24)

#ஸ்ரீ_பொன்வாசிநாத_ஸ்வாமி

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்.

புதுக்கோட்டை அருகே உள்ளது இலுப்பூர்.

இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, Image
பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது.

இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம்,
மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.

கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.
Read 16 tweets
#ஸ்ரீ_வைத்தீஸ்வர_ஸ்வாமி

உடற்பிணி மனப்பிணி மற்றும் பிறவிப்பிணி நீக்கும் சிந்தாமணி நல்லூர் வைத்தீஸ்வரர் :

விழுப்புரம் அருகிலுள்ள சிந்தாமணி நல்லூரில், வைத்தீஸ்வரர் என்ற பெயருடன் சிவன் அருள்பாலிக்கிறார். Image
இவரை பவுர்ணமிஅன்று வழிபட்டால், தீராத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தல வரலாறு: 

ருத்ராட்ச மணியாலும், "சிவாயநம' என்னும் மந்திரத்தாலும், திருநீறு என்னும் மருந்தாலும் பக்தர்களின் நோயைப் போக்குவதால்,
இங்குள்ள சிவனை வைத்தீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.

இந்த மூன்றையும் "மணி, மந்திரம், மருந்து' என்று சேர்த்து குறிப்பிடுவது வழக்கம். 

இந்த பகுதியை ஆட்சி செய்த விக்கிரம சோழன், தன் பெற்றோரின் நினைவாக கட்டினார்.
Read 11 tweets
#சிவ_அடியார்_பூசனை

சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர்.

அவை

சிவலிங்கப் பூசனை,

சிவ அறிவு பெற்ற சிவ ஆசான் பூசனை,

சிவ அடியார் பூசனை என்பனவாகும்.
மக்களால் கட்டப் பெற்ற,
படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில் இயங்காமல் எழுந்து அருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை அன்பினால் படைத்தால் அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் உடம்பாகி கோயிலினுள் எழுந்து அருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச் சேறாது என்கின்றார் திருமூலர்.
ஆனால் எழுந்து இயங்கும் உயிர்களின் உடம்பாகிய கோயிலினுள் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிவனுக்கு படைத்தல் ஆவதுடன், கொடிச்சீலை ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச்சேரும் என்பதனை,
Read 31 tweets
#சோமாசி_மாற_நாயனார்

சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார்.

சிவபக்தியும் சிவனடியார்களுக்கு திருவமுதமும் அளித்தவர் இவர்.

அகிலத்தை எல்லாம் கட்டிகாக்கும் பரமனே முதல்வன் என்று வேள்விகள் பலய்து உலகம் முழுவதும் அறியும்படி செய்தவர் இவர். Image
வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

தான் செய்யும் வேள்வியின் அவிர்பாகத்தை சிவபெருமான் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அப்படியென்றால் சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார்.

எம்பெருமானுக்கும், சுந்ராருக்கும் இருக்கும் அன்பு பிணைப்பை முன்னமே அறிநதிருந்தார் சோமாசி மாற நாயனார்.

சுந்தரராரின் நட்பை பெறுவது எப்படி என்று எண்ணினார்.
Read 12 tweets
#ஸ்ரீ_நெல்லிகேஸ்வர_ஸ்வாமி

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம் :

"திருநெல்லிக்காவல்". இத்திருத்தலம் திருவாரூரில் உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் திருநெல்லிகேஸ்வரர்.

பஞ்சகூடபுரம்' என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. Image
இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனிபகவான், கந்தர்வர், துர்வாசர்,ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

கோபத்திற்கு பெயர் பெற்றவர் துர்வாசர், இவரின் கோபம் இத்தலத்திற்கு வந்து குறைந்த காரணத்தால், இங்கு சென்று வணங்குபவர்களின் கோபமும் குறையும்.
ஒரு மனிதனுக்கு கட்டுப்பட்ட நியாயமான கோபங்கள் வரலாம், ஆனால் அளவிற்கு மீறிய கோபத்தால் ஒரு மனிதன் தானும் அழிந்து பிறரையும் அழித்து விடுவான்.

மேலும் இத்தல சிவனை வழிபட குஷ்டம் போன்ற கொடிய தோல் வியாதிகள் நீங்கும்.
Read 6 tweets
#ஸ்ரீ_தார்மீக_நாத_ஸ்வாமி

பித்ரு தோஷம் நீக்கும் குணசீலம் தார்மீக நாதர் ஆலயம் :

2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம்.

இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். Image
ஆலய வரலாறு :

சூறைக்காற்று, பேய் மழை, ஊரெங்கும் வெள்ளம்.

காவிரியில் நொங்கும் நுரையுமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

பிரளயம் ஏற்பட்டு விட்டதோ என மக்கள் மனதில் அச்சம் பரவத் தொடங்கியது.

வெள்ளத்தில் உருக்குலைந்த எந்த ஆலயத்திலிருந்தோ சிவபெருமானின் திருமேனி ஒன்று
காவேரி வெள்ளத்தில் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டு வந்தது.

வந்த வேகத்தில் அந்த திருமேனி இரண்டாகப் பிளந்தது.

அதன் ஒரு பகுதி காவிரியின் வடகரையிலும் இன்னொரு பகுதி தென்கரையிலும் ஒதுங்கியது.

வடகரையில் ஒதுங்கிய திருமேனி சித்தர் ஒருவரின் பார்வையில் பட்டது.
Read 21 tweets
#அதிசய_சிவலிங்கம்

குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் .

இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். Image
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள

"பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது.
Read 12 tweets
#சொர்ணபுரீஸ்வரர்

திருமண வரம் அருளும் 
சொர்ணபுரீஸ்வரர் கோவில் :

சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை 
பவுர்ணமி அன்று பூஜை 
செய்தால் திருமணத் தடை 
விலகி விரைவில் திருமணம் 
நடந்தேறும் என்பது 
பக்தர்களின் நம்பிக்கை. Image
இறைவனையே தன் 
கணவனாக நினைத்து 
வளர்ந்தாள் ஒரு மங்கை. 

தான் நினைத்தபடியே 
அவரையே மணந்து 
கொண்டாள்.

ஆம். இந்த அதிசயம் நடந்த 
தலம் தான் ஆற்றூர்.

இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். 
இங்கு அருள்பாலிக்கும் 
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.

மந்தாரவனேஸ்வரர் என்பது 
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப் 
பிறந்தவள் கயற்கண்ணி. 

அவள் தன் பெற்றோரால் 
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.

அவள் திருமண வயதை 
எட்டியதும், அவளுக்குத் 
திருமணம் செய்வதற்கான 
ஏற்பாடுகளைச் செய்தனர் 
பெற்றோர்.
Read 18 tweets
#சோம_வார_பிரதோஷம்

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.

சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். Image
சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் ( இன்று ) சிவ தரிசனம் செய்யலாம்.
 
சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
நாள் முழுக்க நீர் ஆகாரத்தை  தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
Read 8 tweets
#திருவாரூர்_ஆழித்தேர் :*

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேர்த் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 01 ம் தேதியன்று நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக தேர் திருவிழா நடைபெறும்.
திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள, நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி, அசைந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்டது.
இதன் கலசத்தில் இரண்டு வெள்ளி குடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதை திருவாரூரை தவிர வேறு எங்கும் காண முடியாது.

ஏழு அடுக்குகளைக் இந்த தேரில் 64 தூண்களும்,
நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
Read 7 tweets
#ஸ்ரீ_சைலம்

*ஈசன் விரும்பும் பிடித்தமான ஶ்ரீ சைலம்*

ஸ்ரீ சைலம் சிகரத்தை தரிசித்தால் முன்ஜன்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

அடுத்த ஜன்மம் என்பது இருக்காது’ என வேதம் கூறுகிறது.
வசு ஸ்ரீ’ என்ற பெண் துறவி இங்கு தவம் இருந்ததால் அவளது பக்தியைப் பாராட்டி, ‘உன் பெயரால் இது ஸ்ரீசைலம் எனப்படும்’ என்று வரம் தந்தாராம் ஈசன்.

அதே போல் நந்தியின் தந்தையான சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடம் என்பதால், அவர் பெயரைக் கொண்டு
‘ஸ்ரீ சைலம்’ ஆனதாகவும் ஒரு தகவல் உண்டு.
குப்த வம்சத்தில் வந்த இளவரசி ஒருத்தி இந்தப் பகுதிக்கு ஸ்ரீசைலம் என்று பெயரிட்டதாகவும்,

இத்தல இறைவனை மல்லிகார்ஜுனன் என அழைத்ததாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

அதற்கு முன் இங்குள்ள ஈஸ்வரனை ‘பர்வத லிங்கன்’ என்றே அழைத்தனராம்!
Read 9 tweets
1/ @HinduismToday அமெரிக்காவில் ஹவாய் மாநிலத்தில் உள்ள Kauai ஊரில் சிவபெருமானுக்கு கல்லால் கோவில் கட்டப்பட்டுள்ளது .இக்கோவிலை Kauai's Hindu Monastery துறவிகள் கட்டி உள்ளனர்.
இக்கோவிலின் பெயர் "இறைவன் கோவில்".

himalayanacademy.com
@HinduismToday 2/ இத்திருப்பணி சுமார் 33 ஆண்டுகள் நடைபெற்று வருகிற ஞாயிற்றுக் கிழமை மார்ச் 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோவிலுக்கு ஆன கல் மண்டபங்கள் , தூண்கள் , சிற்பங்கள் பெங்களூர் சிற்ப சாலையில் செய்யப்பட்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டது .

@HinduismToday 3/ ஹவாய் தீவு சுனாமி மற்றும் எரிமலை பாதிப்பு உள்ள பகுதி என்பதால் இக்கோவிலை கல்லால் கட்டி உள்ளனர்.

சற்குரு சிவாய சுப்பிரமணிய ஸ்வாமிகள் Kauai's Hindu Monastery என்கிற ஹிந்து மத ஸ்தாபனத்தை Kauai தீவில் நிறுவினார்.
Read 9 tweets
#பஞ்சமுக_அர்ச்சனை

சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் சிவனுக்குகந்த பஞ்ச பத்திரங்கள் (இலைகள்).

1. வில்வம்

2. நொச்சி

3. முட்கிளுவை

4. விளா

5. மாவிலங்கை

(6) மஹாவில்வம்.
இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள்(இலைகள்)

பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்
செழிக்கும்.
ஒரே ஒரு வில்வத்தை
உள்ளன்புடன் சிவபெருமானுக்குச்
சமர்ப்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.

கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம்.
Read 13 tweets
#ராமநாத_சுவாமி

தசரத சக்ரவர்த்தி தன் நோய் தீர, இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறார்.

ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய நீராடி,

மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார்.
கூடவே இவ்வாலய சிறப்புணர்ந்து அனுமனும் சிவ வழிபாடு செய்திருக்கிறார்.

அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது அனுமந்த லிங்கம்.

இவையெல்லாம் இவ்வாலயம் குறித்த புராணகாலச் சிறப்புகள்.
ராமநாத சுவாமியாய் சிவபெருமானும், பர்வதவர்த்தினியார் அம்பாளும் அலங்கரிக்கும் திருநரையூர் ஆலயத்தில் முக்கிய சிறப்புடன் விளங்குகிறார் சனீஸ்வரர். 

சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடன் இவ்வாயலத்தில் அருள்பாலிக்கிறார்.
Read 4 tweets
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

மஹா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும்.

ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.

அதைப் பற்றி இங்கு காண்போம்.
💥முதல் கால பூஜை🌺 (6pm-9pm) :

முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும்.
இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்ச கவ்வியத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும்,
Read 15 tweets
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

1) பஞ்ச பூத தலங்கள் :

1.திருஆரூா் - பிருதிவி (நிலம்)

2.திருஆனைக்கா - அப்பு (நீா்)

3.திருஅண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காளத்தி - வாயு (வளி)

5.சிதம்பரம் - ஆகாயம் (விண்)
2) பஞ்ச சபைகள் :
1.திருவாலங்காடு - இரத்தினசபை

2.சிதம்பரம் - கனகசபை (பொன்னம்பலம்)

3.மதுரை - ரஜத சபை (வெள்ளியல்பலம்)

4.திருநெல்வேலி -தாமிரசபை

5.திருக்குற்றாலம் - சித்திரசபை
3) சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை :

1.முல்லைவனம் - திருக்கருகாவூா் - (உஷக்காலதாிசனம்)

2. பாதிாிவனம் திருஅவளிவநல்லூா் -
(காலசந்தி தாிசனம்)

3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம் -
(உச்சிகால தாிசனம்)
Read 6 tweets
#பள்ளியறை_பூஜை

#மஹா_சிவராத்திரி_சிறப்பு

*பலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை*

ஆலயங்களில் நடக்கும் அனைத்து பூஜைகளுமே சிறப்புக்குரியதுதான்.

ஆனால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது.

அனைத்து ஆலயங்களிலும் பள்ளியறை பூஜை நடைபெறும்.
அதே நேரம் சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறும்.

கணவன் - மனைவி ஒற்றுமை, உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடந்தேற,
நீண்டநாள் நோய் அகல, கல்வியில் மேம்பட என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பள்ளியறை பூஜை தீர்வாக அமையக்கூடும்.

கோவில் மூலவருக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, சுவாமி தன்னுடைய சன்னிதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.
Read 15 tweets
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

மஹா சிவராத்திரி அன்று விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம்.

இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
சிவனுக்குரிய மஹாசிவராத்திரி திருநாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மகாசிவராத்திரியில் விரத வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ப பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.
நாம் சிவனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.
Read 11 tweets
#சிவலிங்கம்

சிவ வழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது.

இது இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது.

ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது?

லிங்கம் இல்லாமல் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது.

லிங்கம் என்பது அடையாளம்.
சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும்.

வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை வழிபடுகின்றனர்.

இவற்றுள் சிவலிங்கம் அருவுருவ நிலையாகும்.
*சிவ லிங்கத்தின் மகிமை :*

அமைதியின் உருவமே சிவ லிங்கம்.

அனைவரின் துயர் தீர்ப்பதும் சிவ லிங்கமே.

சிவலிங்க வழிபாடு ஜீவனை நல்வழிப்படுத்தி முக்தி அளிக்கும்.

கலியுக அழிவுகளிலிருந்து லிங்கத்தின் மகிமை அறிந்தவன் விடுவிக்கப்படுவான்.
Read 6 tweets
#நோய்_நிவர்த்தி

மருந்துவாழ் மலை பரமார்த்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் :

தாமரையை கவிழ்த்து வைத்தது போல் இருக்கும் மலை "மருந்து வாழ் மலை". இது கன்னியாகுமரி நாகர்கோயில் சாலையில் சுசிந்திரம்  அருகில் உள்ளது. Image
லெட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில்
விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று.

அகத்திய முனிவர், அத்திரி
முனிவர், தேவேந்திரன் வரை புனிதத் தவம் மேற்கொண்ட பெருமையினை உடையதாகும்.
இன்றும் இங்கு பல சித்தர்கள் மலையின் குகைகளில்
வசிப்பதை காணலாம்.

மலைப்பாதையில் பரமார்த்தலிங்கேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் மலை கோயிலுக்கு வந்தபோது மலையில் ஏறிச்
செல்வதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்டன.
Read 9 tweets
#சேந்தனார்

இன்று தைமாத பூச நட்சத்திரம் சேந்தனார் குருபூஜை :

ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய  அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.

உடன் பட்டினத்தடிகள்  “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
Read 17 tweets
சித்ஸபா பிரவேசம்.

ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடிய நன்னாள்.

தைப் பூச தாண்டவம்
ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - 05.02.2023)
ஓம் க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்

ஜடாதரம் பார்வதி வாமபாகம்

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம்

சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி

- பதஞ்சலி மஹரிஷி.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.
- திருமூலர் - திருமந்திரம்.
Read 32 tweets
#அரிவாட்டாய_நாயனார்

அரிவாட்டாய நாயனார் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர்.

கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது.

இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும்.

இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவபக்தியில் திளைத்தவர்கள்.

அரிவாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோயில்கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.
செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார்.

கூலிக்கு வேலை செய்தாலும், நெல்வயலில் கிடைத்த நெல்லைக்கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.
Read 7 tweets
#கண்ணப்ப_நாயனார்_குருபூஜை

வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், வேட்டை ஆடுவதில் சிறந்தவர்.

ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.

சிவன் மீது அன்பு பெருகியது.
அவரைத் தன் குணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வணங்க ஆரம்பித்தார்.

தினசரி வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தார்.

மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார்.
இதைக் கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவாசரியார் மனம் வருந்தினார்.

இறைவனிடம் முறையிட்டார்.

கண்ணப்பரின் அன்பினை சிவாசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.

திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!