Discover and read the best of Twitter Threads about #ஜெய்பீம்

Most recents (6)

#Ambedkar #Myleader

இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
Read 18 tweets
எந்த ஒரு பிரபலமான விஷயத்தையும் எப்படியாவது ஆட்டைய போட்டு திரிச்சு படமா எடுத்து வெட்கமேயில்லாமல் காசு பார்க்கும் கூட்டம் இந்த தமிழ் சினிமா கூட்டம்.
#டிராபிக்_ராமசாமி என்பவர் ஒரு அய்யங்கார். பொதுவிஷயங்களில் மிகவும் அக்கறை கொண்டவர். நாமம் இல்லாமல் வெளியவே வரமாட்டார்.
அவரை பற்றி படமெடுப்பார்களாம். ஆனால் அவரது கடவுள் நம்பிக்கை அடையாளங்களை அழிப்பார்களாம்.
ஏன்... பார்பனர் ஒருவர் நல்லது செய்தார் என்று பேர் வரக்கூடாதாம்.
இதான் சமுக நீதியாம்.
இதை செய்தது யார் தெரியுமா?
நம்ம ஜோசப் விஜய் யின் அப்பா!
S.A.சந்திரசேகர்.
இந்த படத்திலெயே காமெடி என்கிற
பெயரில் அதே பார்பண ஜாதியை கிண்டல் செய்து இவர் காட்சி அமைக்கிறார்.
எத்தனை அய்யோக்கியதனம்??
இது போலத்தான் திருவாளர் சூர்யா "சூரரை போற்று" என்று ஒரு அயோக்கியத்தனம் செய்தார்.
சாமன்யனாக கனவு கண்டு சாதனை செய்த கர்நாடக பார்பனரை தலித்தாக உருவகம் செய்து லேபிள் ஒட்டி மகிழ்ந்தார்.
Read 6 tweets
இருளரும் இந்திய ஆட்சிப் பணியும் -
அதிகாரத்துவத்தின் 'ஜெய் பீம்' முழக்கம்!
திரு.@Suriya_offl நடித்த '#ஜெய்பீம்' திரைப்படம், நம் சமூகமும் அதிகாரத்துவமும் இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களுக்கு இழைக்கும் அநீதி குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அதை கண்டிப்பாக மறுக்க இயலாது. (1/n)
அதிகாரத்துவம் முற்றிலும் மோசமானதல்ல, இந்நிலையை மாற்ற தொடர்ந்து முயன்று வருகிறது என்பதை பதிவு செய்வது அவசியமாகிறது.அதற்கு சான்றாக இருளர் மக்களுடனான எனது அனுபவங்களை பகிர விழைகிறேன்.இது கண்டிப்பாக தற்பெருமை பறைசாற்றும் பதிவு அல்ல. இது அதிகாரத்துவத்தின் 'ஜெய்பீம்' முழக்கமாகும். (2/n)
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தமிழ்நாட்டில் நான் முதன்முதலில் சார் ஆட்சியராக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கோட்டத்தில்1.5 ஆண்டுகளும்,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டத்தில் 5 மாதங்களும் பணியாற்றினேன். இவ்விரு பகுதிகளிலும் இருளர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். (3/n)
Read 25 tweets
அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு. Please RT and share.
#ஜெய்பீம் படம் பார்த்தேன். பிரமாதமான மேக்கிங். விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள். வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித் திரையில் காட்டி
இருப்பதற்கு மிக்க நன்றி. எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள். அதற்காகவும் நன்றி. இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள். (இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது
தனிக்கதை). இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி. சரி விஷயத்திற்கு வருகிறேன். உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதா பாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்
Read 13 tweets
#ஜெய்பீம் @Suriya_offl
1818 ஜனவரி 1 அன்று மராட்டியத்தின் பீமா நதிக்கரையில் சித்பவனப் பார்ப்பனர்களாகிய பேஷ்வாக்களின் படையை கிழக்கிந்திய கம்பனியின் படையிலிருந்த மகர் சிப்பாய்கள் வீழ்த்தி  வெற்றி கொண்ட போது எழுப்பிய முழக்கம் "ஜெய் பீம்".
1936ஆகஸ்ட்15, அம்பேத்கர் சுதந்திரத்தொழிலாளர் கட்சியைத் தொடங்குகிறார். அதன் தலைமைச்செயலாளரும் காம்தி சட்டமன்ற உறுப்பினருமான எல்.என். பாபு ஹர்தாஸ் 16.02.1937 அன்று நிகழ்ச்சியொன்றில் பீம்ராவ் அம்பேத்கருக்கே வெற்றி என்ற பொருளில் ஜெய் பீம் முழக்கத்தை மறுபுழக்கத்திற்கு கொண்டுவருகிறார்
அதன்பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்துகொள்ளும் போது பரஸ்பரம் கூறிக்கொள்ளும் வணக்கச்சொல்லாகிய ஜெய் பீம், பினாளில் தலித்துகளை ஒன்றுபடுத்துகிற- ஆவேசமூட்டுகிற ஆற்றல்படுத்துகிற முழக்கமாகவும் வீறுகொண்டது.
Read 5 tweets
செப்டம்பர் 29 தந்தை என்.சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் “தலைவர்” என அழைக்கப்பட்ட தந்தை என்.சிவராஜ் அவர்கள், சென்னையில் 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர நமச்சிவாயம். சென்னை மாநிலக்கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் கல்விக்கற்று தேர்ந்த சிவராஜ் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும், சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
இளம் வயதிலேயே தான் பிறந்த சேரி சமூகத்தின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து செயல்பட்டார். சேரிக்கு உழைத்த தலைவர்களோடு இணைந்து பணியாற்றினார். அவரது கருத்துமிக்க உரையினாலும் ஆக்கமான செயல்களாலும் மக்களின் நன்மதிப்பை சீக்கிரமே பெற்றார். கல்வி, சட்ட அறிவு, விவசாய நிலம்,
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!