Discover and read the best of Twitter Threads about #ஜெய்ஶ்ரீராம்

Most recents (5)

#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை
6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும்
பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக
Read 9 tweets
#ஸ்ரீ_ராமரின்_68_தலைமுறை முன்னோர்களை பற்றி #ராம_நவமி ஆன இன்று தெரிந்து கொள்வோம்..!!

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
Read 9 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம்’ 'ராம்' என்றே உட்சென்றும், வெளியேறுதலும் வேண்டும். நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு
அடியும் ராம் ராம் என்றே நடக்க வேண்டும். எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’ ராம நாம ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' ராம நாம ஜெபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம
வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமத்தைச் சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! ராம நாமத்தை எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்
Read 10 tweets
#ராம_ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர். அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார். அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர் காரணம்
துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர். மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்து விடுவர். பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துர்வாச முனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவ-சக்தி பலம் பெருகும்.
அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார். சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற ராமன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து ஒரு ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்து, மகரிஷியே தாங்கள் வேண்டுவது யாதாகினும் கூறுக அடியேன் செய்ய காத்திருக்கிறேன் என்றான்.
Read 16 tweets
This is a translation of the thread by @anexcommie on the thoughts expressed by #Modi at Ayodhya on Aug. 5th. Am indebted to @premaswaroopam for doing a super work in translating.

மோடிஜியின் நேற்றைய உரையை எவ்வளவு பேர் பார்த்தார்களோ, கேட்டார்களோ எனக்கு தெரியாது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது உரைகளில் இந்த உரைதான் மிகவும் சிறந்தது என்பேன். அவரது பேச்சின் தொனி, தோரணை மற்றும் அதை வெளிப்படுத்திய திறன் ஆகியவை தெளிவாகவும் மென்மையாகவும் இருந்தது.
இந்த நிகழ்விற்காக ஒவ்வொரு இந்தியனுக்கும் நாம் நன்றி கூற வேண்டும். அது அவர்களின் மனவலிமை, நம்பிக்கை மற்றும் முழுமையான சாதனையைக் குறிக்கின்றது; அது அவர்களின் வெற்றி அல்ல, ஆனால் அபிலாஷைகளில் ஒன்று. #ஜெய்_ஸ்ரீ_ராம் #ஜெய்ஶ்ரீராம்
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!