Discover and read the best of Twitter Threads about #ஜெய்_ஸ்ரீராம்

Most recents (24)

வெற்றி வேல் வீர வேல்

இந்துமதத்தை விமர்சிக்கும் போக்கு கடந்த சில காலங்களாக அதிகரித்து கொண்டிருக்கிறது.😡

இந்த விமர்சனத்தால் என்ன விளைவு வந்துவிடப் போகிறது என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்

🛑 இது பாரத நாட்டில் நடக்கும் அரசியல் மட்டும் அல்ல இது ஒரு உலக மத அரசியல்.
🛑
இந்து விரோத போக்கு என்ற பெயரில் திராவிடக் கட்சிகளோ அல்லது மற்ற மதத்தை சார்ந்தவர்களோ ஒரு வரலாற்றை உருவாக்குகிறார்கள், ஒரு 200 வருடம் கழித்து சிலர் இந்து மதத்தை ஆராய்ச்சி செய்யும் பொழுது இந்து விரோத திராவிடர்கள் செய்யும் இந்த விதமான சுவடுகளை வைத்து
இந்து மதத்தின் ஒழுக்கத்தை சீர்குலைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்.

இந்துக்களின் தாய் அனைவரும் அவர்களின் ஒழுக்க தர்மத்தையே முறையாக கடைப்பிடித்து ஒழுக்கத்தில் சிறந்த தாயாக வாழ்ந்து இந்த பாரத மண்ணை ஒரு தலை சிறந்த ஆன்மீக நாடாக அமைத்திருக்கிறார்கள். சகிப்புத் தன்மையில் ஊறிப்போன
Read 6 tweets
உளவு துறை அதிகாரி ஆழம் பார்த்தார்.

கோபால்ஜி கடல் மாதிரி அவரது ஆழத்தை கண்டா பிடிக்க முடியும்.

இந்து முன்னணி பொதுக்கூட்டங்களில் மிகவும் பிரபலமானது ஒரு முழக்கம்.

இந்து கடைகளில் வாங்குவோம்
இந்து தயாரிப்புகளையே தேடிப்பிடித்து வாங்குவோம் என்பதாக இருந்தது.

@hmrss1980 @rajeshrao2111
அப்போது, கோல்கெட் போன்ற கம்பெனிகள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு நன்கொடை அளிக்கும் செய்தி வந்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது...

அதுபோல கோவையில் சில முஸ்லீம் கடைகள்.. பயங்கரவாதத்திற்கு துணைபோகும் இஸ்லாமிய அமைப்பிற்கு நன்கொடைகள் அளிப்பது பகிரங்கமாக தெரிந்தது..
இது நமது பொருளாதார முழுக்கத்தை வீரியப்படுத்தியது...

கோபால்ஜி ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நமக்கு ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் நிதி கொடுக்கப்போவதில்லை.. அரபு ஷேக் முஸ்லீம்களோ நிதி தரப்போவதில்லை... நமது கோயில்கள், திருவிழாக்கள் காக்கப்பட தருபவர்கள் நம்மூரில் கடை வைத்திருக்கும்
Read 11 tweets
பொதுவாக அரசியல் என்றாலே அது மேல் தட்டு வர்க்கத்தினருக்கு மட்டும் சம்பந்தம் உடையது போலவும், அவர்களுக்கு மட்டுமே அரசியலில் தலைமை பதவிகள் உரிமையுடையது போலவும் இருந்தது. ஆனால், இன்று எல்லா தட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதமான தலைவராக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர ImageImageImageImage
மோடிஜி நம் பாரத பிரதமராக உள்ளார்
கட்சியில் ஒரு சின்ன பொறுப்பில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பிறகு மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக 13 ஆண்டுகள் அபார வளர்ச்சியை தொட்டு, பிறகு சுமார் 7 ஆண்டுகள் பாரத பிரதமராக பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ImageImageImageImage
தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு, கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல், தன் சொந்த குடும்பத்திற்குச் சொத்து சேர்க்காமல், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைக் கூட தியாகம் செய்துவிட்டு, சதா காலமும் இந்த நாட்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல! ImageImageImageImage
Read 6 tweets
தெளிவு பெற்ற மதியோடு ,

களி படைத்த மொழியோடு ,

எளிமையுற்ற பண்போடு ,

உறுதி கொண்ட நெஞ்சோடு ,

உண்மை கொண்ட உரத்தோடு ,

வெற்றி விளங்கு கையோடு ,

விநயம் நின்ற நாவோடு ,

மெய்ம்மை பதித்த விழியோடு ,

பொய்ம்மை எற்றும் திறத்தோடு

கற்றவழி பற்றி நின்று,

கருதியதெல்லாம் இயற்றி , ImageImageImageImage
ஒற்றுமைக்குள் உயர்வெய்த

உயர் செயல்கள் புரிபவராய் ,

எதிரிலா வலத்தவராய் ,

எளிமை மிகு பண்பினராய்

இளைய பாரதத்தர் நெஞ்சில்

ஒளி பெருக்கும் தலைமகனாய்

முழுமை சேர்க்க நாளும் முயலும்

இனிய பாரதத் தலைவருக்கு
ஸ்ரீ @narendramodi ஜி அவர்களுக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ImageImageImage
Read 3 tweets
மாதவப் பெருமாள்
திருக்கோவில் 🔯

சீர்மிகு படைப்புக்கள் நிறைந்த ராஜகோபுரத்துடன் கூடினது மாதவப்பெருமாள் திருக்கோயில். சென்னையோட மிகப் பழமையான ஆலயங்கள்ல இதுவும் ஒன்றுங்க.. திருமங்கையாழ்வார் திருவல்லிக் கேணியைப் பத்திக் குறிப்பிடும்போது, "மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி'' என்றே ImageImageImageImage
குறிப்பிடறறதுனாலட அக்காலத்துல திருவல்லிக்கேணியும் மயிலையும் ஒரே பகுதியாக அமைஞ்சிருந்ததுன்னும், காலப்போக்கில் விரிவடைஞ்சதுன்னும் யூகிக்கலாங்க.

இத்தலம், "மங்களா சாஸனம்' செய்யப்பட்ட தலமாகக் கருதப்படவில்லை னாலும் திருமங்கையாழ்வாரின் குறிப்பின்படி பாடல் பெற்ற தலமாக் கொள்ளலாங்க.
மேலும் ஆண்டாள் நாச்சியாரும் ""வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை'' என்று திருப்பாவையில் குறிப்பிட்டுள்ளபடி இதே மயிலையில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாளின் திருக்கோயிலும் திவ்யதேச அந்தஸ்தை பெற்றுத் திகழ்கின்றனன அப்படீன்னும் கொள்ளலாம்.

மயூரபுரி மஹாத்மியத்தின்படி இரண்டு
Read 11 tweets
இன்றைய மனிதகுலம் அளவிற்கு மீறிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு நிகராக உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவனுக்கு உதவத்தக்க மருந்தைக் கொடுப்பதுதான் ஒரே வழி. காய்ச்சல் குறைந்துவிட்ட பின் அவனது பார்வை சீராகிவிடும்.

சுயநலம், பேராசை, கட்டுக்கடங்காத இச்சை போன்ற
ஜுரங்களால் மனிதன் பாதிக்கப்பட்டுள்ளான். நமது மனதிலுள்ள கோபத்தைக் கருணையாகவும், வெறுப்பை அன்பாகவும், கட்டுக்கடங்காத ஆசைகளை தெய்விகச் சிந்தனைகளாகவும், பொறாமையை இரக்கமாகவும் மாற்ற உதவும் மார்க்கங்களாக மதமும், ஆன்மிகமும் உள்ளன.
ஆயினும், இதைப் புரிந்துகொள்ளும் விவேக அறிவை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
#modijiat70
#ஜெய்_ஸ்ரீராம்
#JaiSriRam
#जय_श्रीराम
Read 3 tweets
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
பாகம்-1
ஆதி பர்வம்

யார், எவருடைய அம்சம்?
(டெலிவிஷனில் தொடர்ச்சியாக வந்த மஹாபாரதம், கற்பனை உரையாடல்கள், நிகழ்ச்சிகள் சேர்ந்தது. மூலத்தைப் பாதிப்பதாக அவை அமையவில்லை என்றாலும், வித்தியாசங்கள் சில உண்டு. அதே போல், வழக்கில் இருக்கும் மஹாபாரதக் கதைகள் சில ImageImageImage
வியாசரால் எழுதப்பட்டவை அல்ல. வியாச பாரதத்தில் இல்லாத விஷயங்களும் கூட, பிறகு வழக்கில் வந்திருக்கிறது. இவைகளுக்கு இந்தப் புத்தகத்தில் இடமிருக்காது.இந்தப் புத்தகத்தில் வருவது வியாச பாரதம் மட்டுமே. ஏனென்றால் அது தான் ஒரிஜினல்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். டெலிவிஷனில் வந்த மஹாபாரதத்
தொடரில், தான் பெற்ற மைந்தர்கள் ஆட்சி செய்ய அருகதையற்றவர்களாக இருந்ததால், பரதன், மக்களில் இருந்து ஒருவனைத்தேர்ந்தெடுத்து ராஜ்யத்தை அவனிடம் ஒப்புவித்து அவனை அரசனாக்கினான்” என்று காட்டப்பட்டது. நம் நாடடில் ஜனநாயகம் அன்று பிறந்தது என்று நினைத்துக் கொள்ள இது உதவலாம். பாராட்டக்
Read 12 tweets
மிடில் கிளாஸ் மற்றும் ஏழை பிராமண குடும்பங்களில் சிறு வயது முதல் தங்கள் குழந்தைகளிடம் சொல்லப்படும் விஷயங்கள்:

தோ பாரு! நாமெல்லாம் பார்வேர்டு கேஸ்ட் .நமக்கொன்னும் கிடைக்காது் படிச்சாத்தான் உனக்கு எதிர்காலம். படிப்புதான் உனக்கு சோறு போடும். என்னதான் படிச்சாலும் தொன்னுத்தஞ்சுக்கு
மேல எடுத்தாதான் நமக்கு காலேஜ்ல அப்ளிகேஷனே கிடைக்கும். அப்பா ப்ரைவேட்ல தான் வேலை பாக்கறார். சம்பளம கம்மி தான் பாத்து ஒழுங்கா படிச்சு உருப்படற வழியை பாரு..

மேலே சொன்னவைகளை 1960 முதல் 1985;வரை படித்த பிராமண குடும்பங்களை சேர்ந்தவர்கள் நினைவில் இன்றும் இருக்கும்.

எங்கும் எதிலும்
சலுகையோ வாய்ப்புகளோ மறுக்கப்பட்ட சமூகம். ஆனால் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொண்டே பயணிக்கும் சமூகம்.
முன்பெல்லாம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இந்த சமூகம் தான். ஆனால் என்றைக்கு வாய்ப்பில்லையோ .. மனதிற்குள் வருந்தி தனியார் நிறுவனங்களை நோக்கி நகர்ந்து விட்டது.
நடுவில் வங்கி மற்றும்
Read 6 tweets
ருத்திரன் என்பவர் தீமைகளை அழிப்பவர் .

ருத்ராட்ச மணிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன்பு ருத்ரனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் .
"ருத் திராவயதி இதி ருத்ரஹ" என்பது வாக்கியம்
ருத்,ரோத், ரோதம் என்றால் அது நமக்கு வரும் இன்னல்கள் கஷ்டங்களை குறிக்கும் சொல்லாகும்
(அதனால்தான் கஷ்டங்கள் வரும் அழுகைக்கு ரோதனம் என்று பெயர் வந்தது)
த்ராவயதி என்றால் அதனை விரட்டுகிற,ஆற்றல் மிக்கவன்,
அதனை ஓட்டுகின்ற சக்தி மிக்கவன் என்பது பொருள் ஆகும்.

ஐந்து விதமான சிவ புண்ணியங்கள்
01-மனதில் சிவபெருமானை தியானம் செய்தல் .
02-உதடுகள் திருவைந்தெழுத்து முதலியன சிவ
மந்திரங்களை ஓதுதல்.
03- திருநீற்றை முறைப்படி உடல் முழுவதும் பூசிக் கொள்ளுதல்.
04- அங்கங்களில் ருத்ராட்ச மணி மாலைகளை அணிதல் .
05-சிவனுக்கு பிடித்த மான வில்வம் முதல் பஞ்ச வில்வங்கள் நந்திய வர்க்கத்தையும் முதலியன அஷ்ட புஷ்பங்களையும் சிவபூஜை செய்தல்.
சிவபெருமானை எல்லோரும் வெறும்
Read 9 tweets
அறிவோம் சைவநெறி:
பகுதி-4

யார் சிவன்?

சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.
அருட்பெரும் சோதிப்பிளம்பாக நிற்பவர்.
உயிர்களின் உள்ளிருந்து உணர்த்துபவர்.

பிறவி அறுத்து, ஞான முக்தி தர வல்லவன் சிவன் ஒருவனே.

அடியவர்கள் உள்ளத்தில் உறைந்து, அன்பைப் பெற்று அருளைக் கொடுப்பவன், கேட்ட வரத்தைக் கொடுக்கும் பித்தன்.
சிவத்தின் எட்டு குணங்கள்:

1.தன்வயத்தன் ஆதல்
2.தூய உடம்பினன் ஆதல்
3.இயற்கை உணர்வினன் ஆதல்
4.முற்றும் உணர்தல்
5.இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
6.பேரருள் உடைமை
7.முடிவிலா ஆற்றல் உடைமை
8.வரம்பிலா இன்பம் உடைமை
Read 5 tweets
நமது பாரதப் பிரதமர் திரு.மோடிஜி அவர்களின் பிறந்தநாள் வரும் 17ம் தேதி வருகிறது.

அவர் நாட்டுக்காக தன்னலம் இல்லாமல் அரசியலில் ஒரு மஹானாக நமக்கு வேண்டி உழைத்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம். பலர் அவருக்கு வேண்டி ஆலயத்தில் பூஜை செய்கிறார்கள்.
பலருக்கு அது கூட சிரமமாக இருக்கலாம். இங்கே சமூக வலைதலங்களில் நாம் ஏன் ஒரு மகா வேள்வி நடத்தக்கூடாது? நாம் அனைவரும் தினமும் குறைந்தது 100 முறை #ஜெய்ஸ்ரீராம்
என்று tweet செய்வோம். அந்த நாமத்தின் பலன் அவருக்கு ஆயுள், ஆரோக்கியம் தர, வேண்டுதலுடன் செய்வோம். எனக்கு நம்பிக்கை உள்ளது.
இங்கே உள்ள நபர்கள் இணைந்தால் வருகிற 17ஆம் தேதிக்கு முன்பு நாம் கோடி ராம ராம நாமஜபம் செய்து இருப்போம்.

என்றும் தேச பணியில்
ஒரு சேவகன்

#modijiat70
#ஜெய்_ஸ்ரீராம்
#JaiSriRam
#जय_श्रीराम ImageImageImageImage
Read 3 tweets
பார்ப்பனனின் பூர்வீகம்..

பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள்
ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.

ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..

1850க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான
குறிப்புகள் இருக்கிறது.

நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை
சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம். நான் ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த துர்காவாக யோசித்துப்பார்த்தால்..

மத்திய ஆசியாவில் இருக்கும்
Read 10 tweets
அறிவு அற்றுப்போன மனிதன் இந்த மோடி -
இந்த நாட்டில் ஒரு கவுன்சிலராகக் கூட இருக்கத் தகுதியில்லாதவரை பிரதமராகக் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டனர் இந்திய மக்கள் -
இவரின் குளறுபடிகளால் பாவம் இந்திய மக்கள், அதிலும் தமிழக மக்கள் வாழ்க்கையே இந்த நாலு வருடங்களில் வீணாகப்
போய்விட்டது தெரியுமா?
அதிலும் இந்த NEET கொடுமை இருக்கிறதே?
தமிழகத்தில் மட்டும் 18 தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன -
NEET வருவதற்கு முன்பு இவர்களெல்லாம் 50% அரசு ஒதுக்கீடு போக மீதமுள்ள 50% இடங்களை ஒரு சீட்டிற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நன்கொடை
பெற்றுக்கொண்டு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர் - NEET வந்ததற்குப் பிறகு இந்த இடங்கள் NEET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால் இக்கல்லூரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு - இதே போல் இந்தியா முழுவதும் எத்துனை மருத்துவக் கல்லூரிகள்
Read 15 tweets
மனு நீதி மண்ணாங்கட்டி நீதி பேசும் திராவிட மேதாவிகள் அனைவருக்கும் ஒரு எளிய விளக்கம்.

சென்ற வருடம் நீட் தேர்வில் அதாவது 2019ல் தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.பி.எஸ் - நீட் தேர்வு மூலம் பாஸ் செய்து சேர்ந்து உள்ள மாணவர்களின் விபரங்கள் பின்வருமா-று.
மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள்-3050.

பொது பிரிவிற்கு (ஒப்பன் கேட்டகிரி) ஒதுக்கப்பட்ட இடங்கள்- 945.

பொதுபிரிவு என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் முதல் எஸ்.சி எஸ்டி வரை அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அனைவரும் வருவார்கள் என்று புரிந்து கொள்க. ஆ
1) பொதுபிரிவில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (அதாவது பிராமணர்கள் , பிற இதர உயர்ஜாதியினர்கள்) எடுத்த இடங்கள்- 136.
2) பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679.
3) எம்பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள் - 110.
4)எஸ்சி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 20.
Read 9 tweets
ஶ்ரீராமஜயம்
பஞ்சாங்கம்
ஆவணி 30 15.09.2020
செவ்வாய்க்கிழமை
வருடம் ~ சார்வரி வருடம்.
அயனம்~
தக்ஷிணாயனம் ருது ~ வர்ஷருதௌ. மாதம் ~ ஆவணி (சிம்ஹ மாஸம்) பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ த்ரயோதசி இரவு 09.13 வரை பிறகு சதுர்தஸ
ஸ்ரார்த்த திதி ~ த்ரயோதசி.
நாள்~ செவ்வாய்க்கிழமை நக்ஷத்திரம்~
ஆயில்யம் (ஆஸ்லேஷா) பிற்பகல் 01.05 வரை பிறகு மகம்
யோகம்~ நாள் முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 07.45 ~08.45 AM
04.45 ~ 05.45 PM .
ராகு காலம்
மாலை 03.00~04.30
எமகண்டம் காலை 09.00~10.30
குளிகை
மாலை 12.00~01.30
சூரிய உதயம்
காலை 06.08 AM.
சூரிய அஸ்தமனuம்
மாலை 06.38 PM.
சந்திராஷ்டமம்~ உத்திராடம், திருவோணம் .
சூலம் ~ வடக்கு.
‌ ப்ரதோஷம்.
#modijiat70
#ஜெய்_ஸ்ரீராம்
#JaiSriRam
#जय_श्रीराम
Read 3 tweets
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்-part-4

தற்போது நம்மிடம் 108 உபநிடதங்கள் இருக்கின்றன.இதன் எண்ணிக்கை இவ்வளவுதானா?
உபநிடதங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. ஆயிரக்கணக்கான உபநிடதங்கள் அழிந்துவிட்டன.
பல உபநிடதங்கள் கணக்கில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது
உபநிடதங்கள் எவ்வாறு அழிந்தது?
முற்காலத்தில் ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு கூறிய உயர் உண்மைகள்தான் உபநிடதங்கள் என்று பார்த்தோம்.
பாரததேசம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ரிஷிகள் தோன்றி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
முற்காலத்தில் பாரததேசத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட மொழிக்கு வேதமொழி என்று பெயர்.
அந்த மொழிக்கு முன்பு எழுத்துக்கள் இல்லை.
முற்காலத்தில் தமிழ் மொழிக்குகூட எழுத்துக்கள் இல்லை.
அந்த கால தமிழ்மொழியும்,அந்த கால வேதமொழியும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பெயர் மட்டுமே வேறுபட்டுள்ளது.
நமது ஆதி நூலான தொல்காப்பியமும்,வேத மொழியும் அதிக ஒற்றுமையுடன்
Read 11 tweets
சர்வம் சிவமயம்
சப்த விடங்கத் தலங்கள்

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் ImageImageImageImage
திருநடனம் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
'சப்த' என்றால் சமஸ்கிருதத்தில் 'ஏழு' என அர்த்தமாகும். 'விடங்கம்' என்பதற்கு உளியால்
செதுக்கப்படாதது என்று பொருளாகும். எனவே, உளியால் செதுக்காமல் சுயம்புவாகத் தோன்றிய மூலவரை உடைய ஏழு திருத்தலங்கள் இந்த சப்த விடங்கத் தலங்கள் ஆகும்.

1. திருவாரூர் - அஜபா நடனம்
கும்பகோணத்தில் இருந்து 43 கி.மீ
இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜர்;
இறைவி - கமலாம்பாள்
தில்லைக்கு முந்தைய
Read 14 tweets
டெல்லியில் திமுக எம்பிக்கள் நீட் தேர்வு, சுற்றுசூழல் சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதை கண்ட டெல்லிவாசிகளும் இதர மாநில எம்பிக்களும் "ஓ.. இவர்களா...நோ வொண்டர்" என சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்

இதில் திமுக எம்பிக்கள் மட்டுமே கலந்து
கொண்டார்கள், காங்கிரஸ் நீட் தேர்வுக்கு எதிரான கட்சி அல்ல என்பதால் அது நைசாக நழுவி விட்டது

ஒரு சில செய்தியாளர்கள் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்திருக்கின்றார்கள், காதல் படத்தின் கிளைமேக்ஸில் பரத் ஊளையிடுவது போல இந்த 25 பேரும் கத்தியிருக்கின்றார்கள் அவ்வளவுதான்
சரி, அந்த ஒப்பாரியில் இவர்களின் வழக்கமான ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அது "இந்தி எதிர்ப்பு"

இந்தி எதிர்ப்பு டீசர்ட்டையும் காணவில்லை, உடையில் எதிர்ப்பு வாசகமுமில்லை

ஆம், டெல்லியில் சென்று இந்தி எதிர்ப்பு என்பது தன்மேல் பெட்ரோலை ஊற்றுவதற்கு சமம் என்பதை அறியாத கோஷ்டியா இது?
Read 4 tweets
ஆசிரியர்: வாழைப் பழம் சொல்லு.
பையன்: வாயைப் பயம்.
ஆசிரியர்: : தப்பு. வாழைப் பழம்.
பையன்: வாயைப் பயம்.
ஆசிரியர்: ஊஹூம். உங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டி வா.
பையன்: சரி, டீச்சர்.
(பையனின் அம்மா வருகிறார்)
ஆசிரியர்: நீங்கதான் இவனோடே அம்மாவா? வாழைப் பழம்னு சொல்லச் சொன்னா வாயைப் பயம்னு Image
சொல்லுறான் உங்க பையன். திருத்தக்கூடாதா?
பை. அம்மா: நல்லாத் தானே சொல்லுறான் வாயைப் பயம்னு.
ஆசிரியர்: இல்லேம்மா. அது தப்பு. வாழைப் பழம். அதுதான் சரி.
பை.
அம்மா: அப்படிச் சொல்லி எங்களுக்குப் பயக்கமில்லீங்க.
ஆசிரியர்: சரி. உங்க புருஷனை வரச்சொல்லுங்க.
பை.
அம்மா: சரிங்க.
பையனின் அப்பா வருகிறார்
ஆசிரியர்: நீங்க தான் இந்தக் குழந்தையோட அப்பாவா?
பை.
அப்பா: ஆமாங்க. நான்தான் இந்தக் கொயந்தேயோட அப்பன்.
ஆசிரியர்: என்னங்க? உங்க வீட்டிலே யாருக்குமே ழ வராதா?
பை.
அப்பா: எங்க வீட்டுக் கெயவிக்கு வரும்.
ஆசிரியர்: சரி. அவங்களை என்னைப் பாக்க வரச் சொல்லுங்க.
Read 5 tweets
வீட்டில் ஹோமங்கள்
செய்வது எதற்கு ?

பொதுவாகவே, பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை வேளையில் செய்யப்படும் எல்லாஹோமங்களும் விசேஷமானவை. கூடுதல் பலன்களைத் தருபவை.

அக்னியை தூதுவனாக பாவித்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு அவிர்பாகம் அனுப்பி அருள் பெறுவதே ஹோமம். இவற்றில்
ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீசௌபாக்ய லட்சுமி ஹோமம். ஆகியவற்றை கண்டிப்பாகஅதிகாலையில் செய்ய வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் செய்வதால் தெய்வ அருள்பரிபூரணமாகக் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

செல்வம் சேர - குபேர லட்சுமி, வியாதிகள் அகல - தன்வந்தரி பகவான்,
திருமண பாக்கியம் கிட்ட - ஸ்ரீகாமேஸ்வரி, குழந்தைப்பேறு கிடைக்க - சந்தான கோபால ஹோமம், வீடு வாஸ்து தோஷ நிவர்த்திக்கு - வாஸ்து சாந்தி ஹோமம், செய்வினை அகல - சுதர்சன ஹோமம், உயர்கல்வி பெற - ஸ்ரீநீல சரஸ்வதி போன்றஹோமங்களை வீட்டிலேயே செய்யலாம்.

முக்கியமாக, ஹோமங்களை மதியம் 12 மணிக்குள்
Read 10 tweets
ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம்
வ்யுடம் துர்யோதனஸ் ததா
ஆசார்யம் உபஸங்கம்ய
ராஜா வசனம் அப்ரவீத்

சஞ்ஜயன் கூறினான்: மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகிப் பின்வருமாறு கூறினான்.
சஞ்ஜயன் கூறினான்: மன்னரே
பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகிப் பின்வருமாறு கூறினான்.

திருதராஷ்டிரர் பிறவியிலிருந்தே பார்வையில்லாதவர். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆன்மீகப் பார்வையும் இல்லை. தனது மகன்களும் தர்மத்தின் விஷயத்தில் தனக்குச்
சமமான குருடர்கள் என்பதும், பிறவியிலிருந்தே நல்லவர்களான பாண்டவர்களுடன் அவர்கள் உடன்பாடு செய்துகொள்ளப் போவதில்லை என்பதும் அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. இருந்தும், புனிதத் தலத்தின் தாக்கத்தினால் அவர் சந்தேகம் கொண்டார். போர்க்கள நிலைமையைப் பற்றிய அவரது கேள்வியின் உள்நோக்கத்தை
Read 7 tweets
தேவாரம் பாடல்
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத Image
நாளெல்லாம் பிறவா நாளே

பொழிப்புரை:
பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள்
வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
Read 4 tweets
குரு பக்தி
‘ஈசுவரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?’ என்று கேட்டால்: ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய்,
அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: |

என்று சொல்லியிருக்கிறார்கள்.
Read 3 tweets
மாதத்திற்கு ஒருதடவை நமது வாகனங்களை water service, oil change, greece change செய்து வண்டியை பக்காவாக வைத்திருக்கிறோம் அல்லவா. அதுவும் ஆயுத பூஜை என்றால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு சரியாக நாம் பாதுகாக்கிறோம். எதனால் இப்படி என்றால், அப்போதுதான் அந்த வாகனம் சரியாக இயங்கும் அல்லவா. .
இது புரிகிறது .

ஆனால் இப்போது புரிகிறதா என்று பாருங்கள்.

இதைபோல்தான் மனிதனின் மனமும் ஒரு குரங்கு போல்தான் இயங்கி வருகிறது. ஆகவே, இதற்கும் overoil சுத்தம் தேவைபடுகிறது.

இதற்க்கு நாம் என்ன செய்தால் மனம் அமைதி பெரும் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. ஆகையால்தான் நமக்கு எப்போதும்
துக்கமாக இருக்கிறது. வண்டியை போல் மனதும் சரியாக இருக்க, இதுபோல் செய்யுங்கள்.
தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வீட்டில் உள்ள அனைவரும் வழிபாடு செய்ய வேண்டும். தினம் இரவு படுக்கும் முன் ஏதேனும் ஒரு ஆன்மீக புஸ்தகம் வாசிக்க வேண்டும்
வருடத்துக்கு ஒரு தடவை kodaikkaanal, ooty,
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!