Discover and read the best of Twitter Threads about #தந்தை_பெரியார்

Most recents (12)

இதோ......

பிரிட்டிஷ்அரசுக்கு லாகூர் சிறையிலிருந்து #பகத்சிங்கும் ஒரு கடிதம் எழுதினார். அது பின்வருமாறு...

#உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களை #போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது.
#ஆம் #நாங்கள் போர்க்கைதிகள் தான். ஆகவே எங்களைத் #தூக்கில் #போடாமல் #துப்பாக்கித் #தோட்டாக்களால் #சுடவேண்டும்.

எங்களைச் சுடப் போகும் ராணுவ வீரர்களை எப்போது அனுப்பப் போகிறீர்கள்....
இன்று மார்ச் 23 தேதி உலக நாத்தீகர் தினம், அத்துடன் சுதந்திரப் போராளியும்

Why I Am An Atheist

(நான் ஏன் நாத்திகன் ஆனேன்)
எழுதியவருமான #பகத்சிங் நினைவு நாளும் கூட.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அன்று 23 வயதான இளைஞர் #பகத்சிங் லாகூரில் தூக்கிலிடப் பட்டார். Image
Read 20 tweets
#பெரியார் இந்துவாக இறந்தாரா?

ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.

பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.

அவன் தான் கிறிஸ்தவன்.
அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
#குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.

அவன் தான் இஸ்லாம் என்கிறது இஸ்லாமிய மதம் .
ஒருவன் #இந்து என்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது?

#தந்தை_பெரியார் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னார் ஆனால் இந்துவாகவே இறந்தார்...

அது ஏன்?

என்று சில சங்கிகள் கதறுகிறார்கள்.

(#பின்னுட்டங்களில்)

#தந்தை_பெரியார் உங்களது இந்து கடவுள்களை ஏற்றுக் கொண்டாரா?
Read 12 tweets
#தந்தை_பெரியார் 🖤🔥🔥

"சங்ககாலம் முதல் சமகாலம் வரை திருநங்கைகள்"

என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் கேள்வி நேரத்தில் ஒருவர் கேட்கிறார்..

"வடமாநிலங்களில் திருநங்கைகளை கடவுளின் அங்கமாகப் பார்க்கிறார்கள்,
ஆனால் தமிழ்நாட்டில்
அப்படி இல்லை அதற்கு காரணம்...

1/n...
தந்தை பெரியாரின்
கடவுள் மறுப்பு கொள்கைதானே் காரணம்"
என கேட்கிறார்

அரங்கம் நிசப்தமாகிறது
எல்லோரும் அமைதியாக பார்க்க

கேள்வி கேட்டவரின் முகம் ஏதோ ஒரு பெருமிதத்தால் மின்னுகிறது

அங்கிருந்த ஒரு பேச்சாளர் பேசத் தொடங்குகிறார்...

2/n...
மனிதர்களோடு சகமனிதர்களாக பார்க்கும் அங்கீகாரம்தான் அவர்களுக்கு தேவையே தவிர , யாரும் கடவுளாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

#தந்தை_பெரியார் பெயரை சொல்கிறவர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால்தான்

தமிழகத்தில் மட்டும் திருநங்கைகளுக்கு தனிவாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது...

3/n...
Read 4 tweets
காங்கிரசை ஒழிப்பேன்‌ என்று‌ சூளுரைத்து காங்கிரஸ்‌ மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார்‌ தான் காங்கிரஸ்‌ கட்சியை சேர்ந்த காமராஜரை இங்கு‌ கண்ணை மூடிக்‌ கொண்டு ஆதரித்தார்‌ அவர் தேர்தல் பரப்புரையில் காமராஜரை ஆதரித்து பச்சை தமிழர்‌ காமராஜருக்கு வாக்கு செலுத்துங்க என்றார் 1/4 Image
இப்போது பலருக்கும் கேள்வி எழும் காமராஜரை ஏன் ஆதரித்தீர்கள் ? ஏன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தீர்கள் ? என்று ஆகவே அதற்கும் நானே பதில் சொல்கிறேன் என்று கூறி விளக்கம் ஒன்றையும் கூறுகிறார் பெரியார் 2/4
நான்‌ மாறி மாறி முடிவு எடுத்திருக்கலாம்‌ வெவ்வேறு கட்சிகளை கூட ஆதரித்திருக்கலாம் அது எல்லாமே மிகுதியான மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை செய்வதற்கு மட்டுமே அது இருந்திருக்குமே யல்லாது என்னுடைய சுய நலத்திற்கல்ல மக்கள் நலத்திற்கு மட்டுமே 3/4
Read 4 tweets
#இராமாயணம்_சொல்லும்_ #ஜாதி_ஆணவம் !

ராமாயண ராமனிடம் பெரிதும் தலை தூக்குவது அவரவர் #ஜாதியும்_ஜாதிப்_பிரிவுகளுமே!

#ராமன்_காட்டுக்கு போகும் போது தன் செல்வங்களையும் பசுக்களையும் எல்லாம் கொண்டு வாருங்கள், அவைகளை நான் #பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தால் நமக்கு புண்ணியம் என்கிறான்!
#சீதையும் காட்டுக்கு செல்லும் போதும் தன் நகைகளையும் பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது தான் நமக்கு #புண்ணியம்_என்கிறாள் !!

ராமனிடம், சூர்ப்பனகை தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்கும் போது நீ வேறு ஜாதி நான் வேறு ஜாதி ! நாம் எப்படி #திருமணம் செய்வது என்கிறான் !!
தாடகையின் மகனை லக்குமணன் கொன்று விட்டு இந்த பாவத்தை எப்படி தீர்ப்பேன் என்று புலம்பும் போது ராமன் அவனிடம், நீ #சூத்திரனைத்_தானே_கொன்றாய், அதனால்
ஒன்றும் #பாவமில்லை ! கவலையை விடு என்கிறான்!!

#சம்பூகன் என்ற வேடன் தவம் செய்தான் என்பதற்காக அவனை வெட்டிக் கொலை செய்கிறான் #ராமன் !!
Read 4 tweets
1940 காலம் ஒருமுறை பெரம்பலூர் அருகில் உள்ள ஒரு சிற்றூருக்கு பெரியார் கி.ஆ.பெ விசுவ நாதமும் ஒரு கூட்டத்திற்காக சென்றார் ஊரின் எல்லையில் மக்கள் எல்லோரும் கூடி  நின்றனர் வரவேற்பதற்காக என்று கருதிவிட வேண்டாம் கைகளில் கம்பு, தடியோடு அவர்கள் நின்றனர் பார்த்தவுடனேயே 1/7
பெரியாருக்கு புரிந்து விட்டது
எங்கள் ஊருக்கு உள்ளே நுழையக்கூடாது அன்று அவர்கள் சத்தமிட்டனர் சரி, திரும்பி விடலாம் என்றார் கி.ஆ.பெ. ஆனால் பெரியார் கேட்கவில்லை காரை வீட்டுக் கீழே இறங்கினார் அந்த மக்களின் குரல் மேலும் பெரிதாயிற்று அவர்களை  பார்த்து பெரியார் 2/7
உங்களை மீறி உங்கள் விருப்பத்திற்கு எதிராக உங்கள் ஊருக்குள் நாங்கள் ஒருநாளும் வரமாட்டோம்" என்றார் சத்தம் கொஞ்சம் தணிந்தது ஆனாலும் ஏன் எங்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு போகிறோம் என்றார் 3/7
Read 7 tweets
பெரியார் ஜாதி மநாட்டில் பேசினார் என்கிறவர்கள் அவர் என்ன பேசினார் என்று சொல்லமாட்டார்கள்- 2

(வன்னியகுல ஷத்திரியர் மகாநாடு)

புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி உங்கள் சமூகத்தை புகழ்ந்து விட்டு போக நான் இங்கு வரவில்லை நான் சொல்லப் போகும் செய்திகள் உங்கள் மனசுக்கு சங்கடத்தை 1/8 Image
ஏற்படுத்தலாம் பல பிடிக்காமலும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் நான் சொல்லும் சொற்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை நான் சொல்வதை ஆராய்ந்து உங்கள் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் ஒப்பு கொள்ளுங்கள் இல்லையேல் தள்ளி விடுங்கள், 2/8
பொதுவாக இதுபோன்ற சாதி மாநாடுகள் கூட்டுவது தங்கள் சாதி பெருமைகளை பேசுவதற்க்குகாகவும் அவரவர் சாதி மட்டும் தனியாகவே பிரிந்திருக்கும்படி சாதி உயர்வையே பேசி கொண்டிருப்பதற்காக மட்டும் என்று இருக்க கூடாது இம்மகாநாட்டின் பயனாகவாவது உங்களுக்கு மேல் ஒரு ஜாதி ஒன்று இருக்கின்றது என்று 3/8
Read 9 tweets
தமிழ்த்தேசியத்தில் சாதியை ஒழிக்க என்ன வழி ? சாதியம் என்பது தமிழக சமூகவியலில் மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கிறது இந்த வகையில் தான் நமது வர்ககம் ஒரு சாதி வர்க்கமாக உள்ளது சொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் முறைதான் இந்த வழக்கத்தின் முதன்மை 1/5
பெயருக்கு பின் சாதி பட்டம் குல தெய்வ வழிபாடு என்ற இரண்டும் ஜாதி கட்டமைப்பை இனைத்து விடுகிறது இதை காப்பதில் தான் சாதியத்தின் வெறி மிக கொடூரமாக இருக்கிறது சமூகநீதி மட்டும் போதும் அது சாதி ஒழிப்பை செய்து விடுமா ? என்றால் முடியாது சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பும் முடியாது 2/5
சாதி ஒழிப்பு போராட்டத்தில் முதண்மை தீண்டாமை ஒழிப்பு சாதி கொடுமைக்கு எதிரான போராட்டம், சமூக நீதிக்கான வகுப்புவாரி உரிமை போராட்டம் இதை பெரியார் கூறும் போது பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்கிறார் 3/5
Read 5 tweets
தென் தமிழக கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அறிவித்தார் பெரியார் வட தமிழக கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம் ஏன் தென் தமிழக கோவில்களுக்குள் அவர்கள் செல்ல முடியாது ? என்று 1/7
கேள்வி எழுப்பி ஆலய நுழைவு போரட்டத்தை முடுக்கினார் பெரியார் மேலும் ஏன் நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமா அல்லது சாமிக்கு சக்தி போய் விடுமா ? அப்படி சக்தியற்ற அந்த கல்லை தொழுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? என்று கேட்டார் 2/7
மேலும் நாடார்களை ஆதரிக்கும் விதமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி வரும் வரை நாடார்கள் காத்திருக்க தேவையில்லை என்று அறிவித்தார், வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தில் நாடார்களை தான் அவர் பெருமளவு ஈடுபடுத்தினார் தனது பிரச்சாரத்தை வைக்கத்துடன் நிறுத்தி கொள்ளாமல் நாகர்கோவில் 3/7
Read 7 tweets
#தந்தை_பெரியார் சிலையின் கீழ் #சங்கராச்சாரி சொன்னதையா எழுதமுடியும்..???

முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை #நீதியரசர்_M_M_இஸ்மாயில் அவர்களை தமிழுலகம் மறந்துவிட முடியாது அவரின் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் காலத்தால் அழியாதவை. அதில் ஒரு தீர்ப்புதான் இது..

#தந்தை_பெரியார்
சிலையின் பீடங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவைதான். ///கடவுள் இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி ///

இதனை நீக்கக்கோரி சில 'பார்ப்பன அமைப்புகள்' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது இந்துக்கள் மட்டுமின்றி
கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தினரின் மதநம்பிக்கையையும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று முறையிட்டார்கள்.

இந்த வழக்கு அன்றைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 'நீதியரசர். M.M.இஸ்மாயில்' அவர்களின், இறுதி தீர்ப்புக்காக வந்தது. வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டு சட்ட
Read 11 tweets
தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? #தந்தை_பெரியார்

தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும்,
பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.
ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும், முயற்சித்தும் வந்து இருக்கின்றேன்.

அக்காலத்திலெல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர்.
Read 55 tweets
#Thread

திருத்தணி மேடையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களிடம் தரப்பட்ட ‘வேல், இன்று பேசும் பொருளாகி விட்டது.! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச் செய்தியாக ‘தினமலர் வெளியிட்டிருக்குமா.? - என எண்ணிடும் வகையில்,..

1/n
கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில் போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் 'அரோகரா' எனும் கோஷத்தை, அதாவது, 'துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க.!' எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது.!

2/n
நமது தமிழக #பிஜேபி காரர்களும் அதனைப் பார்த்து அப்படித்தான் நினைத்திருப்பார்கள் எனக் கருதுகிறோம்.!

'அரோகரா' எனத் 'தினமலர்' கிண்டலடித்துப் போட்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருந்தால், நமது பி.ஜே.பி.யினர் கொதித்துப் போய், 'எப்படி முருகன் புகழ்பாடும் சொல்லை கிண்டல் செய்து போடலாம்,.

3/n
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!