Discover and read the best of Twitter Threads about #தலைமை_ஒருங்கிணைப்பாளர்

Most recents (24)

அறிக்கை : - முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த - 1/5
முருகேசன் - கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் - 2/5
தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!

‘கண்ணகி மதுரையை எரித்து நீதிகேட்டது போல, முருகேசன் - கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப்படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதிநெறி போற்றும் மாண்பைப் - 3/5
Read 6 tweets
நிலத்தின் பெயரையே மாற்றுவது அதைவிடப் பன்மடங்கு பேராபத்தாகும்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவி கிடக்கிறது. ஆனால், திராவிடம், திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத்தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ - 25/34
இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். திராவிடத்திற்கான மூலச்சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும், தமிழர்களல்லாத அந்நியர்களின் கூற்றுகளாகவும், சமஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன. தமிழ் மொழிக்கென்று தனித்த இலக்கியங்கள் உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளுக்கும் - 26/34
கூட இலக்கியங்கள் உள்ளன. ஆனால் திராவிட மொழிக்கென்று இலக்கியம் எங்கே உள்ளது ? முதலில் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயரா? மொழியின் பெயரா? நிலத்தின் பெயரா? திசையின் பெயரா? நிறத்தின் பெயரா? அல்லது தத்துவத்தின் பெயரா? திராவிடம், திராவிடர் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் - 27/34
Read 11 tweets
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர், தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். கடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, மீண்டும் தற்போது வெள்ளியை வென்று - 1/2
தன்னம்பிக்கைக்கும், தனித்திறனுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கும் தம்பிக்கு எனது பாராட்டுகளையும், உளம்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மென்மேலும் வளர்ந்து, வெற்றிகளை வாரிக்குவித்து, தமிழ் மண்ணிற்குப் பெருமை தேடித்தர வேண்டுமெனும் பேராவலைத் தெரிவிக்கின்றேன் - 2/3
Read 4 tweets
யரில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளின் அதிகாரங்களைத் தனதாக்கி தேசிய இனங்களின் பிறப்புரிமையான மாநிலத்தன்னாட்சியை அழித்தொழித்த ஒன்றிய அரசு, தற்போது அவற்றைச் சரிவர நிர்வகிக்க முடியாமல் இழப்பை ஏற்படுத்தி, பின், அதனையே - 25/28
காரணம்காட்டி தனியாருக்குக் கொடுப்பது கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வன்செயலாகும்.

ஆகவே, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்பது நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இந்நாட்டின் இறையாண்மையையும் முற்றுமுழுதாகத் தனிப்பெரு - 26/28
முதலாளிகளிடமும், பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களிடமும் அடகு வைக்கக்கூடியப் பேராபத்தாகும். இதனை உடனடியாகக் கைவிட வேண்டுமென ஒன்றியத்தை ஆண்டு வரும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மக்களின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்தும்பட்சத்தில், இந்திய நாடு மீண்டும் காலனி நாடாக - 27/28
Read 5 tweets
#புலம்பெயர்_நாடுகளில்

#அனைத்துலகத்_தமிழர்_கல்வி_மேம்பாட்டுப்_பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு யாவும் முற்றிலும் தவறாகக் திரிக்கப்பட்டு, பதிவு செய்துவிடக்கூடாது என்ற நோக்கில் தவறுகளைச் - 1/3
சுட்டிக்காட்டிக் கருத்துத் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், அப்பாடப்புத்தகங்களின் திருத்தப்பட்ட பக்கங்களை என் பார்வைக்கு அனுப்பியிருந்தனர். உண்மையான வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்ய அவ்வமைப்புச் செயல்பட்டிருப்பது கண்டு மகிழ்வுற்றேன். இதற்காக உழைத்திட்ட - 2/3
அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!



#செந்தமிழன்_சீமான்
##தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
அறிக்கை : - தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா?

#சீமான்_சீற்றம்
#நாம்_தமிழர்_கட்சி



திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி - 1/15
பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு - 2/15
நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது. ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் - 3/15
Read 16 tweets
அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு விளிம்புநிலை மனிதர்களுக்கும் நீதியை நிலைநாட்டி, அறநெறி வழுவாத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா கிருபாகரன் அவர்கள் ஓய்வுபெறுகிற செய்தியறிந்தேன் - 1/3
சமூக உணர்வையும், சாமானியர்களின் சனநாயகப் போராட்டங்களையும் மதித்து, அவர் வழங்கிய தீர்ப்புகள் யாவும் எக்காலத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழக்கூடிய வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தவையாகும். அவை யாவற்றையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!

- 2/3
Read 4 tweets
அறிக்கை: *வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்!

#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி

உசிலம்பட்டி - 1/15
தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த்திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் - 2/15
செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.

‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 30 கண்மாய்கள் மற்றும் 5 கசிவுநீர் குட்டைகளைத் தண்ணீர்த் தேக்கப்பகுதிகளாகக் கொண்டு, வைகை அணையிலிருந்து அவற்றிற்குத் - 3/15
Read 16 tweets
அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை - 1/4
ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா?

அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருஷ்ணன் நகரில் குடியிருப்புகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை இன்று (01-08-2021) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்கள் துயரில் பங்கெடுத்தேன். அவர்களின் உரிமைகள் - 2/4
நிலைநாட்டப்படும்வரை துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன்.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் - 3/4
Read 5 tweets
புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு!

இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்!

பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால் - 1/5
அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப்பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையில் நிகழ்ந்தேறும் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் - 2/5
உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது.

புலிகள் வாழ்வதற்கேற்ற - 3/5
Read 6 tweets
*தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் கண்டனம்*


- 1/6
தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த - 2/6
ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான - 3/6
Read 7 tweets
அறிக்கை:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் – #சீமான்_வலியுறுத்தல்

bit.ly/3s13UuD

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட காலமாகப் - 1/14
பணியமர்த்தப்படாமல் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உடனடியாகப் பணியானை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் - 2/14
சீரிய முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - 3/14
Read 15 tweets
அறிக்கை: கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்! –
#சீமான்_அறிவுறுத்தல் | #நாம்_தமிழர்_கட்சி

bit.ly/2K36wGQ

கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழை - 1/9
காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடலூர், திருவாரூர், நாகை மாட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தொடர்ச்சியாக இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படும் கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் மாவட்டங்களில் தற்போது வெள்ளம் ஏற்படுத்திய - 2/9
பாதிப்புகளையும் அறிந்திடும்போது அச்செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன.

அங்குள்ள ஏரிகள் யாவும் நிரம்பி வழிவதாலும், ஆறுகளிலிருந்து பெருகிவரும் உபரி நீரும் சேர்ந்து மாவட்டம் முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளதால் மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், கடலூர் - 3/9
Read 10 tweets
தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப களத்திலே விதையாய் விழுந்த மாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்!!! – #செந்தமிழன்_சீமான்_சூளுரை

naamtamilar.org/maaveerar-naal…

#என்_தாய்த்தமிழ்_உறவுகள்_அனைவருக்கும்_வணக்கம்.

இன்று நவம்பர் 27 மாவீரர் நாள் - 1/
நமது தாய்மண் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தந்து விதையாக விழுந்து விண்ணேறிச் சென்ற வீர மறவர்களின் புனித நாள். தாயக விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு, தன் மூச்சை விடுதலை தானமாகத் தந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் கமழ்கிற உள்ள பெருமூச்சாய் மாறிப்போன - 2/
மாவீரர்களின் மகத்தான தியாக நாள். இந்தக் கார்த்திகை நாள்தான் காந்தள் மலர் சூட்டி, கந்தக நெருப்பாய் காற்றில் கலந்துபோன, வீர காவியங்களாய் நம் விழிகளில் உறைந்திருந்து நாம் வழிபடும் தெய்வங்களாக மாறியிருக்கிற நமது மாவீரர் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாள்.

உலக வரலாறு எத்தனையோ - 3/
Read 32 tweets
#தலைவர்_பிறந்த_நாள்!
#தமிழர்_நிமிர்ந்த_நாள்!
#மக்கள்_உயிர்_காக்க_குருதிக்கொடையளித்து
#இனமான_பணியாற்றிடுவோம்!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!



தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் - 1/6
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் - 2/6
தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின்- 3/6
Read 7 tweets
அறிக்கை: *கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை* | நாம் தமிழர் கட்சி bit.ly/2IEtSCv

மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திரிய - 1/16
வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பதற்குக் கடும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு வகுப்பிலுள்ள 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும் எனவும், அதுவும் பகுதிநேர ஆசிரியர்தான் நியமிக்கப்படுவார் எனவும், வாரத்திற்கு இரண்டு அல்லது - 2/16
மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும் தமிழ் கற்பதற்கு பல தடைகளைக் கொண்டு வந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது இது மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ் மீதும் தமிழர் மீதும் கொண்டுள்ள விரோதப்போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில் - 3/16
Read 17 tweets
*மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! – #சீமான்_வலியுறுத்தல்



தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - 1/10
நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இரவுப்பகல் கண் துஞ்சாது கடமை - 2/10
தவறாது அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் கையேந்தி நிற்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

மின்சாரத்துறை முற்று முழுதாகத் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிடுமோ என்ற மின்சார வாரிய ஊழியர்களின் அச்சம் மிகமிக - 3/10
Read 11 tweets
ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையைத் திறப்பதற்கு அனுமதி மறுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் - 1/13
சிறப்புமிக்க தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. தாமிர ஆலையில் இருந்து வெளிவந்த கழிவுகளால் நச்சுப் புகையால் குடிநீரும், சுவாசிக்கும் காற்றும் நஞ்சாகிப் போனதை எதிர்த்து ஆலையை மூடக்கோரி பல ஆண்டுகளாக பல கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களின் - 2/13
அறப்போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இத்தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ்நாடே வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நீதியைப் பெறுவதற்காக களத்தில் போராடிக் குண்டடிப்பட்டு, தாக்குதலுக்குள்ளாகி உடல் உறுப்புகளை இழந்த உறவுகளுக்கும், அடுக்கடுக்கான வழக்குகள் மூலம் அரசின் - 3/13
Read 14 tweets
அறிக்கை: *வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி

bit.ly/2Y8kLi0

வடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் - 1/16
10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் பெருந்தன்மையால் தமிழகத்தில் விடுமுறை - 2/16
விடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் தமிழர் திருநாளான பொங்கல், முப்பாட்டன் முருகனைப் போற்றும் தைப்பூசம் உள்ளிட்ட எந்த வகையான தமிழர் விழாக்களுக்கும் விடுமுறை கூட அளிப்பதில்லை என்பது மற்ற மாநிலங்களில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் தமிழர்களின் - 3/16
Read 17 tweets
இந்தியக் குடிமைப் பணித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை பூர்ணசுந்தரிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தனது அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும் சீர்மிகு உயரத்தை எட்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு - 1/3 Image
மட்டுமின்றி தோல்விகளாலும், தடைகளாலும் சோர்வுறும் மனிதர்கள் அனைவரிடத்திலுமே புதிய ஊக்கத்தையும், சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் விதைத்துள்ளார்.

நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கேற்ற கடின உழைப்பும் இருந்தால் எத்தகைய தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேறலாம் - 2/3 Image
என்பதற்கு அன்புத்தங்கை பூர்ணசுந்தரி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மக்கள் பணியில் சிறந்து விளங்கிடவும், மேலும் பல சாதனைகள் படைத்திடவும் தங்கைக்கு எமது புரட்சி வாழ்த்துகள்!

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி - 3/3 Image
Read 4 tweets
லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்

நேற்று (04-08-2020) இரவு மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய -1/8 ImageImage
இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது. 25 கிமீ சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட - 2/8 ImageImage
இரசாயணக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயணத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள். இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் - 3/8 ImageImage
Read 9 tweets
#கல்வியைப்_பொதுப்பட்டியலிலிருந்து_மொத்தமாய்_மத்தியப்பட்டியலுக்குக்_நகர்த்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை-1/3 Image
மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது - 2/3 Image
மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி.

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman
#NEP2020 - 3/3 Image
Read 3 tweets
#கல்வியை_ஆரியமயப்படுத்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு - 1/3
மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்குப் பயன்தரா சமற்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை - 2/3
Read 4 tweets
ஆழ்ந்த இரங்கல்..

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து உடுமலைப்பேட்டையைப் சேர்ந்த இளம் மருத்துவர் கண்ணன் தற்கொலை செய்துகொண்ட செய்திகேட்டு பேரதிர்ச்சியும், பெருத்த வேதனையுமடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் - 1/3 Image
ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

மருத்துவர் கண்ணன் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கொரோனா பிரிவில் பணியாற்றியவர் அதீத மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டார் என்பதையும் கவனத்திலெடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு - 2/3 Image
சுழற்சிமுறையில் பணியும் ஒதுக்கீடுசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 3/3 Image
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!