Discover and read the best of Twitter Threads about #தினம்_ஒரு_திட்டம்

Most recents (5)

#தினம்_ஒரு_திட்டம் - 14

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு `அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை

#ஒன்றியஉயிரினங்கள்
மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

உடல் பரிசோதனைத் திட்டம்
மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்" முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென
சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்.

பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால்,
Read 10 tweets
#தினம்_ஒரு_திட்டம் - 13

ஆம் ஆத்மி பீமா யோஜனா

சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம்
#ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
Read 25 tweets
#தினம்_ஒரு_திட்டம் - 12

கால்நடைகளுக்கு காப்பீடு

நோக்கம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

#ஒன்றியஉயிரினங்கள்
கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ
பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு
Read 8 tweets
#தினம்_ஒரு_திட்டம் - 10

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு
சாதி கலப்பு திருமண உதவி திட்டம்

பிறப்பு அடிப்படையிலான சாதி மற்றும் சமய உணர்வுகளை ஒழித்தல் மற்றும் சாதிகளுக்கிடையேயான திருமணத்தினை ஊக்குவிப்பதன் மூலம் பாகுபாட்டினை துடைத்தெறிதல்.

#ஒன்றியஉயிரினங்கள் Image
வழங்கப்படும் உதவிகள்

ரூ.25,000 தொகையும் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
ரூ.50,000 தொகையும் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய
சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் ((1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்

சாதிகளுக்கிடையேயான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.
தகுதிகள்
Read 5 tweets
#தினம்_ஒரு_திட்டம் - 9

பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)

அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வு காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப் பின் மாதம் ரூ. 1000 - 5000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பது தான். அதற்காக அரசு

#ஒன்றியஉயிரினங்கள் Image
தன் சார்பாக ஒரு சிறு தொகையை செலுத்தும்

எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தர வேண்டும். Image
வங்கி உங்களுக்கு ஒரு ப்ரான் எண்ணை (PRAN Number) வழங்கும். அந்த ப்ரான் எண்ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ப்ரான் எண், நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!