Discover and read the best of Twitter Threads about #திமுக

Most recents (24)

அண்ணாவை மறந்த #திமுக (2)

மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு ஒரு முக்கியமான பதிவு.

‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார்.

பிரிவினைக் கோரிக்கையை கைவிடாத அந்தக் காலத்திலும், ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்ட அவர் தயங்கவில்லை. Image
ஹிந்தியை எதிர்க்கும் போதுகூட..

‘இதை #ராஜாஜி யிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’
என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் #அண்ணா Image
இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு…

#திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் #அண்ணா

‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று #அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார். Image
Read 5 tweets
அண்ணாவை மறந்த #திமுக வரலாறு (1)

தளபதி அண்ணாதுரை மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வெ.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார். Image
ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள்.

சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ #திமுக என்று தீர்மானிக்கப் பட்டது.
அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ (திராவிடர்) இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார்.
Read 4 tweets
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..? Image
543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
ஒப்பீட்டளவில் வடக்கின் அளவுக்கு தெற்கில் மக்கள்தொகை அதிகரிப்பு சதவிகிதம் குறைவு.
அதாவது இப்போதுள்ள 543 தொகுதிகளில் இன்னும் பாதியளவு வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். தென்னிந்தியாவில் ஒரு தொகுதிகூட வெற்றிபெறாவிட்டாலும் பா.க.ஜ. ஆட்சியில் அமர்வதற்கான வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
Read 6 tweets
சார்... "பெரியார் அண்ணா கலைஞர்"ன்னு பேசும் "திமுக"வில் ஜாதி...

ஒரே ஒரு நிமிஷம்... சார்...

எது.. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்ட...

எது.. இந்தியாவிலேயே ஊரகப் பகுதிகளில் கூட அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் "பெரியார்_நினைவு சமத்துவபுரம்"
உருவாக்கிய...

எது... பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) ஓட்டு வங்கி பற்றி கவலைப்படாமல், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)" என்ற பிரிவை உருவாக்கி தனி இடஒதுக்கீடு தந்த...

எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், "பழங்குடியினருக்கு" தனி இட ஒதுக்கீடு தந்த...
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், பட்டியல் வகுப்பிலும் மிகவும் ஒடுக்கப்பட்ட "அருந்ததியருக்கு" தனி உள் இடஓதுக்கீடு தந்த...

எது.. இந்தியாவிலேயே முதன் முதலாக #அண்ணல்_அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்த...

எது... இந்தியாவிலேயே பட்டியல் இனத்தவர்
Read 6 tweets
தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய மகனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மகாலிங்கம்.

இவர் போதை பொருள் கடத்தலில் இலங்கை Image
கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லியில் வாகனம் ஒன்றை மறித்து சோதனை நடத்தினர். அதில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், வாகன ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,
மகாலிங்கத்திடம்
போதை பொருளை ஒப்படைப்பதற்காக நாகை செல்வதாக தெரிவித்த நிலையில், நாகை மாவட்ட காவல் கண்பாணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், #திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸை கைது செய்த போலீசார்,தேசிய போதை பொருள் தடுப்பு
Read 4 tweets
1/ ஊடகங்களுக்கு உண்மை தேவை இல்லை. உண்மையைப் போல வேஷம் போட்ட பொய்கள் இருந்தால் போதும். எதையாவது சொல்லுவது... இப்படி இருக்குமோ இருந்தாலும் இருக்கும் என்று நினைக்க வைப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் நடந்த ஜி ஸ்கொயர் ரைடு விவகாரத்தை @JuniorVikatanம் புதிய Image
2/ தலைமுறையும் எப்படிக் கையாண்டன என்பதுதான்.
யாரோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டது. அதனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்கள் என்று எழுதினால் அதில் பெப் இருக்காது என்று இந்த ஊடகங்களுக்குத் தெரியும்.
பொதுவாக ஒரு ரியல் எஸ்டேட்
3/ நிறுவனத்தில் கருப்புப் பணம் புழங்குவது இயல்புதான். அதைத் தேடி சோதனை நடத்துவதும் சகஜம்தான். வருமானத்திற்கு அதிகமான பணம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சாதாரணம்தான் என்று டிவி வியூவர்ஸ் பெரிதாக இதில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்று ஊடகங்களுக்குத் தெரியும்.
Read 20 tweets
*அண்ணாமலை ரகசிய வாக்குமூலம்.. ஆடியோ Part 1*

*#அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்பொழுது BJP வெளிப்படையாகத் தோற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுவரை தோற்றுக் கொண்டிருக்கிறோம்.*

*#வெளியிலிருந்து பார்த்தல் மக்கள் கண்மூடிக்கொண்டு நம்புவார்கள்.*

*#திமுக தலைவர் இப்போது மிகவும் பலத்துடன்
இருக்கிறார். அவர் எந்த தவறும் செய்யமாட்டார்.*

*#நான் ஒரு பாரம்பரிய அரசியல்வாதிக்கான முதிர்ச்சியை அடையவில்லை.*

*#அதனால் ஒரு 4-5 பேர் உள்ளே அமர்ந்துகொண்டு 'கொள்ளை யடிக்கிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை' உருவாக்கியிருக்கிறேன்.*
*#இந்த சூழ்நிலையில் அரசியல் மிக வேறு மாதிரியாக
இருக்கும் மேடம்.*

*# நிறைய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக டெல்லியில் இருக்கும் ஊடகங்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*#இப்போது என்ன நடந்துவிட்டது என்றால் நான் சில விஷயங்களை வேகமாக நடத்தப் பார்த்தேன்.*

*#முன்பு சொன்னது போலத் தேவைக்கு அதிகமாக நிறைய விறகுகளைப் போட்டு
Read 4 tweets
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகளை தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் #திமுக அரசால் #சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் #நிறைவேறியுள்ளது
இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்! Image
TN நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது 2+
இது நாள் வரையிலான சட்டங்கள் நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. இந்த சட்டமானது, எந்த ஒரு பெரு நிறுவனமும் 100 ஏக்கருக்கு மேலாக பல்லாயிரம் ஏக்கர்களில் தொழிற்சாலை அமைக்க விரும்பினால் போதுமானது. 3+
#DMKFailsTN
Read 16 tweets
கவனம் செலுத்தும் திமுக. மகிழும் கைவினைஞர்கள்

தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது

🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
✅திருவாரூரில் பெண்களுக்கு 3 மாத கால தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம்

👉🏼தமிழக கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்திட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
Read 11 tweets
உழவர் நலன் காக்கும் திமுக அரசு - 4

#திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளிலும் செய்து வரும் சாதனைகள் அளப்பரியது. அதிலும் வேளாண் தொழிலில் திமுக அரசு மேற்கொண்டு வரும் சாதனைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன

1/8 Image
வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

➡️பாலூர் பலா ஆராய்ச்சி மையம்

✅பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம்

👉🏼கிள்ளிக்குளம் பனை ஆராய்ச்சி மையம்

➡️கோயம்புத்தூர் பூச்சியியல் அருங்காட்சியகத்தை மேம்படுத்த திட்டம்

2/8
🌄மயிலாடுதுறை மண் பரிசோதனை நிலையம்

✅திருப்பூரில் விதை பரிசோதனை நிலையம்

🖤தருமபுரியில் மா மகத்துவ மையம்

❤️திருநெல்வேலியில் நெல்லி மகத்துவ மையம்

👉🏼மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய பொருட்களை விற்பனை செய்ய ‘மதி-பூமாலை’ வளாகங்கள்
3/8
Read 8 tweets
🖤❤️உழவர் நலன் காக்கும் திமுக அரசு – 3🖤❤️

வேளாண் தொழில் செழித்தாலே அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும். எனவே தான் @mkstalin வேளாண் தொழிலில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்

அனைத்து தரப்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது #திமுக அரசு
1/8
அந்த வகையில்
🌄 ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கி எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ‘எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்’

➡️ நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்திட 12 கோடி மதிப்பீட்டில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’
2/8
✅ மல்லிகை பயிரிடும் விவசாயிகளின் நலனை உயர்த்தும் வகையில் 7 கோடி மதிப்பீட்டில் மதுரை மல்லிகை இயக்கம்

➡️ பலா பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக 21 மாவட்டங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பலா இயக்கம்

👉🏼 ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கி மிளகாய் மண்டலம்
3/8
Read 8 tweets
🖤❤️.உழவர் நலன் காக்கும் திமுக அரசு - 2

#திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொலைநோக்குப் பார்வையுடன், நீண்ட கால திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் @mkstalin

1/6
@IlovemyNOAH2019
🌄 சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறுதானிய இயக்கம்

👉🏼 காய்கறி மற்றும் கீரை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கும் திட்டம்

✅ ட்ரோன்கள் மூலம் இடுபொருட்களை வழங்கும் திட்டம்.

2/6
🌾 மானாவாரி சாகுபடி மேற்கொள்ளும் உழவர்களின் நலனை உயர்த்தும் வகையில் ‘முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்’ 3 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது

🖤 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் விவசாயிகளுக்கு 60,000 வேளாண் கருவிகள் வழங்கிட ரூ.15 கோடி ஒதுக்கீடு

3/6
Read 6 tweets
#தமிழில்_குடமுழுக்கு என்ற பெயரில் தற்போது ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு செய்ய #திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் நம் இந்து மதத்தை அழிக்க கையில் எடுத்திருக்கும் இன்னொரு ஆயுதம் இது. பிராமண எதிர்ப்பும் அவர்களால் காலம் காலமாக நடைமுறை படுத்தப்பட்டதும் இதற்காகவே. மூத்த
இந்து பத்திரிக்கையாளரின் கடிதம் கீழே!

செங்கோட்டை ஸ்ரீராம்
மூத்த பத்திரிகையாளர்

பெறுநர்
ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக் குழு
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, நுங்கம்பாக்கம், சென்னை (கூட்டம் – திருநெல்வேலி)

பொருள்: தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்புக்
கூட்டத்தில் பதில் அளித்தல்
விவரம்: கூட்டுக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் 07/03/2023 பாளையங்கோட்டை, திருநெல்வேலி

வணக்கம்,
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான நான், தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஆன்மிகப் பத்திரிகைகளான சக்தி விகடன், தினமணி - வெள்ளிமணி, கல்கியின் தீபம் இதழ்களில்
Read 15 tweets
facebook.com/1732530473/pos…

இந்தியாவின் ஸ்காட்லாந்த் யார்டு கடைசியில் ராஜஸ்தானில் கீளின் போல்டு!.

காக்கி சட்டை போட்ட அத்தனை பேரும் "திராவிட் ஸ்டாக்" அல்லது த.ந.க. வாக இருப்பார்கள் என்று நம்பியது எத்தனை பெரிய "மிஷ்டேக்". 😂

திருடப்பட்டதாக சொன்னது 500 புவுன் நகைகள்.
அது ₹ 2 கோடி பெருமானம் உள்ளது.
அவன் ₹25 லட்சம் தரேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோன்னு சொன்னானாம். இவர்களும் காத்திருந்தார்களாம்.

இவர்கள் வழக்கமாக எழுதும் FIR (முதல் தகவல் அறிக்கை) ஐ விட கேவலமாக கதை சொல்கிறார்கள். சின்ன. குழந்தை கூட சிரிக்கும்.

சிறப்பு தனிப்படையே இப்படி
என்றால்..!!!

"தீரன்-அதிகாரம் ஒன்று" என்று கதை விட்டவர்கள். இப்போது...

"தமிழன் - அசிங்கம் ஒன்று" என்று முடித்து விட்டார்கள். தேசிய அளவில் அவமானம்.

ஊழலில் ஊறிப் போன காவல் துறை. 50 வருடங்களுக்கு முன்பு இந்த வீழ்ச்சியை தொடங்கி வைத்த அதே #திமுக ஆட்சியில் இது
Read 4 tweets
#திமுக
திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) பற்றி பல விஷமத்தனமான பொய்கள் பரப்பப்படுகின்றன..
ஆனால் உண்மை அப்படி அல்ல.
திமுக நாட்டுப்பற்றுள்ள கட்சி. சுதந்திர போராட்ட இயக்கத்தில் இணைந்து போராடிய திராவிட கழகத்தின் செல்லப்பிள்ளை திமுக..
திமுகவின் தந்தை திராவிட கழகத்திடம் பயந்தே வெள்ளையர்கள் சென்னையில் இருந்து ஓடினார்கள் என்பது திராவிட வரலாறு..
திமுக வை தொடங்கிய அண்ணாத்துரை என்பவர், மிகப்பெரிய அறிஞர்.
அவர் தமிழில் எழுதிய தத்துவங்களை ரஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் காப்பியடித்து பல ஆண்டுகளுக்கு முன்பே
மேற்கத்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார்கள்...
"எங்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே இதுதான்.. நான்பாட்டுக்கு கவிதையை எழுதி கசக்கி போட்டுவிடுவேன், அதை எடுத்து எவனோ சினிமா பாட்டா போட்டுவிடுவான் "
என்று சந்தானம் ஒரு சினிமாவில் சொன்னது
Read 18 tweets
Thread!
Must Must Read!
#ஈழம் #திமுக #அதிமுக வரலாறு!

"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும்.."

(1/14)
"..விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பாலசிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா.

(2/14)
"விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் முதலமைச்சர் கருணாநிதி தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது எல்லாம்..."

(3/14)
Read 14 tweets
#திமுக அரசிற்கு எதிரான அதிகாரிகள் என்பதற்கான மீண்டும் ஒரு சாட்சியம்

அதில் இந்த கொங்கு மண்டலம் முதலிடம் , திமுக பொறுப்பாளர்கள் பெரும் அளவு 60 % இங்கே எப்படி என்றால் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முக்கு வாக்களித்த காங்கிரஸ் MLA MP போல தான் ... Image
அதிலும் இந்த அரசு திராவிடம் , சமூக நீதியை , சனதானம் , மாநில சுயாட்சி என்று உரைக்க பேசிய பின்பு தான் இந்த துரோக அதிகார கூட்டம் தங்கள் உள்ளடி வேலையை சிறிது சிறிதாக வெளிக்காட்ட துவங்கி உள்ளார்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டாங்க என்ற மமதையில் .

பேருந்து நிலையம் என்பது பொதுவான இடம் Image
மக்கள் கூடும் பகுதி இதில் அதில் அனைவருக்குமான உரிமை உண்டு

ஆனால் சேலம் மாநகராட்சியில் பாதுஷா மைதீன் என்பவர் நடத்தி வந்த சிறு அசைவ உணவகம் மீது இந்து முன்னணி எதிர்ப்பு ஆதலால் நடத்த கூடாது என்று ஆணை

ஒரு இந்துவின் கடை இருந்தால் ஏற்றுக்கொண்டு இருப்பார்கள் போல அதிகாரிகள் ???
Read 5 tweets
#கெடு_வைக்கும்_உபிஸ்_கவனத்திற்கு!
திருமுருக #கிருபானந்தவாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக் கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார். 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்த பொழுது அண்ணாதுரைக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist
வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார். "மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால், ஆனானப்பட்ட மில்லராலும் அவனை வெற்றி கொள்ள முடியாது" என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அவ்வளவு தான். அண்ணாவை இழிவு படுத்திவிட்டதாக
#திமுக ரவுடிகள் அவரை சூழ்ந்து தாக்கினர்கள். மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டு காயமின்றி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌. அவர் பூஜை அறையில் புகுந்து விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையும்
Read 16 tweets
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.

இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
Read 25 tweets
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
Read 31 tweets
சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.

வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது. Image
பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?

முதலில் அவர் கூறியவை என்ன?
1.ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு - இது உண்மையல்ல.

2. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் பொய்யானவை.

3. மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு இருப்பதில்லை. Image
Read 15 tweets
அண்ணன் சீமான் மிகைப்படுத்தி பேசுகிறார்.. பேசட்டும்!

பொய்யாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
சுயபுராணமாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
நடக்காததை பேசுகிறார்.. பேசட்டும்!
கற்பனையாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
என்ன எது சொன்னாலும் பேசட்டும்னு சொல்றீங்க..
அது அப்படித்தான்! - 1/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை பற்றிய பிம்பமே தமிழ்நாட்டில் மாறியிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் தேசியத் #தலைவர்_பிரபாகரன் படத்தை பொது நிகழ்வில் ஏந்த முடியாமலே போயிருக்கும்… - 2/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #ஈழத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நமக்குமான பந்தம் அறுந்தே போயிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் இறுதிப்போரில் இங்கிருக்கும் #திமுக, #காங்கிரஸ் கட்சிகள் செய்த #துரோகம் என்னவென்றே தெரியாமல் - 3/8
Read 9 tweets
திராவிடம் பற்றி எனக்கு இதே சந்தேகம் !

தலைவர சந்தித்து கேட்கலாம்னு .

அப்போ தலைவர் சொன்னாரு நான் கடலுக்குள் நிற்கிறேன் ,எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் தண்ணிக்குள் முங்கு நீச்சல் போட்டு தப்பிச்சு ஓடிடுவேன் ,
நீ தரையில் நிற்பவன் ,ஆகவே உனக்கு ஆபத்துன்னு வந்தால் நீ தான் ஓடனும் சொன்னார் ,

அப்போ ஒரு குண்டு சப்தம் கேட்டது,எடுத்தேன் பாரு ஓட்டம் ராமநாதபுரம் வந்து நின்னேன் .அந்த சப்தம் எங்கேயிருந்து வந்ததுன்னு பார்ப்பதற்குள் பிராபாவும் முங்கு நீச்சலில் எஸ்கேப்
அப்புறம் தான் தெரிந்தது இந்த சப்த்த்துக்கே ஓடுறாரே தலைவர் அதைப்போல் நாமும் ஒவ்வொரு நாளும் கதைய அவுத்து காலத்த ஊட்டுவதற்கு நாலு இளிச்சவாய தம்பிகள் வந்தாங்க அப்போ கருத்தியல் ரீதியா பெசுவதுன்னா எப்படின்னு கேட்டாங்க !
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!