Discover and read the best of Twitter Threads about #திருவள்ளுவர்

Most recents (7)

#நற்சிந்தனை
#திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
என்று கூறுகிறார்.
காயாக இருக்கும் எண்ணங்களை கனியாக மாற்றுவது புத்தி. மனதில் எண்ணங்கள் தோன்றியவுடனேயே வெளியிட்டால் சில நேரம் காயாக கசக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் புத்தி காயை கனிய வைக்கிறது. இப்படி
பேசிவிட்டோமே என்று வருத்தம் வருகிறது. புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தை சரி செய்யவே நம் ஆன்ம சக்தி செலவழிக்கப் படுகிறது. இந்த போராட்டம் நடக்காமல் இருக்க வழி புத்தியும் மனதும் ஒருங்கே செயல்படுவது தான். எண்ணங்கள் தொடர்ச்சியானவை அல்ல. ஒரு எண்ணத்துக்கும்
அடுத்த எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் புத்தி புகுந்து செயலாற்றுகிறது. மனத்தில் எழும் எண்ணங்களை உற்று கவனித்தால் இந்த இடைவெளி பெரிதாகும். புத்தியின் செயல் திறன் அதிகரிக்கும். ஆனால் புத்திக்கும் ஒரு எல்லை இருக்கிறது. புத்தி என்பது அனுபவங்களின் தொகுப்பு அவ்வளவே. ஒரு
Read 6 tweets
#சிவராத்திரிஸ்பெஷல் #சிவானந்தலஹரி ஸ்லோகம்26ல்
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
பரமேஸ்வரனின்
திருவடியை சேவிப்பதின் பேரின்பத்தை வர்ணிக்கிறார்.
“ஹே கி³ரிஶ”– மலையில் வசிப்பவரே!
‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தரிசனம் செய்து
‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்
‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு
‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலும், கண்களிலும், மார்பிலும் வைத்துக்கொண்டு
‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிக் கொண்டு,
‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களின் நறுமணத்தை முகர்ந்து,
‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும்
Read 13 tweets
பொதுவுடைமைப் போராளி

#ஜீவானந்தம் யார்??

1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.

2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.

4 ) திராவிடக் கழகங்கள் #பாரதி, #கம்பன், #திருவள்ளுவர் என்று அனைவரையும்
Read 6 tweets
கடந்த இரண்டு ஆண்டுகள்..

#வைரமுத்து வின் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய் படம்
இந்துக்களை புண்படுத்தியதால்
பிஜேபி போராட்டம்!

நெல்லை #கண்ணன் பேச்சு
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
#சுகிசிவம் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #சிவகுமார் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய்சேதுபதி கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
நடிகை #ஜோதிகா கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

#திருவள்ளுவர் க்கு காவி உடை
உடுத்தும் போராட்டம்!

#எம்ஜிஆர் சிலைக்கு
காவி உடை அணிவித்து சர்ச்சை!

பெரியான் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

பெரியான் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

ஆனால்??
Read 5 tweets
வள்ளுவர் சர்ச்சை : பூணூலிஸ்டுகள் சொல்வது சரியா? (1)
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றார் பாரதி. வள்ளுவம் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம் என்பதற்கு அப்பால் உலகப் பொது மறை எனும் நிலையை எட்டிய ஒரு அறநூல் என்பதை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொன்னார் பாரதி
அவரை இன்று பூணூலிஸ்டுகள் இந்துத்துவச் சிழுக்குள் அடக்க முயல்வது அபத்தம். ஆனால் அதை அவர்கள் இன்று நேற்றல்ல நெடுங்காலமாகவே செய்து வருகின்றனர். முதலில் அதைச் செய்தவர் பரிமேலழகர் எனலாம். பார்ப்பனரான அவர் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் எனும் பெயரில் வேண்டுமென்றே இடையிடையே பார்ப்பனக்
கருத்துக்களைப் புகுத்தினார். நவீன சிந்தனையாளர்கள் சொல்வதுபோல எந்த உரையுமே இன்னொரு தனி நூல்தான் என்பதற்கு பரிமேலழகரின் உரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சமீப காலத்தில் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசி நிறுத்த முயன்றவர் பா.ஜ.க எம்.பியாக இருந்த தாருண் விஜய். இந்த ஆள் ஆர்.எஸ்.எஸ்சின்
Read 46 tweets
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
Read 13 tweets
தமிழக அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்! -மே 17 இயக்கம்

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள #திருவள்ளுவர் சிலை மீது மர்ம கும்பல் கருப்பு மையையும், சாணத்தையும் வீசி அவமதித்து சென்றிருக்கிறது.

#Thiruvalluvar

1/5 Image
தமிழ்நாட்டின் மிகப்பெரும் அடையாளமாக இருக்கக் கூடிய திருவள்ளுவரை அவமதித்திருப்பது தமிழர்களிடையே பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. உலகத்திற்கே மானுடத்தை போதிக்கிற அற நூலாக திருக்குறள் இருக்கிறது. அப்படிப்பட்ட திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த செயல் என்பது யாரோ தூண்டுதலின்...

2/5
பெயரால் நடைபெற்ற செயலாகவே இருக்க முடியும்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதள பிரிவினர் மதச்சார்பற்ற தமிழரின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடையும், பட்டையும் அணிவித்து எடிட் செய்து ஒரு படத்தை வெளியிட்டு அவமதித்ததற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

3/5
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!