Discover and read the best of Twitter Threads about #நவராத்திரி

Most recents (8)

#நவராத்திரி துர்வாச முனிவர் சாபத்தினால் செல்வம் யாவும் இழந்து துன்புற்ற தேவேந்திரன், தன் தவறு உணர்ந்து, திருமகளைத் தியானித்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். அப்போது அவன் சொன்ன அற்புதத் துதி #மஹாலக்‌ஷ்மி_அஷ்டகம் இதனைச் சொல்வோர் இல்லத்தில் சகல சௌபாக்யமும் ஐஸ்வர்யமும் சேரும்.
நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு சக்கரம் கதை இவற்றைக் கையில் ஏந்தி இருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே
கோலாசுர பயங்கரி
சர்வ பாப
ஹரே தேவி
மஹாலஷ்மி நமோஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

சர்வக்ஞே சர்வ வரதே
சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி
மஹாலஷ்மி நமோஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும்
Read 11 tweets
#நவராத்திரி #அரிய_தகவல்கள்
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி விழா பற்றி தேவி மாகாத்மயத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
3.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
4. விஜயதசமி தினத்தன்று
பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
5. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவராத்திரி விரதத்தை கடை
பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
6. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம்.
7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று
Read 13 tweets
#நவராத்திரி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்
-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு #பிரம்மோத்சவம் என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தலும், அவற்றுள்
முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி தான். ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. சக்தியைப் பங்குனி/சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி. மாசி மாதம் ஷியாமளா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது
Read 17 tweets
#மகாபெரியவா #நவராத்திரி சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது. பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று, எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று. பெரியவாள் எதிரில், தட்டுத் தட்டாக பழங்கள், கற்கண்டு, திராட்சை. பெரியவாள் அருகிலிருந்த
தொண்டர் பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து ஒரு ஆப்பிள் எடுத்து குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள். குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை. பெரியவாளைப் பார்த்து, "ஏன் கொலு வைக்கல்லே?" என்று கேட்டது. குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.
கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா. ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் வந்து சேர்ந்து விட்டன. அதற்குள் படிக்கட்டு தயார். தினந்தோறும் இரவில், சுண்டல் நைவேத்தியம் விநியோகம்.சுமங்கலிகளுக்குத் தாம்பூலம், குங்குமம். நவராத்திரி முடிந்ததும்,
Read 6 tweets
நவராத்திரியில் கொலு வைக்க தயாராகிவிட்டீர்களா ?

அனைத்து இந்துக்களும் நவராத்திரியில் கொலு வைக்கவேண்டும்.

உங்கள் வீட்டில் பழக்கமில்லை என்று கொலு வைப்பதை தவிர்க்காதீர்கள்.

வீட்டில் பழக்கம் இல்லை, இல்லை என்று கூறி எந்த ஒரு இந்து பண்டிகையை செய்யாமல் இருப்பது தவறாகும்.
பல வீடுகளில் ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதில்லை. கேட்டால் அவர்கள் வீடுகளில் பழக்கம் இல்லை என்று கூறுவர். இது தவறு.

இந்துக்கள் மட்டும் தான் வீட்டில் பழக்கம் இல்லை என்று கூறி இந்து பண்டிகைகளை செய்யாமல் அதிகமாக தவிர்க்கின்றனர்.

இது நமது பண்பாடு அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்லாமல் விடுகிறோம்.

அதனால் நாம் யார் நமது பாரதிய பண்பாடு உலகிலேயே எவ்வளவு சிறந்தது என்பது அறியாமல் உள்ளோம். இன்றும் ஆன்மிகத்தில் விஸ்வ குருவாக பாரதம் தான் உள்ளது. நம் மண்ணில் அவதரித்த மகான்கள் எத்துணை,

உடை, உணவு, வாழ்க்கை முறை என்று நமக்கு பழக்கம் இல்லாத பல
Read 6 tweets
#புரட்டாசி
மாதங்களில் #அவன் மார்கழி என்று கண்ணன் கீதையில் சொல்லியிருந்தாலும் புரட்டாசியும் அவன் மாதம் தான். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களே புரட்டாசி மாதம். தெய்வ வழிபாடும், முன்னோர் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக
விளங்குகிறது. காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு உகந்த மாதம் இது. அதனால் வைணவக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை #மஹாளய_அமாவாசை என்று குறிப்பிடுவர். புரட்டாசி அமாவாசைக்கு 15 நாட்கள் முன்பு வருவது #மஹாளயபக்ஷம் ஆகும். மறைந்த நம்
முன்னோர்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு மொத்தமாக ஒன்று சேரத் தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு.
Read 11 tweets
#நவராத்திரி #கொலு #தாத்பர்யம்
ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதில் அன்னையை ஆவாஹனம் செய்து, உண்ணா நோன்பு இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த Image
வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால் நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும் சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி மகாராஜா ImageImage
சுரதா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து நவராத்திரியில் வழிபாடு செய்வது, குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாடு செய்வது முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக
Read 9 tweets
இன்று #நவராத்திரி ஆரம்பம். நவராத்திரியில் துர்கா, லக்ஷ்மிய, ஸரஸ்வதி தேவிகளை பூஜிக்கிறோம். இருப்பது ஒரே பராசக்திதான். துர்க்கையாக இருக்கும்போது வீரம், சக்தி தருகிறாள். மஹாலக்ஷ்மியாகி தனங்களைத் தருகிறாள். ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.
ஆதிபராசக்தியான துர்க்கையைப் பார்வதியோடு
ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். ஹிமவானின் மகளானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி எல்லா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், பாற்கடலில் பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.
மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் மகளாக பிறந்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.
‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ எனறு ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமர கோசம்’
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!