Discover and read the best of Twitter Threads about #நோக்கம்சிவமயம்

Most recents (21)

#SSRThreads

நேற்று நீண்ட நாட்களுக்கு பின் கோயிலில் அடியார் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது,

தனக்கு எழரை சனி நடக்கிறது அதனால் மிகுந்த கஷ்டம் எற்படுகிறது, அனுபவிப்பதனால் தினமும் கோவிலுக்கு வருகிறேன் என்று புலம்பினார்,

நான் அமைதியாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்,

1/28
15 நிமிடங்களுக்கு மேல் புலம்பி தள்ளிட்டார்,

நான் எதுவும் பேசாமல் இருப்பது அவருக்கு புரிந்தது நீங்களும் கும்பம் தானே என்றார்,

நான் ஆம் என்றேன்,

அப்ப உங்களுக்கும் தான் எழரை சனி நடக்கிறது நீங்க என்றார் ?

வேலை பளு தவிர எந்த பிரச்சனையும் இல்லை Normal ஆக இருக்கிறேன் என்றேன்.

2/28
நானும் தான் அடியார், தினமும் கோவிலுக்கு வருகிறேன், உங்களை மாதிரி தீட்சை மட்டும் தான் வாங்கல மத்தபடி நாம ஒன்னு தான் நீங்க சந்தோஷமா இருக்க நான் மட்டும் கஷ்டபடுறேன் ஏன் இப்படி ?

கடவுளுக்கு ஒரு நியாயம் தருமம் இல்லையா அடியார்களை கூட சமமாக பார்க்கமாட்டாரா என்று கடவுளை திட்டினார்

3/28
Read 28 tweets
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-2

இறைவன் பெருவுடையார் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது.

இவ்வகையான கோவில் அமைப்பை
"சாந்தாரக் கட்டடக் கலை" அமைப்பு எனக் கூறுவர்.

#தஞ்சைபெரியகோவில்
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/22 Image
இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்

கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

2/22
நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.

இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக,

“கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது.

108 பரத நாட்டியமுத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள்,

3/22
Read 22 tweets
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-1

பெரிய கோவில் பற்றியும் இராஜராஜ சோழரின் பெருமை பற்றியும் பேச இந்த ஆயுள் போதாது,

எனக்கு தோன்றும் போதும், நேரம் கிடைக்கும் போதும் இராஜராஜ சோழனையும் இராஜேந்திர சோழனையும் பற்றி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/25 Image
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.

திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,

இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,

2/25 Image
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.

சிவபாதசேகரனை வணங்கி திரேட்க்குள் செல்வோம்.

3/25 Image
Read 25 tweets
நேற்று பக்கத்தில் கோவில் சென்றேன் அந்த கோயில் அடியார்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்,

அவர்களின் பக்கத்தில் அமைதியாக எதும் பேசாமல் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்

(கோவில் சென்றால் மட்டும் இல்லை வர வர அதிகமா யாருடனும் பேச தோன்றுவதில்லை)

#SSRThreads
#நோக்கம்சிவமயம்

1/24 Image
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,

இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,

எல்லாருக்கும் சிறு வயசு தான்.

2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,

சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை

சரி இதை பற்றி தனியாக பேசுவோம்,

3/24
Read 24 tweets
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:

''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,

#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்

1/23 Image
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,

இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

2/23 Image
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

3/23 Image
Read 23 tweets
வணக்கம்🙏
சிவசொந்தங்களே.!

சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்

#SSRthreads
#நோக்கம்சிவமயம்
1/16 Image
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?

எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?

அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.

2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?

அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.

எடுத்து காட்டு நல்ல தன இருக்கு ஆனா,

3/16
Read 16 tweets
கொக்கரை:- (Thread)

நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.

பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.

கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.

1/1
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.

1/2
#நோக்கம்சிவமயம்
கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.

நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில்,

1/3
Read 10 tweets
தென் கைலாயம்:-

சிவபெருமானின் இருப்பிடமான கைலாயம் வடக்கே உள்ளது என நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால்,

தென் கைலாயம் எங்கு உள்ளது
என நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை,

தெரிந்துகொள்வோம் தொடர்ந்து படியுங்கள்.

#இராஜராஜசோழன்
#ஐப்பசி_சதயம்
#சதயவிழா Image
தஞ்சைப் பெரியகோவிலுக்கு தென் கைலாயம் என்று ஒரு பெயரும் உண்டு.

கைலையாக் காட்சிகளை  பெருவுடையார் கோவில் ஸ்ரீவிமானத்தில் சிற்பமாக எம்பெருமான் இராஜராஜசோழன் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார்.

இதை தட்சிணமேரு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. Image
தஞ்சை பெரியகோவில் 216 அடி உயர ஸ்ரீவிமானத்தில் கீழ்த்திசை சிகரத்தில் கைலாயக் காட்சி அமைந்துள்ளது.

உயர்ந்த மலைபோன்ற அமைப்பில் நான்கு பக்கமும் சற்று பிதுங்கியவாறு கைலாயம்.

கைலாயத்தின் நடுநாயகமாக உமையும்சிவனும். வலப்புறம் கணபதி இடப்புறம் வள்ளி தெய்வானை சகிதமாய் முருகன். Image
Read 7 tweets
சிவச் சக்கரம்:-

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம்மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் மெய்சிவச்சக்கரம் தானே.

#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்💪

திருநீறு அபிஷேக தரிசனத்துடன் சொந்தங்களுக்கு சிவ காலை வணக்கம் 🙏
அட்ட திக்குப் பாலகர்கள்:
(1). நிருதி (2). வருணன் (3). வாயு (4). குபேரன் (5). ஈசானன் (6) இந்திரன் (7) அக்கினி (8) இயமன்

சட்டர் :
(1) அசிதாங்க பைரவர் (2) குரு பைரவர் (3). சண்ட பைரவர் (4). குரோத பைரவர் (5). உன்மத்த பைரவர் (6). கபால பைரவர் (7). பீடண பைரவர் (8). சம்மார பைரவர்,
சதிரர் :
(1). நந்தி (2). மகா காளர் (3). பிருங்கி (4). விநாயகர் (5). விருஷபர் (6). ஸ்கந்தர் (7). தேவி (8). சண்டிகேஸ்வரர்

இவர்களை வெளிச் சுற்று வட்டங்களில் அமைக்க வேண்டும். உள் சுற்றுப் பதினாறு கட்டங்களில் உயிர் எழுத்துக்களை ‘அ’ முதல் ‘அ :’ வரையில் அமைக்க வேண்டும்.
Read 4 tweets
மன்னிப்பு:- (Thread)

ரமணா படத்தில் கேப்டன் பேசும் வசனம் மன்னிப்பு தமிழில் பிடிக்காத வாரத்தை என்று,

நேற்று சக்தி நாயனார் குருபூஜை அவரை பற்றி தினமும் இரவு 10.30 மணிக்கு நடக்கும் சைவ சமயம் Spaceல பேசினோம்.

இதை யாராவது கேட்பாங்கனு பார்த்தேன் கேட்கல நல்லதா போச்சு,

1/1
#SSRThreads
அதனால இப்போ இந்த திரேட் மூலமா எல்லாரும் தெரிஞ்சிக்கலாம்

செய்த தப்புக்கு தண்டனை தருவதும் மன்னிப்பதும் சைவ சமயத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்,

மன்னித்தல் என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

1/2
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
கசிந்து உருகி நில்லாப்பிழையும்
நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே"

இது பட்டினத்தார் பாடல் இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம்

1/3
Read 29 tweets
ருத்ராட்சம்:- (Thread)

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.

ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,

ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,

#நோக்கம்சிவமயம் 🙏
#SSRThreads
Read 17 tweets
#குட்டிதிரேட்:-

தயவு செய்து Online னில் வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் ருத்ராட்சம் வாங்க வேண்டாம்.

நேற்று 9 முகம் ருத்ராட்சம் சென்னையில் 9100 கொடுத்து வாங்கினேன் ஒர்ஜினலா பாருங்க அப்படியே கட்டிவிடுங்கனு கோயிலுக்கு வந்தார்.

செய்வதறியாமல் சரிபார்த்து எதும் பேசாமல் கட்டிவிட்டேன்,
பொதுவாக சிவ சம்பந்தபட்ட பொருட்களுக்கு பணம் எதும் வாங்காமல் தேவைபடுபவர்களுக்கு கொடுப்பது ஒரு சிவ தொண்டு,

அத்தொண்டை ஏதோ எங்கள் திரு கூட்டத்தின் வாயிலாக முடிந்த வரை செய்து வருகிறோம்

நான் விசாரித்தவரை அந்த விலைக்கு மூன்று ஒன்பது முகம் வாங்கலாம் இப்படி கேவலமாக ஏமாற்றி உள்ளார்கள்.
இலவசமாக தருவதினால் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பில்லாமல் போகிறது,

விலை அதிகமாக இருந்தால் தான் ஒர்ஜினல் என்ற மாயையில் இருந்து வெளியே வாங்க

பணம் இருக்கிறது என்று ஏமாற வேண்டாம் நன்றாக விசாரித்து வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் வாங்காமல் பக்தி நோக்கில் உள்ளவர்களிடம் வாங்கவும்.
Read 5 tweets
ஓணம் திருநாள்:- (Thread)

ஏன்டா படுத்திறீங்க...!

இந்த கொத்தடிமைங்களுக்கு ஒரு எழவும் தெரில ஓணம் பண்டிக்கைனா என்ன ?
ஏன் வந்தது ?
ஏன் கொண்டாடுறாங்க ?
எதுக்கு கொண்டறாங்க ?

இது எதுவும் தெரியல வாழ்த்து சொன்ன என்ன மலையாளின்னு சொல்றனுங்க அதான் ஒரு திரேட் போட்டு சொல்லாம்னு வந்தேன்.
ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை,

அந்த ஓணம் பண்டிகையின் காரணம் இப்படித்தான் தொடங்குகின்றது,

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது.
அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது.

அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது,

யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும்,
Read 40 tweets
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்:- (Thread)

இது 1000 வருட பாரம்பரியம் கொண்ட சிவதலம்.

தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான் இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது.

#நோக்கம்சிவமயம்
#இராஜேந்திரசோழன்
#SSRThreads

Continue>>
லிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.

இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.

இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது.
இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.

நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
Read 21 tweets
சிறுகதை:-

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.

இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,

#SSRThreads
1/n
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.

2/n
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?
எவ்வளவு இழிசொல்?

3/n
Read 15 tweets
வந்தார் இராஜராஜர்:- (Thread)

ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,

தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.

#SSRThreads
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,

என்ன நடந்தது..?

சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,

தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'

வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,
Read 25 tweets
#தினம்_ஒரு_திருமந்திரம் டேக்கில் 5 நாட்களாக பரியங்க யோகம் வந்து கொண்டிருக்கிறது நண்பர்கள் விளக்கமாக கேட்டுக்கொண்டதற்காக தனி திரேட் இது.

நான் திருமந்திரத்தை நித்திக்கிற மாதிரி சில திடீர் சைவர்கள் என்னை போலி சாமியார் ரேஞ்சுக்கு சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி 🙏
சங்கம் அவர்களை காலுக்கு அடியில் தூக்கி போட்டு மதித்து விட்டு திரேட்க்குள் செல்கிறது.

இனிப்பை நாக்கில் வைக்காதவன் சாதாரண துறவி,

இனிப்பை நாக்கில் வைத்தும் உமிழ்நீர் சுரக்கவிடாமல் இனிப்பு சுவையை வென்றவன் மகா துறவி ஏன நாம் புரிந்துகொள்வது தெளிவு

அதாவது திருமூலர் என்ன சொல்லுறார்னா
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

இந்த வான்வெளி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் சேர்ந்ததால் எல்லையற்ற இன்பம் பெர்றேன் அதை வேதமாக திருமந்திரத்தில் கூறியுள்ளேன்,
Read 30 tweets
நண்பர் ஒருவர் கேட்டார் திருவண்ணாமலையா சார் நீங்க அண்ணாமலையார் மீது இவ்வளே பக்தியா இருக்கிங்க உங்க சிவபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அவன் அருளாளே அவன் தாள் வணங்கி தான் சிவன் கிட்டயே நெருங்கவே முடியும் நீங்க கொடுத்து வைத்தவர் உங்களுடன் நான் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றார்.

1/3
இதற்க்கு காரணம் தலைவர் ரஜினி தான் உங்களால் நம்ப முடிகிறதா ?

2005ல் தலைவர் ரசிகர்களுடன் விளையாட்டாய் ஆரம்பித்த கிரிவலம்,

15 வருடங்களாக இன்று வரை தொடர்கிறது.

ஒரு வீரசைவனாக தினமும் சிவபூஜை செய்யும் அளவிற்க்கு என்னை ஆன்மிகத்தில் வளர்த்தது என் தலைவர் மட்டும் தான்.

2/3
ஈசன் என்னை தலைவர் மூலம் தான் ஆட்கொண்டார்.

கிரிவலத்தை நமக்கு 1997ல் பிரபலபடுத்தியது வாழும் கடவுள் தலைவர் தான்.

லட்சோப லட்சம் பேரை நெற்றியில் திருநீறு கழுத்தில் ருத்ராட்சம் அணிய வைத்து கிரிவலம் வர செய்த மெய்அடியார் தலைவர்.

அவர் பொற்பாதங்களை அடியேனுக்கு அடியேனாக வணங்குகிறேன்🙏
Read 4 tweets
@ajpasu அண்ணனுக்காக:-

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம்

#SSRThreads
பலிபீடம் அருகில் விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க உள்ளே செல்ல வேண்டும்.

முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

பின் பிரகாரத்தில் உள்ள நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்கள், முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும்
Read 6 tweets
அட்டவீரட்டானம்:- (Thread)

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான தலங்கள்:-

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
ம்
2)திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்.

3) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்.

4) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்.
Read 26 tweets
ருத்ராட்சம் :- (Thread)

ஆன்மிகத்திற்கும்,அறிவியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இந்து மதவழிபாடு என்பது அனைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வியல் முறை

ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,
ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,

முதலில் ருத்ராட்சத்தின் வரலாறும், அறிவியல் சார்ந்த மருத்துவ குணங்களும் அதன் பிறகு ஆன்மீக வளர்ச்சியின் பங்கையும் பார்ப்போம்
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,

அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!