Discover and read the best of Twitter Threads about #பகவத்கீதை

Most recents (15)

#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசை, மாட மாளிகையாக மாறியது. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.

திரௌபதியின் வஸ்திரத்தை துச்சாதனன் உருவிய போது சேலைகளைக் கொடுத்து Image
அவள் மானத்தைக் காத்தார்.

துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர்.
துரியோதனன் எல்லா படைகளையும்
கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார். கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு
தன்னையே கொடுத்தார். Image
அவனுக்கு சாரதியாக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.

கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு அவர்களுக்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையால் அவர்களை மகிழ்வித்தார்.

பெரும் மழை வந்தபோது பயந்து நடுங்கிய இடைச் Image
Read 6 tweets
#ஶ்ரீநரசிம்ம_அவதாரம்
அதர்மம் எப்போதெல்லாம் தலை
தூக்குகிறதோ, அப்போதெல்லாம்
அவதாரம் எடுக்கிறேன் - இது ஸ்ரீ கிருஷ்ண பகவான் மஹாபாரத யுத்தத்தின் போது அர்ஜுனனுக்கு கீதையின் மூலம் கூறிய சத்திய வாக்கு.
துஷ்ட நிக்ரஹம் செய்து இஷ்ட பரிபாலனம் அமைய, பூலோக மக்களுக்கு உதவவே வைகுண்டநாதன் பல Image
அவதாரங்களை எடுத்தார். ஒரு சாதாரன மனிதனாக
வாழ்ந்து காட்டி, உலகிற்கு தனி மனித
ஒழுக்கத்தை போதித்து, தனக்குரிய கடமைகளை நிறைவேற்றி, இறுதியில் இராவண வதம் செய்தது திரேதா யுகத்தின் ஸ்ரீராம அவதாரம்.
மனித சமூகத்தின் வாழ்வியல் நெறிக்காக #பகவத்கீதை எனும் அருளுரையப் போதித்து, கம்சன் -
நரகாசுரன் போன்ற அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது துவாபர யுகத்தின் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். இப்படி பகவான் எடுத்த அவதாரங்களுக்குள் ஸ்ரீ நரசிம்மர் எனும் சிங்கமுகப் பெருமானாக
பகவான் எடுத்த அவதாரம் தனிச்
சிறப்பு வாய்ந்தது. காரணம், பிறப்பின்றி ஒரு நொடிப் பொழுதிலே
தோன்றி, பக்தனான
Read 5 tweets
#கண்ணா #கிருஷ்ணா #முகுந்தா #கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
Read 32 tweets
#பகவத்கீதை
பகவத் கீதை இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்குமான வாழ்க்கைத் தத்துவ நூலாகும். வயதானவர், ஓய்வு பெற்றவர் மட்டுமின்றி எல்லா வயதினரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். உலகளாவிய நலனுக்கும் வழி வகுக்கிறது, அன்றாட பிரச்சனைகளுக்கும் கீதை பதில் அளிக்கிறது.
கீதையின் அழகு, அதன் பொருள், விளக்கம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை பகவான் கண்ணனின் உபதேசத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு கோணங்களில் அதைப் பார்த்தார்கள். எனவே, ஆரம்பகால ஆய்வுகள், ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜர், மத்வா, அபிநவகுப்தர்,
பாஸ்கர, நிம்பர்கா, வல்லபா, மதுசூதன சரஸ்வதி, சைதன்யா போன்றவர்களின் கீதைச் செவ்வியல் விளக்கங்களின் தத்துவ அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கப் பட்டிருந்தன. கீதையின் நவீன விரிவுரையாளர்களான பாலகங்காதர திலகர், ஸ்ரீஅரபிந்தோ, ஸ்ரீ சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஸ்ரீ சின்மயானந்தா
Read 9 tweets
#பகவத்கீதை கீதையில் கண்ணன் 18 விதமாக குறிப்பிடப்படுகிறார். அவை:
1. ஹ்ருஷீகேச - இந்திரியங்களுக்கு ஈசன்
2. அச்யுத - தன் நிலையிலிருந்து வழுவாதவன்
3. கிருஷ்ண - கருப்பு நிறமானவன்.
க்ருஷ் என்றால் பூமி. ண என்றால் ஆனந்தமளிப்பவர் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு ஆனந்தமளிப்பவர், அனைவரையும்
கவர்ந்து இழுப்பவர்
4. கேசவ - அழகிய முடியுடையவன்,
கேசி என்ற அசுரனைக் கொன்றவன்
5. கோவிந்தன் - கோ என்றால் பசு மற்றும் புலன்கள். எனவே பசு மற்றும்
புலன்களுக்கு ஆனந்தம் அளிப்பவன்
6. மதுசூதன - மது என்ற அசுரனை அழித்தவன், மதுவை(தேனைப்) போல இனிமையானவன்
7. ஜநார்தன - மக்களால் துதிக்கப்
படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)
8. மாதவ - திருமகளுக்குத் தலைவன்
9. வார்ஷ்ணேய - வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
10. அரிசூதன - எதிரிகளை அழிப்பவன்
11. கேசிநிஷூதன - கேசி என்ற அசுரனை அழித்தவன்
12. வாசுதேவ - வசுதேவனின் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
13. புருஷோத்தம - பரம புருஷன்
Read 5 tweets
ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கன்னையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்
படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற
#கீதகோவிந்தம் #ஸ்ரீமந்நாராயணீயம் #கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்ற
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு கடைந்தெடுத்த நாஸ்திகன், கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமே இல்லை என்று மேடையில் முழங்கினான். அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும் என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். மதத் தலைவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக
உண்டாக்கிக் கொண்ட கட்டுக் கதைகள் தான் மதம் என்று சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடினார்கள். கடைசியாக, கடவுளுமில்லை, கத்திரிக்காயும் இல்லை, எல்லாம் பித்தலாட்டம் எனச் சொல்லி முடித்து, யாராவது கேள்வி கேட்க
வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்றும் அழைத்தான். வயதான ஒருவர் மேடைமீது ஏறினார். தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தார். கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவர் சுளை சுளையாகத்
Read 7 tweets
#மகாபெரியவா #பகவத்கீதை
நம்மில் முக்கால்வாசி பேர் #கீதை என்றால் அது ஏதோ தெரியாத புரியாத விஷயம் என்று நினைக்கிறோம். அப்படி என்னதான் கீதை சொல்கிறது என்று கொஞ்சம் பொறுமையோடு படிக்கிறவனுக்கு, தலையை சுற்றுகிறது. ஏன் இந்த கிருஷ்ணன் முன்னுக்கு பின் முரணாக சொல்கிறார் என்று தோன்றுகிறது.
ஒரு விஷயம் தான் மொத்தத்தில். ஆத்மா. அது எங்கும் எதிலும் எவற்றிலும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதுவே சர்வ ஆதாரம். வெளியே இருந்தால் பரமாத்மா. உள்ளே இருந்தால் ஜீவாத்மா. கிருஷ்ணனை சரியாக புரிந்து கொண்டால் குழம்பவே மாட்டோம். தெள்ளத் தெளிவாக தெரிவார். மஹா பெரியவா தெய்வத்தின்
குரலில் சொல்கிறார், ''நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்.
யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி
எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம்
Read 16 tweets
#Thread

#பகவத்கீதை

“நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன்.” - (கீதை 4:13)

(1/n) Image
“ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது.

(2/n)
ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது: ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.”
(கீதை 3:35)

(3/n)
Read 10 tweets
#பகவத்கீதை எளிய விளக்கம்:
பகவத் கீதை என்பது
விடு – பிடி அல்லது
பிடி – விடு
விடு பிடி என்றால், இந்த உலக பந்தங்களையெல்லாம்
உதறித் தள்ளிவிடு. அதே நேரம் பரந்தாமன் பாதங்களை இறுகப் பற்றிக்கொள் என்று அர்த்தம். ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு, இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித்
தள்ளுவது எளிதல்ல. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பற்றுவது? கவலை வேண்டாம். இன்னொரு வழி உள்ளது. அது தான் பிடி விடு.
பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று. அந்தப் பிடி இறுக, இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
இது எப்படி என்று புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள், ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன, முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.
(இது நம்முடைய உலக
பாசபந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதை விட இறுக்ககட்டி ஒரு குலுக்கு
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
துவாபரயுகத்தில் தன் அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில் கிருஷ்ணன் ஒரு நாள் உத்தவரிடம், “இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே என்னிடம் கேட்டதில்லை. என் அவதாரப் பணி முடியும் நேரம் வந்துவிட்டது.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டுத்தான் என் அவதாரப் பணியை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என ஸ்ரீ கிருஷ்ணன் கூறினான்.
பெருமானே நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு. ராஜசூயத்தில் தொடங்கி குருக்ஷேத்திரத்திலே முடித்து வைத்து
நீ ஒரு நாடகம் நடத்தினாயே மகாபாரத நாடகம், அதில் நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத உண்மைகள் பல உள்ளன. அவற்றிற்கெல்லாம் காரணங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நெடுநாளாக ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர்.
“உத்தவரே அன்று குருக்ஷேத்திரப் போரில்
Read 11 tweets
#இன்றையசிந்தனைகள்

#இராமகிருஷ்ணரின்உபதேசம்

எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி.
இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.
#சுவாமிவிவேகானந்தரின்
#வீரமொழிகள்
இல்லறத்தான் இறைபக்தி கொண்டவனாக இருக்க வேண்டும் இறை ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும்.அதேவேளையில் அவன் இடையீடின்றிச் செயல்புரிய வேண்டும்.செயல்கள் அனைத்தின் பலனையும் அவன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
#ஆசாரக்கோவை

எச்சில் அற - எச்சில் அறும்படி
முக்கால் குடித்து - முக்குடி குடித்து

வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.
Read 6 tweets
👣#பகவத்கீதை👣
அத்தியாயம்_4
உன்னத_அறிவு
ஸ்லோகம்_4_16
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
"கிம் கர்ம கிம் அகர்மேதி
கவயோ (அ)ப்யத்ர மோஹிதா:
தத் தே கர்ம ப்ரவக்ஷ்யாமி
யஜ் க்ஞாத்வா மோக்ஷ்யலே (அ)ஷுபாத்"
பொருளுரை;
அறிவுடையோர் கூட இவ்விஷயத்தில்,
எது செயல்? எது செயலற்றது?
என்று குழம்பியுள்ளனர். செயல்
என்பதை உனக்கு விளக்குகிறேன்.
அதை அறிவதால் துரதிர்ஷ்டத்திலிருந்து
முக்தியடைவாய்.
👣#பகவத்கீதை👣
அத்தியாயம்_4
உன்னத_அறிவு
ஸ்லோகம்_4_17
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
"கர்மணோ ஹ்யபி போத்தவ்யம்
போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஷ் ச போத்தவ்யம்
கஹனா கர்மணோ கதி:"
Read 4 tweets
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
Read 17 tweets
#BhagavadGitaDay வைகுண்ட ஏகாதசி அன்று தான் பகவத் கீதை பிறந்த நாளும் கொண்டாடப் படுகிறது. பகவத் கீதை என்றால் கடவுளின் பாடல்கள். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது மகாபாரதப் போர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் தொடங்கியபோது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக
நிற்கும் பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போர் புரிய அவனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று யோசித்தான்
அவன் மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தான். அப்போது அவனுக்குத் தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். அவன் மனக் கிலேசத்தைப் போக்கினார். தர்மத்துக்காக போர் புரியும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!