Discover and read the best of Twitter Threads about #பக்தி

Most recents (14)

மஹாலக்ஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்:

1. திருமால் மார்பு:
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன்-ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். Image
திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்:
பசு தேவராலும்,மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா.காரணம்,பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு
தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி
வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத்தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

3. யானையின் மத்தகம்:
யானையின் மத்தகம் பிரணவம் போன்றது (ஓங்காரம் போன்றது)
Read 13 tweets
#பக்தி #தும்பைப்பூ
ஒரு விலைமகள் தன் தொழிலுக்கென தர்மம் வைத்திருந்தாள். அவள் தினமும் காலையில் எழும் போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டு இருக்கும். அதை கையில் எடுப்பவள், இந்த அச்சாரத்தை வைத்தவர் இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு Image
வரலாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடு தான். அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒரு போதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார்.
வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள் என்று அனுப்பி விட்டாள். வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், பெண்ணே, உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால்
Read 12 tweets
#பக்தி
துக்காராமுக்கு மராத்தியைத் தவிர வேறு மொழி தெரியாது. படிக்காதவர். பரிபூர்ண பக்தியோடு விட்டல ஸ்மரணம் செய்பவர். அபங்கங்கள் இயற்றி பாடுவார். விட்டலன் அவரிடம் அலாதி அன்பு கொண்டவன். அவரோடு பேசுவான் சாப்பிடுவான். உற்ற நண்பர்கள் இவ்வாறு தானே இருப்பார்கள். தேஹு என்ற அக்கிராமத்து Image
இரு பிரிவினர் துக்காராமை ஒரு விஷ ஜந்துவாகவே பார்த்தார்கள். எரியும் தீயில் எண்ணெயாக துக்காராமோடு சேர்ந்து பாண்டுரங்கன் சாப்பிடுகிறான் என்ற செய்தி அவர்களை வாட்டியது. ஆனால் அண்டை கிராமங்களில் துக்காராம் புகழ் பரவியது. இதனால் எங்கும் அவரை வரவேற்றனர். எங்கு சென்றாலும் யார் என்ன உணவு
அளித்தாலும் துக்காராம் தனக்கு அருகே மற்றொரு இலை போடுங்கள் என்பார்.
"யாருக்கு?"
"என் பாண்டுரங்கனுக்குத்தான்"
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த ஆளில்லாத இலையும் காலியாகத்தான் இருக்கும். விட்டலன் அரூபமாக (மற்றவர் கண்ணுக்கு) அமர்ந்து சாப்பிடுவான். தேஹூவினர் ஒரு திட்டம்
Read 9 tweets
#பக்தி #பாவம்_bhavam
ஒரு பாகவதர் தினமும் கிருஷ்ண பஜனை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்னம் யாசிப்பது அவரது வழக்கம். ஒரு நாள் அவருக்கு யாரும் அன்னமிடவில்லை. பசியோடு நடந்து கொண்டே கிருஷ்ண பஜனை பாடி கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கையை ஓர் 8 வயது சிறுமி பிடித்து, ஸ்வாமி என்று
அழைத்தாள். அவர் நின்று அந்த சிறுமியை பார்த்தார். அவள் கிழிந்த உடையை அழகாக தைத்து உடுத்தி இருந்தாள். மலர்ந்த முகத்தோடு ஸ்வாமி என்று அழைத்தாள். அவர் அந்த சிறுமியிடம், யாரம்மா நீ என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ஸ்வாமி நான் அருகே உள்ள குடிசையில் இருந்து
தினமும் உங்கள் கண்ணன் பாடல்களை ரசித்து கேட்பேன். அதை கேட்டு கேட்டு பாடல்கள் முழுக்க எனக்கு மனப்பாடம் ஆயிற்று. அதனால் உங்களை என் குருநாதராக நினைத்து அழைக்கிறேன், என் வீட்டிற்கு உணவருந்த வருகிறீர்களா என்று அன்போடு அழைத்தாள். பசியோடு இருந்த பாகவதரும் அவளது அன்பான வார்த்தையில் மயங்கி
Read 15 tweets
#சிவராத்திரி_ஸ்பெஷல்
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது “சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள். சுடுகாட்டுச் சாம்பலை வைத்து‌ அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான். இறை வழிபாடு
என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்யச் சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம், “நான் இந்தத் தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான். ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு
Read 6 tweets
#பக்தி_கதை

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.

அதை அரசனிடம் எடுத்துச் சென்ற போது

”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள்..

சுடுகாட்டுச் சாம்பலை வைத்து‌ அபிஷேகம் செய்”

என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான்.
இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து தான் உண்ணும் பழைய உணவை படைத்து வழிபட்டான்.
ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.

" சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன்.
Read 7 tweets
#சூர்தாஸ் #பக்தி
நந்தவனத்தில் ஒருநாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அசைந்தவாரே இருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத் தான்
ரசிக்கிறீர்களோ என்று கோபித்தாள் ராதை. என்ன அருமையான பாடல்,
சூர்தாஸரின் பாடல்! அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப்போடுகிறார் என்றார். எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்துவிட்டு வருகிரேன் என கிளம்பினாள்
ராதை. நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார். சூர்தாஸ் பாடிக் கொண்டு இருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள். அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம்
Read 7 tweets
#பக்தி ரமாபாய் என்ற ஒரு பக்தை பண்டரிபுரம் கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார். வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார். ஒருநாள் அவருக்கு
உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டு இருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. இன்று கோவிலுக்குப் போக முடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது. அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை, உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார். விட்டலா! இன்று என்னால் உனக்கு
உணவு கொண்டு வர முடியவில்லையே, இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே! நான் இப்படிக் கிடக்கிறேனே! நீ எப்படிப் பசி தாங்குவாய்? என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்த போதும் உடல் ஒத்துழைக்கவில்லை. கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன
Read 9 tweets
*#பக்தி...* 

பூலோகத்தில் ஒரு தெருவில் செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் வசித்து வந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தன் கடையில் ஓர் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து வணங்கி வந்தார். செல்வம் இல்லா விட்டாலும் சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் இருந்து வந்தார்.
செல்வந்தரோ தினம் பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்து வந்தாலும், பல தலைமுறைக்குக் காணும் அளவு செல்வம் இருந்தும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் நாரதர் விஷ்ணுவைப் பார்த்து, அந்த செல்வந்தர் சிறந்த பக்திமானாக இருக்கிறார். தினம் பூஜை புனஸ்காரம் என்று இருக்கிறார்.
Read 14 tweets
#பக்தி பக்தர்களிடம் மிகுந்த பாசம் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் துளசி இலையையும் கையளவு நீரையும் அர்ப்பணிக்கும் பக்தனிடம் தன்னை முழுமையாக விற்று விடுகிறார் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

துளசி தல மாத்ரேண ஜலஸ்ய சுலு கேன வா
விக்ரீணீதே ஸ்வம் ஆத்மானம் பக்தேப்யோ பக்த வத்ஸல

துளசி இலையையும்
நீரையும் தனக்கு அர்ப்பணிப்பவனுக்கு தான் பட்டுள்ள கடனை திருப்பி செலுத்த வழி தெரியாமல் துளசி இலைகள் நீருக்கும் சமமான செல்வம் தன்னிடம் இல்லை என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நினைக்கிறார். இதனால் பகவான் தன்னையே தன் பக்தனுக்கு அர்ப்பணித்து கடனை அடைக்கிறார். இதன் மூலமாக ஒருவன் பகவான்
கிருஷ்ணரை, துளசி இலையைக் கொண்டும். சிறிதளவு நீரை கொண்டும் எளிதில் திருப்திப் படுத்தலாம் என்பது தெளிவாகிறது. அவர் #பகவத்கீதையில் கூறியதை போல் இலையோ பூவோ பழமோ நீரோ அர்ப்பணிக்கும் போது அவர் மிகவும் திருப்தி அடைகிறார். அவர் தம் பக்தனின் சேவையை முற்றிலுமாக ஏற்கிறார். மிக மிக ஏழ்மை
Read 5 tweets
#நம்பிக்கை #பக்தி
என பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள திருக்கோளூர்
#வைத்தமாநிதி_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க திருஎவ்வுள்ளூர்
#வைத்திய_வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் மனத்தில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று
சொல்ல திருக்கச்சி #பேரருளாளன்_வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

குறைவில்லாமல் அழகழகான, அற்புதமான வஸ்திரங்கள் எப்பொழுதும் தர த்வாரகாநாதன்
#ரண்சோட்ஜீ என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய ருசியான ஆகாரத்தை என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன் #ஜகந்நாதன்
என்னோடு எனக்காக
இருக்கிறார்.

என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற திருமலை மேல் #திருப்பதி_ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம் #மாலோல_நரசிம்மன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்த
Read 10 tweets
#சூரசம்ஹாரம்_உணர்த்தும்_தத்துவம்

🌟முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம்.

🌟சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர் புரிந்தான்.

தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான்.

ஆனால்,ஆதி முதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன.
🌟முருகனின் கை வேலுக்கு #சக்திவேல் என்று பெயர்.

அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார்.

அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

🌟வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன்,இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான்.
🌟வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது.மாயையை இருகூராகக் கிழித்தது.

🌟ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது.

🌟சூரசம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப் போக பகைவனான சூரபத்மன்
Read 11 tweets
#ஓம்_நமசிவாய
#பக்தி
தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும்.
தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி உதவினேன்.
தீபாவளி விரதம் முறையாக இருந்து வழிபாடு செய்பவர்கள் முத்தி நலம் அடைவார்கள்.
இதனைப் படிக்கும் சிவநேயச் செல்வர்கள் தீபாவளி விரதமிருந்து சிவசாயுஜ்தம் அடைவார்களாக.

அன்பன்

- கிருபானந்த வாரி
Read 20 tweets
#பக்தி மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக தாமாஜி வேலை பார்த்து வந்தார். தாமாஜி பண்டிதர் தீவிர விட்டல பக்தர். தினமும்  விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து பிறகுதான்
சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை நல்லொழுக்கம் ரொம்ப பிடித்து விட்டதால் அவனின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கு அவரை பொறுப்பாளியாக நியமித்தான். எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி  மெலிந்து போயின. பயிர் பச்சை எல்லாம் வாடி கருகின. மக்கள்
உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார்.  தாமாஜி அவரை அழைத்து உபசரித்து உணவளித்தார். அந்த மனிதர் அழத் தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே  வயிறார உண்கிறேன். பண்டரி புரத்தில் என் வீட்டில்  மனைவி குழந்தைகள் உணவின்றி
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!