Discover and read the best of Twitter Threads about #படித்ததில்_பிடித்தது

Most recents (24)

*கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை.*

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்

இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,

எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். Image
அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.
Read 15 tweets
புரிஞ்சுக்க மச்சான்...

இந்த Love jihad, Land Jihad,

எந்த நாட்டுக்கு போனாலும் தனி சட்டம் வேணும் னு அடம் புடிக்கிறது ...

அதிக புள்ளைங்கள பெத்து பெரும்பான்மை ஆக நெனைக்குறது,

வெள்ளிகிழமை ஆனா பெரிய பட்டாசு (பாம்) வெடுச்சு விளையாடுறது..

சூ.... வழியா தங்கம் கடத்தல்.,..
இங்க இருந்துகிட்டு பங்காளி நாட்டுக்கு support பண்றது...

எல்லாத்தையும் நீ பண்ணிட்டு ஆரிய அமெரிக்க யூத சதி னு சொல்றது....

International தீவிரவாத gang leader யை பூரா தலைவன் னு சொல்றது...

எல்லாத்துக்கும் மேல காலைல சரியா 4.20 க்கு நாங்க நிம்மதியா தூங்கும் போது
புரியாத பாஷை ல loud speaker ல கத்துறது.,..

இதை எல்லாம் விட்டுட்டா உங்களையும் எங்கள் ல ஒருத்தரா தான் நாங்க பாக்க போறோம் ....

புரிஞ்சுக்க மச்சான்........
#படித்ததில்_பிடித்தது
Read 3 tweets
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது.

எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன.

அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன.
Read 8 tweets
#சோறு

காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
Read 16 tweets
ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
அற்புதம் என்றார் மேலாளர்.. 

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..

ஆஹா.. 

இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..
Read 8 tweets
எதிர்காலத்தை முன்னமே எழுதி வைத்த வீர பிரம்மேந்திரர் சுவாமிகள்.

நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர் காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.
அவர் எழுதி வைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.

உலகம் போற்றும் பாரத
சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு.
ஆந்திரத்தை சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர்.
Read 30 tweets
★சிறு வயதிலேயே நன்னடத்தை நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

★பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் முன்  வீட்டிலேயே ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.

★சிறுவயதில் செய்யும் முதல் தவறை மன்னிக்கவே கூடாது. சிறு தவறுதான் என்றாலும் துவக்கத்திலேயே தண்டிக்க வேண்டும்.
★தற்போது பள்ளிகளில் நன்னடத்தை வகுப்புகள்( MORAL INSTRUCTIONS) நடத்தப்படுவதில்லை. அவைகள் நடைமுறைக்கு வரவேண்டும்.

★தன்னுடைய மகனோ மகளோ வெறும் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது, வாழ்வியல் கல்வி அவசியம், மனிதநேயத்தை உணர்வது அவசியம் என்று பெற்றோர் புரிந்து கொள்ளவேண்டும்.
★தங்கள் பெற்றோரைவிட ஆசிரியரைவிட சிறந்த வழிகாட்டி யாருமில்லை என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.
Read 9 tweets
பங்குனி மாசத்து அதிசயம்..?

அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு... இருக்கு.

வியாதியே இல்லாத ஒரு வரம் கிடைச்சா எப்படி இருக்கும்...? 

நடக்கறத பேசுங்க சார்... வெட்டியா பேச நேரமில்ல ... யூஸ்புல்லா இருந்தா கேட்கலாம்... என்பீர்கள் ... சரிதான்..
பரம ஏழையிடம் போய் கேட்டுப் பார் ... பணத்தோட அருமை தெரியும்...

பணத்த என்ன பண்றதுன்னே தெரியாத பணக்காரன்கிட்ட கேட்டுப் பார்... ஆரோக்கியத்தோட விலை தெரியும்... னு ஒரு பேச்சு வழக்கு உண்டு... ரொம்பவும் எதார்த்தமான உண்மை ....
ஆரோக்கியத்த கெடுத்துக்காம அதே நேரத்துல தேவையான பணத்தையும் சம்பாதிக்க தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்... என்பதை வியாதியால் உடல் கெட்டுப் போன பிறகே பெரும்பாலோர் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு , அதற்குப் பிறகு தேட ஆரம்பிப்பது தெரிந்த கதை...
Read 15 tweets
நவகிரகங்கள் கெட்டு போனால் என்ன செய்ய வேண்டும்.

சூரியன் கெட்டால் எதிலும் அடக்கம், பணிவை கடைபிடிக்க வேண்டும்..!

சந்திரன் கெட்டால் மனதை தியானம், தெய்வ வழிபாட்டின் வழியே விழுப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்..!
செவ்வாய் கெட்டால், வீண் வம்பு மற்றும் சண்டைகளை தவிர்க்க வேண்டும், செயல்களில் நிதானம் மிக அவசியம்..!

புதன் கெட்டால், பேச்சை குறைக்க வேண்டும், வாய் சவடால் பேசகூடாது, யாருக்கும் எதையும் சொல்லிக்கொடுகிறேன் என்று முந்திரிகொட்டைதனம் அறவே கூடாது..!
குரு கெட்டால், உபதேசம் செய்யக்கூடாது, ஆன்மீக விஷயங்களை வெளிப்படுத்த கூடாது, தெரியாத விஷயங்களில் தலையிடக்கூடாது..!

சுக்கிரன் கெட்டால், எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், ஆடை ஆபரணங்களில் எளிமை இருக்க வேண்டும், பணத்தை தேவையின்றி செலவழிக்க கூடாது..!
Read 6 tweets
அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..

ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..

யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..

மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..
மன்னனோடு சேர்ந்து நாடும் களை இழந்தது..

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."
Read 18 tweets
ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். 

எந்த தவறைச் செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான்.அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை.
அதனால், ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.
"இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?", என்று எல்லோரும் கேட்பார்கள்.

"நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால், காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்", என்பான் திருடன்.

அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல், அமைதியாக இருந்தான்.
Read 11 tweets
*அரண்மனை எலி*

*ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான்.*

*அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.*

*அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.*
*உடனே அதன் மீது வாளை வீசினான்.*

*அந்த எலி தப்பித்துச் சென்றது.* 

*பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது.*

*உடனே மனம் உடைந்து போனான்.*
*அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார்.* 

*அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன்.*
Read 13 tweets
#படித்ததில்_பிடித்தது

*400/= இருந்தால் வாழ்நாள் பூராவும் உட்கார்ந்து சாப்பிடலாம்.*
🙊🙊🙊🙊🙊
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு..

400ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.
🤔
இதைக் கண்டு பலர் வியந்தனர்.

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.
👍🏻

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
🏃🏼‍♀️🏃🏼‍♂️

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா... 😍
இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂
Read 7 tweets
அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்

" வெளியே குளிர் , உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?
முதியவர் பதிலளித்தார்,

" எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்"

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்

" நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்"
அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவர் காத்துக்கொண்டிருந்தான். அந்த மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.
Read 5 tweets
மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்தார்...

அதற்காக வீட்டில் 12 டாக்டர்களை வேலைக்கு அமர்த்தினார். தினமும் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அவர்கள் ஜாக்சனைப் பரிசோதிப்பார்கள்...
கண்டிப்பாக பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கான உணவு வழங்கப்படும்...

தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்காணிக்க இன்னொரு 15 நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்...

ஆக்சிஜன் லெவலை சமன்படுத்திக் கூடிய டெக்னாலஜி அவர் படுக்கையில் இருந்தது...
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா... தேவைப்பட்டால் உடனடியாக உறுப்புகளை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆர்கன் டோனர்ஸ் தயாராக வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த டோனர்களுக்கான தினப்படி செலவுத் தொகையை ஜாக்சனே வழங்கி வந்தார்...
Read 19 tweets
*பரிகாரம் ஏன்? எதற்கு? எப்படி?*
பரிகாரம் பலன் தருமா? என்ற சந்தேகம் உண்டு.

சந்தேகம் வருவதோ அல்லது சந்தேகப்படுவதோ தவறில்லை. ஏனெனில், அதற்கான அனுபவம் அவர்களிடம் இல்லை என்பதே சந்தேகத்தின் பொருள்.
ஆனால், அது உண்மையா? பொய்யா? என ஆராயாமல் அல்லது அனுபவப்படாமல் இருப்பது காலம் முழுக்க பரிகாரம் தவறு என்ற எண்ணத்தையே நமக்கு தரும். அந்த எண்ணம் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யை தேடி அலைந்த நிலைமையாக மாறும்.
தினந்தோறும் உங்களுக்கு நீங்களே பரிகாரம் செய்து கொள்கிறீர்கள் என சொன்னால் நம்புவீர்களா? ஆம், ஒவ்வொருவரும் தினந்தோறும் அவரவர்களுக்கே பரிகாரம் செய்து கொள்கிறோம்.
Read 43 tweets
*ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார்.*

*கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்* 

*விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார்.*
*ஓரளவுக்கு வருமானம் வந்தது.* 

*அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.*

*ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார்.*

*அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை.*

*எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !*
*அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு .. அதை இவர் பார்த்தார் ..*

*அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்.* 

*"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.*
Read 13 tweets
மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன்.

அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன.

ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.
பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து

“இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின.

பறவைகள் எப்படி வளர்கின்றன....???

நன்றாக பறக்கின்றனவா....??? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது.
Read 18 tweets
தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார்.

மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார்.

பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார்.
அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார்.
உதாரணமாக ஒரு டீ கடை என்றால்...

"எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர்.

இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார்.

தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். 

அதுக்காக, 
4 மணிக்கே எழுந்து விடுவார். 

ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும்.
Read 15 tweets
சென்னையில் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதிய நேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மணக்க மணக்க இருந்தது.
கடைக்காரரிடம் சாம்பார் சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலை செய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார்.
சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".
Read 12 tweets
இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில
மருத்துவர்கள் அறிவாளிகள் 

இனிப்பு - மண்ணீரல் - உதடு - கவலை - இரைப்பை - மண்.
❝மாவுச்சத்துக்கு யார் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.செரிமான கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனைக்கு யார் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை❞
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல. 

வீட்டு திண்ணையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
Read 33 tweets
கடவுள் எங்கு உள்ளார்,  எப்படி உள்ளார்,  என்ன செய்கிறார்?

#1 கடவுள் எங்கே இருக்கிறார்? 

#2 எப்படி இருக்கிறார்? 

#3 என்ன செய்து கொண்டு  இருக்கிறார்?

கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போ தெனாலி ராமன் முன் வந்து, அரசே இதுக்கு நான் விடையளிக்கிறேன்ன்னு சொல்லிட்டு,

ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டான்..?
அவர் அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லைன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டு மெழுகுவர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.
Read 15 tweets
ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டு மெனில் ? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது !

கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!*
*தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ (?) இருவரோ(?) வந்து கையை பிடித்து எழுப்பி விடும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!*
*ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!*

*கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!*

*ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு !

இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு !!*
Read 16 tweets
◆ ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால், அம்மாவை மாற்ற தேவையில்லை.
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை..!!
◆ காலைவணக்கம் வார்த்தை எல்லாம் கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான் பல குடும்பம் விழிக்குது..!!
◆ அந்நிய உணவில் தனி ருசி தான்! அதில் ஒன்றும் தவறில்லை!ஆயினும், வறண்ட ரொட்டியை திண்ணக் கூட வறட்டு கவுரவம் ஏன்???
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!