Discover and read the best of Twitter Threads about #மகாபெரியவா

Most recents (24)

#சந்தியாவந்தனத்தின்_பெருமை #மகாபெரியவா உபதேசித்தது.
ஒருகதை இருக்கிறது இக்கதை “சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜி கல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில்
ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன்உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐஸ்வர்யத்தை வைத்து, தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள் அந்த காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல
முடியாமல், தானம் வாங்க வந்தவர்கள் எல்லாம் மரணமுற்றார்கள். கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார் ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ஸ்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார். அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று
Read 17 tweets
#ஆதிசங்கரர் #அனாயாச_மரணம் படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல், ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி,
உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் வந்தோம் போனோம் என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?

ஆதி சங்கரர் அதற்காக இந்த ஸ்லோகத்தை இயற்றியுள்ளார்.

अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं

AnAyAse- na MaraNam,
VinA Dainyena JIvanam DEhime Kripaya ShambO Bhakthim Achanchalam "

அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம் தேஹிமே க்ருபையா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலம்

கொஞ்சம் மாற்றியும் இந்த ஸ்லோகம் கிடைக்கிறது

अनायासेन मरणं विनादैन्येन जीवनं । देहान्त तव सानिध्यम्, देहि मे परमेश्वरम्॥

anāyāsena
Read 7 tweets
#மகாபெரியவா 1983 ல் நடந்த சம்பவம் இது. ஜகத்குரு ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிட விரும்பினார் அன்றைய பிரதமர் இந்திரா. மஹா பெரியவரின் கருத்தை அறிய சி. சுப்பிரமணியம் அவர்களை அனுப்பினார்.
மஹாராஷ்டிராவிலுள்ள சதாராவில் சுவாமிகளைச் சந்தித்தார்
சி. சுப்பிரமணியம்.
"வெளியிடலாமா என்பது
குறித்து மத்திய அரசு எனது கருத்து கேட்கிறதா? அல்லது ஆசியைக் கோருகிறதா? முன்பே முடிவு ஆகிவிட்டால் நான் ஆட்சேபிக்கவில்லை" என்றார் பெரியவா.
"தங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு செய்வோம்" என்றார் சுப்புரமணியம்.
"நல்லது. அப்படியானால் சொல்கிறேன். அஞ்சல் தலை தேவையில்லை. அவதார
புருஷரான ஆதிசங்கரர் பிறப்பிலேயே பெருமை மிக்கவர். தபால் தலையில் அவரது படத்தை வெளியிட்டால் என்னவாகும்? நாக்கால் எச்சில் படுத்தி அஞ்சல் உறை மீது ஒட்டுவார்கள். நடைமுறையில் மக்கள் இப்படித் தான் செய்கிறார்கள். அது மரியாதையாகுமா?” எனக் கேட்டார் பெரியவா. அதிர்ச்சியடைந்த சி.சுப்புரமணியம்
Read 4 tweets
#மகாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பெண்ணை பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து
21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும்
Read 6 tweets
#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம்
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.
Read 52 tweets
#மகாபெரியவா
பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, "பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. "அதுதான் சூரியன்” என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால்
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும் என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. தீபாவளிக்கு தானே நாம் வடை செய்வோம். பொங்கலுக்கும் அது உண்டு. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக
இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம். பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும். அவர் பூஜிக்கும் சந்திர மௌவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை,
Read 9 tweets
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ராயவரம் பாலு,ஸ்ரீமடம்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள் பெரியவாள்.
சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும்,
மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் உருகிப் போய்விடுவார்கள் பெரியவாள். அதிஷ்டானத்தில், ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவில் நின்று
கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ, யாரும் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள் அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின்
Read 11 tweets
#மகாபெரியவா
சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கும்பகோணத்தில் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள். தெருவில் ஏழெட்டுச் சிறுவர்கள், கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
விளையாட்டில் ஆழ்ந்து போயிருந்ததால், நாலைந்து தொண்டர்களுடன் பெரியவாள் அந்த வழியே வந்து கொண்டிருப்பதைக் குழந்தைகள் கவனிக்கவில்லை. கண்ணை கட்டியிருந்த சிறுவன் அப்படியே பெரியவாளைக் கட்டிக் கொண்டு விட்டான்! யாரோ ஒரு பையனை கட்டிக் கொண்டு விட்ட களிப்பில், தான் ஜெயித்துவிட்ட வெற்றிக்
களிப்பில், உற்சாகமாகக் கூச்சலிட்டான். கண்ணைத் திறந்து பார்த்தால் - ஜகத்குரு! நடு நடுங்கிப் போய்விட்டான்.பேச்சு வரவில்லை. தொண்டர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு துவம்சம் செய்யத் தயாராகி விட்டார்கள். பெரியவர்கள் எல்லோரையும் அடக்கினார்கள்.
பையனுக்கு அரை உயிர் போயிருந்தது. விளையாடிக்
Read 5 tweets
#மகாபெரியவா
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதாத்யயனம் நிறைவு பெற்று, இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீமகாசுவாமிகள் முன்னிலையில் நடந்தது. ஒவ்வொரு மாணவனும்,
வேதத்தின் சிற்சில பகுதிகளைக் கூறும்படி ஆக்ஞாபித்து, கவனத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு வித்யார்த்தி (மாணவன்), செவிக்கு இன்பமாகவும், தெளிவாகவும் ஒப்பித்தான். பெரியவாளுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
“இவனுக்கு என்ன மார்க் போட்டிருக்கு?” என்று தேர்வு நடத்திய
விற்பன்னர்களைக் கேட்டார்கள்.
“இரண்டாம் கிளாஸ்” என்று பதில் வந்தது.
பெரியவா, சில விநாடிகளுக்குப் பின், “மார்க் லிஸ்டை சரியாகப் பார்” என்றார்கள்.
தேர்வு செய்த பண்டிதர்கள் கொடுத்த மதிப்பெண்களை மறுபடியும் கூட்டிப் பார்த்தபோது, அந்தப் பையன் தான் மற்ற எல்லோரைக் காட்டிலும் அதிக மார்க்
Read 12 tweets
#மகாபெரியவா பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது அரிது
என்று சொல்லிவிட்டார்கள். பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.
‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக்காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல்
என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா. அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.
(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)
Read 8 tweets
#மகாபெரியவா ஸ்ரீ மஹாபெரியவா ஒரு நாள் வேடிக்கையாக ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் செய்ய வந்திருந்தவர்களை ஒவ்வொருவராய் 'ஒண்ணு, ரெண்டு, மூணு. நாலு என சுட்டிக் காட்டியபடி எண்ணினார். அப்படி சுட்டிக்காட்டப் பட்டவர்களாக,
ஸ்ரீவித்யார்தி நாராயணன்
ஸ்ரீசகட நாராயணன்
ஸ்ரீ நைவேத்யகட்டு
நாராயணன்
ஸ்ரீ மனக்கால் நாராயணன்
ஸ்ரீதிருநெல்வேலி நாராயணன்
ஸ்ரீதுவாரகா நாராயணன்
ஸ்ரீமதுரை நாராயணன்
என அன்று யதேச்சையாக வந்திருந்த நாராயணன் பெயர் கொண்டவர்களை ஒண்ணு ரெண்டு என ஏழு வரை எண்ணிவிட்டு பின் குறும்பாக "ஏழு நாராயணன் இருக்கா என்னோட சேர்த்தா எட்டு நாராயணன்" என்று ஹாஸ்யமாக
சொல்வது போல நாராயணனும் என்னுள்ளே என்ற சத்தியத்தை பூடகமாக உணர்த்தி அருளினாராம்

ஒருமுறை காமாக்ஷி அம்மன் கோயிலிலிருந்து ஸ்ரீமடம் திரும்பிக் கொண்டிருந்த ஸ்ரீபெரியவா வழியில் ஸ்ரீ சிவராம ஐயர் என்பவரின் வீட்டு திண்ணையில் சற்றே அமர்ந்தார்
வீட்டிலிருந்தவர்கள் பரபரப்பாகி
Read 7 tweets
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர். டி.எஸ். கோதண்டராம சர்மா.
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.

உண்மையான பக்தியுடைய அடியார், ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார். அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம், தவிப்பு, கவலை. ஒரு நாள் தட்டுத் தடுமாறி, "நான்
கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார். பெரியவாளுக்கு அந்த அன்பரைப் பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர், கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர். அப்படிப்பட்டவரை, 'யாத்திரை போய்
வா' என்பதா, 'உபாசனை செய்' என்பதா, 'கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய்' என்பதா?
"உனக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா?"
"தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லியிருக்கேன்."
"ஸ்ரீருத்ர சமகம்?"
"புஸ்தகத்தைப் பார்த்து
Read 6 tweets
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள்
செலுத்துவார். ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு
விட்டுப் போய்விட்டார்கள். மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.
"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை; காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படியெல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும், வேகாததுமாக சாதம்
Read 5 tweets
#மகாபெரியவா
நம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும்போது அந்த கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ கஷ்டம் என்று வந்துவிட்டால் முதலில் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை, அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டம் என்று அந்த கடவுளை திட்டுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். Image
ஆனால் அந்தக் கடவுளால் கொடுக்கப்படும் கஷ்டமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மையை தரும் என்பது நம்மில் சிலருக்கு புரிவதில்லை. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெரிய வசதிப் படைத்த ஜமீன்தார் மிகவும் நல்ல குணம் கொண்டவர். இவர் பல கோவில்களை சீர் அமைப்பதற்கு தன்னிடம் உள்ள செல்வத்தை
கொடுத்திருக்கின்றார். சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஜமீன்தாருக்கு ஒரு நாள் எதிர்பாராத வகையில் ஒரு பெரிய கஷ்டம் வந்துவிட்டது. அவரிடம் உள்ள சொத்துகள் எல்லாம் பறி போகும் அளவிற்கு அந்த கஷ்டமானது அவரை வாட்டி வதைத்தது. இவர் காஞ்சி பெரியவரின் பரம பக்தரும் கூட. தன் கஷ்டங்களை
Read 15 tweets
#மகாபெரியவா
நன்றி குமுதம் லைஃப்
தொகுப்பு- சிவானந்தன்.
18-10-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

அறுபத்தஞ்சு வயது வரைக்கும் மடத்துக்காகவே தொண்டு செய்து, பரமாசார்யா பாதமே கதி என்று இருந்தவர் பஞ்சாபகேசன் என்கிற தொண்டர், அதற்கு மேல் ஆசார்யாளுக்கு கைங்கர்யம் செய்ய
நினைத்தாலும் அவரின் தள்ளாமை இடம் கொடுக்கவில்லை. அதனால, பெரியவாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு தஞ்சாவூரில் இருந்த அவர் பிள்ளையிடம் போனார். அவரின் மகனும் நல்லவன் தான். ஆனா சதா காலமும் பெரியவா கைங்கர்யத்தில் இருப்பதற்கு அவன் நிலைமை இடம் கொடுக்கலை. அன்றாடம் உழைத்தால் தான் அன்றன்றைய
பிழைப்பு நடக்கும். பஞ்சாபகேசன் காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்குப் போய் விட்டாலும் பெரியவா பேரால் ஏதாவது கைங்கர்யம் செய்யணும்,தான தர்மம்னு முடிந்த அளவுக்காவது பண்ணணும் என்று நினைத்தார். ஆனா பெரிதா எதுவும் பண்ண முடியவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் அவர் மகன் பேச்சுவாக்கில்
Read 15 tweets
#மகாபெரியவா சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி இருந்தபோது மாலை தினமும் பிரசங்கம் நடைபெறும். பெரியவா பேச்சை கேட்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு செய்யவில்லை. பக்கத்தில் பேராசிரியர் சங்கரநாராயணன்
நிற்பதை பெரியவா பார்த்து அவரை பக்கத்தில் கூப்பிட்டார். அவரிடம் ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு வரியை சொன்னார்.
"உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?”
“பெரியவா மன்னிக்கனும். எனக்கு தெரியலை”
இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்கில் எல்லோருக்கும் கேட்டது.
கூட்டத்தில் ஒருவருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து பேராசிரியர் சங்கரநாராயணனிடம் “சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும். அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை பேராசிரியர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட,
“பெரியவா அந்த மீதி
Read 10 tweets
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய்
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த
Read 8 tweets
#மகாபெரியவா
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி, டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்க் கொண்டிருந்த போது, பட்டப்பகல் நட்ட நடுத் தெருவில் மஞ்சள் சரட்டில் கோர்த்து இருந்த திருமாங்கல்யம் பறி போய் விட்டது. ஒட்டி உரசினால் போல, சைக்கிளில் வேகமாகப் பறித்துச்
சென்று மறைந்து போனான். வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக் கொண்டாகி விட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில்
கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் - என்பதெல்லாம் நடை முறைப்படுத்த முடியாத செயல் திட்டம். எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும். மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read 8 tweets
#மகாபெரியவா
எழுதியவர்:ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தட்டச்சு:வரகூரான் நாராயணன்.

இது நான் நேரே பார்த்து நெகிழ்ந்த சம்பவம். அப்போது நுங்கம்பாக்கம் ஜம்புலிங்க நாயக்கர் தெருவில்
"உபநிஷத் ஆஸ்ரமம்" என்று ஒன்று இருந்தது. பரமாச்சாரியார் பட்டணத்துக்கு வந்தால் அங்கே தங்குவார். வெளியே கீற்றுக் Image
கொட்டகை போட்டிருப்பார்கள். கீற்றுத் தடுப்புக்குப் பின்னால் தான் பரமாச்சாரியார் உட்கார்ந்திருப்பார். மத்தியான நேரத்தில், சுமார் இரண்டு மணிக்கு மேல் பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்து அங்கே பாடுவார்கள். பரமாச்சாரியார் தரிசனம் கிடைத்த மாதிரியும் இருக்கும், சங்கீதம் கேட்ட
மாதிரியும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் அந்த நேரத்தில் வந்து கூடுவார்கள். நான் போயிருந்த அன்று, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடுகிறார். அந்தப்புறம் இருந்து பரமாச்சாரியார் கேட்டுக் கொன்டிருக்கிறார். மத்ய்மாவதி ராகத்தில் 'வினாயகுனி' பாடிக் கொண்டு இருந்தார் விஸ்வநாதய்யர். அதில்
Read 5 tweets
#மகாபெரியவா
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். எந்தவித முன் அறிவிப்பும், அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை. மடத்தைச் சேர்ந்தவர்கள் பதட்டம் அடைந்தனர். ஏனென்றால் மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை! Image
முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்க வேண்டும். மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து முதல்வர் கேட்டார்,
"ஏன் இந்தப் பரபரப்பு?"
அவரிடம் விபரம் சொல்லப்படுகிறது. மகா பெரியவர் 3 கி.மீ தொலைவில் ஒரு குடிலில் தியானத்தில் உள்ளார்.
"இவ்வளவு தானே? அங்கே போய்
அவரை தரிசித்துக் கொள்கிறேன்" என்று பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம். மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கி குடிலை நோக்கி நடந்து சென்றார். முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த
Read 9 tweets
#மகாபெரியவா நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய ஸ்ரீ ரமணி அண்ணா பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார்.
"க்ஷேமமா இரு. இப்போவே நெறைய கூட்டம் வரதாமே? பெரிய ஆஞ்சநேயரோன்னோ அதான் அப்படி ஒரு ஆகர்ஷணம். ஆமா, பெரிய ஸ்வாமியாச்சே! அவர் சாப்பிடறதுக்கு நெறைய நைவேத்யம் வேணுமே? என்ன பண்ணறே?" என்றார் Image
"தெனமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கறோம்"
"சுத்த அன்னமாவா?"
"இல்லே பெரியவா. சித்ரான்னங்களா தயார் பண்ணறோம்."
"என்னென்ன பண்ணறேள்?"
"காலேலேர்ந்து வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், புளியோதரை, மிளஹோரை, தயிர்சாதம்னு மாத்தி மாத்தி பண்ணறோம் பெரியவா"
"அவ்வளவையும் வாங்கிக்க நெறைய பக்த
ஜனங்கள் வராளோ?"
"அபரிமிதமா கூட்டம் வரது பெரியவா. அத்தனை ப்ரஸாதமும் செலவாயிடறது" என்றார் பெருமையுடன்.
சற்று மெளனமாக இருந்துவிட்டு "ப்ரஸாதத்தை எப்டி குடுக்கறேள்? துளி போறவா? இல்லே நெறையவா?"
“கையிலே வாழை இலையை குடுத்து வாரிக் குடுக்கறோம் பெரியவா" என்றார் பெருமை பொங்க.
"அதை நானும்
Read 9 tweets
#மகாபெரியவா "சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர், நளன் வரலாற்றை #நைஷதம் என்ற பெயரில் எழுதியுள்ளார். நிஷத நாட்டு மன்னர் என்பதால் நைஷதம் என்று பெயரிடப்பட்டது. நேர்மையும், ஒழுக்கமும் கொண்டவன் நளன். அவன் அழகைக் கேள்விப்பட்ட தமயந்தி நளனைப் பார்க்காமலே காதல் கொண்டாள். ஆனால், இதை
அறியாத தமயந்தியின் தந்தை பீமன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். பூலோக அரசர்கள் மட்டுமில்லாமல் தேவர்களும் தமயந்தியின் அழகு கண்டு மயங்கினர். தமயந்தி நளனை விரும்பும் விஷயம் அறிந்த தேவர்கள் தாங்களும் நளன் போல உருமாறினர். சுயம்வர மண்டபத்தில் ஐந்து நளன்கள் அமர்ந்திருந்தனர். மணப்பெண்
தமயந்திக்கு சரஸ்வதி தேவி ஒவ்வொரு ராஜகுமாரன் பற்றியும் விளக்கம் அளித்தாள். அதில் இருந்த காஞ்சிபுரம் மன்னர் பற்றி, இவர் காஞ்சியில் கடல் போல பெரிய குளம் உருவாக்கியுள்ளார். ஸ்படிகம் போல தூய நீர் நிரம்பிய, அந்தக் குளத்தின் அழகை வர்ணிக்க முடியாமல் கவிஞர்களே மௌனமாகி விட்டனர். அதில்
Read 6 tweets
#மகாபெரியவா கட்டுரை எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாக Image
செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பரம்பரையாக வந்த வீட்டில் வசித்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பில் இருந்து வந்த வருமானம் ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி செய்தது. மகா பெரியவாளை
நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார் ராமஸ்வாமி. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. "பெரிய பெண்ணுக்கு 22வயதாகிறது. அடுத்தவளுக்கு 20. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்
Read 18 tweets
#மகாபெரியவா
தொகுப்பாளர்- டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடம் எசையனூரில் முகாம் இட்டிருந்தது. வந்திருந்த எல்லா பக்தர்களுக்கும் காலையில் இருந்தே தரிசனம் கொடுத்துக் கொண்டும், சில பேர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்கள் பெரியவர்.
பிற்பகல் மணி
இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில், காலையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஓர் அடி கூட நகர்ந்து விடாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் இருந்து சிப்பாய், வெங்கடேசன் என்று இரண்டு பேர் வந்தனர். தினமும் தரிசனத்துக்கு வந்து பெரியவாளுக்கு அறிமுகம்
ஆனவர்கள். இருவரும் நேரே பெரியவாளிடம் போனார்கள்.
"இதப்பாரு..இப்ப மணி என்ன தெரியுமா? பன்னண்டுக்கு மேலே ஆச்சு. பொழுது விடிஞ்சதிலேர்ந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம உட்கார்ந்திருக்கியே? ஏன் பட்டினி கிடக்கே? போய் சாப்பிடு" என்றார்கள்.
மெய்ப்பணியாளர்கள் திகைத்துப் போய் விட்டனர்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!