Discover and read the best of Twitter Threads about #யானை

Most recents (5)

மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!

கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
Read 27 tweets
சங்க கால இனக்குழு சமூகத்தின் வேட்டை வாழ்க்கை முறை...!

இனக்குழு வாழ்வில் குழு வேட்டையே முதன்மையானது. மிகச்சில தருணங்களில் தனிநபர்களும் வேட்டைக்குச் சென்றார்கள் (நற். 59).

சங்க காலத்தில் உடும்பு, நுணல், ஈயல், முயல் போன்ற சிறு விலங்குகளைத் தனிநபர்கள் வேட்டையாடினார்கள்.
இதற்கு மாறாக #கானவர், #வேட்டுவர், #குறவர் முதலானோர் காடுகளிலும் மலைகளிலும் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடினார்கள்.

இனக்குழுச் சமூகத்தில் வேட்டையாடி உணவு சேகரித்தல் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்ததால், விலங்கினப் புரதமும் தாவரவினப் புரதமும் ஏறக்குறைய சம அளவு இருந்தன.
இது உலகளாவிய நிலையில் இனவரைவியல் கண்டுள்ள உண்மையாகும்.

சங்க கால இனக்குழுச் சமூகத்தினரும் இதனையே பிரதிபலிக்கின்றனர்.

சங்க கால #வேட்டுவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே #விற்பயிற்சி மேற்கொண்டனர்.

ஊகம்புல்லின் நுண்ணிய குச்சியில் புழையையுடைய வெள்ளிய முள்ளைச் செருகி, அம்புகளாக்கி...
Read 20 tweets
#யானை 🐘❤️

யானைகளைப்பற்றிய சில சுவாரசிய தகவல்கள் - வாட்ஸப்பில் வந்தது!

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்?
நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?”

யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள். யானை எனும் பேருயிரியின் மீதான நம் காதல்
அதிகரித்துக்கொண்டே செல்கிறது. யானைகள் குறித்த புத்தகம் ஒன்றும் தயாராகி வருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு சிறிய பகுதி இதோ..

“ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல்
Read 11 tweets
#யானை பற்றிய சிறப்பான தகவல்கள்.

யானை 22 மாதங்கள் #கருவை சுமக்கும்.

யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் #குட்டி போடும்.

அதன் #தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.

சில நேரங்களில் #இரண்டு குட்டிகள் கூட போடும்.

ஒரு யானை ஒரு #காட்டையே உருவாக்கும். +
ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ #உணவு சாப்பிடும்.

ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் #தண்ணீர் குடிக்கும்.

250 கிலோ உணவில் 10% #விதைகள் இருக்கும்.

சாணத்தில் இருந்து 10 கிலோ #விதைகள் காட்டில் விதைக்கப்படும்.

யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் #விதைக்கும் +
யானை ஒரு நாளில் 100 மரங்களை #நடுகிறது.

ஒரு வருடத்திற்கு 36500 #மரங்கள் நடுகிறது.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் #மரம் வளர காரணமாகிறது.

அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக்கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் +
Read 9 tweets
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.

#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.

அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!