Discover and read the best of Twitter Threads about #வளர்க_பாரதம்

Most recents (24)

அருள்மிகு மாரியம்மன் கோயில், வண்டியூர், மதுரை

இரு அம்பிகை தரிசனம் :
 
அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. 🙏🇮🇳1
யட்ச குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி, தன் சக்தியிலிருந்து ஒரு மாயசக்தியை தோற்றுவித்தாள். 🙏🇮🇳2
அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, 🙏🇮🇳3
Read 21 tweets
அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்,திண்டுக்கல்

குரு வழிபாடு:
 
திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது. பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். 🙏🇮🇳1
இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.🙏🇮🇳2
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். 🙏🇮🇳3
Read 9 tweets
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை

செந்தூர விநாயகர்:

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். 🙏🇮🇳1
சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். 🙏🇮🇳2
இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.

🙏🇮🇳3
Read 34 tweets
திருமலை  திருப்பதி  தரிசன  நடை முறைகள்

திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை  மட்டும்  தரிசித்துவிட்டு வருவது தவறு.    திருமலை  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி  மரபு இருக்கிறது...  இந்த மரபு ராமானுஜர் காலத்தில்,  அவரால்  தொடங்கி,  கடைபிடித்து  வரப்படுகிறது.

🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால்  திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன்  முதலில்  வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்

1வது கோவில் அலமேலுமங்காபுரம்.

கீழ்திருப்பதியில்  பேருந்து நிலையத்திலிருந்து  5வது கிலோமீட்டரில்    அமைந்துள்ளது. 

🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.  தாயாரின்  பரிந்துரை   அடிப்படையில்தான்  பெருமாளின்  கருணை  கிடைக்கும்.

காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.

🙏🇮🇳3
Read 49 tweets
*நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :*

நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*

மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
Read 19 tweets
சுருளிமலை அதிசயம்....!

தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.

🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.

🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3
Read 7 tweets
*குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா*

தென்தமிழக ஊர்களில் தனித்துவ சிறப்பானது...!!!

திருச்செந்தூர் : தசரா என்றதுமே, இந்தியர்களுக்கு பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது, நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள்தான். 

🙏🇮🇳1
1.மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள்.

2.யானை அணிவகுப்புகள்.

3.குஜராத்தின் தாண்டியா நடனம்.

4.கொல்கத்தாவின் துர்க்கா பூஜை.

🙏🇮🇳2
ஆனால் தமிழர்களுக்கு அவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் தென்கோடியில் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா தான்.

🙏🇮🇳3
Read 38 tweets
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர். அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். 🇮🇳🙏1
அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும். எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. 🇮🇳🙏2
தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம் யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்தி?ப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.

🇮🇳🙏3
Read 7 tweets
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம்

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது.

🙏🇮🇳1
அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். 🙏🇮🇳2
ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது.

🙏🇮🇳3
Read 8 tweets
அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம்

ஒரு சமயம் பிரம்மாவிற்கு, படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது என்றும், சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிடம் படைக்கும் சக்தி இல்லை என்பது குறித்தும் கர்வம் ஏற்பட்டது. 🙏🇮🇳1
இதையறிந்த விஷ்ணு, பிரம்மனின் கர்வத்தை நீக்க ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். அப்பூதத்தை பார்த்து பயந்துபோன பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். 🙏🇮🇳2
அதற்கு விஷ்ணு, உன்னுடைய கர்வத்தை அடக்குவதற்காகவே நான் இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் உன்னை விட்டு மறந்து போகும், என்று சாபமிட்டார். அதனால் வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். 🙏🇮🇳3
Read 8 tweets
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில்,திருவையாறு.

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்பதை தெரிந்துகொள்ள முதலில் நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பார்.

🇮🇳🙏1
நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை ஆகும். சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர் ஆவார்.

🇮🇳🙏2
பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார்.

அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். 🇮🇳🙏3
Read 6 tweets
நாளையதினம் சர்வ அமாவாசை தினம்!.

குடும்பத்தில் இரத்த சொந்தங்கள் மரணமடைந்து இருந்தால் அவர்களை நினைத்து வழிபாடு செய்யும் தினம்.

ஒவ்வொறு மாதமும் அமாவாசை வரும் ஆனால் சில அமாவாசைகளுக்கு விஷேசம் உன்டு.

அதில் மிக அற்ப்புதமான நாளைய அமாவாசை மிக மிக சிறப்பு வாய்ந்தது.
இந்த தினத்தில் நீர்நிலை பகுதிகளில் இரு கைகளில் தண்ணீரை எடுத்து அவரவர் இரத்த உறவுகளை மனதார நினைத்து தண்ணீரை நீரோடு விடுவது சிறப்பு.

இதை சாதாரனமாக எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
அடுத்ததாக இரத்த உறவுகள் ஆசைப்பட்ட பொருட்களை தானமாக இயலாதவர்களுக்கு கொடுப்பது மிக நல்லது.

முக்கியமாக உனவு பொருட்களாக இருந்தால் மிக சிறப்பு.
Read 7 tweets
அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், தோவாளை, கன்னியாகுமரி

🇮🇳🙏1
சஷ்டி விழாவின் போது முதல்நாள் பாலமுருகன் வடிவத்திலும், சிவபெருமான் வடிவத்திலும், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4-வது நாள் சங்கர நாராயணன் வடிவத்திலும், 5-வது நாள் சக்தியின் வடிவத்திலும், 🇮🇳🙏2
6-வது நாள் போர்க்கோல முருகன் வடிவத்திலும் மூலவர் அலங்காரம் செய்யப்படுவார். வேறு நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப வேலன், வேடன், விருத்தன் ஆகிய கோலங்களில் மூலவரை அலங்கரிப்பதும் உண்டு. 🇮🇳🙏3
Read 7 tweets
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், கன்னியாகுமரி

நம்மாழ்வாரின் தாயார் பிறந்ததலம் :
 
திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. 🙏🇮🇳1
குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. 🙏🇮🇳2
பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். 🙏🇮🇳3
Read 9 tweets
அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில், கன்னிமார்பாளையம், திண்டுக்கல்

ஆலயத்தின் நுழைவாயிலைத் தொடர்ந்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி சூல வடிவில் பெரியசாமி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1
அடுத்துள்ள கருவறையில் சப்தகன்னியர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் ஆவி எனப்படும் ஒரு வகை மரம். இம்மரம் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இம்மரத்தின் அடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேற்குப் பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது.

🙏🇮🇳2
ஆதியில் சப்த கன்னியரின் திருமேனிகள் இம்மரத்தின் அடியில்தான் இருந்தன. பின்னரே தனி ஆலயம் அமைத்து கருவறையில் சப்தகன்னியர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த அழிஞ்சி மரத்திற்கு ஊஞ்சல் மரம் என்ற பெயரும் உண்டு. கிழக்குப் பிரகாரத்தில் ஐம்பது ஆண்டுகள் பழமையான மின்னமரம் உள்ளது.🙏🇮🇳3
Read 6 tweets
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்

எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.

🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
Read 27 tweets
வியக்க வைக்கும் எல்லோர கைலாசநாதர் திருக்கோவில்..!!

ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால்இ ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால்.... இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.

🙏🇮🇳1
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராஇ குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

🙏🇮🇳2
மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில்இ குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

🙏🇮🇳3
Read 8 tweets
அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்

மயிலாப்பூர் :
 
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார்.மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. 🇮🇳🙏1
பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது.

🇮🇳🙏2
கபாலீசுவரம் :

பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

🇮🇳🙏3
Read 14 tweets
#108_திவ்ய_தேசங்கள்*

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 🙏🇮🇳1
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

🙏🇮🇳2
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

🙏🇮🇳3
Read 48 tweets
அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம்

குருபூஜை விழா:
 
வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை 11 நாட்கள் நடக்கிறது. குருபூஜை விழாவின் மூன்றாம் நாளில் இவர் சோழ மன்னனுக்கு மந்திரியாக பொறுப்பேற்று மந்திரி அலங்காரத்தில் புறப்பாடாகிறார். 🇮🇳🙏1
சேக்கிழார் கட்டிய திருநாகேஸ்வரர் கோயில், இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவபூஜை செய்கிறார்.

🇮🇳🙏2
ஆறாம் நாளில் பெரிய புராணம் இயற்றிய வைபவமும், பின்பு சேக்கிழார் நடராஜருடன் சேர்ந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 எட்டாம் நாளில் பெரியபுராணம் அரங்கேற்றமும், சேக்கிழாருக்கு குன்றத்தூர் முருகன் காட்சி தரும் வைபவமும் நடக்கிறது. 🇮🇳🙏3
Read 5 tweets
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்

துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், 🙏🇮🇳1
ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். 🙏🇮🇳2
பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.

 🙏🇮🇳3
Read 24 tweets
அருள்மிகு உத்தமர் கோயில், உத்தமர் கோவில் திருச்சி

பிரம்மன் சன்னதி :

படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார்.

🇮🇳🙏1
பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.

🇮🇳🙏2
அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.

 🇮🇳🙏3
Read 11 tweets
II பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரஸிம்ஹர் ||

நடு நாட்டு வைஷ்ணவத் ஸ்தலங்களில் பரிக்கல் ஸ்தலம் தனித்துவம் கொண்டது.

பரிக்கல் ஆலய கருவறைக்குள் மத்வ பீடாதிபதியான ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.

🙏🇮🇳1
உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

இத்தலத்து லஷ்மி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

🙏🇮🇳2
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

🙏🇮🇳3
Read 13 tweets
அருள்மிகு கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை

கருப்பண்ணசுவாமி :
 
இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

🇮🇳🙏1
கோட்டை :
 
விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக ??செலுத்துவார்கள்.

🇮🇳🙏2
அழகர் ?கோயில் தோசை :
 
காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

🇮🇳🙏3
Read 36 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!