Discover and read the best of Twitter Threads about #வாட்சாப்_நீதி_கதைகள்

Most recents (5)

#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#அடேய்_லகுட_பாண்டிகளா 🤦
மகுட நாட்டு அரசன் மயூரன் வருத்தத்தில் இருந்தான். தன்னுடைய சந்தேகப் புத்தியால் தான் இவ்வாறு நடந்து விட்டது என பெரும் கவலையுற்றான். அவையில் எல்லோர் முன்னிலையிலும் தலைமை அமைச்சரைப் பற்றி தவறாக பேசியதால் தலைமை அமைச்சர் சாம்பு
கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இத்தனை ஆண்டு காலம் நல்ல விசுவாசமாக இருந்த திறமையான அமைச்சர்.‌
🔥அரசு நிர்வாகம்,
🔥நிதி,
🔥நீதி
என அனைத்தையுமே அவரே இத்தனையாண்டு காலம் கவனித்து வந்தார். அவர் சென்று விட்டதால் அரசவையில் தினசரி அலுவல்களே நடைபெற திணறியது.!
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு அரசன், மக்கள் நலப் பணிகளை திறம்பட நிர்வகிக்க பதிதாக மூன்று படித்த இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அமைச்சர்களாக நியமித்து, அவர்களுக்கு சற்று அதிகமாகவே அதிகாரங்களையும் கொடுத்தான்..! ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
Read 26 tweets
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#அறப்பணி 🙋
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். நரைத்த தலை, சிறிது தளர்ந்த தேகம் கொண்ட அந்த ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை...🤔
எனவே, நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார்.
இளைஞர்,"மிக்க நலம் ஐயா, நான் ஆசிரியராக உள்ளேன் "என்றார்.
மேலும் அந்த இளைஞர் " நான் உங்களால் தான் தூண்டப்பட்டு, உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியராக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் பணியாகிய ஆசிரியர் பணியில் உள்ளேன் " என்றார்.
Read 18 tweets
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#Self_Dabba 🥁

பஞ்சாயத்து தலைவர் பரமசிவம் ன்னா ஒருசிலருக்கு தான் தெரியும். ஆனா, Self Dabba பரமசிவம் ன்னா பதினெட்டு பட்டிக்கும் தெரியும்.
ஆமாங்க , சுய தம்பட்டம் அடிச்சிக்கறதுல இவருக்கு நிகர் இவரு தான். எங்க , என்ன விசயம் பேசினாலும் இவரை பத்தி இவரே பெருமை பீத்திக்குவாரு..! கேட்கறவங்க நிலமை தான் பாவம்..!
ஒரு முறை பஞ்சாயத்து டீ.வி.யில தசாவதாரம் படம் போட்டாங்க.
அங்க வந்த Self Dabba , அதாங்க நம்ம பரமசிவம்,
"இதென்னையா பிரமாதம் நானெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கறப்ப பதினோரு வேசம் போட்டு ஊருல கூத்து கட்டுவேன்"
ன்னு அடிச்சு விட்டார். பசங்கெல்லாம் கடுப்பாயிட்டாங்க..!

ஒருமுறை கிராமத்துல தண்ணி பிரச்சினை, மக்கள் ஒன்னு கூடுனதும் நேரா ஏதோ ஒரு அதிகாரியை பார்க்க போறேன்னு கிளம்பி போயிட்டாரு.
Read 24 tweets
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#மோசஸ்_என்னும்_நான் 😂

திருநெல்வேலி,
பாளையங்கோட்டையில ஒரு சின்னப்பையன் இருந்தான்.
அவன் பெயர் தான் மோசஸ். எல்லாரும் அவனை மோசே ன்னு செல்லமா கூப்பிடுவாங்க..!

ஆனா அவனுக்கு சுத்தமா படிப்பு வரவேயில்லை.!🙄
அவன் நல்லா படிச்சா புளியம்பட்டி அந்தோணியார் கோவில்ல அவனுக்கு மொட்ட போடுறதா வேற அவங்க அம்மா வேண்டியிருந்தாங்க..!படிப்புல பின்தங்கி இருந்தாலும் பரவால்ல, ஆனா அவனோட முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது..!
எல்லாமே தப்பு தப்பாதான் பண்ணான். அவனை யாராலும் ஒன்னும் பண்ண முடியல.!🙁
ஒரு கட்டத்துல மோசேயை சமாளிக்க முடியாமல் ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்.!
இப்படி ஆனதும்,
சங்கடத்தோட மோசேயோட அம்மா பாளையங்கோட்டையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்துட்டாங்க..!😊
Read 12 tweets
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#சொம்பு 🍯

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான்.

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். 😂
மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.

‘முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல’ என்று மன்னர் மறுத்தார்.
‘சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்… ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்’ என்றாள் மகாராணி.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!