Discover and read the best of Twitter Threads about #வாழ்கபணமுடன்

Most recents (16)

வங்கிகள் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன?

ஒரு சிறிய இழை. படித்து, பயன்பெறவும்.

1. லோன் எடுக்கையில் இன்சூரன்ஸ் "கட்டாயம்" என்று சொல்லுவது.

வாகன இன்சூரன்ஸ் தவிர, மற்ற எந்த இன்சூரன்சுமே இந்தியாவில் கட்டாயம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு: bit.ly/skymanwp
Insurance is a subject matter of solicitation.
இன்சூரன்ஸ் எடுப்பது தனிநபர் விருப்பத்தை பொறுத்தது. வங்கிகள், பெரும்பாலும், லோன் எடுப்பவர்களைத்தான் குறி வைக்கின்றன. அவர்களுடைய ரிஸ்க்கை குறைக்க, மற்றும் upselling மூலம் தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய பொருட்களை விற்க, இந்த வழியை
பயன்படுத்துகின்றன.

பர்சனல் லோனுக்கு இன்சூரன்ஸ் தேவையில்லை. ஏனென்றால், அதனுடைய ரிஸ்க் அதிகமாதலால், வட்டியும் அதிகம். நீங்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. அந்த ரிஸ்க்கை அவர்கள் தான் எடுக்க வேண்டும். நாம் அல்ல.

வீட்டு லோன் மற்றும் நகைக்கடன் - இவை இரண்டுமே, loan against
Read 15 tweets
#SVB Silicon Valley Bank பிரச்சனை - பயந்து ஓடலாமா? துணிந்து இறங்கலாமா? ஒரு சிறப்புப் பார்வை.

மார்ச் 8, 2023 அன்று அந்த வங்கி, தனது balance ஷீட் அட்ஜஸ்ட்மென்ட் க்காக $2.25 பில்லியன் கடன் வாங்கப் போவதாக சொன்னது. இந்த அறிவிப்பு சந்தை மற்றும் வங்கி வட்டாரங்களில் தீயைப் போல பரவியது.
2008 வீழ்ச்சி போல் இது ஆகி விடுமோ என்கிற பயத்தில் பீதியடைந்த முதலீட்டாளர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் $42 பில்லியன் தொகையை withdraw செய்தனர்.

SVB, அமெரிக்காவின் 16 ஆவது பெரிய வங்கி. 40 வருட பாரம்பரியம் கொண்டது. $175 பில்லியன் அளவுக்கு வாடிக்கையாளர்களின் டெபாசிட்ஸ் வைத்திருந்தது
இந்த வங்கியில் பெரும்பாலும் Startup நிறுவன முதலீட்டாளர்களே அதிகம்.

என்ன நடந்தது?

கடந்த 2020 வருடம், அதன் Balance ஷீட் ல் இருந்த தொகை, மொத்தம் $55 பில்லியன். வெறும் இரண்டு வருடங்களில், அந்த தொகை $186 பில்லியன் ஆனது.

எப்படி?
2020-22 வருடங்களில் வெளியான IPO வில் பெரும்பான்மையான
Read 16 tweets
EPF - அதிக பென்ஷன் பெரும் தேர்வு.

செப்டம்பர் 1, 2014 தேதியன்று நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்திருந்தால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியம் (ஓய்வு பெற்ற பிறகு) பெறுவதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு அதற்கான தெரிவை தெரிவிக்க சொல்லியிருப்பார்கள்.
சரி. அப்படீன்னா என்னன்னு குழப்பமா இருக்கா? சொல்றேன்.

மாதா மாதம் உங்களுக்கு PF தொகை (நிறுவனத்தின் contribution - 12% of Basic) உங்கள் நிறுவனம் செலுத்தும் அல்லவா? நிறுவனம் செலுத்தும் தொகையை நீங்கள் கவனித்து இருந்தீர்களானால், அது உங்களின் contribution ஐ விட சற்றே குறைவாக இருக்கும்
ஏனென்றால், நிறுவனம் செலுத்தும் தொகை இரண்டு பிரிவாக செலுத்தப்படும்.
EPF - Employee Provident Fund
EPS - Employee Pension Scheme

இதில் EPS க்கு செலுத்தும் தொகை எப்பொழுதுமே ஒரே தொகையாக இருக்கும் (8.33% of ₹15,000 = ₹1,250). ஏனென்றால், இதுவரை, இதன் சம்பள உச்சவரம்பு ₹15,000 ஆக
Read 12 tweets
Asset க்கும் Liability க்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தவொரு பொருள் உங்களின் முதலீட்டிற்கு பணமீட்டித் தருகிறதோ, அதுதான் Asset.

நீங்கள் கடனில் வாங்கிய வீடு (தற்பொழுது குடியிருப்பது), Asset அல்ல. கடனில் வாங்கும் எதுவும் Asset கிடையாது.
வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.

₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.

அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
அதுவே, ஒரு வீட்டை கடனில் ஒருவர் வாங்கி, அது அவருக்கு மாதா மாதம் காட்டுகிற EMI + சொத்துவரி + Maintenance இவற்றைவிட அதிகமாக வாடகை வருமானம் ஈட்டித் தந்தால், அப்பொழுது அது Asset வகையில் சேரும்.

ஆனால் வாடகை வருமானம் எப்பொழுதுமே நாம் கட்டும் EMI யில் 1/3 தான் இருக்கும். அதுதான் உண்மை.
Read 6 tweets
வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது?

bit.ly/skymanwp
1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?

உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?

வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?

₹37,36,000 (₹40 லட்சம் - அசல் கட்டியது ₹2,64,000)

பிரச்சனை என்னவன்றால், இந்த புதிய வங்கி, இந்த கடனை
Read 8 tweets
உங்கள் வயது 40+ ஆ?
போதுமான அளவு சேமிக்கவில்லை என்கிற அச்சம் உங்களை வாட்டுகிறதா? எதிர்காலத்தை பற்றிய பயமுள்ளதா?

சற்றே பயப்படுத்தலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவது போல் இந்த வயது ஒன்றும் தாமதமான வயதல்ல.

மேலும் விபரமறிய: wa.me/message/GCVBKT…
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும் போது, அதிக வருமானத்தை விட 'அதிகமாக சேமிப்பதில்' தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. என்ன இவ்வளவு சுலபமா என்கிற ஐயம் எழுகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
நம்மில் பலர் 40 வயதை எட்டும் வரை முதலீடுகளையும் சேமிப்பையும் தள்ளிப்போடுகிறோம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அது அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது. 40 வயதை அடையும்போது கொஞ்சம் பயமும் சேர்ந்து விடுகிறது. ஐயையோ, நாம் நமது வாழ்க்கைக்கு தேவையான அளவு சேமிக்கவில்லையே என்று.
Read 21 tweets
முதல் முறையாக வீட்டுக்கடன் வாங்கப் போறீங்களா? இந்த இழையைப் படித்துவிட்டு பின்னர் தொடங்குங்கள்.

இழையை படிக்கும் முன், எனது வீட்டுக்கடன் தொடர்பான முந்தைய இழையை படித்துவிட்டு வரவும்.



மேலதிக விபரங்களுக்கு: wa.me/message/GCVBKT… Image
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமது சிறு வயதிலிருந்தே நம் எல்லோருடைய மனத்திலும் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் விரும்பும் மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். Image
கடந்த காலத்தில் மக்கள் தங்கள் முதல் வீடுகளை வாழ்க்கையில் மிகவும் தாமதமாக வாங்கினார்கள். ஆனால் தற்போதைய தலைமுறையோ, வீட்டுக் கடன்களைப் பெறுவது மிகவும் எளிதாக இருப்பதால், தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே வீடு வாங்க முனைகின்றனர். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.
Read 22 tweets
SIP என்றால் என்ன? SIP யில் எப்படி முதலீடு செய்வது? ஏன் இதனை ஒரு சிறந்த முதலீட்டு முறையென சொல்கிறார்கள்? பார்ப்போமா?

SIP என்றால் "Systematic Investment Plan".

அதாவது...
ஒவ்வொரு மாதமும்,
ஒரு குறிப்பிட்ட தொகையினை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
தவறாமல் முதலீடு செய்து வருவது.
சரி. முதலீட்டு வழிகளில், இதைத்தான் சிறந்ததொரு வழியென்று சொல்கிறார்களே. ஏன்?

பொதுவாக, முதலீடு செய்யும்போது, consistency மற்றும் discipline, இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. இதனை பின்பற்ற பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் முடியாது.
இந்த இரண்டையும், SIP முறை முதலீடு, முதலீட்டாளர்களை தவறாமல் பின்பற்ற வைக்கிறது. Automated Debit மூலம் Discipline மற்றும் consistency யை கொடுக்கிறது.

சரி. SIP மூலம் எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?
1) Mutual Funds (பரஸ்பர நிதி)
2) Shares (பங்குகள்)
Read 11 tweets
வீட்டுக் கடன்கள் - An Alternative Approach

ரொம்ப மாசங்களா, வீட்டுக் கடன் பத்தியும், அதை கடன் மாதிரி பாக்காம, முதலீடு மாதிரி consider பண்ணினா, என்னவெல்லாம் செய்யணும்ன்னு ஒரு திரட்டு போடணும்ன்னு பிளான் பண்ணி, இப்போதான் பண்ண முடிஞ்சிது. முழுக்க படிங்க.
உங்களுக்கு/உங்க குடும்பத்துக்கு இந்த முறை சரியாக தோன்றினால், அதை செய்யுங்க. போதும்.

இந்த திரட்டுக்கு நாம எடுக்கப் போற கடன் விபரங்கள்:
தொகை: ₹60,00,000 (60 லட்சம்)
EMI தொகை: ₹50,186
கடன் காலம்: 20 ஆண்டுகள்
நீங்கள் செலுத்தும் மொத்த தொகை: ₹1,20,44,737
விலையில்லா வீடு:

நீங்க வாங்குற வீடு, உங்களுக்கு 20 வருட முடிவில் எந்தவொரு செலவுமில்லாமல் இலவசமாக வேண்டுமா? நான் சொல்லும் வழியை பின்பற்றுங்கள்.

EMI செலுத்துவது கூடவே, ₹15,000 க்கு ஒரு SIP தொடங்குங்கள். அந்த SIP முதலீட்டுத் தொகையை வருடா வருடம் 10% அதிகரித்துக் கொண்டே வாருங்கள்.
Read 6 tweets
பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை நமது குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லித் தருவது?

வேகமாக வளர்ந்துவரும் காலத்தின் கட்டாயத்தினால், நம்முடைய குழந்தைகள் பல விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில், நமக்கு 30+ வயதினிலே தெரிந்த பணத்தை கையாளும் விதங்களை இப்பொழுதே
பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது நல்லது என்றே கருதுகிறேன்.

சரி. முடிவு செய்தாகிவிட்டது. எப்படி கற்றுக் கொடுப்பது?

கற்றுக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன:
• விளையாட்டின் மூலம்
• நிஜ வாழ்க்கை அனுபவங்கள் மூலம்.

நிஜ உலகில் கற்றலை எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால்?
"ஒரு படி முன்னே" என்ற எனது உத்தியைப் பயன்படுத்தவும்.

இதைச் செய்வதற்கான சில வழிகள் இங்கே:

• எல்லா இடங்களிலும் பணம் வைத்திருப்பதில் இருந்து ஒருவித வங்கி அமைப்புக்கு செல்லுங்கள்.

அவர்களின் பணப்பை, பாக்கெட்டுகள் மற்றும் படுக்கையறையின் தரை போன்ற வெவ்வேறு இடங்களில் பணம் இருந்தால்,
Read 16 tweets
சம்பள உயர, சேமிப்பும் உயரட்டும்.

வருடாந்திர appraisals இந்நேரம் முடிவடைந்து சம்பள உயர்வு கடிதங்கள் இந்நேரம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இல்லையா? சம்பள உயர்விலிருந்து கூடுதல் பணத்தை எவ்வாறு செலவிடுவது என்று உங்களில் பெரும்பாலோர் ஏற்கனவே திட்டமிட்டிருப்பீர்கள் இல்லையா?
என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எதில் EMI கட்டி வாகனங்கள்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கலாம், எங்கெங்கு வெளிநாட்டு சுற்றுலா செல்லலாம் போன்றவற்றை திட்டமிட தொடங்கி இருப்பீர்கள்.

கொஞ்சம் பொறுங்கள்.

நான் சொல்வதை கேட்ட பிறகு, உங்கள் பிளானிங்கை தொடருங்கள் (உங்கள் மனது மாறாவிட்டால்).
அதற்கு முன்னர்:

Financial planning எப்படி செய்வது என்கிற வழிமுறைகளை கீழ்க்கண்ட திரட்டியில் தந்துள்ளேன். படித்து, புரிந்துகொண்டு, முயற்சி செய்து பார்க்கவும்.

Read 13 tweets
பணவீக்கம் (Inflation) - ஒரு பார்வை...

பணவீக்கம் என்பது பலருக்கும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் அதன் தாக்கத்தை நாம் அனைவரும்தினசரி அனுபவிக்கிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், அதே விலைக்கு குறைவான quantity கிடைப்பது போன்றவை பணவீக்கத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பணவீக்கம் எவ்வாறு செயல்படுகிறது?
அது உங்கள் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

பணவீக்கம் உங்களது பொருளாதாரத்திற்கு எதிரி. அந்த எதிரி எப்படியெல்லாம் உங்களை தாக்கக் கூடுமென்று புரிந்து வைத்துக்கொள்வது வரப்போகும் சிக்கல்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும்.
பணவீக்கம் என்பது காலப்போக்கில் பணத்தின் மதிப்பு அதிகரிப்பதாகும். அது - மளிகைப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம், வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் முதலீடுகளின் வருமானத்தையும் பாதிக்கிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்த வருடம் ₹100க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
Read 17 tweets
அடுத்த வாரம் - பொருளாதார நிகழ்வுகள்

வரும் வாரம் (17 ஜனவரி - 21 ஜனவரி) பங்குச்சந்தையை பாதிக்கக் கூடிய நிகழ்வுகள்
ஜனவரி 17
காலாண்டு முடிவுகள்: UltraTech Cement, Tata Steel Long Products, Hathway Cable & Datacom and Sonata Software

சீனாவின் ஜிடிபி மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி பற்றிய அறிக்கைகள் வெளியாகவுள்ளன.
ஜனவரி 18
காலாண்டு முடிவுகள்: ICICI Prudential, Bajaj Finance, Just Dial, L&T Technology, Network18, ICICI Securities, Tata Elxsi, Trident and TV18 Broadcast

Bank Of Japan வட்டி விகித முடிவுகள்

Euro Area Economic Sentiment

OPECன் மாதாந்திர எண்ணெய் சந்தையின் அறிக்கை
Read 7 tweets
பங்குச்சந்தை முதலீடு - எச்சரிக்கை பதிவு

சென்ற வாரம் அன்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். Portfolio மேனேஜ்மென்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய உறவினர் ஒருவருக்கு, பங்குச்சந்தையில் டிரேடிங் செய்யும் ஒரு நிறுவனத்திடமிருந்து வந்த offer பற்றி என்னிடம் சொன்னார்.
அதாவது, நாம் அவர்களிடம் டீமேட் அக்கௌன்ட் தொடங்கி, ₹1,00,000 டெபாசிட் செய்து, ID மற்றும் Password அவர்களிடம் கொடுத்து விட்டால், நமது சார்பாக டிரேடிங் செய்து அவர்கள் நமக்கு வரும் லாபத்தில் 30% எடுத்துக்கொண்டு 70% நமக்கு தந்து விடுவார்களாம்.
இது போல நிறைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. Modus Operandi மேலே சொன்ன முறைகள் தான். இந்த அணைத்து நிறுவனங்களும் தங்களுக்கே உரிய properietory டீமேட் applications வைத்துள்ளன. இவர்களுடைய நோக்கம் நமக்கு லாபம் சம்பாதித்து கொடுக்க அல்ல. அவர்களுக்கு brokerage ஈட்டவும், நம்முடைய balance
Read 13 tweets
நாம் ஏன் இளம் வயதிலேயே முதலீட்டு பழக்கத்தை தொடங்க வேண்டும்?

1. அதிக ரிஸ்க் மற்றும் அதற்கேற்ற returns எடுக்க சரியான தருணம்.

ஒரு 25 வயது முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும், 40 வயதான முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும் ஒரே மாதிரி இருக்காது. இருக்கக் கூடாது.
அதாவது, ஒரு 25 வயது முதலீட்டாளர், சந்தை சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யும் விகிதம் 75% (100 மைனஸ் உங்கள் வயது). மீதமுள்ள 25%, அவர் நிச்சய முதலீடுகளில் (Liquid Funds, Bonds, NCD's, PPF, FD's முதலியன). அவர் எடுக்கும் ரிஸ்க் அளவிற்க்கேற்றாற்போல் returns மாறுபடும்.
இளம் வயதிலேயே அதிக ரிஸ்க் எடுப்பதால், அவர்களின் வருமானமும் அதிகமாகும். ஆனால் இதே ஒரு 40 வயதுடைய முதலீட்டாளர், வெறும் 60% மட்டுமே சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 40%, நிச்சய முதலீடுகளில் செய்யலாம்.
Read 12 tweets
எல்லாரும் ஆயுத பூஜை கொண்டாடியிருப்பீங்க. வர்த்தகம் செய்வோர் புதிய கணக்கை தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அதேபோல், நம்மை போன்ற சம்பளதாரர்கள் என்ன செய்வது? நாமும் புதிய கணக்கை தொடங்களாமே? ஆமாம். சேமிப்பு கணக்கை தான் சொல்கிறேன்.
இது மற்றுமொரு வங்கிக் கணக்கல்ல. நமது வாழ்க்கை மேன்மை பெறுவதற்கான கணக்கு. இதே போன்று நம்மிடையே ட்விட்டரில் இருக்கும் எனது client ஒருவரின் சக்ஸஸ் ஸ்டோரி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை தருமென்று நினைக்கிறேன்.
அவருடைய பெயரை இங்கே குறிப்பிட விரும்பவில்லை (Client Confidentiality). எனது followers ல் அவரும் ஒருவர். அவரும் நம்மை போலவே மாத சம்பளதாரர் தான். எனது யோசனையின் பேரில், டீமேட் கணக்கொன்று துவக்கினார். முதலில் அவர் செய்த முதலீடு வெறும் ₹6,000 தான்.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!