Discover and read the best of Twitter Threads about #வாழ்க_பாரதம்

Most recents (24)

*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*

*மூலவர்:விநாயகர்*

*பழமை:500 வருடங்களுக்குள்*

மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*

*திருவிழா*

*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*

1
*தல சிறப்பு*

*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*

2
*பொது தகவல்*

*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.

3
Read 18 tweets
*ராஜயோகம் தரும் கும்பகோணம் ராமஸ்வாமி*

* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.

1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.

2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.

* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.

3
Read 23 tweets
ஒரே சிவலிங் கத்தில் இரண்டு பாணங்கள்..

சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலை விலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப் படுகிறார்.

1
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறை யிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது.

2
தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவ தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங் களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.

3
Read 5 tweets
நலங்கள் அருளும் நவகோடி நாராயணப் பெருமாள்

ராமாநுஜர் அருள்பெற்ற அதிசயத் தலம்!

1
கோவையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊர் அமைந்துள்ளது. 'கோவில்களின் கிராமம்' என்றழைக்கப்படும் பகுதி இது.திரும்பிய திசையெங்கும் ஆன்மிக மணம் வீசும் வகையில் அற்புதத் தலங்கள் பல உள்ளன.

2
வைணவப் பெரியவரான ராமானுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து,துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு.

3
Read 17 tweets
*செழிப்பான வாழ்வருளும் செல்லியம்மன்*

சென்னை-வேளச்சேரி பகுதியில், மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒன்று, தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார். மற்றொன்று, யோக நரசிம்மர் கோயில், மூன்றாவது, பிடாரி செல்லியம்மன் கோயில்.

1
இந்த கோயிலை பற்றி இந்த
பதிவு..

இந்த மூன்று கோயில்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.

மூன்று கோயில்களும் அருகருகே இருப்பதும், ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன.

2
வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன், ``அருள் மிகு பிடாரி செல்லியம்மன்’’ திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்தமாதர்கள் அருள்பாலிக்கிறார்கள்.

3
Read 16 tweets
*தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையில் *தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் சுவாமி கோயில்* உள்ளது.

இக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற, சோழ நாடு காவிரி தென்கரை தலம் சிவன் கோயிலாகும்.

1
இக்கோயிலின் இடப்புறத்தில், தஞ்சைநாயக்கமன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது.

2
களஞ்சியத்தின் உள்பகுதி மற்றும் வெளிபகுதி பூசப்படவில்லை என்பது இந்த களஞ்சியத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. இந்த அதிசய குதிர் 36 அடி உயரம் உள்ளது. இதன் சுற்றளவு 80 அடியாகும். களிமண் மூலம் செய்யப்பட்ட 5 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்களை சுட்டு சுற்றுச்சுவரை கட்டி உள்ளனர்.

3
Read 17 tweets
ராமகரி ஸ்ரீகல்யாண நரசிங்கபெருமாள்

மூலவர் :  நரசிம்மர் பெருமாள்

தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம் : குடகனாறு

ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்

வேடசந்தூர், திண்டுக்கல்.

1 Image
சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துவந்துள்ளனர்.

2
நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து *குஜிலியம்பாறை* என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் *ராமகிரி*
என்ற ஊர் உள்ளது.

3
Read 18 tweets
தன் பக்தனின் ஆயுளை நீட்டிப்பதற்காக பெருமாளே வடக்கு நோக்கித் தலை வைத்து படுத்த அற்புத திவ்யதேசம்.

அப்பேற்பட்ட பரந்தாமனின், வைகுண்டவாசனின் திவ்யதேச தரிசனம்!!!

அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்
திருப்பரமேச்சுர விண்ணகரம்.

1
மூலவர்: வைகுந்தநாதன், பரமபதநாதன்

தாயார்: வைகுந்தவல்லி

உற்சவர்: வைகுந்தநாதன்

கோலம்: இருந்த, கிடந்த நின்ற திருக்கோலம்

விமானம்: முகுந்த விமானம்

தீர்த்தம்: ஐரம்மத தீர்த்தம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

2
திருப்பரமேச்சுர விண்ணகரம்:-

வைகுந்த வாசனான இறைவன் நாராயணா வைகுண்டத்தில் உள்ளவாறே நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலத்தில் மூன்று நிலைகளையும், மூன்று அடுக்குகளாக அமைந்த இத்திருக்கோவிலில் சேவை சாதிக்கிறார்.

3
Read 20 tweets
சிந்துப்பட்டி பெருமாள் கோவில்:

பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்... பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?

1
அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்- திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.

2
கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.

3
Read 34 tweets
*குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்*

அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.

1
மும்மூர்த்திகளுமே யோக நித்திரையில் ஆழ மகாகாளி மட்டும் தாண்டவமாடிக் களிக்கும் பிரளயம் நெருங்கியது பார்த்து அதிர்ந்தார் நான்முகனான பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.

2
படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழிவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

3
Read 58 tweets
*🙏சுயம்பு வேலவன்🙏*

திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 

வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.

1
சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால்  இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள்.

2
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள்.

3
Read 15 tweets
அருள்மிகு ரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் (வெங்கடேசப்பெருமாள்) திருக்கோவில்...
காரமடை,கோயம்புத்தூர்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது.

1
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். 

2
காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது.

3
Read 15 tweets
*திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில். அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.*

1
ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. ஊடலும் அதற்குப் பிறகான சமாதானமும் இன்னும் புரிதலையும் நெருக்கத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஊடல் இறைவனுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது.

2
ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் ரங்கனுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடலும் அதன் பிறகான புரிதலும் விவரிக்கும் புராணம், நாம் அறிந்ததுதானே.

3
Read 16 tweets
*அருள்மிகு கஜேந்திர_வரதன் திருக்கோயில்*..

மூலவர் : கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)

உற்சவர் : செண்பகவல்லி

அம்மன்/தாயார் : ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்

தல விருட்சம் : மகிழம்பூ

தீர்த்தம் : கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்

ஆகமம்/பூஜை : வைகானச ஆகமம்

1 Image
புராண பெயர் : திருக்கவித்தலம்

ஊர் : கபிஸ்தலம்,
தஞ்சாவூர்..

திருவிழா..
    
ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது. 
    
2
தலசிறப்பு..
    
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 9 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 
    
3
Read 18 tweets
*மனக்கவலை போக்கும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில்*

இத்தல இறைவன் சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

1
தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். அகத்திய மாமுனி வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

2
'அகம்' என்பதற்கு 'மனம்' என்றும் பொருள் உண்டு. மனதை நல்வழிபடுத்தும் இறைவன் என்பதால், இவருக்கு 'அகத்தீஸ்வரர்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

3
Read 21 tweets
108 சிவலிங்கங்களை வழிபட்ட ஸ்ரீராமர்

தனது தேவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றதால் கோபித்த ராமபிரான், வானர சேனைகளுடன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று ராவணனை வென்றார். அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தார். ராவணனின் தம்பியான விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார்.

1
ராவணன் வேதவிற்பன்னன், பிரம்மாவின் வழிவந்த வேதியன். அதனால், அவனைக் கொன்ற பாவம் ராமபிரானை பிரம்மஹத்தியாக வந்து வாட்டியது. அது தீர அவர் கிழக்கு வங்கக் கடற்கரையில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதனால், அவரது பெரும்பாவம் ஒழிந்தது என்றாலும், சிறுசிறு இடையூறுகள் உண்டாயின.

2
அவற்றை நீக்கும் பொருட்டு, அவர் காவிரிக்கரைக்கு வந்து கும்பகோணத்திற்கு அருகில் குடில் அமைத்துத் தங்கினார். அங்கே அவர் 108 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.

சிவ வழிபாட்டின் பயனால் அவரைத் தொடர்ந்து வந்த பாவங்கள் நாசமாயின. அதையொட்டி அந்தத் தலம் பாவநாசம் எனப்பட்டது.

3
Read 27 tweets
சப்த கயிலாய தலங்கள்

அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். செய்யாறின் தென் கரையில் அம்பாள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்த 7 இடங்களில் அமைந்த ஆலயங்கள் ‘சப்த கயிலாய தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

1
அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

மண்டகொளத்தூர்

சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மண்டகொளத்தூர். இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

2
இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.

3
Read 16 tweets
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்

1
தனது குழந்தை தும்மிய போது, அக்குழந்தையின் தாயானவள், குழந்தை தும்மத் தும்ம, "நூறு, ஆயிரம்..." ('ஆண்டு நோயற்று வாழ்க') என்று சொல்லி வாழ்த்துவது போல எம்பெருமாள் மதுரை ஸ்ரீகூடலழகரை 'பல்லாண்டு' பாடி வாழ்த்தியவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார்!

2
மதுரையையாண்ட வல்லப தேவ பாண்டியனுக்கு, 'பரம்பொருள் யாது?' என்பதில் ஐயப்பாடு எழுகிறது. தனது ஐயப்பாட்டைத் தீர்த்து வைக்கும் ஆன்மீக குருவிற்கு பொற்கிழி தர ஒரு அறிவிப்பு செய்கிறான். அதற்கென்று பொற்கிழியை வித்வத் சபையில் கட்டித் தொங்க விடுகிறான்.

3
Read 16 tweets
சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்.

தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.

1
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது.

2
காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. 3
Read 8 tweets
*அருள்மிகு
பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர்
திருக்கோவில்*
பஞ்சவடி,
புதுச்சேரி.

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பல தோற்றங்களில் காட்சி தந்து, தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

1
அத்தகைய தோற்றங் களில் தனிச்சிறப்பு கொண்டது, பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.

ஆஞ்ச நேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும்.

2
முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்தி
வந்துள்ளார்கள்.

3
Read 10 tweets
*கரு தந்து உரு தந்து காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!*

தலைமுறை தலைமுறையாகத் தமது குலம் செழித்து விளங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். அதற்கு வேண்டியது மகப்பேறு பாக்கியம். ‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு.

1
திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை.

2
மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.

3
Read 31 tweets
*அருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்*
உதயமார்தாண்டபுரம்

இராமாயணம் நிகழ்வோடு சம்பந்தப்பட்ட திருத்தலம்.   
      
இதுவரை அதிகம் கேள்விபடாத  ஆதித்யஹிருதய பெருமாள் திவ்ய சேஷ்திரம்

இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் இல்லை.

1
மிகவும் சக்தி வாய்ந்த சூரிய தோஷ நிவர்தி பரிகாரக்கோவில் ஆகும்.

*மூலவர்*
 
*ஆதித்ய ஹிருதய பெருமாள்*.                    

தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி

தல  விருட்சம்: தில்லைமரம்

தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம்

ஊர் : உதயமார்த்தாண்டபுரம்,
திருவாரூர்

2
பழமை : 2000வருடங்களுக்கு முன்        

கோவிலுக்கு மதுரகவி ஆழ்வார் வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.

தரிசனம் கண்டவர்கள் :

அகஸ்தியர்,மதுரகவி ஆழ்வார், மூட்டை சித்தர் , அசுரகுரு சுக்கிராச்சாரியார்.          

3
Read 30 tweets
*சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம்*

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைந்த புனிதத் தலம், பூரி ஜெகந்நாதர் ஆலயம். இது மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் மிக முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது.

1 Image
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை நினைவூட்டும் வகையில், சென்னை புதிய மகாபலிபுரம் (கிழக்கு கடற்கரை சாலை), கானத்தூர்- ரெட்டி குப்பம் சாலையில் ஜெகந்நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

2
2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம், பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பிரதி என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஆலயம் ஒடிசா கட்டிட பாணியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

3
Read 13 tweets
*அருள்மிகு வைரவன்பட்டி வைரவன் கோயில்*

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

1
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் வைரவன்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது..

2
*இறைவன், இறைவி:*

இக்கோயிலின் மூலவராக வைரவன் சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை அம்பாள் ஆவார். கோயிலின் தல மரங்கள் ஏர் மற்றும் அளிஞ்சி ஆகியவை ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக வைரவர் தீர்த்தம் உள்ளது.

3
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!