Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்

Most recents (24)

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் விபீஷணன் ராவணனிடம், அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு என எவ்வளவோ கெஞ்சுகிறார். சும்மா கெஞ்சவில்லை.
ஹிரண்ய வதத்தைப் பற்றிய கதையை ராவணனுக்கு எடுத்துக் கூறுகிறார். ராமராக அவதரித்திருக்கும் நாராயணனின் பெருமைகளை, எடுத்துரைக்கிறார் விபீஷணர்.
அண்ணா, யாகம் வளர்ப்பதால் வரக்கூடிய பலனை நாராயணா என்கிற ஒரு நாமமே தரும் என்பது ப்ரஹ்லாதன் கூற்று. நாம் சொல்லும் சொல்லில் இருக்கிறார், சின்ன சின்ன பொருட்களிலும் இருக்கிறார் நாராயணன் என்பதும் அவனின் கூற்று. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு ப்ரஹ்லாதனுக்கு என்ன வாக்கு தந்தார்
தெரியுமா? உன் வம்சத்தில் இனி யாரையும் சம்ஹாரம் செய்யவே மாட்டேன் என்று. அந்த வாக்கை அவர் அப்படியே காப்பாற்றியும் வந்தார். நாராயண நாமம் அப்படி ப்ரஹ்லாதனையும், அவனது வம்சத்தையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறது. நாராயண நாமத்துக்கே அவ்வளவு மஹிமை என்றால் இதோ உன் எதிரே வந்திருக்கும்
Read 10 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவள்ளூர் வீரராகவப் பெருமானை சேவித்து மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், அதற்கு அடுத்த திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளைப் பாடாமல், மாமல்லபுரத்துக்கு வந்து விட்டார். இதைக் கண்ட தாயார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை எழுப்பி ஆழ்வாரிடம் பாசுரம்
பெற்றுக் கொண்டு வாரும் என்று அனுப்பி வைத்தாள். உடனே பெருமாளும் புறப்பட்டு கடல்மல்லை ஸ்தலசயனக் கோயிலுக்கு வந்து ஆழ்வாரின் முன்னால் நின்றார். ‘என்னை மறந்தது ஏன்?’ என்று கேட்டார். அப்போது அவரைப் பார்த்த ஆழ்வார்,
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றஊர் நித்திலத்து ஒத்தார்
சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே
என்று பாடினாராம். விஷயம் இதோடு முடியவில்லை. ஒரு பாசுரத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய பகவானை திருநின்றவூர் பிராட்டி, ‘இது என்ன எல்லா தலங்களுக்கும் பத்து பாசுரங்கள் பாடினாரே நமக்கு மட்டும் ஒன்றுதானா?’
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் சென்று
கேட்டபோது அது அனுமதித்தது. குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப் பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட
இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று. அதற்கு அந்த மரம் கூறிய பதில்,
எனக்குத் தெரியும் நான் வலு இழந்துவிட்டேன், எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப் படுவேன் என்று. ஹே குருவியே, நீயும் உன் குழந்தைகளும் நல்ல
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும்
அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர். அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது. அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர். அணிலே! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது. பாறைகளுக்குள்
அகப்பட்டுக் கொள்ளாதே. ஒதுங்கிப் போய்விடு என்றனர். ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. ராம சேவகர்களே! எனக்கொரு உதவி செய்வீர்களா? நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. இந்தப் பதிலைக்
Read 11 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு கருவுற்ற மான் பேறு காலம் நெருங்கியதும் ஆற்றினருகே ஓர் அடர்ந்த புல் வெளியில் பிள்ளை பெற இடத்தை தேர்ந்தெடுத்தது. அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த மழைக்காக ஆயத்தங்களான இடியும் மின்னலும் தோன்றின. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் மானை நோக்கி
அம்பை ஏய குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடன் ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு நிறைமாத கர்ப்பிணி மான் இந்நிலையில் என்ன செய்யும்? அதற்கு பிரசவ வலியும் வந்து விட்டது. இத்ற்கிடையில் காட்டு தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இத்தனை ஆபத்துகள் நிறைந்த
நிலையிலும் மான் தன் கவனம் முழுதும் தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது. மற்ற சூழல் அதன் கண்களுக்குத் தெரியவில்லை. தான் நல்ல முறையில் பிரசவிக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் நினைவில் இருந்தது. அப்போது நடந்த ஆச்சர்யங்களை பாருங்கள்! மின்னல் தாக்கியதால் வேடன் கண் பார்வை இழந்தான். தவறி
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஶ்ரீ இராமானுஜரின் சீடர் எம்பார். திருவரங்கத்தின் வீதியில் ஒரு வீட்டிலிருந்து வந்த பெண் குரலிலே இழைந்த கீதம் அவருடைய செவிகளில் பாய்ந்து மறுகணம் சுலோகத்திலே தோய்ந்திருந்த அவருடைய நெஞ்சு பாட்டின் லயத்திலே ஒன்றியது. வாய் சுலோகங்களைச் சொல்வதை விட்டது. அவரது
கால்கள் இசை வந்த திசையில் அந்த வீட்டின் வாயிலில் அவரை நிறுத்தின. தன்னை மறந்தார். தான் ஒரு சன்னியாசி என்பதையும் மறந்தார். தான் யார் வீட்டின் முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனையும் இல்லை. கண்களில் நீர் பெருக நின்றார். தான் எவ்வளவு நேரம் நின்றோம் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால்
அந்தத் தெருவில் வந்து போவோருக்கு அது தெரியும். இவருடைய கோலத்தினையும், அந்த வீட்டுக்கு உரியவளையும், அவர் நின்ற நிலையையும் தொடர்புப்படுத்தி சிலர் முகம் சுழித்தனர். சிலர், கருமம் கருமம் இப்படியும் ஒரு வெளிவேஷமோ? என்று கூறிச் சென்றனர். சில வைணவ அடியார்கள் இக்காட்சிக் கண்டு
Read 12 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, ஶ்ரீ நடன கோபால் நாயகி சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் மிகவும் பிரபலம். அவர் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கை
வாழ்ந்தார். அவர் பாடிய தமிழ்ப் பாக்களாலும், சௌராஷ்டிரப் பாடல்கள்களாலும், அவருக்கு வரகவி எனும் பெயரை பெற்று தந்தது. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவம், வைணவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன. ஶ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தம்
ஶ்ரீமடத்தில் தினந்தோறும் பகவத் ஆராதனை செய்யும் போது ஸ்ரீகிருஷ்ணனை நினைத்து பாசுரங்கள், கீர்த்தனைகள் பாடுவாதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி பாசுரங்கள் பாடும் போது அவர் கண்களில் கண்ணீர் மல்க பாடுவார். இதை தினமும் பக்தர்கள் பார்த்து கொண்டே இருந்தனர். அப்படி ஒரு நாள் அவர் கண்களில்
Read 10 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சுப்பிரமணி என்பவன் தனக்கு பயணம் செய்ய குதிரை வாங்க குதிரை சந்தைக்கு போனான். ஒரு குதிரை வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு குதிரையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு ஓட்டி வந்தான். நியாயமான விலையில் நல்ல தரமான குதிரை கிடைத்தது என்று
சுப்பிரமணிக்கு மகிழ்ச்சி. தன் வேலையாள் ரவியை அழைத்து குதிரையை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக குதிரையின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சி செய்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாள் ரவியை அழைத்து சேணத்தை அவிழ்க்க சொன்னான் சுப்பிரமணி. குதிரை மீதிருந்த சேணத்தை அவிழ்த்த
வேலையாள் ரவி, பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தன. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள் தகதகவென மின்னியது. அதை எடுத்து கொண்டு முதலாளி சுப்பிரமணியிடம் ஓடி காண்பித்தான். உடனே சுப்பிரமணி அந்தப்
Read 8 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள மரப் பலகையில், மனைவியை விட்டுவிட்டு கணவன் மட்டும் தப்பிச் செல்கிறார். கவிழும் கப்பலில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக நம்ம கொழந்தையப் பத்திரமா பார்த்துக்கங்க
என்று சொல்லி மூழ்கினாள். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அந்தப் பெண் தன் தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர்க் கொல்லி நோய் ஒன்று இருந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. கப்பல்
கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார் : உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும். நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? நமது பெண்ணை வளர்த்தெடுக்க உன் குறிக்கோள் நிறைவேற, நான் மட்டுமாவது உயிர் தப்பியாக வேண்டுமே!
Read 5 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் தன்னந்தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் கஜேந்திரன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப் பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.
முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் அரசே என கூறினார். இருவரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த இரவில் குடிலைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அரசரால் தூங்கவே முடியவில்லை. அவர் அன்று முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார். மறுநாளும்
அலைச்சல் இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் கஜேந்திரன், என்ன மனிதர் அய்யா நீங்கள்? இவ்வளவு சத்தத்துக்கு
Read 10 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில்
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாசர் என்பவர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார். அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர். அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார். ஒரு நாள் கிருஷ்ணனும்
பலராமனும் பசுக்களை மேய்த்த கதையை கூறி உபன்யாசம் செய்தார். கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை முடித்து கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார் ஹோய் சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில்
இருந்து வந்தது. ஸ்ரீனிவாசரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார். கையில் கத்தியுடனும் ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்ரீனிவாசர் அதிர்ச்சியாகி ஓட, திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் நான்
Read 27 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ஶ்ரீரங்கம்
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி' என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்), ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் Image
யாருக்குத் தான் ஆசை இருக்காது?
#ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
“இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேஸ்ம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார். ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம்
ஸ்ரீரங்கம். இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்.
#பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
#அதிகாரஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி #ஸ்வாமிதேசிகன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத
Read 10 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஹோட்டல் உரிமையாளர் மாணிக்கம் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது பெரியவர் சின்னையன் மதிய உணவுக்கு எவ்வளவு பணம் என கேட்டார். உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்புடன் 50 மீன் இல்லாமல் 20 ரூபாய் என்றார். கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை
எடுத்து உரிமையாளரை நோக்கி நீட்டினார் 65 வயது பெரியவர் சின்னையன். இதுவே என் கையில் உள்ளது. இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க. வெறும் சாதமானாலும் பரவாயில்லை. எனக்கு மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிடவில்லை என்று சொல்லத் தயங்கியபடியே அவர் தொண்டை நடுங்கியது. ஹோட்டல்
உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்போடு, அனைத்தையும் அவருக்கு பரிமாறினார். பெரியவர் சின்னையன் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன. நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? பொறுமையாக சாப்பிடுங்கள் அய்யா. அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார், எனது கடந்த கால
Read 11 tweets
#HappyDeepavali #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். நம் பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக Image
தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே. தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணுக்கும்,
பூமாதேவிக்கும் மகனாக
பிறந்தவன் நரகாசுரன். முதலில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். தவத்தில் சிறந்த மகரிஷிகள், குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான். ஈரேழு லோகங்களை
Read 10 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் வீர சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தனர். அவனது கோட்டையையும் கைப்பற்றினர்.
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்று விடுவார்கள்.
சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனம் குளிரட்டும் என்று எண்ணி அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டு
விடுகின்றனர். அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, பல்லக்கில் இருப்பது யார் என்று தனது தளபதியிடம் கேட்க, மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தில் இருக்க முடியாது. எனவே
Read 8 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) பூரியில் இருந்து ராஜ்புதனத்திற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அவரை அரண்மனையில் சிறிது காலம் தங்கி செல்ல
விண்ணப்பித்தார். மன்னரின் விருப்பப்படி அங்கேயே சிறுது காலம் தங்கினார். மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள் அவளது பெயர் விஷ்ணுபிரியா பெயருக்கு ஏற்றார் போல் அவள் பகவான் விஷ்ணுவையே எப்போதும் பூஜித்து வந்தாள். பூரியிலிருந்து விஷ்ணுவின் பிரதிநிதியாக ஒரு பூஜாரி அரண்மனைக்கு வந்திருப்பதால்
அவர் தேவைகளை அதிக அக்கறையோடு கவனித்து கொண்டாள். மேலும் பாண்டா தன் மனதினுள் விஷ்ணுபிரியா பகவான் ஜெகநாதருக்கு சமர்ப்பிக்க ஏதாவது கொஞ்சம் வெகுமதிகளை அவரது பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் நிச்சயம் வழங்குவார் என்று நினைத்தார். இறுதியாக அந்த நாளும் வந்தது. பாண்டா பூரிக்கு திரும்ப
Read 15 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ தேனீயிடம் நண்பா சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டது. அதற்கு தேனீ, இல்லை நண்பா அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன் என்றது. தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது . பூமி
முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே. உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா? அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல
வேண்டும் என்றது. தேனீ கோபப்படவில்லை அமைதியாய் கூறியது, உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும், வெறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே. நான் சேமித்து வைக்கும் என் உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நண்பா நான் இன்று இரவு என் மனைவி சகுந்தலையுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன், தூரப் பயணம் மேற்கொண்ட காரணத்தால் அருகில் உள்ள உங்கள் வீட்டில் இன்றிரவு தங்கி விட்டுப் போகிறேன் என்று தன் நண்பர் சோனுவுக்கு தொலைபேசியில் தகவல் தந்தார் பாஸ்கரன். அதற்கு அந்த நண்பர்
சோனு மகிழ்ச்சி வாருங்கள், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் நீங்கள் வரும் போது கடையில் இருக்கின்ற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான கேக் ஒன்று வாங்கி வாருங்கள் என்றார். எதற்காக என்று பாஸ்கரன் கேட்க, என் மகன் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறான். சர்பிரைசாக அவனை மகிழ்ச்சியில்
ஆழ்த்து விதமாக கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள் என்றார். அவர் கூறியவாறு பாஸ்கரன் கொஞ்சம் அதிகமா செலவழித்து நல்ல cake ஒன்றை வாங்கிச் சென்றார். அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் இவரும் அடுத்தநாள் ஊருக்கு
Read 11 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர் எனலாம். அந்நாளில் எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும்
என்பதால் ராஜவம்சத்துக்கு மட்டுமே, ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுக்கொடுக்கபடும்.
அவ்வகையில் பாண்டவரும், கௌரவரும் பயில்கிறார்கள். அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகிறது.
அரசு வாரிசுகளையும் மீறி ஒருவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரச குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகளின் கையில் கிடைத்தால் முடிந்தது கதை. ஏகலைவன் மன்னன் ஜராசந்தன் பகுதியில் வாழ்ந்த வேடுவ தலைவனின் மகன். அர்ஜூனனை மீறி ஜொலித்து நின்றான் ஏகலைவன். ஏகலைவன் குரு என யார் என
Read 16 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, இவர் தான் இனி நம் பெருமாள் என்று சொன்னார்கள். அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள். தங்களுடைய
விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால் ஒருவன் அர்ச்சகரைப் போலவும் ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும்,
சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன் கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான். கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக
Read 13 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிச்சைக்காரன் கணேஷ் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கவனித்துக் கொண்டிருந்த வைர வியாபாரி முருகன் அவனிடம் சென்று இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு Image
பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் என்றான். உடனே பிச்சைக்காரன் கணேஷ் அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை எடுத்துக் கொள் என்றான். அதற்கு வைரவியாபாரி முருகன் இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ஒரு ரூபாய் அதிகம் நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்
என்றான். பிச்சைக்காரன் கணேஷ் அப்படியானால் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும் என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி முருகன் எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி முகுந்தன் அந்த
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆறு வயது சிறுவன் சரவணன் தன் நான்கு வயது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தன் தங்கை சுமதியை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து
அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் சரவணன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி சுந்தரம், உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த கடல்
சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். அய்யா இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்கார முதலாளி அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் சரவணன் மகிழ்ச்சியுடன் மீதி உள்ள சிப்பிகளுடன் தன்
Read 9 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கழுதையொன்று புலியிடம் புல்லின் நிறம் நீலம் என்று கூறியது. புலியோ கோபமடைந்து இல்லை புல்லின் நிறம் பச்சை என்று கூறியது. விவாதம் சூடு பிடித்து இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர். Image
சிங்கம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, அரசே, புல் நீலநிறமானது என்பது தானே உண்மை என்று கேட்டது. சிங்கமோ, உண்மை புல் நீல நிறமானது என பதிலளித்தது. கழுதை தொடர்ந்தது. புலி என்னுடன் உடன்படவில்லை முரண்படுகிறது அரசே, என்னை எரிச்சலூட்டுகிறது, தயவு செய்து அவரை
தண்டியுங்கள் என்றும் கூறியது. அப்போது அரசர், புலியாகிய நீங்கள் இன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்கு யாருடனும் பேசவேக் கூடாது. மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான்
உங்களுக்குரிய தண்டனை என்று
அறிவித்தது. கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து புல் நீலநிறமானது புல்
நீல நிறமானது என்று கூறிக்
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!