Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீராமானுஜர்

Most recents (15)

#மாசிமகம்_ஸ்பெஷல

#திருகோஷ்டியூர்_செளம்ய_நாராயண_பெருமாள_திருக்கோவில்
திருக்கோஷ்டியூர் தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 104 ஆவது திவ்ய தேசமாகும். பெருமாள் ஐந்து தலங்களில் உள்ளார். சொளம்ய நாராயணனின் பிரம்மாண்டமான திரு உருவம்
ஐந்து தலை நாகத்துடன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறது.
உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. இதன் வடபகுதியை மயன் என்ற அசுரத் தச்சனும், தென்
பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்சனும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.
விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயன கோலம்
Read 35 tweets
#அனந்தன் #அனந்தாழ்வார் #ஶ்ரீராமானுஜர் #ஶ்ரீவைஷ்ணவம்
ஆயிரம் வருடம் முன்பு, மலை வாழ்வு கடினம். தொற்றுநோய், காட்டு விலங்குகள் பயத்தால், திருப்பதி மலையில் வசித்தவர்கள் மிகக் குறைவு. ஒரு நாள் இராமானுஜர் தமது சீடர்களை அழைத்து அவர்களில் யாரால் தினந்தோறும் திருப்பதி பெருமாளுக்கு சேவை
செய்ய அந்த ஊருக்குச் செல்ல முடியுமா எனக் கேட்டார். அப்போது அனந்தன் எழுந்து, இந்த அடியேன் திருப்பதி பெருமாளுக்கு தினந்தோறும் சேவை செய்வதற்கு அருள் புரியுங்கள். உங்கள் கருணையினால் நான் இந்த சேவையை இன்முகத்துடன் ஏற்கிறேன், எனத் தெரிவித்தார். குருவின் கட்டளையை ஏற்ற உண்மையான ஆண்பிள்ளை
என இராமானுஜர் அங்கு கூடியிருந்த வைஷ்ணவ பக்தர்களிடம் அனந்தனின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். அனந்தாழ்வாரும் திருப்பதி மலைக்குச் சென்று, நந்தவனம், குளம் போன்றவற்றை உருவாக்கி பொது மக்களின் தரிசனத்திற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுத்தார். பக்தித் தொண்டின் முக்கிய கோட்பாடுகளில்
Read 6 tweets
#ஶ்ரீராமானுஜர் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தவர் விசிஷ்டாத்வைத ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர். அத்துழாய், ஆண்டாள், பொன்னாச்சி, தேவகி, அம்மங்கி, பருத்திக் கொல்லை
அம்மாள், திருநறையூர் அம்மாள், எதிராசவல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்! அவர் பெண் குலம் தழைக்க வந்த ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிகள். ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கும் இந்துக் கோயிலில் பூஜைகள் வைத்தார். அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. அதுவும் சுமார்
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு? பெண்களை அன்றே சரிசமமாக பார்க்கப்பட்ட சமூகம். அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி
Read 5 tweets
#தூயபக்தி #ஶ்ரீராமானுஜர் #அரங்கன் #சலவைத்_தொழிலாளி #ஶ்ரீவைஷ்ணவம் #விசிஷ்டாத்வைதம்
உண்மையான பக்தர்கள் மற்றவர்களை பற்றித்தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள். ஒரு சமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த
உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்ட போது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். “அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவை தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும்
Read 7 tweets
#ஶ்ரீராமானுஜர் அவரின் #பன்னிரெண்டு_திருநாமங்கள்

#இளையாழ்வார்
ராமானுஜரின் தாய்மாமாவான பெரிய திருமலை நம்பி குழந்தையின் லட்சணங்களைக் கண்டு இவர் ஸ்ரீராமனுக்கு எப்படி தம்பி இலக்குவனோ அதுபோன்று உலகம் உய்யப் பிறந்த உத்தம புருஷன் என "இளையாழ்வார்' என்று நாம கரணம் சூட்டினார்.
#யதிராஜர் (துறவிகளின் அரசர்) பகவத் ராமானுஜர் இல்லறவாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார். காஞ்சி வரதராஜரே அவரை "வாரும் யதிராஜரே!' (யதி- துறவி, ராஜர்- அரசர், துறவிகளின் அரசர்) என்று அழைத்து மகிழ்ந்தார். 

#உடையவர்
காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து திருவரங்கன் திருவடி தொழுதார்.
அப்போது, திருவரங்கன் திருவாய் மலர்ந்து கண்குளிர நோக்கி "வாரீர் எம் உடையவரே! இனி உபய விபூதி ஐஸ்வர்யமும் உமக்கே! இனி, நீர் இங்கு நித்யவாசம் செய்து கொண்டு நம் காரியத்தையும் ஸ்ரீ ரங்க ஸ்ரீயையும் வளர்த்து வாரும். உம்முடைய திருவடி மற்றும் திருமுடி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சம்
Read 20 tweets
#புரட்டாசி_ஸ்பெஷல்
#ஸ்ரீநிவாசப்பெருமாள்
#ஶ்ரீராமானுஜர்
உடையவரை, சிஷ்யர்கள் தெண்டனிட்டு "தேவரீர் தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்யவேணும்" என்று விண்ணப்பித்தனர்.இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம்
தொடங்கி, பாண்டியநாட்டு திவ்ய தேதங்களை சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்யதேசங்கள் சென்று, வடநாட்டுக்கு எழுந்தருளி சாளக்ராமம், திருவதரி முதலான திவ்யதேசங்களையும் சேவித்தபடியே #திருமலை வந்தடைந்தார். அங்கே,
"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும்
தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேலெந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாயிசைந்து”
என்று ஆழ்வார் அருளியபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஶ்ரீநிவாசனுக்கு லக்ஷணமாய் நீள்முடியும், சங்கு-சக்ர திவ்யாயுதங்களும், திருயஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை
Read 7 tweets
#ஶ்ரீராமானுஜர் தன் பெண்டாட்டி பொன்னாச்சியே கதியாக இருந்த மனிதர், இப்போ உடையவரின் சம்பந்தம் பெற்றதும், மகான்கள் போற்றும் உத்தமராக உறங்காவல்லி தாசராக மாறி விட்டார். எல்லாம் எதிராஜன் அருள்தான். பொன்னாச்சிக்கும், தானே கதி என்று கிடந்த தாசரை விட, ரங்கனுக்கு தாசனாகி விட்ட தாசரைத் தான்
பிடித்திருந்தது. அவர் பொன்னாச்சியை அழைத்ததும் நொடிகூட தாமதிக்காமல் அரக்கப்பரக்க ஓடி வந்தாள். அவளைக் கண்ட தாசர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார். காரணம் இல்லாமல் இல்லை. பொன்னாச்சியின் உடலில் ஒரு பாதியில் மட்டுமே ஆபரணங்கள் இருந்தது, மற்றொரு பாகத்தில் ஆபரணங்களைக் காணவில்லை.
வலது
பக்கத் தோடு இருந்தால், இடது தோடை காணவில்லை. வலது பக்க வளையல் இருந்தால் இடது பக்கத்து வளையலைக் காணவில்லை. ஒரு வேளை அரங்கனை எண்ணிய படியே ஆபரணங்கள் அணிந்து கொண்டதால் தன்னை மறந்து போய் இவ்வாறு செய்து கொண்டாளோ, தாசர் சிந்தித்தார். பிறகு மெல்ல நடப்புக்கு வந்தவர், “என்ன பொன்னாச்சி, ஒரு
Read 20 tweets
#ஶ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. நிறைவாழ்வு வாழ்ந்த அரிவைஷ்ணவ ஆச்சார்யன் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் தம் 120 ஆம் வயதில் பரமபதித்தார். வருடம் பொயு Image
1137. தாம் பிறந்த பிங்கள வருடம் மாசி மாத வளர்பிறை தசமியில், திருவாதிரை நக்ஷத்திரத்தில் சனிக்கிழமை நண்பகல் ஜீயர் மடத்தில் அவர் பரமபதித்தார். எம்பெருமானார் பரமபதித்த வேளையில், தர்மோ நஷ்ட: (தர்மத்திற்கு நஷ்டம் வந்தது) என்று அசரீரி ஒலித்ததாம். அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடை,
சூடிக்களைந்த துழாய் மலர், எண்ணெய்க் கிண்ணம் என சீடராகிய உத்தம நம்பியின் மூலம் ஜீயர் மடத்துக்கு அனுப்பி வைத்தாராம். உத்தம நம்பி ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பெருமாள் அளித்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேய்த்து, திருமேனியை நீராட்டி, பிரம்மமேத
Read 10 tweets
#ஶ்ரீராமானுஜர் ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண்மணி தலையில் மோர்ப் பானையைச் சுமந்து கொண்டு மோர் விற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். மோர்க்காரப் பெண்மணிக்கு இவர்கள் பாடம்
படிப்பது தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, ஐயா சாமி, நல்ல மோரு ஒரு தடவை குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும் என்று சொன்னபடி மோர்ப்பானையை இறக்கி வைத்தாள். ஏற்கனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர்ப் பானையைப் பார்த்ததும்
ஆளாளுக்கு எனக்கு, எனக்கு என்று வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்தில் பானை காலி. பிறகு மோர்க்காரி சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்?
Read 15 tweets
#ஶ்ரீராமானுஜர் ராமானுஜர் தன் சித்தி மகனான கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். கோவிந்தன் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அவரும் கோவிந்தனும் யாதவபிரகாசர் என்ற அத்வைத குருவிடம் தான் ஒன்றாக பயின்றார்கள். யாதவ பிராகசர் காசி யாத்திரையின் போது அவரை கொல்ல
திட்டம் வகுத்திருப்பதை ராமானுஜரிடம் சொல்லி அவர் உயிரை காப்பாற்றியது கோவிந்தன் தான். அவருக்கு கங்கையில் நீராடுகையில் கையில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்று அவர் காளஹஸ்தி சென்று அந்த லிங்கத்தை வைத்து வழிபட்டு வரலானார். அப்போது திருமலையில் பெரிய திருமலை நம்பி என்பவர் திருமலையில்
வேங்கடாசலபதிக்கு தொண்டு புரிந்து கொண்டிருந்தார். #திருமலைநம்பி ராமானுஜரின் தாய்மாமன். இவரே ராமானுஜர் அவதரித்த போது #இளையாழ்வார் என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினவர். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவர் முதன்மையானவராக பாராட்டப் பட்டார். தினமும் திருவேங்கடமுடையானுக்கு
Read 15 tweets
#ஶ்ரீராமானுஜர்
எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. அவை நவரத்தினங்களாக கருதப்படுகின்றன.
#ஸ்ரீபாஷ்யம் அவரின் மிகச் சிறந்த படைப்பு. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் இது.
#வேதாந்த_சங்கரஹம். உபநிஷத்துகள்
புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு.
#வேதாந்த_சாரம், #வேதாந்த_தீபம் இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது.
#கீதா_பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
#நித்யக்கிரந்தங்கள்.
அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும். பக்தியின் வெவ்வேறு நிலைகளை விளக்கும் நூல்.
#கத்யத்ரயம் -
#சரணாகதிகத்யம், பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.
#ஸ்ரீரங்ககத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. #வைகுண்டகத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான
Read 4 tweets
#ஶ்ரீராமானுஜர் ஸ்ரீ ராமானுஜர் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த #யாதவப்பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் பயிலச் சென்றார். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது
பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றே உண்மை. மற்றவை பொய்த் தோற்றம் என்ற கொள்கையுடையது அத்வைதம். வேதத்தில், பரம்பொருள் வேறு, மற்றவையான அறிவுடைய, அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு எனப் பொருள்படும் வாக்கியங்களும், அப்பரம்பொருள் எல்லாப் பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ளமையால் பரம்பொருள் ஒன்றே எனப்
பொருள்படும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றைப் பேதச் சுருதி, அபேதச் சுருதி என்றும் கூறுவர். இவ்விரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை (அபேத வாக்கியங்கள்) மட்டும் முடிந்த முடிவாகக் கொண்டு அதற்கு ஏற்ப மற்றப் பிரிவு படக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளைக் கூறுவது அத்துவைத
Read 16 tweets
#ஶ்ரீராமானுஜர் #சுருக்கமாக_அவர்_வரலாறு புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் பொயு 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர்
அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு #இளையபெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி
கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள். இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்து கொண்டு இருந்தார்
Read 21 tweets
#ஶ்ரீராமானுஜர் #1005பிறந்தநாள் ஒரு நாள் ராமானுஜர் திடீரென்று ‘முதலியாண்டான், அரங்கனின் திருமுகம் வாடி இருக்கிறதே. இன்று என்ன அமுது செய்யப்பட்டது?' என்று கேட்டார். மடைப்பள்ளியில் என்ன தளிகையாகிறது என்று கவனிக்க வேண்டியது முதலியாண்டான் பொறுப்பு. அரங்கனுக்கு அமுது செய்விக்கப்படுகிற
அனைத்து வகை உணவுகளும் உயர்தரமாக இருக்கவேண்டும் என்பது உடையவர் கட்டளை. புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ, வேறெதுவோ சேர்மானங்களில் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது. நேர்ந்ததும் இல்லை. முதலியாண்டான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருந்த நாளில் தான் ராமானுஜர்
இவ்வாறு கேட்டார். தோற்றமா, தோற்ற மயக்கமா என்ற வினாவுக்கே இடமில்லை. உடையவர் மனத்தில் அப்படிப் பட்டுவிட்டது. 'தெரியவில்லை சுவாமி! இன்று ததியோதனம் (பால் சேர்த்த தயிர்சாதம்) தான் அமுது செய்யப்பட்டது. வழக்கம் போலத்தான் தளிகையானது. “இல்லையே. அப்படித் தெரியவில்லையே. அவர் முகம் வாடி
Read 10 tweets
#ஶ்ரீராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது, மலைமீது நடந்து வந்த களைப்பில், ஓரிடத்தில் (முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில், தம் முதல் விஜயத்தின் போது, பெரிய திருமலை நம்பிகள் அவரை எதிர்கொண்டழைத்த இடத்தில்) அமர்ந்து ஓய்வெடுத்தார்.
அவருக்கும், உடன் வந்த சீடர்களுக்கும்
பசியும் கூட. அப்பொழுது அங்கு ஒரு இள வயது பிரம்மசாரி வந்து அவர்களுக்கு ததியன்னமும்,(தயிர்சாதம்) மாம்பழமும் திருவேங்கடவரின் பிரசாதம் என்று கொடுத்தான். ஶ்ரீவைஷ்ணவர்கள் வெளியில் யாரிடத்திலும் எதுவும் சாப்பிடமாட்டார்கள். எனவே அவனிடம் "நீ யார்? எங்கிருந்து வருகிறாய்" என்று உடையவரின்
சீடர்கள் கேட்க,
"அடியேன் பெயர் மதுரகவிதாஸன். அனந்தாழ்வானின் சீடன். திருமலையில் இருந்து வருகிறேன்"
என்றான். உடையவர் அவனிடம் ஆசார்யன் தனியனைக் கூறுமாறு கேட்க,
"அகிலாத்ம குணாவாஸம், அஜ்ஞாத திமிராபகம், ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்"
நற்குணங்கள் அனைத்துக்கும்
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!