Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்

Most recents (21)

#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராமன் காட்டிற்கு எழுந்தருளும் போது சீதை பிராட்டி தானும் கூட வருவேன் என்று சொல்ல அதற்கு இராமன் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்கும் உண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம், அரண்மனையில் இருப்பதே இன்பம் என்று சொன்னார். அதைக் கேட்ட
பிராட்டி, இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல. ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம். உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பதே எனக்கு துன்பமாகும். இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக. உம்மைப் போல நாம் அளந்து
அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும் என்று சொன்னாள். இதற்கு இராமன் நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே. இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய் என்றான். அதற்கு பிராட்டி நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப் பாரும்
Read 8 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திரிகாலத்தையும் உணரும் சக்தி கொண்ட தூய்மையான மனம் உடைய காருண்ய சீலர் ஸ்ரீ ஹரி நாம அனந்த வைஷ்ணவர். இவர் எப்பொழுதும் ஹரிநாம சிந்தனையில் வாழ்ந்து வந்தார். இவர் வேம்புரி எனும் கிராமத்தில் தன் சீடர்களுக்கு தாம் கற்ற கல்வியைச் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் Image
எண்ணற்ற சீடர்கள் வித்தைப் பயில வந்தனர். அதில் சத்யசீலன் எனும் சீடன் ஆச்சாரியனிடத்தில் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்து பணிவிடையும் செய்து வந்தான். குருவே தெய்வமெனக் கருதினான். குருவுக்கு அந்த சீடன் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒருநாள் அந்த கிராமத்திற்கு மகான்
கபீர்தாஸரின் குருதேவரான ஸ்ரீ ராமானந்தர் வருகை தந்தார். கோவில் மடத்தில் அவரின் சீடர்களுடன் தங்கியிருந்தார். தினம் காலை உஞ்சவருத்தி‌ எடுத்துக் வந்த ஹரி நாம அனந்தரின் சீடன் மடத்தில் தங்கியிருந்து ராமானந்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பாதம் பணிந்தவனைப் பார்த்து ராமானந்தர்
Read 13 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் ஒரு ஊரில் பூரி ஜகந்நாதரைப் போலவே ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த சைதன்ய மகாபிரபு, ஜகந்நாதரை வழிபட அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஹிமாம்சு என்ற அர்ச்சகர் ஜகந்நாதப் பெருமாளுக்கு
நித்திய பூஜைகளைச் செய்து வந்தார். அவருக்கு வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது. அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர். பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார். அதனால் நிசாகர் தாஸுக்குப்
பின் அவரது மகனான ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள். சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன் அவரை வரவேற்றார். மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள். அர்ச்சனையைத் தொடங்கிய
Read 11 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், மன்றோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்ததால், மாவட்ட ஆட்சியர் மன்ரோ அடிக்கடி
திருமலைக்கு வருவார். அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து, ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே என்று ஏளனம் செய்வார். லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து இப்படிச்
சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான் எல்லா வியாதிகளும் உண்டாகின்றன என்று சொல்வார். கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள், அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா என்று கேட்பார்.
Read 11 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது. அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர்
எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார். பார்த்தனுக்கு (அர்ஜுனன்) கிருஷ்ணர் தேரோட்டி- சாரதியாக இருந்தார். இதனால் தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர்
விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக சேவிக்கப் படுகிறார். இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்து விட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு
எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். நிர்கதியாக இருப்பவர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர் லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள்
வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம்
Read 13 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குரு வையாபுரி தன்‌ சீடர்கள்‌ சிலருடன்‌ பேசியபடி, ஆற்றின்‌ கரையோரம்‌ நடந்து சென்று கொண்டிருந்தார்‌. திடீரென அவர் கால்‌ வழுக்கி, நிலை தடுமாறிஆற்றில்‌ விழப்போனார்‌. அப்போது அருகிலிருந்த சீடன் குமரன் ‌சட்‌டென்று குருவின்‌ கையைப்‌ பிடித்து இழுத்து அவரை ஆற்றில்‌
விழாமல்‌ காப்பாற்றினான்‌. அவன்‌ அவரைக்‌ காப்பாற்றாமல்‌ இருந்திருந்தால்‌ ஆற்றில்‌ விழுந்து, அவர்‌ பெருக்கெடுத்து ஓடும்‌ வெள்ளத்தால்‌ அடித்துச்‌ செல்லப் பட்டிருப்பார்‌. குருவும்‌ மற்ற சீடர்களும்‌ காப்பாற்றிய சீடன் குமரனுக்கு நன்றி தெரிவித்தனர்‌. இதனால்‌ அந்த சீடனுக்குத்‌ தற்பெருமை
அதிகமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம்‌, ஆற்றில்‌ விழ இருந்த குருவை நான்தான்‌ காப்பாற்றினேன்‌. இல்லா விட்டால்‌, இந்நேரம்‌ குரு ஆற்றில்‌ அடித்துச்‌ செல்லப்பட்டு இறந்திருப்பார்‌ என்று கூறத்‌
தொடங்கினான்‌. இந்த விஷயம்‌ குருவின்‌ காதுக்கு எட்டியது. ஆனாலும்‌ பொறுமையைக்‌ கடைப்
Read 10 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராவணன், இராமர் படைக் கூட்டத்தைப் பார்த்து மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களில் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும், பேசும் முறைகளையும் சொல்லி தூது
செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். ராமர் லட்சுமணர் உட்பட மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்ததினால் அரசன் சுக்ரீவன் தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரன் சுகனுக்கு அதற்கான சமயம்
அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பியுள்ளார் என்று பேசஆரம்பித்தான்.
வானர அரசே! ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் ஒரு அரச பரம்பரையில் பிறந்த மகத்தான கிஷ்கிந்தை நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன்
Read 11 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த Image
நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இளம் வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர்
ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும்,
Read 9 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் முரடன் முனுசாமி இருந்தான். குதிரை ஏற்றத்தில் வல்லவன். அவனிடம் ஒரு குதிரை மட்டுமே இருந்தது. ஒரு நாள் அந்த முரடன் குதிரையின் மேல் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு எதிரே குதிரை வியாபாரி சோமு என்பவர் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு
அவனிடம் வந்தார். குதிரை வியாபாரி சோமு, ஐயா இந்த குதிரையை பத்து பொற்காசுகளுக்கு வாங்கிக் கொள்கிறீர்களா எனக் கேட்டான். பேராசை கொண்ட அந்த முரடன் முனுசாமி, ஆயிரம் பொற்காசுகளுக்கு போகும் இந்த குதிரையை வெறும் பத்து பொற்காசுகளுக்கு கேட்கின்றானே இவன் பெரிய முட்டாளாக இருப்பான் போல என
நினைத்துக் கொண்டான். சற்றும் யோசிக்காமல் அந்த முரடன் முனுசாமி சரி, நான் வாங்கிக் கொள்கிறேன் என்று பத்து பொற்காசுகள் கொடுத்து வாங்கிக் கொண்டான். பின் அந்த முரடன் தன் குதிரையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, புதியதாக வாங்கிய குதிரையின் மேல் சவாரி செய்து பார்க்க
Read 8 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருவருக்கு தேதி குறித்து விட்டால், அந்த தேதியில் உயிரை எமதர்மன் எடுத்து விடுவார் என்று சொல்லுவார்கள். அவ்வாறு ஒரு சிற்பி கந்தனுக்கு தேதி குறித்து விட்டார் எமதர்மன். அந்த தேதி பற்றி சிற்பி கந்தனுக்கும் எப்படியோ தெரிய வந்து விட்டது. கந்தனுக்கு இறக்க விருப்பம்
இல்லை. எமன் ஒருமுறை தான் பாசக் கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன் படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார் கந்தன். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள்
செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்க வைத்து விட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டு படுத்து விட்டார். எமன் வந்தார், பார்த்தார். திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு தான் சிலைகள் என்பதை யூகித்து விட்டார். ஆனால் எவை சிலைகள் எது சிற்பி
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சிரவணன் எனும் அரசரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவரான வேல்முருகன் தவறான ஒரு கருத்தை சொன்னார். அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள் என
கட்டளையிட்டார் அரசர் சிரவணன். வேலைக்காரன் வேல்முருகன் கெஞ்சினான். அரசே நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன். நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றான். ராஜா சிரவணன் ஒப்புக
கொண்டார். அந்த பத்து நாட்களில் வேலைக்காரன் வேல்முருகன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார் ஆனாலும் ஒப்புக்கொண்டார். வேலைக்கார வேல்முருகன் அந்த நாய்களுக்கு
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பரமாத்மாவாகிய நாராயணனின் திருவடி நம் தலைமேல் பட வேண்டும் என்றால் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அத்தனை புண்ணியத்தையும் செலவு செய்தாலும் அவர் பாத ஸ்பரிசம் கிடைக்காது. பலிச்சக்ரவர்த்தி தான் சம்பாதித்த உலகங்கள் அனைத்தையும் அந்த நாராயணனின் பாதத்தில்
அர்ப்பணம் செய்ததும் பகவான் ஸ்ரீமந்நாராயணன் பாதம் தன் சிரில் படும் பாக்கியம் பெற்றார். பரமாத்மா தன் திருவடியை பக்தன் தலைமேல் வைத்து 'நீ என்னைத் சேர்ந்தவன்' என்று உரிமையுடன் ஆட்கொண்டார். இதனை நினைத்து நம்மாழ்வார், அத்தனை மதிப்புள்ள பெருமாளின் திருவடி தன் தலை மீது பட்டும், தான்
ஒன்றுமே சமர்பிக்க வில்லையே என்று எண்ணுகிறார். வெங்கடேச பெருமாள் தான் ஒன்றுமே சமர்பிக்காமலே தன்னை ஆட்கொண்டு விட்டாரே என்ற கருணையை நினைத்து இனியாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வது என்று 'உன் அடிக் கீழ் அமர்ந்து ' என்று ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார் நம்மாழ்வார். அமரர் முனிக்கணங்கள்
Read 7 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
அசோகவனத்தில் அனுமார் சீதாப் பிராட்டியின் வேதனையைக் கண்டு, அன்னையே! கவலை படாதீர்கள், இராமன் உங்களை விரைவில் மீட்டுச் செல்வார். அப்படி இல்லை என்றால் என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை இராமனிடம் சேர்த்து வைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு சீதை சந்தோஷம்
அடைந்தாலும் அனுமாரைப் பார்த்து, நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இந்த கடலைத் தாண்டி என்னை கிஷ்கிந்தைக்குத் தூக்கி சொல்வது என்பது விநோதமாக உள்ளது என்றார். அனுமன் உடனே தான் அளவற்ற பலமுடையவன் என்றும் பிறரால் செய்யக் முடியாத காரியங்களை செய்பவன் என்று அன்னைக்கு தெரிய நியாயமில்லை. அதனால் தான்
அஷ்டமா சித்தி பெற்றவன் என்பதை உணர்த்துதல் வேண்டும் என்று நினைத்தார். உடனே மரத்திலிருந்து குதித்து தன் உருவத்தை பெரிதாக்கி தன் விஸ்வரூபத்தை காட்டினார். மேரு பர்வதம் போல் ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டு அனுமார் அன்னை முன் நின்றார். மிகப் பெரிய உருவத்துடன் மலை போன்ற தேகத்துடன் எல்ல
Read 9 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #புரட்டாசிஸ்பெஷல் ஏழுமலை எம்பெருமானை தனியாக வழிபடுவதைவிட தாயாருடன் சேர்த்து வழிபடும் போது பெருமாளின் அனுக்கரகம் நம் மேல் அருவி போல் கொட்டுகிறது. இதை நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பா' என்று தாயாரை முன்னிட்டு சரணாகதி
செய்கிறார். இப்படி எம்பெருமான் மார்பிலே அமர்ந்தது தன் சுகத்திற்க்காகவா என்றால் இல்லை. நாம் சுகப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக ஆழ்வார்கள் திவ்விய தேசத்திலும் பெருமாளை சேவிக்கும் போது பக்தி மேம்பட்டு கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் திருமலை வந்தால் மட்டும் கதறி அழுது சரணாகதி
செய்து விடுகின்றனர். உதாரணமாக நம்மாழ்வார் மலையப்பனிடம்,
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என கதறி சரணாகதி செய்கிறார். இந்த மலையப்பனிடம் ஆழ்வார்கள் என்ன விசேஷத்தை பார்த்தார்கள்? பொதுவாக மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியிலும்,
Read 10 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு Image
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
Read 14 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆயர்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒரு கணவனும் மனைவியும் கண்ணன் மீது பொறாமை கொண்டிருந்தார்கள். இந்த யசோதையின் மகனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன! அவன் வீடு வீடாகச் சென்று விஷமம் செய்வதும், வெண்ணெய்ப் பானைகளையும் தயிர்ப் பானைகளையும் உடைப்பது, ஆட்டம் போடுவது
கொஞ்சம் கூட நன்றாக இல்லை என்று கண்ணனைக் குறை சொல்லி ஏசுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அத்தம்பதியர். ஒருநாள் மாலை, அந்தக் கணவர் சந்தை வரை செல்ல வேண்டி இருந்தது. அதனால் தன் மனைவியை அழைத்து, இப்போது நான் சந்தை வரை செல்லப் போகிறேன். பொழுது இருட்டி விட்டதால், அந்த யசோதையின்
மகன் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து விஷமம் செய்யப் புறப்பட்டு விடுவான். அதனால் கதவை நன்றாகத் தாழ் இட்டுக்கொள். யாராவது கதவைத் தட்டினால் திறந்து விடாதே. நான் வந்து தட்டினால் மட்டும் தான் நீ கதவைத் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். மனைவியும் கதவைத் தாழிட்டுக்
Read 12 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் ஸ்ரீ விஷ்ணு நாமமே கூறும் ஒரு குரு தன் சீடர்கள் யாரிடமும்‌ ஒன்றும்‌ கூறாமல்‌ எங்கோ செல்வார்‌. சில ‌ நாள்கள்‌ கழிந்தே திரும்புவார்‌. இது அடிக்கடி நடக்கும் சம்பவம். இதில் சீடர்களுக்குள் சந்தேகம்‌. அவர்‌ என்ன அடிக்கடி சொர்க்கத்திற்கா போய்‌
வருகிறார் என‌ ஒரே விவாதம் சீடர்களுக்குள். ஒரு சீடன் அவரை ‌ஒரு நாள் ‌ரகசியமாகப்‌ பின்தொடர்ந்தான்‌. அப்போது விவசாயியைப்‌ போல வேடமணிந்த குரு, ஒரு காட்டினுள்‌ இருக்கும்‌ ஒரு குடிலினுள்‌ சென்றார்‌. அங்கிருந்த ஒரு முதியவரை குளிப்பாட்டிப்‌ பராமரித்து அளவளாவி, உணவும்‌ சமைத்து வைத்து
விட்டு இரண்டு நாட்கள் கழித்துத்‌ திரும்பினார்‌. குருவுக்கும் முதியவருக்கும் எந்த உறவும் கிடையாது, அன்புடன் அவரை பராமரித்து வந்தார். இதை கண்டு திரும்பி வந்த சீடன் பிற சீடர்கள்‌ கேட்டபோது, அவர்‌ சொர்க்கத்தை விடப்‌ பெரிய இடத்திற்குச்‌ சென்று வந்தார்‌ என்றான்‌. இறந்த பிறகு
Read 5 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
இறைவன் மேலுள்ள பக்திக்கும், பொறுமைக்கும் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள். மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவர். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு சிறு அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி ImageImage
அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் அவருக்கு சிலாகிக்கவோ, கொண்டாடவோ எதுவுமே இருக்காது. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் சட சடவெனும் அசுர வளர்ச்சி! ஒரே
ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் 80அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ கடவுள் படைப்பின்
Read 6 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி அழுதான் அர்ஜுனன். அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றிக்கொண்டு கண்ணா அபிமன்யு உன் மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம்
தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன், கண்ணா நீயோ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க
முடியாது. கண்ணன் சொன்னார், உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அப்படி சொல்லாதே கண்ணா, மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன். அப்படியா? இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன்
Read 9 tweets
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!