Discover and read the best of Twitter Threads about #ஹர_ஹர_சங்கர

Most recents (4)

இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ -பெரியவா

(பெரியவா பிறந்த சமயத்தில் தன் தாயாருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு பெரியவா கொடுத்த ருத்திராட்ச மாலை- சம்பவம்)

சொன்னவர்-திரு முருக கிருபானந்த வாரியார்.
திரு முருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 1965-ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு பள்ளி ஆண்டு விழாவின்போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார்.
பின்னர், ஆசி வழங்கிச் சிறப்புரை ஆற்றியபோது, மனிதன் மனிதனாக வாழ வேண்டிய முறைகளையும் குருவின் மேன்மையைப் பற்றியும் விளக்கினார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன சம்பவம் இதுதான்:
Read 15 tweets
மறைந்த  நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்?

யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைச் சேருமா?

அற்புத விளக்கமும், பதிலும் கொடுத்த மகா பெரியவா. Image
ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான்.
அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார்.
Read 13 tweets
*மஹா பெரியவா ஒரு சிறு குறிப்பு:*

1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.

2)10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.

3)நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத்தேர்ந்தவர்.

4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.

6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15-Km அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்

8) எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் படுத்துறங்கியவர்.
Read 20 tweets
#குலதெய்வம் குறித்து காஞ்சி மகாபெரியவா விளக்கியுள்ளர். மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, விவசாயி ஒருவர், மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை.
முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ‘‘சாமி. ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட தோணுது.
ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

மகா பெரியவா அவரிடம், ‘‘குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா. அப்படின்னா?” திருப்பிக் கேட்டார் அவர்.
Read 29 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!