Discover and read the best of Twitter Threads about #ஹிலால்

Most recents (3)

வடிவமைப்பு விபத்துகள்
(Design Failures)

மார்ச் 15, 1979 காலை M V குர்திஸ்தான் என்ற அந்த எண்ணெய் கப்பல் கனடாவில் க்யூபெக்கிலுள்ள டயூப்பர் முனையை விட்டு புறப்படுகிறது.

கப்பலுக்கு வெளியே, உறைய வைக்கும் அளவுக்கு சுழி டிகிரி செல்சியஸ் குளிர். கப்பலின் உள் எண்ணெயை கதகதப்பாக வைக்க Image
20 டி செ. வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. ஆனால் கப்பல் செல்ல ஏதுவான காலநிலை அதுவல்ல. எனினும் பனி நிறைந்த பகுதியை விட்டு கடந்தால் சரி என வருகையில் மதியம் 1:50க்கு பலத்த ஓசையுடன் ஒரு குலுக்கல். பிறகு எண்ணெய் கசிய ஆரம்பிக்கிறது. காரணம் ஒரு விரிசல். ஒரு 6 மணி அளவில் இன்னொரு பலத்த ஓசை. Image
இரவு 9 மணி அளவில் கப்பல் இரண்டாக பிளக்கிறது. (உயிரிழப்புகள்/ காயங்கள் ஏதும் இல்லை. மாலுமிகள் பிறகு மீட்கப்பட்டனர்).

உயர் ரக ஐஸ் க்ளாஸ் 1 என்ற கட்டுமான வடிவமைப்பை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் க்ரேட் A ஸ்டீலைக் கொண்டு கட்டப்பட்டது. சுமார் 183மீ நீளம்.
என்ன பிரச்சினை என்று Image
Read 17 tweets
பைசாந்தியப் படைத்தலைவனும், ப்ளாக்செயினும்...
Byzantine General & Blockchain
#ஹிலால்

மறைச்சொல் மொழிகளில் (cryptography) இராணுவச் செய்திகளை பரிமாற்றப்படுவது பண்டைய காலத்திலிருந்து நடைபெற்றுவருகிறது. அப்படி ஒரு கற்பனை நிகழ்ச்சி தான் இந்த பைசாந்திய படைத்தலைவன் பிரச்சனை. ஒரு ஊரை
பைசாந்தியப் படை இருபுறமும் முற்றுகையிட்டது. அவ்வூர் பெயரை பகையூர் என்று வைத்துக்கொள்வோம். பைசாந்தியப் படை வடபுறமும் தென்புறமும் சூழ்ந்துள்ளன. இப்போது ஒரு சிக்கல். பகையூர் படையால் ஏதேனும் ஒருபுறம் தாக்குப்பிடித்து பைசாந்தியரை வெற்றிகொள்ள இயலும். இருபுறமும் ஒரே நேரத்தில் அது
எதிர்த்துப் போரிட்டால் தோற்றுவிடும். ஆகவே பைசாந்தியப் படைகள் இருபுறமும் ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடுக்கவேண்டும். ஆகவே தாக்குதல் குறித்த நாள் / நேரம் ஆகியவற்றை வடபுறமிருந்து தூதுவர் மூலம் தெற்குப்புறம் தெரிவிக்கவேண்டும். அதாவது “திங்கள் காலை 7:00 மணிக்கு ஆயத்தமாகுங்கள்” என்ற
Read 28 tweets
கதிரவனின் மையத்திலிருந்து ஒளி
#ஹிலால்

பெரும்பாலோர் 8 நிமி. என
பதில் அளித்துள்ளனர். கேள்வியை மீண்டும் நன்கு பாருங்கள். கதிரவனின் மையத்திலிருந்து. மேற்பரப்பில் இருந்து அல்ல.

கதிரவனின் மேற்பரப்பில் இருந்துதான் ஒளி 8 நிமி.ல் புவியை வந்தடையும். மையத்திலிருந்து? வாங்க பார்க்கலாம்.
இரண்டு ஹைட்ரஜனின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறன. எப்படி? இணைந்து! அங்கே தான் ஒரு ஃ இருக்கு. இரு புரோட்டான்கள் ஏதோ பிணைந்து வைக்கப்பட்ட புரோட்டா மாவு அருகருகே இருப்பது போல வந்து இணைவதில்லை. காரணம் இரண்டும் பாசிடிவ் துகள்கள். இரண்டு காந்தங்களை வடபுலம் - வடபுலம் என்று வைத்தால்
எப்படி விலகி ஓடுமோ, அப்படி ஹைட்ரஜனின் இரண்டு புரோட்டான்களும் விலகிவிடும். அப்படியெனில் எவ்வாறு கதிரவனில் ஹைட்ரனின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறன?

இதனை நடத்துவது குவாண்டம் டன்னலிங் (Quantum Tunnelling). குவாண்டம் டன்னலிங் என்பது ஒரு ஹைட்ரஜனில் உள்ள புரோட்டான் மறைந்து
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!