Discover and read the best of Twitter Threads about #HBDPeriyar142

Most recents (11)

#NewProfilePic #HBDPeriyar142

பெரியாரின் சுடரொளியில்!
திராவிடக் கல்வி மாணவனாய்!

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் ஈவெரா
உன் திராவிடம்
செவ்வித் திருக் காப்பு!

அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! Image
இங்கு செல்லும் போது..
இவனும் வந்தான்!😂

நான் வணங்கிய போது..
அம்மா/அய்யாவை,
இவனும் குனிந்து வணங்கினான்!🤣

பெரியார் நினைவிடத்தில்
முருகன் எழுந்தருளிய நாள்! Image
கைத்தடி > வேல்!🤣

அதனால், இவனுக்கு ரொம்பவே அச்சம்!
Backpack-இல் ஒளிந்து வராதே!
குள்ளக் குளிர்ந்து குடைந்து நீராடாதே
துணிவுடனே என்னோடு வா!

பெரியார் ஒன்னும் சொல்ல மாட்டார்!
எளியோர்கள் உள்நுழைந்ததே இவரால் தான்!
நீயும் உள்நுழையலாம் வா!
ஆற்றுப்படை சொல்லிக் கூட்டிச் சென்றேன்:) ImageImage
Read 5 tweets
இந்தக் கரோனா தொற்றால் தன்னம்பிக்கை தளராது, தலைநிமிர்ந்து நிற்க பெரியாரே நம் ஊன்றுகோல்!
அவர் ஒரு அருமாமருந்து - நம் நோய் தீர்க்க!
#HBDPeriyar142
பெரியார் என்பவர் ஒரு தனி நபர் அல்லர் - வெறும் உருவமும் அல்ல.
தத்துவம்! அசைக்க முடியாத இலட்சியம்.
#HBDPeriyar142
காலத்தால் முந்துறும் கருத்துப் பேழை! #HBDPeriyar142
Read 9 tweets
அன்றும் என்றும் பெரியார்! பெரியார்! பெரியார்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று! #HBDPeriyar142
ஒப்பாரும், மிக்காருமிலாத உயர் தனி மனிதர்!
ஓய்வறியாத உழைப்பின் எல்லை அவர்!
உண்மைகளை எவர்க்கும் அஞ்சாது வெளியிடும் துணிவின் தூய உருவம்! #HBDPeriyar142
ஒப்புவமை காட்ட இயலாத சுயசிந்தனையாளர்!
தன்னலம் சிறிதும் புகாத தன்னேரில்லாத தகைமைப் பொதுத்தொண்டு!
#HBDPeriyar142
Read 9 tweets
Anna about Periyar
-
#HBDPeriyar142

His services to society are indeed great. The people of the country have not attained intellectual fertility to such an extent as to accept his ideas and ideals. 1/n Image
The growth of a crop depends upon the fertility of the soil. Likewise people of good intellectual capacity only can grasp and foster his ideas and ideals.

We cannot say that his service does not do any good..
After his forty years' social service, intellectual revolution has achieved success in Tamil Nadu. None can deny it. We know well how powerful and potent his rationalist propaganda is.
Read 10 tweets
பெரியார் மிரட்டல் மற்றும் சிறைவாசம் பற்றி:

இவர்கள் மிரட்டலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் நான் பயந்தவனா? அப்படிதான் என் உயிர் போனாலும் நஷ்டம் என்ன என்று நினைப்பவன். நானும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப் போல் மூன்றுமடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்னமும் ஆசைப்
படுபவன் அல்லன். போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டு போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.
நானும் இப்போராட்டம் நடந்தே தீரும் - அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்புக்
கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல் நிலையைப்பற்றிக்கூடக் கவனிக்காது உடல்நிலையில் பலவிதமான குறைகளிலிருந்து டாக்டரிடம் காட்டி சரிசெய்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். ஏன்? சொந்த செலவில் ஏன் காசை வீணாக்கவேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவிலாவது பார்த்துக்கொள்ளலாம்
Read 5 tweets
சற்று ஏறக்குறைய திராவிடர் கழகத்தவர்கள் 30,35 ஆண்டுகளாகப் பதவிக்குப் போகாமல், வெளியில் இருந்து பாடுபடுகின்றார்கள் என்றால்
இந்த முயற்சி இன்னும் முழுவதும் வெற்றி அடையவில்லை.
35 ஆண்டாக,
கடவுள்,மதம்,ஜாதி, சாஸ்திரங்கள் ஒழிய வேண்டும்;

#LandOfPeriyar
#HBDPeriyar142
#ArakkarPeriyar

1/2
பார்ப்பான் கையில் உள்ள ஆட்சியைப் பிடுங்கித் தமிழன் கையில் கொடுக் வேண்டும் என்றும் பாடுபட்டு வருகின்றோம்.
எங்கள் கொள்கை நாட்டில் பெரிய வயது முதிர்ந்த மனிதர்களிடத்தில் மாற்றம் அடையவில்லை என்றாலும்,

#ArakkarPeriyar
#LandOfPeriyar
#HBDPeriyar142
#PeriyarForever

2/3
30, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இடத்தில் நல்ல மாற்றம் அடைந்து வருகின்றது. கடவுள், மதம், சாஸ்திரங்கள், பார்ப்பான் ஆகியவற்றிற்கு மதிப்பும் குறைந்துக் கொண்டே வருகின்றது.

#ArakkarPeriyar
#LandOfPeriyar
#HBDPeriyar142
#PeriyarForever

3/3
Read 3 tweets
அது ஒரு இருண்ட காலம்.
ஆர்யத்தின் மாயை, வைதீகத்தின் சாயை,
வடமொழியின் போதை, உயர்சாதியின் காதை,
எனும் வரலாற்றுக் கசடுகளால்
களிம்பேறி,
களப்பிரர் காலமெனத் தமிழகம் மங்கித் தூங்கியிருந்த காலம்!
தமிழன் சற்றே பின்தங்கிச்
சோம்பியிருந்த காலம்.
1/3
முயலின் தூக்கமே ஆமையின் வெற்றி எனில்,
புலியின் தூக்கம் -
தமிழ்ப் புலியின் தூக்கம்
ஆர்யத்தின் வெற்றி அல்லவா?

தூங்கும் புலியைத் தள்ளாடும்
தடியொன்று தட்டி எழுப்பிற்று.

வெண்தாடித் திரி ஒன்று
வெளிச்சம் வர
‘அண்ணா’ எனும்
அற்புத விளக்கொன்றைத் தூண்டிற்று!
2/3
சுயமரியாதை மண் எடுத்து,
தமிழென்னும் நீர் பிசைந்து,
இனமென்னும் அச்சிலே
மானமென்னும் கலயம் வனையும்
பகுத்தறிவுச் சூரியனாம்
‘கலைஞர்’ எனும்
ஓளிவிளக்கை ஏற்றிற்று!

தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்🙏

#PeriyarForever
#HBDPeriyar142
3/3
Read 3 tweets
1 பெயர் தான்! ஆனால்..
8 கோடி தமிழர்கள், தலைநிமிரும் மானம்!

அச்சச்சோ மானம் ஆபத்தாச்சே.. என்ற
3% மட்டும்
அஞ்சி அலறும் ஒரு பெயர்!

அது பெயர் அல்ல! இயக்கம்!
நூறாண்டில் மறையாத, நூற்றாண்டு இயக்கம்!

பெரியார் என்ற இயக்கம்! #HBDPeriyar142 🔥
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🌷 ImageImage
பெரியார் எனும் பெருமான்
ஆறுமுகப் பெருமான்!:)
தமிழர்கள் வாழ்விலே விளக்கேற்றிய 6 முகம்!

1.சாதி விடுதலை
2.சமய விடுதலை
3.பெண் விடுதலை
4.தமிழ் விடுதலை
5.நாட்டு விடுதலை
6.பண்பாட்டு விடுதலை

பெரியார் எ. சொல்லை
மாற்ற நினைத்தால்?
ஒரே மாற்றுச் சொல் = விடுதலை!
மானுட விடுதலை! #HBDPeriyar142 ImageImage
உங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையேடா?
*முருகனையும் கும்புடுறீக
*பெரியாரையும் கொண்டாடுறீக?

கடவுள் இல்லை எ. முழங்கியவரை
கடவுள் உண்டு எ. பக்தர் எல்லாம்
வீடுதேடி வந்து முத்தம் குடுக்குறாய்ங்க?🤣

என்று இன்றும் கூட
'துஷ்ட'ர்களை..
தூக்கத்திலும் உளற வைக்கும் பெரியார்!:)))
#HBDPeriyar142 ImageImageImage
Read 4 tweets
பெரியார்:

நான் யார்?
ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை' இருக்கிறதோ இல்லையோ, Image
இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாத்தாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளகயும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். ImageImage
சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.

********************

'ஒரு பெரியார் உரைத்துவிட்டார்' என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! 'நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், 'பாவம்' என்றாவது, 'தோஷம்'
Read 10 tweets
Facts about Periyar - Maniammaiyar marriage?
Age : Periyar - 72; Maniammai - 31

1. Maniammai was neither Periyar’s daughter nor his adopted daughter. She was a fellow comrade in DK, who also looked after the ailing Periyar.

1/n
#HBDPeriyar142
#LandOfPeriyar
#PeriyarForever
2. Their marriage happened in ‘1948’.
3. There was no provision for a female to be adopted in 1948. Only a male could be adopted under the Brahminic Hindu law.
2/n
#HBDPeriyar142
#LandOfPeriyar
#PeriyarForever
4. Only after The Hindu Adoptions and Maintenance Act, 1956, adoption of a female was possible. Section 10 of the act deals with the capacity of a child/person (both male and female) to be adopted.
3/n
#HBDPeriyar142
#LandOfPeriyar
#PeriyarForever
Read 6 tweets
#Thread
#HBDPeriyar142 #HBDPeriyar

#பெரியார்142 #பெரியார்
இந்த மனிதரை புகழவோ நினைவுகூறவோ வரவில்லை நன்றிகூறவே வருகிறேன்..
இந்த கிழவனை நினைவு கூறாமலோ புகழவோ இகழவோ செய்யாமலோ நன்றியோடு நினைத்து பார்க்காமலோ தமிழகத்தின் பொழுதுகள் விடிவதே இல்லை. Image
பேராசான் பெரியாரைப் போல ஒருவர் பிறந்திடவே இல்லை ஏதிலாவது ஆசையோ மோகமோ கொண்டவராகதான் எல்லோருமிருப்போம்.. ஆனால் பற்றற்ற ஞானியைப்போல் தன்னிலம் விளக்கம் தருகிறார்..
எனக்கு நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ இனப் பற்றோ இல்லை எனக்கிருப்பதெல்லாம் மனிதப் பற்றுதான்.
இப்படி வெளிப்படையாக அறிவித்தவர்கள் யாருமில்லை
எல்லோருக்கும் ஏதேனும் ஒன்றில் ஆசை பற்று இருக்கும் பதவி பணம் புகழ் அதிகாரம் என ஏதாவதொன்றில் சிறதேனும் ஆசையிருக்கும் ஆனால் இந்த மனிதர் மானுட சமூகம் ஏற்றதாழ்வின்றி பிற்போக்கு மூடத்தனமின்றி சிறந்த விளங்கவேண்டுமென்ற நோக்கோடு செயல்பட்டவர்
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!