Discover and read the best of Twitter Threads about #KalaingarInAssembly

Most recents (8)

#kalaingarinassembly

கலைஞர்- பரிசுத்த நாடாரின் நட்பு பாராட்டிய அரசியல் நாகரீகம்

நான் வாயை தொறந்தால் ஒரு மாசம் அவர் தூங்க மாட்டார்" என்று ஒரு வேட்பாளரும், "பிஞ்சிலே பழுத்த கதையை வெளியில் எடுத்து விடட்டுமா" என்று மற்றொரு வேட்பாளரும் மாறி மாறி பேசி Image
வருவதுதான் இன்றைய பிரச்சாரம் என்று ஆகிவிட்டது!

ஆனால் அன்றைய தேர்தல் காலத்தில் ஒரு கண்ணியம் இருந்தது... நாகரீகம் இருந்தது... இளவயது வேட்பாளர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்பு காணப்பட்டது! அதற்கு ஒரு உதாரணம்தான் இது!
1962-ம் ஆண்டு! மறைந்த திமுக தலைவர் கலைஞர் தஞ்சாவூரில் போட்டியிட போகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார் நிற்கிறார்!

பிரச்சாரத்திற்காக தஞ்சாவூர் சென்ற கலைஞர், முதல் வேலையாக எங்கு போனார் தெரியுமா? கட்சி ஆபீசுக்கோ, நிர்வாகிகளை சந்திக்கவோ இல்லை.. நேராக எதிர்
Read 20 tweets
#kalaingarinassembly

“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.

“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.
“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.

“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.
“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு கடன் வாங்க வேண்டும்” - இது ‘புதுமைப்பித்தன்’.
Read 28 tweets
#KalaingarInAssembly

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மட்டுமே அணைகள் கட்டப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்காலத்தில் அணைகள் கட்டப்படவில்லை என்பதுபோலவும் ஒரு பிரச்சாரம் சமீப காலங்களில் பரப்பப்பட்டது. ஆனால், உண்மையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 15 அணைகளும், திமுக ஆட்சிக்
காலத்தில் 42 அணைகளும் கட்டப்பட்டுள்ளன.
1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு
வகித்திருக்கிறார்கள்.
1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை, 1.தும்பலஹள்ளி அணை, 2.சின்னாறு அணை, 3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை, 5.பாலறு பொருந்தலாறு அணை, 6.வரதமாநதி அணை, 7.வட்டமலைக்கரை ஓடை அணை, 8.பரப்பலாறு அணை,
Read 8 tweets
#KalaingarInAssembly

குளித்தலை முதல் திருவாரூர் வரை... 13 முறை முத்திரை பதித்த கருணாநிதி!

'போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்ற தலைவர்' என்ற தன் கடந்த காலப் பெருமையை மீண்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் திமுக தலைவர் கலைஞர். பெரிய பின்னணி எதுவும் இல்லாத எளிய Image
குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கலைஞர், பிற்போக்குத்தனங்கள் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த ஓர் காலகட்டத்தில் அரசியலில் நுழைந்தவர். அவரே சொல்லிக்கொள்வதுபோல், 13 வயதில் அரசியல் களத்தில் நுழைந்த அவர், இந்த 93 வயதிலும் அரசியல் செய்துகொண்டிருப்பது பெரும் சாதனைதான்.
இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததாக பத்திரிகை செய்திகள் சொன்னாலும், அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட கலைஞரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும், இந்த தேர்தலில்
Read 60 tweets
#KalaingarInAssembly

கலைஞரின் சொல்நயம்!
வாழ்வு மூன்று எழுத்து
வாழ்விற்கு தேவையான
பண்பு - மூன்று எழுத்து
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து Image
வீரர் சொல்லும் களம் மூன்று எழுத்து
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து

* - * - * - * - *

உமிகள் உன் சாதியிலும் உண்டு
அவர்களுக்கு உமிகள் என்று பெயரில்லை
முதலாளிகள் என்று பெயர் - ஆண்டைகள்
என்று பெயர் - ஆதீனங்கள் என்று பெயர் -
அந்தணர் என்று பெயர் -
அவதாரப் புருஷர் என்று பெயர்
* - * - * - * - *

பதவி என்பது களியாட்ட அரங்கமல்ல
கனியிதழ் அமுதம் அல்ல
கடமையை புரிந்திட
நுடமுற்று நலிவோர்க்கு ஊன்றுகோலாய் உதவிட
கருணையைப் பொழிந்திட
தாங்கொணாது அலைவார்க்குத்
தக்கவழித் துணையாகிட
அது ஓர் அருமையான வாய்ப்பு

* - * - * - * - *
Read 13 tweets
#KalaingarInAssembly

குறிப்பாக சட்டசபையில் அவர் செய்த வாதங்களும், ஆளும் கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அவர் கொடுத்த எதிர் பதில்களும் பிரபலமானவை.

பொதுப்பணித்துறை அமைச்சராக
கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரது Image
நண்பர் ஒருவருக்கும், கலைஞருக்கும் இடையே நடந்த உரையாடல் இது.

என்னங்க இது...

நண்பர்: என்னங்க இது புது மாதிரியான மோதிரமா இருக்கு.

கலைஞர்: ஆம், மந்திரிச்சி மோதிரம் இது.

நீங்க கூடவா..?

நண்பர்: என்னது, நீங்க கூடவா மந்திரிச்ச மோதிரம் போட ஆரம்பிச்சுட்டீங்க...
நீங்க கூடவா..?
நண்பர்: என்னது, நீங்க கூடவா மந்திரிச்ச மோதிரம் போட ஆரம்பிச்சுட்டீங்க...

கருணாநிதி: மந்திருச்சு மோதிரத்தை நான் போட்டுக் கொள்ளக் கூடாதா என்ன...

புரியவில்லையே...

நண்பர்: புரியவில்லையே....

தன் மனைவியாரின் மோதிரம் என்பதைத்தான் நீங்க கூடவா..?
Read 5 tweets
#KalaingarInAssembly

'தங்க'மான சிரிப்பு

ஒருமுறை சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். அப்போது கலைஞரின் நெருங்கிய நண்பர் கைபிரம்மையா என்பவர் தனக்கும் மாநகராட்சி தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கலைஞரிடம் வைத்தார். Image
கலைஞர்: உமக்கு செல்வாக்கு எப்படியுள்ளது? சீட்டு கொடுத்தால் வெற்றி பெறுவீரா?

பிரம்மையா: தொகுதியிலே எல்லாரையும் எனக்குத் தெரியும். எல்லோரிடமும் நான் நல்லவிதமாகச் சிரித்துப் பேசி நல்ல உறவை வைத்திருக்கிறேன். எனவே நிச்சயம் வெற்றி பெற்று விடுவேன்.
கலைஞர்: அதாவது, பல்லைக் காட்டி வெற்றி பெறுவேன் என்கிறீர். அதுவும் வெறும் பல்லை அல்ல. தங்கப்பல் வேறு கட்டியிருக்கிறீர். தங்கத்தைக் காட்டி வாக்குகளை அள்ளி விடுவேன் என்ற நம்பிக்கை உமக்கு இருந்தால் யோசிக்கலாம்.
Read 4 tweets
#KalaingarInAssembly

கலைஞரின் நகைச்சுவை நயம்
எம்.கருணாநிதி என்றால் எம்முடைய கருணாநிதி
கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது 10-6-67ல் அறந்தாங்கி ஊராட்சி மன்றத்தின் சார்பில். ஒரு. வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Image
ஊராட்சி மன்றத்தலைவர் பேசும்போது "எம்.கருணாநிதி அவர்களே" என்றும் பாராட்டுரையில் எம்.கருணாநிதி என்றும்
அச்சேற்றித் தந்தார். விழாவிற்கு வந்தவர்களை இது சங்கடத்தில் ஆழ்த்தியதைக் கண்ணுற்ற கலைஞர் அவர்கள், தனது பேச்சின் துவக்கத்திலே
"இதுவரை எனக்கு அளிக்கப்பட்ட வாழ்த்துகளிலோ,வரவேற்புகளிலோ,
மு. கருணாநிதி என்றுதான் இருக்கும். பேசுபவர்களும் அப்படித்தான் பேசுவார்கள். ஆனால், அறந்தாங்கி ஊராட்சி மன்றத்தலைவர் நல்ல
காங்கிரஸ்காரர் என்பதால், அவர்
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!