Discover and read the best of Twitter Threads about #PCMreview

Most recents (24)

#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 5".இந்த பாகத்தில் 93 வருடங்கள் கடந்தும் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் ஒரு நபரின் மர்மமான மரணம் பற்றிய நிகழ்வை தான் பார்க்க போகிறோம்".ஜூலை 4,1928 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருக்கும் கிராய்டான் விமான
நிலையத்தில் இருந்து அப்போதைய உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த ஆல்பிரட் லோவன்ஸ்டீன் தன்னுடைய சொந்த நாடான பெல்ஜியத்திற்கு செல்ல தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் ஒரு பைலட் ஒரு மெக்கானிக் என மொத்தம் 6 பேருடன் செல்கிறார்.விமானம் கிளம்பிய அந்த நேரம் மேகம் தெளிவாக,காற்று விமானம் பரக்க
சாதகமாகவும்,விமானம் எந்த கோளாறும் இல்லாமல் பறக்கிறது.விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ஆல்பிரட் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.உதவியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.மெக்கானிக் மற்றும் பைலட் விமானம் செலுத்துவதில் கவனம் கொள்கிறார்கள்.இந்த விமானம் மூன்று
Read 25 tweets
#Notearsforthedead2014 #PCMreview Action Thriller.தமிழ் டப்பிங் இல்லை.சில இரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது.OTT - தெரியவில்லை. டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ வில்லனின் கூலிபடையில் இருக்கிறார்.ஒரு நாள் ஒருவனை கொலைசெய்ய அனுப்புகிறார்.அவன் ஒரு பாருக்குள் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கு Image
செல்கிறார்.அங்கு பல பேர் இருக்க,அனைவரையும் சுட்டு கொல்கிறார்.தவறுதலாக கொலைசெய்யப்பட வேண்டிய நபரின் சிறுவயது மகளையும் கொன்றுவிடுகிறார்.இன்னும் கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உயிரோடு இருக்க,அவளையும் கொல்ல சொல்கிறார் வில்லன்.ஹீரோவும் கொல்ல செல்கிறார்.ஆனால்,சில காரணங்களால் வில்லனுக்கு
எதிராக திரும்புகிறார் ஹீரோ.இதற்கு பின் நடக்கும் அதகளமான சண்டை காட்சிகள் நிறைந்த திரைக்கதையுடன் படம் நகர்கிறது. "The Man From Nowhere" படத்தை இயக்கியவர் தான் இப்படத்தின் இயக்குனரும்.அந்த படம் முழுவதும் சுவாரஸ்யமாக மற்றும் அருமையான சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும்.இவரின்
Read 8 tweets
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள்:பாகம் 4".இன்று நாம் பார்க்க போவது 86 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு பற்றி தான்."ஜனவரி 2,1935ஆம் ஆண்டு மதியம் 1:20 மணியளவில் அமெரிக்க நாட்டின் கான்சாஸ் நகரத்தில் இருக்கும் பிரஸிடென்ட் ஹோட்டலுக்கு ரோலண்ட்.டி.ஓவன்
என்ற நபர் நுழைகிறார்.10ஆவது மாடியில் தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி மேலே செல்கிறார்.உடன் பெல்பாய்(ரூம்பாய்) ரேன்டால்ப் பிராப்ஸ்ட் செல்கிறார்.அறையை காட்டிவிட்டு வந்துவிடுகிறார்.பணிப்பெண் மேரி சோப்டிக் அறையை சுத்தம் செய்ய செல்லும் போது,ஓவன்"அறையை சுத்தம் செய்துவிட்டு
கதவை அப்படியே விட்டுவிடுங்கள்.எனது நண்பர் வர போகிறார்"என்று கூறுகிறார்.பணிப்பெண் வேலையை முடித்து அறையில் இருக்கும் துண்டை எடுத்து செல்கையில் அறை மிகவும் இருட்டாக டேபிள் லாம்ப் ஒளி மட்டும் இருந்ததை கவனிக்கிறார்.மேரி மாலை 4 மணிக்கு புது துண்டை அறைக்குள் வைக்க வருகையில் கதவு பூட்ட
Read 25 tweets
#KodiyilOruvan #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை.லிங்க் - தியேட்டர்.கதை சுருக்கம்:ஹீரோ விஜய் ஆண்டனியின் அம்மா ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்கிறார்.அவர் சார்ந்த பஞ்சாயத்து தேர்தல் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதனால் அந்த அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை தேர்தலில் நிற்க Image
சொல்கிறார். தன் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நம்பி அவரும் நின்று வெற்றி பெறுகிறார்.ஆனால் ஊழல் செய்ய அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை கட்டயாப்படுத்துவதால் மறுக்கிறார்.இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை பெட்ரோல் ஊத்தி கொழுத்துகிறார்.எப்படியோ உயிர் பிழைக்கும் ஹீரோவின்
அம்மா ஹீரோவை பெற்றெடுக்கிறார். தன் அம்மாவிற்கு தான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசை கொள்வதால் எப்படியாக ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் ஹீரோ.அங்கு சேரியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார்.இது அங்கு இருக்கும் ரவுடிகளுக்கு பிடிக்காமல் போக
Read 13 tweets
#vivonetflix #PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
Read 7 tweets
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில் Image
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை Image
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை ImageImageImageImage
Read 25 tweets
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
Read 25 tweets
#ThuglaqDarbar #PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன்
என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
சேர்ந்து அப்படியே படிப்படியாக முன்னேற முடிவு செய்கிறார்.இதற்கு இவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார்.படத்தின் கதைக்களம் சத்யராஜ்
Read 10 tweets
#MalignantMovie #PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது
இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
ஹீரோயின் வீட்டிற்க்கு வந்து விசாரிக்க,ஹீரோயின் மேல் சந்தேகப்படுகிறது போலீஸ்.இப்படி தொடர்ச்சியாக கொலை நிகழ,ஹீரோயின் மீது சந்தேகம் வழுவாகிறது.இதில் இருந்து ஹீரோயின் தப்பித்தாரா?கொலை செய்யும் அந்த மர்மமான உருவம் எது?ஏன் கொலை செய்கிறது?ஏன் ஹீரோயினுக்கு இவ்வாறு நிகழ்கிறது?என்ற பல
Read 10 tweets
#BhootPolice #PCMreview "ஹாரர் திரில்லர்".தமிழ் சப்டைட்டில் இருக்கிறது.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - ஹாட்ஸ்டார். டெலிகிராம் - பயோ/DM.ஹீரோக்கள் சைப் அலி கான் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் அண்ணன் தம்பிகள்.சிறுவயதில் இவர்களது அப்பா இறந்து விடுகிறார்.இவர் அப்பா பேய் ஒட்டும் தொழில் Image
செய்கிறார்.அப்பா இறந்த பின்பு மகன்கள் இருவரும் அத்தொழிலை செய்கிறார்கள்.அப்பா உண்மையாக மந்திர தந்திரங்கள் கற்று பேய் ஓட்ட,மகன்கள் இருவரும் பேய் ஒட்டுகிறோம் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.ஒரு நாள் ஹீரோயின் யாமி கவுதம் இவர்களிடம் வந்து "தன்னுடைய தேயிலை
தோட்டத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகவும்,27 வருடங்களுக்கு முன்பு உங்கள் அப்பா வந்து ஓட்டினார்.ஆனால் மறுபடியும் அது வந்துவிட்டது.எனவே நீங்கள் தான் அந்த பேயை ஓட்ட வேண்டும்" என்று கூறி இருவரையும் ஹீரோயினின் வீட்டிற்க்கு அழைத்து வருகிறார்.இதற்கு பின் பேயை ஒட்டினார்களா?எதற்காக பேய் அங்கு
Read 8 tweets
#DikkiloonaOnZee5 #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை (இரட்டை அர்த்த வசனங்கள் உண்டு).OTT - Zee 5. டெலிகிராம் - பயோ/DM.EB யில் லைன் மேனாக வேலை பார்க்கும் ஹீரோ சந்தானம் ஒரு நாள் ஒரு மனநல மருத்துவமனைக்கு கரெண்ட் பிரச்சனையை சரி செய்ய செல்கிறார்.சென்ற இடத்தில் ஒரு பழைய அம்பாசடர் கார் Image
டிக்கியில் இருந்து ஒருவித சத்தம் வருவதை அறிந்து அதை திறந்து பார்க்கிறார்.உள்ளே படிக்கட்டு ஒன்று செல்கிறது.உள்ளே சென்று பார்த்தால் காலபயணம் செய்ய முயற்சி செய்யும் ஒரு குழு கால இயந்திரத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை செய்துகொண்டு இருக்கிறது.அங்கு இருக்கும் காமெடியன் யோகி பாபு செய்யும்
ஒரு வேலையால் காலப்பயணம் செய்யும் இயந்திரம் வேலை செய்கிறது.ஆராய்ச்சி குழுவின் தலைவர் அதை சோதித்து பார்த்து வெற்றி பெறுவதால்,ஹீரோ சந்தானம் ஒரு முடிவு செய்கிறார்.தன்னுடைய திருமண வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருப்பதால் காலப்பயணம் செய்து இறந்த காலத்திற்கு சென்று தனது திருமணத்தை தடுத்து
Read 12 tweets
#TuckJagadishOnPrime #PCMreview "குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT : அமேசான் பிரைம். டெலிகிராம் : பயோ/DM.திரையரங்கில் வெளியாக முடிவு செய்து கொரோனா காரணமான அமேசான் பிரைம் தளத்தில் மிகவும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகி Image
இருக்கும் டக் ஜெகதீஷ் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?கதையை பொறுத்த வரை ப்ளூ சட்டை மாறன் கூறுவதை போல் ஆயிரம் முறை அடித்து துவைத்த கதை தான்.புதிதாக ஒன்றும் இல்லை.அப்பா மகன் பாசம்,குடும்பத்தில் பிரிவு,ஹீரோயின் மீது காதல்,நல்லவன் போல் நடித்து கெட்டவனாக மாறி மீண்டும் நல்லவனாக
மாறும் வில்லன்,குடும்ப நபர்களின் பாசம்,இன்னும் பல பல.நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ்க்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கபட்டதோ அதையே இதிலும் கொடுத்திருக்கிறார்கள்.சில நேரத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தை மறுபடியும் பார்க்கிறோமே என்று எண்ண தோன்றுகிறது.எளிதில் யூகிக்க கூடிய
Read 7 tweets
#MysteriesUnsolved #PCMreview தொடர்ந்து படங்களை பற்றி எழுதி வருவதால் ஒரு மாறுதலுக்கு வரலாற்றில் இன்னும் தீர்க்கப்படாத மற்றும் பல மார்மான விஷயங்களை பற்றியும் இனிமேல் பார்க்க போகிறோம்.இன்று நாம் பார்க்க போவது அமெரிக்க அரசாங்கத்தை அலற வைத்த ஒரு மாபெரும் திருடனை பற்றி தான் பார்க்க
போகிறோம்.அவர் பெயர் "D.B.Cooper".இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.பல செய்திகளை படித்திருப்பீர்கள்.இப்பொழுது ஆரம்பம் முதல் இறுதி வரை என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு விரிவான அலசல் தான் இந்த தொகுப்பு.நவம்பர் 24,1971 அன்று கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் அமெரிக்காவின் போர்ட்லேண்ட்
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீயட்டில் விமான நிலையத்திற்கு ஒரு வழி பயணமாக செல்கிறார்.36 பயணிகள்,6 விமான ஊழியர்கள் என மொத்தம் 42 பேருடன் போயிங் 305 விமானத்தில் ஏறுகிறார்.கடைசி வரிசையில் இருக்கும் மூன்று இருக்கைகளில் நடு இருக்கையில் அமர்கிறார்.சிறிது நேரம் கழித்து விமான
Read 25 tweets
#IamaKiller2016 #Polish #PCMreview "Memories of Murder பட பாணியில் அருமையான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக 18+.போலந்து நாட்டில் 1970 களில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.கதை சுருக்கம்:ஆரம்ப காட்சியில் ஒரு பெண் Image
ரயில்வே டிராக்கில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.யார் என்று பார்க்கும் போது அவர் அந்த நகரத்தின் உயரிய அரசு பதவியில் இருப்பவர் என்று தெரிய வருகிறது.அதுவும் மண்டையில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.இதே பாணியில் பல கொலைகள் முன்னரே நடக்கிறது
இதற்கு பின்னும் நடக்கிறது.3 வருடங்களாக தேடி வருகிறார்கள்.அதுவும் தான் கொலை செய்யப்போகிறேன் என்று கடிதம் அனுப்பிவிட்டு உடனே அதை போல் கொலை செய்கிறார்.கொலையாளியை பிடித்தார்களா இல்லையா?ஏன் கொலை செய்கிறான்?என்ற கேள்விகளுக்கு பதில் கூறுகிறது இப்படம்.திரைக்கதை பொறுத்தவரை மிகவும் மெதுவாக
Read 6 tweets
#Helmet2021 #PCMreview "அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய நல்ல கருத்துள்ள படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - சோனி லிவ் டெலிகிராம் - பயோ/DM.ஹீரோ ஒரு கல்யாண பேண்ட் குழுவில் பாடகராக இருக்கிறார்.இவர் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபரின் மகளான ஹீரோயினை காதலிக்கிறார். Image
பெண் கேட்டு வா என்று ஹீரோயின் கூற,ஹீரோவும் செல்கிறார்.ஆனால் ஹீரோயினின் அப்பா ஹீரோ பார்க்கும் வேலை,சம்பளம் ஆகியவற்றை சொல்லி ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.தான் சொந்தமாக பேண்ட் கம்பெனி ஆரம்பித்துவிடுவதாகவும்,நல்ல வருமானம் வரும் என்று கூறுகிறார்.ஆனால் பேண்ட் கம்பெனி ஆரம்பிக்க ஹீரோவுக்கு
திறமை இல்லை என்று கூறி ஹீரோவை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்.எப்படியாவது சொந்த பேண்ட் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று பலரிடம் கடன் கேட்கிறார்.ஆனால் ஹீரோவின் அப்பா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அதனை தடுக்கிறார்.பின் ஒரு நாள் ஹீரோ ஒரு முடிவை எடுக்கிறார்.அவர்
Read 7 tweets
#TimetoHunt2020 #Korean #PCMreview "பணம் கொள்ளை சம்மந்தப்பட்ட படங்களின் ரசிகர்களுக்காக தரமான க்ரைம் திரில்லர்".ஆபாச காட்சிகள் இல்லை.தமிழ் டப்பிங் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கொரிய நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.மக்கள் கையில் பணமே இருப்பதில்லை.தினமும்
மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.சிறைக்கு சென்று விட்டு திரும்பும் ஹீரோ தன் நண்பர்களை ஒரு பாரில் சந்திக்கிறார்.அவர்களிடம் "இனிமேல் இந்த நாட்டில் இருப்பது கடினம்.எனவே தாய்லாந்து சென்று வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதற்கு இரண்டு லட்சம் டாலர் வேண்டும்.எனவே நீங்களும்
என்னுடன் வந்துவிடுங்கள்.அங்கு நாம் செமயாக வாழலாம் என்று கூறுகிறார்.ஆனால் ஹீரோவின் நண்பர்களிடம் பணம் இருப்பதில்லை.எனவே சூதாட்டம் நடக்கும் இடத்தில் பணம் கொட்டி கிடக்கும்.அங்கு US டாலர்கள் அதிகம் இருக்கும்.அது தான் நமக்கு தேவை.எனவே இங்கு கொள்ளையடிக்கலாம் என்று ஹீரோ கூறுகிறார்.ஆனால்
Read 8 tweets
#BoyMissing2016 #PCMreview "யூகிக்க முடியாத பல டிவிஸ்டுகள் இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை. OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு ஆள் அரவமற்ற ரோட்டில் ஒரு சிறுவன் நடந்து செல்கிறான்.திடீரென ஒருவர் இந்த சிறுவனை Image
கடத்தி செல்கிறான்.சிறிது நேரம் கழித்து அச்சிறுவனை போலீஸ் கண்டுபிடிக்கிறது.சிறுவனுக்கு காது கேட்காது.சிறுவனின் அம்மா கிரிமினல் லாயர்.சிறுவன் கடத்தப்பட்ட செய்தி கேட்டு சிறுவனின் அம்மா பதறி போய் வருகிறார்.போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது.யார் கடத்தியது?எதற்காக கடத்தினார்கள்?என்று நாம்
நினைக்கும் கேள்விக்கு சிறிது நேரத்தில் பதில் தெரிந்து விடுகிறது.ஆனால் இதற்கு பின் தான் கதை வேறு பாதையில் நகர்ந்து பல டுவிஸ்ட் கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.அதிலும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் யாராலும் கண்டிப்பாக யூகிக்க முடியாது.திரைக்கதை தாறுமாறாக எடுத்திருக்கிறார்கள்.படத்தில்
Read 7 tweets
#TheGirlintheFog2017 #PCMreview "டுவிஸ்ட் என்றால் இந்த படத்தின் டுவிஸ்ட் தான் என்று சொல்லக்கூடிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".ஆபாச காட்சிகள் இல்லை(ஒரு நீச்சல் உடை காட்சியை தவிர).தமிழ் டப்பிங் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஆரம்ப காட்சியில் அன்னா என்ற சிறுமி வீட்டை Image
விட்டு வெளியே செல்கிறார்.ஆனால் திரும்பி வருவதில்லை.உடனே காவல்துறைக்கு தகவல் செல்கிறது.படத்தின் டிடெக்டிவ் ஹீரோ அந்த சிறுமியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.அக்கம் பக்கம் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைப்பதில்லை.இன்னும் கொஞ்சம் நன்றாக சிந்தித்து வழக்கை விசாரிக்க
ஆரம்பிக்கிறார் ஹீரோ.ஒரு கட்டத்தில் இந்நிகழ்வில் அவரே எதிர்பாராத திருப்பங்கள் வர,இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார்.குற்றவாளியை கண்டுபிடித்தாரா இல்லையா?யார் அந்த குற்றவாளி?எதற்காக கடத்தினான்? என்ற பல கேள்விகளுக்கான பதில்களை இப்படம் கூறுகிறது.
Read 9 tweets
#Theperfection #PCMreview "பல டுவிஸ்டுகள் கொண்ட சைகாலஜிக்கல் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக(18+).OTT - நெட்ஃபிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கதை : தன் தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வயலின் வாசிப்பதை நிறுத்தும் ஹீரோயின் தன் தாய் இறந்த பிறகு தன்னுடைய ஆசிரியரை
அழைத்து இசைபோட்டிக்கு நடுவராக வருவதாக கூறுகிறார்.அங்கு சென்ற பிறகு தன் ஆசிரியரின் இன்னொரு மாணவரை சந்தித்து பழகுகிறார்.நெருங்கி பழகிய பின்பு,ஹீரோயினின் தோழி வேறு ஒரு ஊருக்கு செல்வதாகவும், ஹீரோயினையும் உடன் அழைக்கிறார்.இருவரும் பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்த சில நொடிகளில்
ஹீரோயினின் தோழிக்கு உடல் சரியில்லாமல் போகிறது.இதன்பின் சில சம்பவங்கள் நடிக்கிறது.அது ஹீரோயின் மற்றும் அவரின் தோழியின் வாழ்கையை மாற்றுகிறது.அது என்ன என்பதை சில பல டுவிஸ்டுகள் கொண்ட திரைக்கதையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும் தான்.அதிலும் ஹீரோயின்
Read 9 tweets
#EighteenHours #PCMreview IMDb - 7.9/10. "பரபரப்புக்கு பஞ்சமில்லாத சர்வைவல் திரில்லர்". தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக (18+).OTT - Manorama Max/Simply South. டெலிகிராம் - பயோ/DM.கேரளாவில் இருந்து ஒரு பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பெங்களூருவில் நடக்கும் யூத் பெஸ்டிவலுக்கு விமானம்
மூலம் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.சில காரணங்களால் விமானம் ரத்தாக,பேருந்தில் பெங்களூரு செல்கிறார்கள்.6 மாணவிகள் இரு ஆசிரியர்கள்,ஒரு முன்னாள் மாணவி என 9 பேர் பயணம் செய்கிறார்கள்.செல்லும் வழியில் 4 பேர் கொண்ட போதை கடத்தல் கும்பலின் வண்டி விபத்தாக இவர்களின் பேருந்தை
கடத்தி இவர்களை பணய கைதிகளாக வைத்து செல்கிறார்கள்.இவ்விஷயம் காவல்துறைக்கு தெரியவர,பள்ளி மாணவிகளை மீட்க முயற்சி செய்கிறார்கள்.மாணவிகள் தப்பித்தார்களா?கடத்தல் கும்பலை பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.பார்த்து பழகிய கதை தான்.ஆனால் விறுவிறுப்பாக நகரும் வண்ணம் திரைக்கதை இருப்பதால்
Read 7 tweets
#Janamaithri2019 #PCMreview #Malayalam "அருமையான நகைச்சுவை திரைப்படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.டெலிகிராம் - பயோ/DM. கதை சுருக்கம் : கேரள அரசாங்கம் மக்களுக்கும் காவல்துறைக்கும் நெருக்கம் ஏற்படுத்த ஒரு புதிய உத்தியை கையாள்கிறது.அதாவது இரவில் Image
கண்விழித்து வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி அவர்களுக்கு பிஸ்கட்,டீ தருவது தான்.இதற்காக காவல்துறை அதிகாரி இந்திரன் தலைமையில் ஒரு குழு சோதனைச்சாவடியில் நின்று இவ்வாறு செய்கிறது.அதே சமயத்தில் அந்த இரவில் ஒரு வீட்டில் மூன்று நபர்கள் ஒரு காரை திருட வருகிறார்கள்.அதற்கு பக்கத்து வீட்டில்
முகமூடி அணிந்த இரு நபர்கள் திருட வருகிறார்கள்.ஹீரோ சைஜு குருப் உடல் உபாதைகள் கழிக்க திருடர்கள் நுழைந்த வீட்டிற்க்கு செல்கிறார்.இவ்வாறு நான்கு கதைக்களம் ஒரே சமயம் நடக்க,இவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள் என்பதை காமெடி சரவெடியுடன் கூறியிருக்கிறார் இயக்குனர்.காமெடிக்கு பெயர் போன
Read 7 tweets
#SEOBOK2021 #PCMreview #Korean "ஒரு எமோஷனல் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்சன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - TVING. டெலிகிராம் - பயோ/DM. கதை : மனித உடலில் இல்லாத ஒரு ஜீனை உருவாக்கி அதன் மூலம் குளோனிங் முறையில் ஒரு மனிதனை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள். Image
அவ்வாறு உருவாக்கிய மனிதனின் ஸ்டெம் செல்லை எடுத்து அதை கேன்சர் நோயினால் விரைவில் சாக போகும் ஹீரோவின் மேல் சோதிக்க விரும்புகிறார்கள்.தான் உயிர் வாழவேண்டும் என்பதற்காக ஹீரோவும் சம்மதிக்கிறார்.ஆனால் அந்த மனிதனை கடத்த ஒரு கும்பல் முயற்சிக்கிறது.மனிதனை உருவாக்கிய வில்லனின் குழு இதைத்
தடுக்க அவனை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுகிறது.ஆனால் வழியில் இராணுவ குழு ஒன்று ஹீரோவையும் அந்த மனிதனையும் கடத்துகிறது.இவர்களிடமிருந்து ஹீரோவும் மனிதனும் தப்பித்தார்களா?இராணுவ குழுவை அனுப்பியது யார்?வில்லன் எதற்காக இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்?வில்லனின் உண்மையான திட்டம் என்ன?
Read 9 tweets
#AnugraheethanAntony #PCMreview #Malayalam IMDB - 8/10.தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை."தவறவிடக்கூடாத ஒரு அருமையான படம்".OTT - அமேசான் பிரைம்(US). டெலிகிராம் - பயோ/DM.பொதுவாக மலையாள சினிமாவில் 95 சதவீத படங்கள் நன்றாக இருக்கும்.அதிலும் சில படங்கள் என்றும் அனைவரின்
மனதிலும் நிலைத்திருக்கும்.அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இந்த படமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹீரோ சன்னி வெயின் ஜாலியாக ஊர்சுற்றும் வாலிபர்.ஹீரோயின் 96 படப்புகழ் கௌரி கிஷன்.இவர் ஓவியம் வரைபவர்.ஹீரோ தன் நண்பருடன் தவறுதலாக வேறு வீட்டிற்கு செல்ல அங்க ஹீரோயினை காண்கிறார்.
பார்த்ததும் காதல் தான்.அடுத்த நாள் ஹீரோயினின் அப்பாவிற்கு சொந்தமான மாவு அரைக்கும் மில்லிர்க்கு நண்பருடன் செல்கிறார்.அங்கு ஹீரோயினை பார்க்க நேர,தினமும் ஏதாவது அரைக்க எடுத்து சென்று அங்கு சென்று ஹீரோயினை பார்க்கிறார்.இப்படியே நாட்கள் செல்ல,ஒரு நாள் விபத்தில் அடிபட்டு ஹீரோ
Read 10 tweets
#Fearstreettrilogy #PCMreview "இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக(18+).OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கதை 1994லில் ஆரம்பித்து அப்படியே பின்னோக்கி 1666 இல் முடிகிறது.அதாவது 1666 இல் ஆரம்பிக்கும் ஒரு கதையை மூன்று பாகங்களாக
கொடுத்திருக்கிறார் இயக்குனர்.Shadyside மற்றும் Sunnyvale என இரு பள்ளிகள்.எப்பொழுதும் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் ஆகாது.ஒரு நாள் Shadyside மாலில் முகமூடி அணிந்த நபர் ஒரு பெண்ணை கொல்கிறார்.இது Shadyside கொலையாளி தான் என Sunnyvale பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இதனால் Shadyside பள்ளி மாணவர்கள் மீது இன்னும் வெறுப்பு அதிகரிக்கிறது.ஒருவர் பின் ஒருவராக முகமூடி அணிந்த நபரால் கொல்லப்படுகிறார்கள்.இதற்கு காரணம் சாரா பியர் என்கிற ஒரு பெண்ணுடைய சாபம் தான் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.அந்த பெண்ணின் சாபம் இன்னொருவர் மீது புகுந்து அவர் மற்றவரை
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!