Discover and read the best of Twitter Threads about #SaveDelta

Most recents (7)

#GajaCyclone
இதே போல ஒரு நவம்பர் மாதம் நவம்பர் மாதம் என்றாலே மழை காலம் தான் அவ்வப்போது மழையும் பெய்து கொண்டு இருந்தது,திடீரெனெ ஒரு நாள் வானிலை அறிவிப்பில் புயல் அடிக்கப்போவதாக சொன்னார்கள் ஆனால் சரியாக டெல்டா மாவட்டங்களில் என்று சொல்லவில்லை.நான் ஒரு புயலில் நேரடியாக
அனுபவப்பட்டுக்கிருக்கின்றேன் பள்ளி பருவத்தில் நிஷா புயல் என்று நினைக்கின்றேன் இரவு முழுவதும் புயல் அடித்தது நல்ல மழையும் கூட அப்போது ஒன்றும் பெரிதாக பாதிப்புகள் எனக்கு தெரியவில்லை சிறுவயது என்பதால் 2 வாரத்திற்கு மேலாக பள்ளி விடுமுறை அந்த சந்தோசத்தில கடந்துவிட்டேன்.பிறகு 2018 ஆம்
ஆண்டு கஜா புயல் அப்பொழுது நான் என் நண்பர்கள் எல்லோருமே சென்னையில் இருந்தோம் ஒரு சில நண்பர்கள் ஊரில் இருந்தார்கள் புயல் என்றதுமே முதலில் நியாபகம் வந்தது எனது கடலூர் நண்பன்தான் அவனுக்கு போன் செய்து பேசினேன் அவன் லேசாக மழை மட்டும் இருக்கு என்று சொன்னான் பிறகு எனது ராமேஸ்வரம்
Read 25 tweets
மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்தித்து இருக்கிற தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்னும் நிவாரணப்பணிகள் தொடங்காமல் இருப்பதும் அதற்கு தேவையான உதவியை மத்திய அரசு வழங்காமல் கள்ள மௌனம் சாதிப்பதும் இந்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பு செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

#SaveDelta Image
இத்துணைக்கும் இந்திய ஒன்றியத்தில் அதிக வரியை செலுத்தும் மாநிலங்களில் 2வது இடத்தில் இருக்கும் தமிழகத்தை இப்படி புறக்கணிப்பது நம் சந்தேகத்தை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது.

ஆகவே இந்த எண்ணத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வராமலிருக்க உடனடியாக மத்திய அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை...
பேரிடர் பகுதியாக அறிவித்து நிவாரணப் பணிகளை துரிதப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை ஏதோ மேலோட்டமாக பார்வையிடாமல், ஒவ்வொரு பகுதியாக மத்திய குழு ஆய்வு நடத்தி உண்மையான அறிக்கையை உடனடியாக வழங்கி அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
Read 3 tweets
கஜா புயலில் சிதைக்கப்பட்ட தேனீ நடுநிலைப் பள்ளி.

வேதாரண்யம் அருகே மருதூர், ராசாபுரம் பகுதியில் உள்ள தேனீ நடுநிலைப் பள்ளியில் உள்ள 3 கட்டிடங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த பள்ளியில் 220 குழந்தைகள் வரை... facebook.com/54806091187803…
...படிக்கின்றனர்.

மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிதைந்திருக்கின்றன. அரசு உதவி பெறும் இப்பள்ளியினை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

புயலின் பாதிப்பிலிருந்து சிறிதளவு கூட மக்கள் மீளாத நிலையில் நாளை பள்ளிகள் திறக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் இதை சீரமைக்கும் பணியினை அரசு பொறுப்பேற்காது என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள். சிதைந்து போன பள்ளியை மீட்கும் பொறுப்பைக் கூட அரசு ஏற்காவிட்டால் வேறு எதனை ஏற்கப் போகிறது.

இந்த பள்ளியினை உடனடியாக சீரமைத்து புதுப்பித்து தந்து,... ImageImageImageImage
Read 4 tweets
ஒளிரும் தேசம் என்று விளம்பரப்படுத்தப்படும் நாட்டின் வெளிச்சக் கீற்றின் இறுதிக் கற்றையின் இரக்கம் கூட படாத நிலத்தின் மக்களாய் டெல்டா மக்களின் வாழ்வு ஆக்கப்படுகிறது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு அனைத்து... facebook.com/54806091187803…
...மரங்களையும் சாய்த்தும், பிய்த்தும் எறிந்திருக்கிறது கஜா புயல்.

ஏழை மக்களின் வீடுகளையும் மொத்தமாக முறித்துத் தள்ளியிருக்கிறது. இவர்களுடன் கைகோர்த்து, இவர்களுக்காக பேசாமல் நாம் வேறு யாருக்காக பேசப் போகிறோம்? ImageImageImageImage
மே பதினேழு இயக்கத் தோழர்களின் பணி இந்த பகுதிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தோழர்கள் பொருளாகவோ நிதியாகவோ அளித்து டெல்டா மக்களுக்கு கைகொடுக்க தொடர்பு கொள்ளுங்கள் : 7094198005 | 9884072030

#SaveDelta ImageImageImageImage
Read 3 tweets
கஜா புயலின் கொடூரத்திலிருந்து மீளாத மக்கள், விடாது பெய்யும் மழை டெல்டா மக்களின் வாழ்வினை மேலும் துயரம் மிகுந்ததாக ஆக்கியுள்ளது.

வீட்டின் கூரைகள்,ஓடுகள் எல்லாம் புயலில் அடித்துச் செல்லப்பட்டதால், மழை மக்களின் நிலையினை மோசமாக்கியுள்ளது.

#SaveDelta #GajaCycloneRelief ImageImageImage
கூரைகளை மூடுவதற்கான தார்பாலின்களும், குளிரிலிருந்து காப்பதற்கான போர்வையும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. நிறைய கிராமங்கள் அரசின் எந்த தடயமும் இல்லாமல் இருக்கின்றன.

கஜா புயல் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலிமையாக எழுப்புவது மிகப்பெரிய தேவை. ImageImage
இத்தகைய கிராமங்களில்தான் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தார்பாலின், போர்வைகள் முதன்மையான தேவைப்பொருட்களாக இருக்கின்றன. நிவாரணப் பொருட்கள் அல்லது நிதி அளித்திட தொடர்புக்கு: 7094198005 | 9884072030

#SaveDelta ImageImage
Read 3 tweets
Thread:Was travelling the entire day through cyclone Gaja affected areas, especially the interior villages. All these days, sitting in Chennai, I never realised the magnitude of the destruction. The towns maybe slowly limping back to normalcy but that’s not the case with villages
While travelling through Thanjavur, Thiruvarur, Vedaranyam and Nagapattinam, one can see protests by villagers almost everywhere. A week has passed. But even now there is no electricity. No food. No drinking water. No proper shelter and no means of communication.
Villagers stand on the roadside to reach out to the politicians and officials visiting the place. They would run towards their car and plead for help. Some of them get extremely angry when they don’t stop their cars. The anger amongst people is something that cannot be missed.
Read 10 tweets
கஜா புயலால் தமிழினம் பேரழிவைச் சந்தித்துள்ளது. கனத்த மெளனத்தோடு தமிழகம் அதை கடந்து கொண்டிருக்கிறதோ எனும் வருத்தம் வருகிறது. சென்னை, கேரளா வெள்ளத்தின் பொழுது எழுந்த மனித நேயம் தற்போதும் எழ வேண்டும்.

ஒக்கி புயலில் மீனவரை இழந்தோம், தற்போது டெல்டா விவசாயிகளை இழக்கிறோம்.

#SaveDelta Image
நம் கவனமும், அக்கறையும், அன்பும் டெல்டா மாவட்ட மக்களுக்கு தேவை.

அறிவித்து 2 நாட்களுக்கு மேலாகியும் பரந்துபட்ட மக்களுக்கு கொண்டு செல்லுமளவிற்கு போதிய நிவாரணப்பொருட்கள் கிடைக்கவில்லை. ஓரிரு கிராமங்களுக்கு அனுப்புமளவிலேயே உள்ளன. இன்றும் நாளையும் அவை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.
டெல்டா மாவட்ட கிராமங்கள் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணப்பணி உதவியில் பெருமளவிலான மக்கள் பங்கெடுத்தால் மட்டுமே குறைந்தபட்ச பங்களிப்பாவது சாத்தியமாகும்.

நிவாரணப்பணிகளுக்கான உதவிப்பொருட்களை கொடுக்க விரும்பும் தோழர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

9884072030 , 7094198005.
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!