Discover and read the best of Twitter Threads about #SavidhaDiary

Most recents (5)

#SavidhaDiary

கவிதா..
மிகவும் புத்திசாலித்தனமான பெண். குழந்தைப்பேறுக்காக, பல வருடங்களாக முயன்று, சவிதாவில் செயற்கைக் கருத்தரிப்பு மூலமாக, இரட்டையர்களைக் கருத்தரித்து, கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்தே ஏற்பட்ட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளை சமாளித்த தைரியம் மிகுந்த பெண்..
1/n Image
ஏழு மாத முடிவில், (முப்பது வாரங்கள்) கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம், கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் அதிக நீர் சுரப்பு ஆகிய காரணங்களால், அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டையர்களைப் பெற்றெடுத்தாள் கவிதா..
2/n Image
குறைகாலப் பிரசவம், குறைந்த எடைக் குழந்தைகள் என்பதால், இரண்டு குழந்தைகளுக்கும், Neonatal Intensive Care Unit (NICU) என்ற பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது..
3/n Image
Read 15 tweets
#SavidhaDiary

இரவு வார்ட் ரவுண்ட்ஸ்.
கர்ப்பப்பை பிரச்சினைக்காக அனுமதியாகியிருந்த அந்த 50 வயதுப் பெண்மணியுடன் அவரது மகளும், 4 வயதுப் பேரனும் அதே அறையில் இருக்க,
"ஏம்மா குழந்தையை ஹாஸ்பிடலுக்கெல்லாம் அழைச்சுட்டு வர்றீங்க?
அதுவும் இந்த சமயத்தில!" என்று கடிந்து கொண்டேன்.
1/n
"சாரி மேடம்...
இவங்கப்பாவுக்கு நைட் ஷிஃப்ட்..
வீட்டில வேற யாரும் இல்ல மேடம்..
நாளைக்கு காலைல வந்து, இவனை கூப்ட்டுட்டு போயிருவாரு.."
என்று மன்னிப்பு கேட்கும் குரலுடன் அவரது மகள் கூற, அனைத்தையும் துறுதுறுக் கண்களோடு கவனித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை..
2/n
இரவு வேளையில் கூட தூங்காமல், அதிலும் மாஸ்க் வேறு அணிந்து நின்றிருந்த அந்தக் குழந்தையிடம்,
"உன் பேர் என்ன குட்டிம்மா..?" என்று நான் கேட்க, "ராகுல் கிஷோர்" என்று என்னிடம் பதிலளித்துவிட்டு, மறுபுறம் திரும்பி,
"சிஸ்டர்.. மாஸ்க்கை சரியாப் போடுங்க..." என்றது..
3/n
Read 9 tweets
#SavidhaDiary
#September15
#திரும்பிப்பார்க்கிறேன்

சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன..
1/n
ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது..
2/n
அப்போது இதே முகப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் குடிசை ஒன்றில், ஒரு சிறிய மேஜையின் முன்னால், கைகளில் பெரிய வரைபடத்தோடும், கண்களில் பெருங்கனவோடும் அமர்ந்திருப்பார் ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்..
அவருடன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயர் சகாயராஜ் மற்றும் கட்டிட கட்டுமானி பாரதி..
3/n
Read 12 tweets
#SavidhaDiary

"என்னது..
பிரசவ வலியில்லாம இருக்கற ஊசியா..?
அதெல்லாம் வேணாம்..!"
என்று மறுத்துக் கூறிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும்..
கூன் விழுந்த உடல்..
சுருக்கங்கள் நிறைந்த முகம்..
ஆனால் குரலில் மட்டும் அத்தனை தெளிவு..
1/n
"பாட்டிம்மா..
உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்கறா..
பனிக்குடம் வேற உடைஞ்சிடுச்சிருக்கு..
இந்த ஊசியைப் போட்டுட்டா, அவளுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும்..
இந்த ஊசியால, அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு எதுவும் இல்ல.."
என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
2/n
"எனக்கு நாலு புள்ளைங்க. எல்லாம் வீட்டில தான் பிரசவம். இவ அப்பன் பொறந்தப்ப உதவிக்கு கூட யாருமில்ல"
என்றார் அவர்.
"ம்மா, உங்க காலம் வேற. இப்ப நிலமை வேற. அப்ப வீட்டில நீங்க எத்தனை வேலை பாத்திருப்பீங்க?
ஆனா உங்க பேத்திக்கு மெஷின்தானே வேலை செஞ்சு தருது?" என்று நான் சொன்னதை ஏற்கவில்லை
Read 16 tweets
#SavidhaDiary

திடீரென ரோட்டில் மயக்கமுற்று கீழே விழுந்த அந்தப் பெரியவரை அவசர சிகிச்சைக்கு தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர் அருகிலிருந்தவர்கள்.

விழுந்தவருக்கு அறுபது வயதிருக்கும். மயக்கமான நிலையில் தர்ஷன் எனும் பெயரைச் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்...

1/n
ஈ.சி.ஜி.யில், மாரடைப்பு தெரியவர
"Tab. Aspirin (2) 300mg,
Tab. Clopidogrel (4) 300mg,
Tab. Atrovastatin (4) 80mg,
என மாத்திரைகள் அனைத்தையும் விழுங்கச் செய்து,
Tab. Sorbitrate 5mg நாக்கின் அடியில் வைத்து, அவரை இருதய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்..
2/n
இரண்டு மணிநேரம் கழித்து,
அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட இருதய சிகிச்சை வல்லுநர்,
"Timely referral. அவருக்கு Angioplasty செய்தாகிவிட்டது.
நலமாக இருக்கிறார். தனது பேரன் தர்ஷனுடன் மீண்டும் விளையாட உதவி புரிந்ததற்கு, உங்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்"
என்றார்...
3/n
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!